இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் -11

21 April, 2010ன் தொடர்,

மாற்றங்கள் தேவை - சுவை 15

அபூ அனூத், இலங்கை.
சமய சார்பற்ற சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு தலைகால் புரியாமல் இலக்கியம் படைப்போர், மதம் - கடவுள் பற்றிய எள்ளி நகையாடலை மலினப்படுத்தியுள்ளார். மதவாழ்வை கேள்விக்குட்படுத்தி, கொச்சைப்படுத்தும் நாவல்களும் கவிதைகளும் தற்போது, மிக அதிகமாகவே வெளிவரத் தொடங்கியுள்ளன.

இஸ்லாமிய இலக்கியம் இறைநெறிக்குட்பட்டுப் பேசும். ஆனால், அந்நிய இலக்கியங்கள் அந்தந்த சமூகம் சார்ந்த கலாசார, மரபுகளைப் பிரதிபலித்துக் கொண்டு செல்லும். அவை, அந்த இலக்கிய மரபுகளில் தவிர்க்க முடியாதவை. அங்கே, ஆண்-பெண் அந்தரங்கச் சதை வியாபார வெறியாட்டங்கள் என்பன அந்தந்த சமூக, பண்பாட்டுக் காலாசார மரபுகளின் சிந்தனைக்கேற்ப, கதைகளில், நாவல்களில், கவிதைகளில், பாடல்களில் வெளிப்படும்.

சிலபோது, வக்கிரத்தை வெளிப்படுத்துமாப்போலும் அமைந்துவிடுகிறது. பெற்ற தாய்-தந்தைக்குத் தெரியாமல், ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் சமாச்சாரங்கள் பலவடிவங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இதற்கு உடன் போக்கு என்று பெயர். உடன்போக்கு மேற்கொண்டவர்கள் பிறந்த இடத்துக்கு திரும்பி வரமாட்டார்கள். இதன் தாக்கத்தால், இன்றைய காதலர்கள் (?) சொல்லிக் கொள்ளாமல் போகிறார்கள். சொல்லாமலே வந்தும் விடுகிறார்கள் - சில பேர் ஏமாற்றப்பட்டதால் உலகத்தைவிட்டே ஓடி விடுகிறார்கள் என்பதை அன்றாடம் அறிகிறோம்.
சங்ககால இலக்கியக்காதலர்கள் மணம் முடிக்க ஓடினார்கள். அதன் இலக்கிய விரச ரசனைக்கு ஆட்பட்ட இன்றைய கால காதலர்கள் மணம் முடிக்காமல் வக்கிரத்தை வெளிப்படுத்த ஓடுகிறார்கள். இவர்கள் இதில் சேராமல் காதலர் தினம் (ஏயடநவெiநெ னுயல) என்று பெப்ரவரி 14ம் திகதியை, தமது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்த ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக் கேடு கெட்ட கலாசாரத்திற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், தூபம் இட்டு வளர்த்தும் வருகின்றன.

உண்மையை மட்டும் பேசும், உள்ளாந்த இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைக்காத போது, இஸ்லாமிய இளைஞன் பிற இலக்கியங்களில் ரசனைத் தாகம் தணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவற்றைப் படிக்கத்துவங்கும் போது, அவை வாசகன் மீது சிறுக சிறுக தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த துவங்குகிறது. எனவே, அந்நிய இலக்கியத்தில் தாகம் தீர்க்கும் வாசகன், அவற்றைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாகவே நாளடைவில் மாற்றமடைகிறான். நமது பெரும்பாலான மக்களுக்கு வழிகாட்டி தமிழ்ச் சினிப்பாடல்கள், படங்கள், சில புத்தகங்கள், சில நாவல்கள், விரசத்தைக்கக்கும் பத்திரிகைகள் என்பனவாகிவிட்டன. மிக மோசமான சினிமாப்படங்கள் அவற்றுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் பத்திரிகைகள் கல்லூரியில், கலாபீடங்களில், பல்கலைக்கழகங்களில், ஏன்? அரபு மத்ரஸாக்களில் படித்த அதிக இளைஞர்களிடம் அமெரிக்க, மேற்கத்திய ‘ஹிப்பி’ கலாசாரத்தையும், அரைகுறைபடிப்பாளர்களிடம் தமிழ்ச்சினிமாக் கலாசாரத்தையும், இலக்கியம் என்ற போர்வையில் திட்டமிட்டு இன்னும் பரப்பிவருகின்றன. இந்தப் பத்திரிகைகள்.
எனவே, அத்தகைய அந்நிய இலக்கியம் பற்றிய சில உதாரணங்களை இங்கே குறிப்பிட்டுக்காட்ட முனைகிறோம்.

அந்நிய இலக்கியத் தாக்கம் அகிலன் ஒரு பிரபல்யமமிக்க எழுத்தாளன். எனினும், அவர் தனது நாவல்களில் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று உலவும் கயவர்களை அடையாளப்படுத்த முனையும் போது, விபச்சாரத்தையும் வேசிகளையும் ஆதரிக்க முனைந்து, நாவலையே நாசப்படுத்திவிடுகிறார். இதற்கு ஓர் உதாரணத்தை கீழே தருகின்றேன். வேசித் தனத்தால் தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணை வேண்டுமென்றேதான் நான் இந்தக் கதைக்குத் தலைவியாக்கிக் கொண்டேன். சமுதாயப் பிரமுகர்கள் என்ற போர்வையில் உலவும் சிலர் அவளைவிடவும் சீரழிந்தவர்கள் காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா அனைத்தையும் விபச்சாரம் செய்யும் போலிகள் இவர்கள். சமுதாயத்தில் ஆங்காங்கே கயவர் இருக்கத்தான் செய்வர். ஆனால், கயவர்கள் வழிகாட்டிகளாகக் கொள்ளும் சமுதாயம் உருப்படுமா? என்பதுதான் நான் இந்த நாவலில் எழுப்பியுள்ள கேள்வி. ஜஅகிலன் (1973) நாம் எங்கே போகிறோம்? பக்கம் 05ஸ
கவிஞர் கண்ணதாசன் தனது தாயிடமும், தாரத்திடமும் அடையாத இன்ப அனுபவத்தை விலை மாதுகளிடமும் அனுபவித்ததாக தனது நூல்களில் குறிப்பிடுகிறார்.
என் அருகில் இருக்கும் பெண்கள், அவர்கள் விலைமகளிர் ஆயினும் பயபக்தியோடு என்னைக் கவனிப்பார்கள்; பணிவோடு எனக்கு சேவை செய்வார்கள்; “ஐயா” என்று தான் அழைப்பார்கள்.

