Showing posts with label கருத்துக் களம். Show all posts
Showing posts with label கருத்துக் களம். Show all posts

தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு / abroad jobs

தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு

வெளிநாட்டுக்கு போகிறேன் என்றால் ஒரு புதுமையான சந்தோஷம் பலருக்கு,

ஆனால் அங்கே செல்லும் போது தான் உண்மையில் அங்கு என்ன வாழ்க்கை என்பதை சரியாகத் தெரிந்து கொள்வோம்.

கம்பனிக்குப் போனால் முதீர் (Boss / Supervisor) தொல்லை

ரூமுக்கு வந்தால் மூட்டைத் தொல்லை என்று சொல்லிச் சொல்லி பல வருடங்களை நாம் வெளிநாடுகளில் கடத்திவருவது கவலைகுரிய விடயமாகும்

தன் தாயை தந்தையைப் பிரிந்து, மனைவி, குழந்தைகளைப் பிரிந்து நாடு துறந்து கடல் கடந்த ஒரு பயணம் தான் இந்த வெளிநாட்டு சம்பாத்தியம் என்பது.

ஒரு நாட்டின் இராணுவ வீரர்களை விட வெளிநாட்டில் சம்பாதிக்கும் தொழிளாலர்களை அந்த நாட்டு அரசாங்கம் கன்னியப்படுத்தி கைளரவப்படுத்தி உரிய வசதிகளை செய்திகொடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வெளிநாட்டு தொழிலாளிகளாக வாழும் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கம் சர்வதேச தொழிலாளிகள் சட்டத்திற்குற்பட்டு உரிய உரிமைகளை வழங்கி கெளரவப்படுத்த தகுதியானவர்கள் நாங்கள்.

ஆனால் உள்நாட்டிலும் இல்லை வெளிநாட்டிலும் இல்லை நிம்மதி என்று நாட்களை கடத்தி வருகிறோம்.

தன் வீட்டில் இருக்கும் போது தந்தை என்ற தன் குழந்தையின் அன்பான அழைப்பு,

தாய் வீட்டில் இருக்கும் போது மகன் என்று தாயின் இனிமையான அழைப்பு,

மாமனார் வீட்டில் இருக்கும் போது மருமகன் என்ற ஆரவாரமான உபசரிப்பு.

 இவைகளை துறந்து கம்பனி முதலாளியுடைய அழைப்பு.

அடுத்த வருடம் ஊருக்குப் போகலாம், அடுத்த டிசம்பரில் போகலாம் என்று அடுத்து அடுத்து வரும் வருடங்களை எண்ணி, எதிர்பார்த்து பல வருடங்கள் கடந்துசெல்கின்றன.

தாயகம் திரும்பி தன் சொந்ங்களுடன், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் போது கூனிக் குறுகி, கம்பு ஊன்றும் வயதில் அல்லது விபத்து, நெஞ்சு வலியில் சிக்கி உயிர் இலந்து பிணமாய் திரும்புகின்றோம்.

1. படித்து முடித்துவிட்டு அல்லது பரீட்சையில் பெயிலாகி வெளிநாட்டுக்குப் போய் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் பணம் சம்பாதித்துக்கொண்டு நாடு திரும்பி ஏதாவது வியாபரம் செய்யலாம்,

2. வீடு கட்ட வேண்டி இரண்டு வருடம் வெளிநாட்டுக்குப் போகலாம்,

3. தன் வீட்டில் இருக்கும் வயதுப் பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும், அதற்காக கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்குப் போய் உழைக்கலாம்,

4. வியாபாரம் செய்து நக்ஷ்டப்பட்டு கடனாளியாகி, அதனை அடைப்பதற்காகவும் மீண்டும் அதே வியாபாரத்தை தொடர்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்று இரண்டு வருடங்கள் சம்பாதிக்கலாம்

இப்படி ஏதோ ஒரு முக்கியமான காரணத்தை வைத்து குறைந்த இரண்டு வருடத்தை எல்லையாக வைத்து விமானம் ஏறுகின்றோம்.