விலைமாதர் உறவும், மதுப் பழக்கமும் எந்த நாட்டிலும் வேண்டாத பழக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, “தர்ம விரோதம்” என்று கருதப்பட்டதில்லை.
இந்து வேதங்களும் அப்படிக் கூறியதில்லை.

தமிழகத்து விலைமாதர்கள், தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களை தியாகம் செய்து கொண்டவர்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பெங்க;ர் ஹோட்டல் ஒன்றில் ஒரு விலைமகளைச் சந்தித்தேன்.
வெறும் ‘சேட்டைகளை மட்டுமே கண்டிருந்த அவள், இப்படி ஓர் அப்பாவியைச் சந்தித்ததில் ஆச்சரியப்பட்டாள்.
இவர்களை (வேசிகளை) எல்லாம் மனதிலே எண்ணிய போதுதான் விலைமாதர் போக்கை நியாயப்படுத்த எனக்குத் தோன்றிற்று.
விளக்குமட்டுமா சிவப்பு? அதிலே தான் பிறந்தது. வெறும் காமத்தை மட்டுமே மூலமாகக் கொண்டு, விலை மாதரை நான் நெருங்கியதில்லை. அவர்களிடம் இருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
(பார்க்க: கவிஞர் கண்ணதாசன், எனது வசந்தகாலங்கள் 1997 பக்கம்: 49-50)

கவிஞர் கண்ணதாசனின் “விளக்கு மட்டுமா சிவப்பு” “நடந்த கதை” என்ற இரு நாவல்களும் இன்னும் சில அவரது நூல்களும் விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதோடு நியாயப்படுத்தவும் முனைகின்றன.

வைரமுத்துவின் “வில்லோடு வா நிலவே” என்ற நாவல், வரலாற்றோடு காதலையும் தற்கொலையையும் நியாயப்படுத்துகிறது.
“காவி நிறத்தில் ஒரு காதல்”,
“வானம் தொட்டுவிடும் தூரம் தான்”,
“ஒரு போர்க்களமும் இரண்டு பு+க்களும்”,
“மீண்டும் என் தொட்டிலுக்கு”
போன்ற வைரமுத்துவின் அனைத்து நாவல்களும் காம விரசத்தோட கலந்த காதல் கதைகளாகவே நகர்த்தப்படுகிறது. அதில், ‘வானம் தொட்டுவிடும் தூரம் தான்’ என்ற நாவலில் பள்ளிப் பருவ பாலிய காதலை வலியுறுத்துவதாகவும் ஆசான்களின் அனுமதி மறைமுகமாகக் கிடைப்பதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. காவி நிறத்தில் ஒரு காதல், என்ற நாவல், காதல் கைக்கூடாதபோது, காடேகி, காவி அணிந்து, சாமியாகி அப்போதும் காதல் உணர்வை விட முடியாது, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் காதலியைத் தேடிப் பயணிப்பதையும், காதலியின் தங்கை விபச்சாரியாக மாறி இருப்பதையும் சித்திரிக்கிறது.

இதே போல், ஆணாதிக்கத்தை சமூகத்தளத்தில் நின்று, அணுகி, விமர்சிக்க முனைந்த ஜானகிராமனின் “மோக முள்” என்ற நாவல், தீவிர பெண்நிலைவாத சிந்தனையை பிரஸ்தாபித்து, பெண்ணை மையமாகக்கொண்டு, ஆண் வாழ்வதை எடுத்துக்காட்ட முற்படுகிறது.

இவ்வாறு, இங்கு நாம் சிலவற்றையே நாவல் இலக்கிய சமுத்திரத்திலிருந்து அடையாளப்படுத்தினோம். அவற்றுள் சில சமூக வாழ்வின் அவலங்களையும், பொருளாதார அவதிகளால் புதைந்து போன உறவுகளையும், அவசர யுகத்தில் அல்லாடும் தாய்மையினையும், நவீன இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்துப் போன நட்பையும், கால வேகத்தில் மியு+சியத்திற்கு அனுப்பப்பட்ட மனிதத்தையும் படம் பிடித்துக்காட்ட முற்பட்டாலும், சில கொடிய, சமூகத் தீமைகளை தவிர்க்க முடியாத ஒன்றாகக் காட்டி, நியாயப்படுத்த பகீரதப்பிரயத்தனப்படுகின்றன.
இதேபோன்று, ஆயிரமாயிரம் நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும், இஸ்லாத்திற்கு முரணான, எதிரான கருப்பொருள்களில் அமைந்துள்ளன. இவை, அந்நிய இலக்கியங்களில் மலிந்தும் நிறைந்தும் கிடக்கும் நச்சுத் துளிகளில் சில, பிற காவியங்களுக்குள் இழையோடும், அவற்றின் கலாசார, பாரம்பரிய சமூக மரபுகளையும் உணர்வுகளையும் புட்டுபுட்டுவைக்க நாம் முனைந்தால், பல ஆயிரம் பக்கங்களில் பல நூல்கள் எழுத நேரிடும். எனவே, நாம் சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளோம். அவை, வாசிப்போருக்கு மிகத்தெளிவாகும். நாம் குறிப்பிட்ட உதாரணங்கள் எவ்வளவு மோசமானவை, எவ்வாறு இஸ்லாமிய சிந்தனைக்கு முரணானவை என்பதையும் தெளிவுபடுத்த முனைந்துள்ளோம்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இருந்து கொண்டே இஸ்லத்தை மாசுபடுத்தியும், சிதைத்தும் திரித்தும் எழுதவும், பேசவும் கூடியவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இத்தகையவர்களிடம் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். நான் அண்மையில் வாசித்த, இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு நாவல்கள் பற்றி இங்கே குறிப்பிட விளைகின்றேன்.
அவை:
1. சாய்வு நாற்காலி
2. சந்திரகிரி ஆற்றங்கரையில் (மொழிபெயர்ப்பு நாவல்)
இஸ்லத்திற்கு எதிரான, முரணான சிந்தனைப் போக்குள்ள தீவிரப் பெண்ணிய வாதியான, தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ (1995) என்ற அவரது ஐந்தாவது நாவல், சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ தஸ்லீமா நஸ்ரினின் ‘லஜ்ஜ’ கவிக்கோவின் “பசி எந்தச் சாதி? போன்றவைகளின் பின்னணியில் வைத்து நோக்கத்தக்கது.

சாய்வு நாற்காலியில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய கலாசாரத்தையும் எள்ளி நகையாடி எழுதியதற்காக - தோப்பில் முஹம்மது மீரானுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. இந்த நாவல் தமிழோடு, அதிகமான மலையாள சொல்லாடல் கையாளப்பட்டுள்ளமையால், சாமானியர்கள் அதை விளங்கிக்கொள்ள, ஒரு முறைக்குப் பலமுறை படிக்க நேரிடலாம். எனினும், இந்த நாவல் இஸ்லாமிய சிந்தனைக்குப் புறம்பான, எதிரான கருத்தியல் சார்ந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல், அண்மையில் நான் படித்த, தோப்பில் முஹம்மது மீரானின் முன்னுரையுடன் வெளிவந்த பிறிதொரு நாவல், இஸ்லாத்திற்கு விரோதமான, கன்டை மொழியில் சாரா அபு+பக்கர் எழுதிய ‘சந்திரகிரிய தீரதல்லி ’ என்பதாகும். இதில் இஸ்லாமிய சமூகத்தின் பெண்களின் நிலைமையையும் இஸ்லாமிய குடும்பவியலையும் நகைப்புக்கிடமாக்கியுள்ளதால், தி.சு. சதாசிவம் என்பவர் உடனே தமிழில் ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்’ என்று சுடச்சுட மொழிபெயர்த்துத் தள்ளிவிட்டார். ரஷீத், முஹம்மத்கான் உட்பட பல பாத்திரங்களுடன், முஸ்லிம் பெண்கள் தொடர்பான முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான, விரோதமான, வித்தியாசமான கருவை, சாரா அபு+பக்கர் கையாண்டுள்ளார்.

நாம் முன்னர் குறிப்பிட்ட அதிதீவிரப் பெண்ணியவாதியான, தோப்பில் முஹம்மது மீரான், இந்நாவலுக்கான தனது முன்னுரையில் “நான் வாசித்த வரையில் தமிழிழோ மலையாளத்திலோ இதுவரையிலும் யாராலும் கையாளப்படாத ஒரு புதிய விசயம் இது. இந்தக் கன்னட நாவலின் மொழிபெயர்ப்பு, தமிழ் வாசகர்களுக்கு முஸ்லிம் பெண்களின் மணவாழ்க்கையில் காணப்படும் பின்னல்களை அப்பட்டமாகவே காட்டுகிறது. இந்தப் பின்னல்கள் கன்னடப் பகுதிய முஸ்லிம் பெண்களின் வாழ்வில் காணப்படும் பின்னல்தான்” என்று இஸ்லாமிய குடும்ப அமைப்பையும் அதில் பெண்களின் நிலையையும் போலியாகக் கற்பனை செய்து, பின்னல் உள்ளதாக நஞ்சைக் கக்குகிறார்.
இந்த நாவலின் கருவானது மருமகன் மீதுகொண்ட பகையினால், மகளுடைய வாழ்வையே சீர் குலைத்து, பரிதவிக்க விட்டு, பின்னர் பரிகாரந்தேட முனையும் தந்தையின் போக்கும், மத (இஸ்லா)த்தின் பெயரால் ஆணாதிக்கத்தைச் செயற்படுத்தும் (முஸ்லிம்) சமூகத்தின் நிலையையும் சித்தரிக்கிறது. உண்மைக்குப் புறம்பான பல்வேறு போலில் புனைவுகளை இந்நாவல் சுமந்துள்ளது விமர்சிக்கவும், கண்டிக்கவும் படவேண்டியது.

அதேபோன்று, எகிப்து நாட்டைச் சேர்ந்த அவசர இலக்கியவாதியான நஜீப் மஹ்பு+ழ் என்பான் முஸ்லிம்களது மார்க்க (இஸ்லாமிய) உணர்வைக் கொச்சைப்படுத்தியும்ஈ எகிப்திய முஸ்லிம்கள் மத்தியில் பாலியல் துறை சம்பந்தப்பட்ட பிரள்வுகள் அதிகம் (?) என்பதையும் போலியாக விபரித்து, அவனால் எழுதப்பட்ட அரபு நாவலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இது அரபிலக்கியத்திற்கான நோபல் பரிசின் வரலாற்றிலேயே முதன் முதலாக வழங்கப்பட்டது. அதேபோல் யு+த நிறுவனங்களான மாஸோனியா, ரோட்டரிக் கழகம் (குசநந ஆயளழசெலஇ சுழவயசல ஊடரடி) என்பன, நஜீப் மஹ்பு+ழ் என்ற நரகல் நடை எழுத்தாளனுக்குப் பரிசு வழங்கி முஸ்லிம் சமூகத்தின் தூய்மையான உணர்வுகளை அவமதித்துக் கொச்சைப்படுத்தின. ஏனெனில், யு+தர்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளுக்கு நஜீப் மஹ்பு+ழ் ஆதரவுக்கரம் நீட்டிவரும் கோடரிக்காம்பு.
இவ்வாறான முஸ்லிம் பெயர்தாங்கி, நரகல் நடை எழுத்தாளர்களைப் பணம் கொடுத்து, பரிசு வழங்கி, இஸ்லாத்திற்கு எதிராக எழுதவைத்து, முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பை உடைத்தெரியும் முயற்சிகளில் மேலைத்தேயவாதிகளும் அதன் அடிவருடிகளும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ என்ற நூலுக்கு மேற்குலகின் பிரசார சாதனங்கள் கொடுத்த இலவச விளம்பரத்தைக் குறிப்பிடலாம்.