ஆனால் அந்த இரண்டு வருடங்கள் இருவது முதல் முப்பது வருடங்களையும் தாண்டி வெளிநாட்டில் காலம் கடத்துவது கண்ணீர் வார்த்தைகளால் சொல்லப்பட வேண்டிய செய்திகளாகும்.

கடைசியில் இன்டெர்நெட்டில் குடும்பம் நடத்தும் மனிதர்களாக மாறிவிட்டோம்..

இரண்டு வருடங்கள் என்று ஆரம்பிக்கும் போது அந்த பயணத்திற்குரிய செலவுக்காக கடன் வாங்குகின்றோம், அந்த கடனை மொத்தமாகக் கொடுத்து, வீட்டாருக்குரிய மாதாந்த செலவையும் கொடுத்து வரும் போது குறித்த இரண்டு வருடங்கள் முடிந்து விட்டு பார்த்தால் கை எம்டியாகி விடும், விடுமுறையில் ஊருக்குத் திரும்பி அங்கே செலவு செய்யப் பணமிருக்காது.

இன்னும் இரண்டு வருடத்திற்கு இருந்தாலாவது ஏதாவது மீதப்படுத்தலாம் என்று வெளிநாட்டு உழைப்புக் காலம் நீடிக்கப்படுகிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கின்றான் என்ற தைரியத்தில் தாராள செல, ஆடம்பர வாழ்க்கை என்று எல்லையற்ற வீண் விரயங்கள்,

நவீன கண்டு பிடிப்புக்களாய் நாளுக்கு நாள் மார்க்கட்டுக்கு வரும் பொருட்களை வாங்க வேண்டி அதற்காக அதிக பணம் செலவிட வேண்டும்,

பக்கத்து விட்டார் வாங்கிய பொருளை அல்லது அதை விட நல்லதை, விலை கூடுதலானதை வாங்க வேண்டும் என்ற பேராசையும் ஈகோவும் கணவனின் வெளிநாட்டு வாழ்க்கைக்கான காலத்தை நீடிக்கச் செய்கின்றது.

ஆனால் வெளிநாட்டுக்கு வந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்

கணவன், மகன், நண்பன் எப்படியான தொழில் செய்கின்றான் என்பதை.

வீட்டில் இருக்கும் பெண்கள் தன் வீட்டார் ஒட்டகம் மேய்ப்பாலனா அல்லது மந்தையர் மேய்கும் இடையனா என்பது தெரியாமல் பணத்தை மட்டும் கணக்கிட்டுப்பார்ப்பவர்களாக இருந்து வருகின்றனர்.

காலத்திற்கேற்ற தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வெளிநாட்டு வாழ்க்கைக்கான எல்லையை நீடிக்கிறது. 

கணவன் வெளிநாட்டில் இருக்கிறார், உள்நாட்டில் மனைவி வேலிபாய்கிறால்

தந்தை வெளிநாட்டில் மகன் மூக்குக் கயிறற்ற குதிரைகளாக, நினைத்தை வித்தைகளை தைரியமாக சாதித்து வருகிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு வந்து ஒரு சில வருடங்கள் கடந்ததும் கஸ்டத்திற்கு மத்தியில் கிடைக்கின்ற நிம்மதி, சொகுசுகளை அனுபவிக்க ஆரம்பிக்கும் போது மீண்டும் ஊரில் சென்று கஸ்டப்பட விருப்பமில்லாது போகின்றது.

ஒரு கம்பனி முகாமையாளராக இருந்தால் வாகனம், உதவியாளர நினைத்த நேரம் ஓய்வு என்று.......