உலகு எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி, சத்தியத்தையும், உண்மையையும் நேசிக்கும், மததூற்றலையும் கொச்சைப்படுத்தலையும் வெறுக்கும் அனைத்து நெஞ்சங்களும் ‘சாத்தானியக் கவிதை’ என்ற நூலுக்கெதிராக ஆர்த்தெழுந்து, தடை செய்யக் குரல் எழுப்பின. அந்த எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் 1989 மார்ச் 12ம் திகதி இஸ்ரேலில் திறந்து வைக்கப்பட்ட, ஓர் இலட்சத்திற்கும் அதிகமான நூல்களைக்கொண்ட, சர்வ தேசிய புத்தகக்கண்காட்சியில் (நுஒhiடிவைழைn) ‘சாத்ததானியக் கவிதைகள்’ முக்கியத்துவமளிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டதானது. இந்நூலின் பின்னால் மறைந்துள்ள ‘ஸியோனிஸ’ சதிகளை மிகத் தெளிவாகப் புலப்படுத்தியது. இது ‘ஓர் ஒழுக்கக்கேடான நூல்’ என வர்ணித்து, இது இஸ்ரேலில் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கூறிய யு+த மதகுருவான யுரசாயஅ ளுhயிசைழ என்பாரின் வேண்டுகோளைக் கூட அப்போது இஸ்ரேல் புரக்கணித்தது. இவ்வாறு இஸ்லாமிய ஒழுக்க நியமங்களை துச்சமாக மதித்து எழுதவும், இறைத் தூதரின் புனிதமான ஆளுமைகளுக்கு மாசு கற்பிக்கவும் தூண்டி வருகின்றனர்.தமிழ் உலகில் ‘சாத்தானியக் கவிதை’ நுhலின் அபத்தங்களுக்கு ஆணித்தரமான பதில் அறிஞர; Pது அவர;களால் அளிக்கப்பட்டது.
அதேபோல் இஸ்லாமிய சமூகத்தினுல் தோன்றிய உட்பிரிவுகளும், வழிகெட்ட கொள்கைப் பிரிவுகளும் இலக்கியத்தினூடாக பிரசாரப் போர்தொடுத்து, நஞ்சு கலந்துள்ளன ‘கனகாபிஷேக மாலை’ யின் ஆசிரியரான கனகவிராயர் ‘ஷீஆ’க் கொள்கையில் ஊறித் திளைத்தவர் போல் எண்ணத்தோன்றுகிறது. அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது, அவர் கட்டவிழ்த்துள்ள மிதமிஞ்சிய வர்ணனைகளிலே அத்தகைய கருத்தியல்கள் மலிந்திருக்கக் காணலாம்.

“தோகாந்துருக்கி ” வாயிலாக ‘ஷிஆக்’ கருத்தொன்றை ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “உலகிலே வாழ்ந்த ‘அமீருல் முஃமினீன்’ என அழைக்கப்பட்டவர் அலி  அவர்கள் ஒருவர் மாத்திரமேயாகும். அந்த மொழி பெறக்கூடியவர் மற்றொருவர் உளரேல், அது அவர்கள் தம் புதல்வரேயாம்.”
இதேபோல், கற்பனையில் கற்பிதம் செய்ய முடியாதவற்றையெல்லாம் உளறிவைத்த உமறுப் புலவரின் சீராப்புராணமும், அஞ்ஞான குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை அறிய முடிகிறது. இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் என்ற தனது நுhலில் ஹஸ்;ஸான் அவர;கள் உமறுப் புலவரின் சீராப்புராணத்தை இவ்வாறு விமர;சிக்கின்றார;.
உளறுகிறார் உமறுப் புலவர;
இஸ்லாத்துக்கு முரணான கவிதைகள் நாற்றம் பிடித்த சீழை விட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட இஸ்லாமிய இலக்கியம் என்னும் பெயரால் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எப்படித்தான் தலையெடுத்தன?
பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்யவேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வமே இதற்குக் காரணமாகும்.
இன்றுகூட புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபடவியலாத நிலையில் இருப்பதை நாம் காணுகின்றோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு, ஐநூறு, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்?
அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை நினைவிருத்தியே இதை அணுக வேண்டும். அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப்போயிருந்த நிலையில் அதைவிட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆரம்ப நிலையிலிருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிற்கு மாறுகின்ற கட்டத்தில் (வுசயளெவைழையெட pநசழைன) அவர்களுடைய நிலை இருந்தது.
பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதாகாலகட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேராட்டம், ஆனை குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல்-கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிற சமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதைக்கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் ‘அறிஞர்கள்’ முஸ்லிம்களுடைய இந்த வரம்பு கடந்த நடவடிக்கையிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி என யோசித்தனர். இதன் விளைவாக மாற்றுச் சமயத்தவரைப் போல இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமிய வேஷம் பு+சினர்.
மூர்த்தி உற்சவங்கள் தர்கா உரூஸ்களாயின; தேரோட்டம் சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை குதிரையுடன் உண்டியல் ஊர்வலங்கள் ஆகியவை அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கப்ருகளுக்கு பு+சும் அபிஷேகமாக ‘அட்ஜஸ்ட்’ செய்யப்பட்டது.
இந்தப் ‘போலச் செய்தல்’ (வுழ iஅவையவந) என்னும் மனித இயல்பு இஸ்லாமிய தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத்துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.
எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாச தாகத்திற்கு இப்புலவர்களும் கற்பனை நீர் வார்த்து மாற்றுமத இலக்கியங்களைப் போல இயற்றத் தொடங்கினார்கள்.
இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் மொழியாகிய அரபி மொழியின் மீது அக்காலத் தமிழ் மக்களுக்கு ஒரு தெய்வீக பக்தி ஊட்டப்பட்டது. தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபிமொழியமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ, மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்மொழியானது தமிழர்களுடைய (‘தம்மளன்’ என்பது கொச்சையான பேச்சு வழக்கு) பாஷை;
அது காஃபிரானவனுடைய பாஷை;
அந்த பாஷையில் புனிதம் மிக்க அரபி குர்ஆனை மொழிபெயர்த்து எழுதுவது ஒரு மகாபாவமான காரியமாகும் எனவும் ஒரு நம்பிக்கை நிலவியிருந்தது. ஆகவே, குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மெய்யான இஸ்லாத்தைத் தமிழ் மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளுகின்ற தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இது தொடர்பாக இன்னொரு நிலையையும் நாம் காணமுடிகின்றது. தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துக்களை எடுத்தெழுவதைத் தவறாகக் கருதிய அக்காலத்தில் அரபி மொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமேல் வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையையும் நன்கு உணர்ந்து கொண்ட சிலர் தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அப்படியே அரபி எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடானர். ‘அவன் வந்தான்’ என்பதையே “யுஎயn ஏயவொயn” என ஆங்கில எழுத்து வடிவத்தில் எப்படி எழுதுகிறோமோ இது போல் அரபி மொழி வடிவத்தில் தமிழை எழுதியமையால் ‘அரபுத் தமிழ்’ என ஒழு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப்பட்டன. இருந்தும் இந்த அரபுத் தமிழ் வடிவத்தில் கூட குர்ஆன், ஹதீஸ்களுக்குரிய மொழி பெயர்ப்புகள் வெளிவரவில்லை.
தமிழிலோ, அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு திருக்குர்ஆனின் மீது ஒரு எட்டாத உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன், ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? மாற்று மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியப் புலவர்கள். இந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து ஆலிம்களை அணுகி இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப்புலவர், ஆலிப்புலவர் ஆகியோர் முறையே சதக்கத்துல்லா அப்பா, காஸி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம்.

இப்புலவர்கள் இவ்வாறாக ‘உரை’ பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இயற்கையும் (உண்மையும்) செயற்கையும் (பொய்யும்) கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.
இவர்கள், படிப்பவர்களுக்குச் சுவையு+ட்டுவதற்காக உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துக்கள் ஒருபுறமிருக்க, அந்த நூல்களையுப் பிற்காலத்தில் பதிப்பித்தவர்கள் முன்னுரை என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்துவிட்ட புருடாக்கள் அதைவிட மேலாக மறுபுறம் துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப்புலவருக்கு வருவோம். உமறுப்புலவர் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்ணி சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் சென்று உரை (அது தொடர்பான செய்தி) கேட்டாராம். சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவரின் முஸ்லிமல்லாத தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணித்துவிடவே உமறுப்புலவர் கவலையில் நொந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் புலவருடைய கனவில் தோன்றினார்களாம். “உமறே! நீர் கவலைப்படாதீர் சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே நீர் சதக்கத்துல்லாவை மீண்டும் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக” என நபி (ஸல்) அவர்கள் உமறுப்புலவரின் கனவில் தோன்றிக் கூறினார்களாம்.

இதுபோல சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி (ஸல்) அவர்கள் தோன்றி உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவருக்கு உரை வழங்கினாராம். நபி (ஸல்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி சீறாப்புராணம் தொடர்பாகக் கட்டப்பட்ட இந்தக் கதை பலரும் அறிந்ததே.
வேறு சிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கிறது. சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப்புலவர் மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்த)க்கு வருகிறார். அங்குள்ள காஸி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்கு தேவையான செய்திகளை கேட்க, நெய்னா லெப்பை உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்து அவருக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். இதனால் உள்ளம் உடைந்த உமறுப்புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, “ஷாகுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும், சீறாப்புராணத்துக்கு நீங்கள் தான் தலைப்பெடுத்துத் தர வேண்டும் இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்” எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவர்? “திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய்” எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு உமறுப்புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி அதைத் தொடர்ந்து மடை திறந்த வௌ;ளம்போல் பாடலானாராம். இதன் பின்னர் உமறு, நெய்னா லெப்பை, “நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்தற்கு ஒலிகள் பிரான் அவர்களுக்குப் பொருத்தமேயாகலின் நமக்கும் மிக்கப் பொருத்தமே” எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை காதிரசனா மரைக்காயரின் ‘சீறா நபியவதாரப் படலம்’ (காதிரசனா மரைக்காயர், சீறா நபியவதாரப் படலம், சென்னை, முதற்பதிப்பு ஜுலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாத்துக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒரு புறமாகவும்; அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைக் கதையாகக் கட்டி உருவாக்கிய தன்மை மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக்கூடிய முரண்கள் ஏராளம்… ஏராளம்!
தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப்புலவருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி (ஸல்) அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருப்பார்களானால், அத்தகைய கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம் பெறவே இயலாது.

ஆனால் உமறுவின் சீறாப்புராணத்தில் பொய்யும் புனைவுகளும் கூடிய இஸ்லாத்துக்கு முரணான செய்திகள் மலிந்து காணப்படுகின்றன தமிழ்க்காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப்படலம், நகரப்படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு புலவர் கற்பனை நயம் படப் பாடிச் செல்லுகிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை நீக்கி விட்டு நபி (ஸல்) அவர்களுடைய ‘பதிவு செய்யப்பட்ட’ வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம். மெய்யான இந்த வரலாற்றைப் பாடும் போது கூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்லுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப்புடைத்துக் கொண்டு நிற்கின்றன நபி (ஸல்) அவர்கள் பிறந்தமையை ‘நபியவதாரப்படலம்’ என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப்புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த போது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகின்றது பின்வரும் இப்பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
பரந்து செவ் வரிக்கொடி யோடி
மான்மருள் விழியா ராமினா விருந்த
வளமினைத் திசையினை நோக்கி
நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி
னாலுமூ லையுமொரு நெறியாய்த்
தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுஜுதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகலும் கஃபதுல்லாஹ்வின் நாலு மூலையிலும் ஒரு சேர சுஜுது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சுஜுது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபதுல்லாஹ் இத்தகைய உயர் தனிச் சிறப்புகளையுடைய கஃபதுல்லாஹ்வானது நபி (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி சுஜுது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.
சீறாப்புராணத்தை மட்டுமே படித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இதனையும் உண்மைச் சம்பவமாகக் கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் இந்நூல் அனேகம் உள்ளன.
கஃபதுல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி உலக மாந்தர் அனைவரும் சுஜுது செய்ய வேண்டியது கடமையாயிருக்க, உமறுப்புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபதுல்லாஹ்வே சுஜுது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.
புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்லுகின்றன. ஆமினா அன்னையின் வீட்டை நோக்கி சுஜுது செய்த கஃபதுல்லாஹ் வாய்திறந்து பின்வருமாறு கூறியதாம்.
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற
கோற்றவ னென்றனை யின்றே
நிறைதரப் புனித மாக்கினா னென்ன
நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

“பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி சுஜுது செய்த இன்று தான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்” என கஃபதுல்லாஹ் வாய்திறந்து ஓதியதாம்.
‘கஃபா’ என்னும் சொல், “புகழ் பெற்றுச் சிறந்துள்ளது” என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். “புனித ஆலயமாகிய கஃபாவை அல்லாஹ் ‘கியாமன் லின்னாஸ்’ ஆக - ஜனங்களுக்கு ஆதாரஸ்தலமாக - நிலைப்பாடாக - அபயமளிக்கக்கூடியதாக - ஆக்கியிருக்கிறான்.” (குர்ஆன் 5:97)

“மனிதர்களுக்கு அபயமளிக்கக்கூடிய ஸ்தலமாக கஃபாவை நான் ஆக்கியிருக்கிறேன்” என அல்லாஹ் சொல்லுகின்றான். ஆனால் கஃபாவோ, தனக்கு அபயம் தேடக்கூடிய இடமாக ஆமினா அவர்களுடைய வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீடிருந்த திசை நோக்கி சுஜுது செய்ததாகக் பாடுகிறார் உமறுப்புலவர்.
கஃபா என்றாலே சிறப்புடையது எனப் பொருளிருக்க, நபி (ஸல்) அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா சிறப்பு பெற்றது என்பதாகவும் முரண்படக் கவிமை இயற்றியுள்ளார் புலவர்.

(மனிதர்களாகிய) அவர்கள் (கஃபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனை வணங்குவார்களாக. (குர்ஆன் 106:03)
என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் வீட்டை நோக்கி இரட்சகனுடைய வீடாகிய கஃபா சுஜுது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.
இவ்வாறு அல்லாஹ்வுடைய வீடு அவனுடைய தூதருடைய வீட்டுக்கு சுஜுது செய்துப் புனிதமைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப்புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப்பாடுவதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்வின் கஃபாவிற்குத் தலைகுனிவை உண்டாக்குகின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்ளுவான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதனை எப்படி அங்கீகரித்துக் கொள்வார்கள்?

அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனை விட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும் என அடுக்கிக் கூறுகிறது அருமறை குர்ஆன்.
எவர் என் மீது வேண்டுமென்று தெரிந்தே பொய் சொன்னாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம் அபு+தாவு+த், நஸயீ.
எனக் கடுமையாக எச்சரிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். இப்படியிருக்க இந்தச் சீறாப்புராணத்துக்காரருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அவருடைய கற்பனை வண்ட வாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் எனக் கொள்ளுவது எங்ஙனம் பொருந்தும்?” (ஹஸ்;ஸான்-1999 ப:21-31)

இஸ்லாமும் இலக்கியமும்
எழுதுகோல் இல்லாத 1422 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தின் மகிமை பற்றிப் பேசியதோடு, இலக்கியப் புருஷர்களால் என்றென்றும் வழங்க, வரைய முடியாத முக்கியத்துவத்தை இஸ்லாம் இலக்கியத்துக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இதனால், அன்று ஹஸ்ஸான் (ரழி) போன்ற பெரும் பெரும் இஸ்லாமிய இலக்கியவாதிகள் உருவானார்கள்.

இஸ்லாம், வணக்கத் தலங்களில் மட்டுமன்றி, மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அவனை நெறிப்படுத்துகிறது. ஆன்மிகம், அரசியல், கல்வி, விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம், இல்லறம், விளையாட்டு என்ற எல்லாத் தளங்களிலும் பரந்துபட்ட அடிப்படைகளைக் கொண்ட தெளிவான, வலுவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
எனினும், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலில் தவறிழைத்துக் கொண்டவர்களைப் போலவே, இஸ்லாமிய இலக்கியப் பார்வை குறித்த புரிதலிலும் தவறிழைத்து விட்டனர். இஸ்லாமிய இலக்கியத்தின் களம் விரிந்து பரந்து பட்ட அளவிற்கு இலக்கியம் குறித்த இஸ்லாமியர்களின் பார்வையோ விரியவில்லை. இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில், மத்ரஸாக்களில், இஸ்லாமிய கற்கைத் துறை சார்ந்த கணிசமான தொகையினரிடத்தில் கூட அது குறித்த விரிந்த, ஆழமான பார்வை இல்லை என துணிந்து கூறலாம்.
இலக்கிய வடிவத்தினூடாக பல்வேறு கொள்கைகள், இஸ்லாமியர்களின் சிந்தனையில் ஊடுருவும் இன்றைய காலகட்டத்தில் கூட, அதைத் தடுத்துவிட, இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையிலான இலக்கியங்கள் உருவாகவில்லை. மாறாக, சில தனி மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, ஷிர்க் கலந்த கவிதைகளுக்கு பொது நிதியில் உதவி புரிகின்றமை வேதனைக்கும் விசனத்திற்குமுரிய விஷயமாகும். அல்லாஹ்வின் வார்த்தைகளையும், அவனது இறுதித் தூதரின் பொன்மொழிகளையும் தாங்கி வரும் தூய்மையான நூல்களுக்கு இல்லாத பெறுமானம், சீழ் நிறைந்த சிந்தனையாளர்களின் கவிதை நூல்களுக்குள்ளமை சத்தியத்தை நேசிக்கும் எந்த ஈமானிய உள்ளத்தையும் வேதனைப்படுத்தாமல் இருக்க முடியாது. அத்தகைய அயோக்கியத் தனங்களை எதிர்த்தே நமது எழுதுகோல்கள் சீறிப் பாய்கின்றன. இதனைப் பொறுக்க முடியாத வக்கிர புத்தி உள்ளங்கள் வன்முறை வழிகளை திரைமறைவில் தூண்டிவிடுகின்றன.

இருளைச் சகித்துக் கொண்டிருப்பதை விட ஒளி விளக்கொன்றை சுயமாக ஏற்றிக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து விட்டது. சத்தியத்திற்காக பல்துறைச் சமர் புரியவும் உண்மைக்கு உயிர் கொடுக்கவும் ஆர்த்தெழ வேண்டிய தகுந்த தருணம் இது. நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை பிறர் தீர்மானிக்காது, அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் முற்று முழுதாகத் தீர்மானிக்க வேண்டும்.

அறபு நாட்டுக் கரண்சிக்காக சுய மரியாதையை அடகுவைத்த கனவுலகத் தலைவர்களால் நிஜத்தை உணரவே முடியாது. முஸ்லிம்களிடையே ஆத்மீக உணர்வு அருகிச் சென்று, பள்ளிகளை விட்டு அவர்கள் அப்புறமாக, அவர்களே அரைவாசிக் காரணம். இன்று குறுகிய உணர்வுகளின் அடிப்படையில் முஸ்லிம்களிடையே பிரிவுகள் தோற்றம் பெற்று விட்டன. கருத்து வேறுபாடுகளின் போது, சுய கௌரவமும், தான் தோன்றித் தனமும், மனோ இச்சைகளுமே கடவுளாகி விடுகின்றன. எனவே, நியாயத்தை உணர முடியாது, மனசு மரித்துப் போனவர்களின் பின்னால் நின்று எதையும் செயல்படுத்திக் கொள்ள முடியாது. இதை, இளைய தலைமுறை நன்கு புரிந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.

தற்போதைய நவீன இஸ்லாமிய சிந்தனை வற்றிவிடக் கூடாது. உதய காலத்தை நமது இளைஞர்கள் இரவாக்கி விடக் கூடாது. இரவில் விழுந்த குழியில், பகலிலும் விழுந்து விடக் கூடாது. பழம்பெருமை பேசிப் பேசியே காலங்கடத்துவதும் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் சடத்துவ இலக்கும், அசத்தியத்தோடு சமரசம் செய்து கொண்டு எப்படியும் வாழலாம் என்பதுமே நமது சமூகத்தின் மாறா விதியாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
இஸ்லாமிய இலக்கியவாதி நிஜ உலகை மறக்க மாட்டான். சத்தியத்தோடுள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள மாட்டான். ஆனால், இன்று நம்மில் பலர் போலிகளை உலாவவிடும் போலிகளாகவே மாறி, அழைப்புப் பணிக்குரிய பலமான பாலத்தைப் பயன்படுத்தாமல், இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு மிடையில் பெரும் சுவரொன்றை எழுப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தச் சுவர் தகர்க்கப்பட்டு, இலக்கிய உணர்வுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், விரிந்தளவில் மதிப்பீடு செய்தல் வேண்டும். அதனால், முஸ்லிம்களின் அழகியல் உணர்வும் சத்தியத்தாகமும் சரியான செல் நெறியான நிழலில் விரிவுபடல் வேண்டும்.
இஸ்லாமிய சிந்தனையில் ஆழ்ந்து, ஆய்ந்து கற்று, உள்ளத்தில் அதனை உணர்வுப் பு+ர்வமாக ஏற்ற இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தவர்களால்தான் இலக்கியத்தை முழுமையாக இஸ்லாமிய மயப்படுத்த முடியும். மனித வாழ்வையும், நிகழ்வையும் வரலாற்றையும் இஸ்லாமிய உள்ளத்தோடு, அவர்களால் மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும். எனினும், இன்றைய இலக்கியப் பதிவுகளில் இவர்களின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை உங்களிடமே விடுகிறோம். இதனால்தான் பத்திரிகைகளில், அல்லது சில கலை இலக்கிய இதழ்களில் தலை காட்டும் இஸ்லாமிய எழுத்தாளர்கள்(?) சிலர் இப்படித் தாம் என்ற வட்டத்துக்குள் நுழையாமலோ, அல்லது வட்டத்தையும் எல்லைக் கோடுகளையும் தாண்டிய வரம்பு மீறிய பாதையிலோ இலக்கியப் பணி செய்கிறார்கள்.

இஸ்லாமிய இலக்கியம் என்று எழுதப்படும் போது, மனிதனின் அழகனுபவத்தைத் தடுத்து, புன்னகையைத் தடுத்து, மனித மகிழ்ச்சிக்குத் தடை போடும் மத வாழ்க்கைக்கு அழைப்பு விடுவதாக சமயச் சார்பற்ற புத்தி ஜீவிகள்(?) விசனப்படுவதுண்டு. சமயச் சார்பற்றோர், எழுத்தாளர்களுக்கு மதம் என்ற முகவரி தேவையில்லை என்ற வரட்டு வாதத்தையும் முன் வைப்பர்.

எனினும், எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் ஒரு அழகான அளவு கோலைக் கொடுத்து, இஸ்லாம் நெறிப்படுத்துகிறது. முஸ்லிம்கள் எழுதுவதெல்லாம் இஸ்லாமிய இலக்கியங்களாகிவிடமாட்டாது. இங்கே, அவர்கள் எல்லாம் இஸ்லாமிய இலக்கிய வாதி என்று அடைமொழி பெற்றிடவும் முடியாது. எழுதுபவரின் இலக்கு, பாடுபொருள், அவரது ஒழுக்கவியல் என்பன போன்ற இன்னோரன்ன வரைமுறைகளை நிர்ணயிப்பதன் மூலமே, அது உள்வாங்கப்படும்.

வீண் கற்பனைகளுக்கோ, தனிமனித புகழ்பாட்டிற்கோ, வழிபாட்டிற்கோ, ஆபாச களியாட்ட லீலைகளுக்கோ வன்முறைத் தூண்டல்களுக்கோ, வெறியாட்டங்களுக்கோ, ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான போலிச் சித்திரத்தை புனைந்து கூறவோ, தாக்குதலுக்கோ, சொல்லம்புகளால் குத்திக் குதறுவதற்கோ, கிழிப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.

“கவிதைக்குப் பொய்யழகு” என வைரமுத்து கூறுவது கவிஞர்களின் நிலையை எவ்வளவு தெளிவாக உணர்த்தி விடுகிறது. எனவே, நபியவர்கள் இத்தகைய கவிஞர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

“ஒருவரது வயிற்றில் கவிதை நிரம்பியிருப்பதை விடச் சீழ் நிரம்பியிருப்பது சிறந்ததாகும்.”
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபு+தாவு+த்.
காம உணர்வுகளைத் தூண்டக் கூடிய விரசமான கவிதைகளை, பாடல்களை உள்ளத்தில் மனனமிட்டு வைப்பதை விட, சீழ் சிறந்தது தான் என்பதை நபியவர்களின் பொன்மொழி உணர்த்துகிறது. கீழான வார்த்தைகளில் கவிதை-பாடல் இயற்றுபவர்கள் ஷைத்தான்கள் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

“அர்ஜ் எனுமிடத்தில் ஒரு கவிஞன் கவிதை புனைந்து கொண்டிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு+ஸயீத் (ரழி)
நூல்: முஸ்லிம்.

நபியவர்கள் பொய், மது, மாது, ஆபாசம் என்பன பற்றிய விரசமான வர்ணனைகள் கொண்ட கவிதைகளைத்தான் கண்டித்துள்ளார்கள். நல்ல கவிதைகளை அனுமதித்துள்ளார்கள்.
“நிச்சியமாக கவிதையில் தத்துவம் இருக்கிறது.”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வு+த் (ரழி)
நூல்: திர்மிதி.

“கவிஞர்கள் கூறியதில் மிக உண்மையானது” அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழியக் கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம்.

இஸ்லாம் வரம்புக்குட்பட்ட, எல்லைக் கோடுகளைத் தாண்டாத கவிதைகளைத் தடுக்கவில்லை என்பது புலனாகிறது. இஸ்லாமிய இலக்கியம், மனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கு மிக விரிந்த அளவில் களம் அமைத்துக் கொடுக்கின்றது. ஏனெனில், உயிர்த்தன்மையுள்ள இலக்கியம் உணர்ச்சியுடையதாக இருத்தல் அவசியம். எனவே இஸ்லாமிய இலக்கியம் என்பது தத்துவரீதியாக இஸ்லாமியக் கோட்பாடுகளை விளக்கும் இலக்கியமன்று. அல்லது அது சில உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகளின் கூட்டுக் கலவையன்று. அது, அவற்றை விட பன்மடங்கு விரிந்த பொருட்களை உள்ளடக்குகின்றது. இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட்களையும் இஸ்லாமியக் கோட்பாட்டின் நிலைக்கலனில், அழகுணர்ச்சியின் அடிப்படையில் நோக்கி விளக்குவதாகும். இஸ்லாமிய இலக்கியம் அதன் கோட்பாடுகள் உண்மை நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்புடைய தனி மனிதர்களையும் தழுவி நிற்பதோடு, முழுப் பிரபஞ்சத்தையும் அது உள்ளடக்கி நிற்கும்.
இந்த வகையில், தென்றலில் அசைந்தாடும் மலர்கள், காலையிளங்கதிரவன், வானத்தில் கண்சிமிட்டும் தாரகைகள், தெளிந்த நீரோடைகள், நீர் வீழ்ச்சிகள், வசந்தத்தின் வரவு, மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், அரசியல் எழுச்சி, வீழ்ச்சிகள், சமூகப்புரட்சிகள் ஆகிய அனைத்தும் இஸ்லாமிய இலக்கியப் பார்வைக்குள் கருப்பொருளாக அமையலாம்.

“ஒருவர், நபி (ஸல்) அவர்களை மிக உன்னத உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு சத்தியப் புருஷர் என வர்ணித்து, விளக்குவது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் நபி (ஸல்) அவர்களை இறைவனின் பேரொளிச் சுடரின் ஓர் ஒளிப்பிழம்பாகவும், அந்த ஒளிப்பிழம்பின் வெளிச்சம் உலகின் நான்கு மூலைகளையும் ஒளிமயமாக்கியதாகவும் நோக்கி விளக்கினால், இந்த விளக்கமும், வர்ணனையும் இஸ்லாமிய இலக்கியமாகும். அதே போன்று, பத்ர் யுத்தத்தை உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையில் நடந்த போராட்டமாகவும், அப்போரில் சத்தியத்திற்காக போராடியோர், அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் சக்தியால் தோற்கடித்தனர் எனவும் விளக்கினால், அது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் ஒளியை இருள் விரட்டுவதாகவும், ஒளிக்கும் இருளுக்குமிடையில் நடந்த போரில், இருளை ஒளி வெற்றி கொண்டதாகவும் விளக்கும் பொழுது, அது இஸ்லாமிய இலக்கியமாகிறது. எனவே, இலக்கியம் எந்தப் பொருளையும் கருவாகக் கொள்ளலாம். ஆனால், அப்பொருளைக் கையாளும் வகையையும் முறையையும் பொறுத்தே, அது இலக்கியம் என்ற அந்தஸ்த்தையும் அடைகிறது.”

(மின்ஹாஜ் அல்பன்னுல் இஸ்லாமி (1980) பக்கம்:130)
இந்த வகையில், இஸ்லாமிய இலக்கியத்தின் களம் மிகவும் விரிந்தது என்பதை சமயச் சார்பற்றோரும், இஸ்லாமிய இலக்கியக் கண்ணோட்டம் குறித்து விசனப்படுவோரும் மற்றவர்களும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதரை அன்பு கொள்வது, ஈமானின் பு+ரணத்துவ வெளிப்பாடு. இந்த நிலை உபதேசங்களாலும், வகுப்புக்களாலும், பிரதேசங்களாலும் சாத்தியமாக்கலாம். ஆனால், அதைவிட வேகமாகவும் ஆழமாகவும் ஒரு நாவல், கவிதை, கதை என்பன அதனை ஏற்படுத்திவிட முடியும். அது மாத்திரமின்றி, இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை, ஷஹாதத் வேட்கை என்று இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு அம்சங்கள்… இவற்றையெல்லாம் இலக்கியத்தினூடாக மிகுந்த வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். எனவே, மனித வாழ்வின் பல்வேறு பகுதிகள் பற்றிய இஸ்லாமியத் தீர்வுகளையும் சிந்தனைகளையும் ஆழ்ந்து படித்தவனே சமூக ஏற்றத்தாழ்வு, சாக்கடையாகிப் போய்விட்ட அரசியல் நிலை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இஸ்லாமியம் நிறைந்த ஆக்கங்கள் ஆக்க முடியும்.
உண்மையில் இஸ்லாம் இலக்கியத்திற்கு ஓர் ஆழமான அழுத்தத்தை வழங்குகிறது. அதன் அழகியல் உணர்வை அசிங்கப் படுத்துவதைக் கண்டிக்கிறது. உண்மையான கலை ஈடுபாடு கொண்ட இஸ்லாமியப் படைப்பாளி, தன் படைப்பினூடாக அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்ய விழைகிறான். உலக நடப்புகளில் தான் பெற்ற தரிசனங்களை இஸ்லாத்தின் நிழலில் ஆத்ம விசாரனைக்கு உட்படுத்தி, ஆத்ம விசாரம் செய்து, தனக்கே லாவகமான வடிவமொன்றில் இலக்கியமாக வெளிப்படுத்த முனைகிறான். எனினும், நம்மில் பலர் உள்ளங்களை ஊடறுத்து, வேகமாகச் சென்றடைந்து, தாக்கம் ஏற்படுத்தும் இலக்கிய வரத்தினை அற்பமாக்கி வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
இஸ்லாமிய இலக்கிய வரத்தினை மலினப்படுத்தும் குறிக்கோளற்ற கவிஞர்களை அல்லாஹ்வே கண்டிக்கிறான்.

“கவிஞர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுவார்கள். நிச்சியமாக, அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் திரிகின்றனர். நிச்சியமாக அவர்கள் (செய்யாததைக்) கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 26:224-226)

(இக்கட்டுரை ஆசிரியரின் மேலும் பல கட்டுரைகளை படிப்பதற்கு
www.kadayanallur aqsa.com எனும் பகுதிக்குள் பிரவேசியுங்கள்).

3 comments:

Anonymous said...

you are truly a just right webmaster. The website loading speed is incredible.
It kind of feels that you're doing any unique trick. Furthermore, The contents are masterwork. you've done a magnificent task in this subject!
Here is my web site ; High intensity Interval Training

Anonymous said...

Good day! This is my first visit to your blog!
We are a collection of volunteers and starting a new initiative in a community
in the same niche. Your blog provided us beneficial information
to work on. You have done a wonderful job!


my weblog - pregnancyhelper.in

Anonymous said...

Ridiculous quest there. What happened after? Thanks!

Here is my page; viagra