ஒரு கூலித் தொழிலாளி வெளிநாடுகளில் வேலை செய்யும் போது இயந்திரங்கள் உதவியுடன் தனது தொழிலை முன்னெடுப்பது அதிக சுகங்களை கொடுத்து நீண்ட காலமாக வெளிநாட்டில் வாழ சந்தர்ப்பமூட்டப்படுகிறது.

இதை சிலர் கவனத்தில் கொண்டு வாழ்வின் பாதியை வெளிநாடுகளில் கடத்துவது குடும்ப, ஊர் மட்டத்தில் பாரிய நக்ஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

உண்மையில் வெளிநாடுகளில் நீண்ட நாள் பணி புரியும் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காணும் போது ஏற்படும் உணர்ச்சி, கெட்ட எண்ணம்

வீடுகளில் தனியாக இருக்கும் மனைவிமார்களுக்கும் ஏற்படும் என்பதை மன சாட்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்கள் நீண்ட நாள் வெளிநாடுகளில் தங்க விரும்பமாட்டார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பெண்கள் வேலிபாய்கிறார்கள்.

வெளிநாடுகளில் வாழும் ஆண்கள் எந்த பெண்ணாவது கைகளில் மாட்டமாட்டார்களா என்று வாழ்வைக் கடத்துகின்றனர்.

இதற்கான பயிற்சியையும் வழிகாட்டல்களையும் இன்றைய சினிமா மிக அழகாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை சமூக சீரழிவுகளை உண்டுபண்ணுகிறது,

குடும்ப கட்டமைப்பை தகர்க்கின்றது,

 தகாத நோய்களை தோற்றுவிக்கின்றது,

 அல்லாஹ்விடத்தில் தீமையாளிகளாக மாற்றுகின்றது,

 நெறிமுறையையற்ற எதிர்கால சந்ததியினர் வளர்க்கப்படுகின்றனர்.

 இந்த நிலைமைகளை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் கணவன் வாழும் போது வீட்டில் மனைவி பல பிரச்சினைகளை சந்திக்கின்றால்,

ஏற்கனவே சொன்னது போல், மனிதனுக்குரிய இயற்கையான காம உணர்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆல் இல்லை.

தகவல் தொழில்நுட்பம் அதிக வேக வளர்ச்சி கண்டிருப்பதை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தினம் தினம் மனைவியுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்கின்ற கணவன் திறந்த மனம் கொண்டு பல செய்திகளை பகிர்ந்துகொள்வர்,

தொலைபேசியில் பேசும் போது எதிர்முனையில் இருப்பது என் சொந்த மனைவி தானே என்று ஆபாசமாக பேசுவது சர்வ சாதாரணம் தான்.

ஆனால் கணவனும் மனைவியும் இவ்வாறு பேசிவிட்டு தொடர்பு துண்டிக்கப்படுகின்ற போது பேசப்பட்ட காமச் செய்திகள், ஆபாசங்கள் எந்த நிலைக்கு தூண்டிவிடும் என்பதை பற்றி சிந்திப்பதில்லை. இது பாரிய தீமைகளுக்கு வித்திடும்.

தொலைபேசி உரையாடல்களை கல்லத்தனமாக செவியுறுகின்ற சமூகத் துரோகிகளும் நமது சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.

அன்றாடம் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரு ஆண் வீட்டில் இல்லை.

கணவனைத் தவிர பிறருக்குச் சொல்ல முடியாத மன வேதனைகளை பகிர ஆல் இல்லாது போகிறது,

திடிரென ஏற்படும் ஆபத்து, நோய்களுக்கு உதவ கணவனில்லை.

பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டு செல்கிறது.

வெளிநாடுகளில் ஆண்களும் இது போன்ற பல பிரச்சினைகளை அல்லது கஸ்டங்களை சந்திக்கின்றனர்.

சரியான உணவில்லை, சமைக்கத் தெரியாது, எத்தனை நாளைக்குத் தான் கடைகளில் உண்ணுவது என்று சொல்லிச் சொல்லியே காலம் கடத்தப்படுகிறது.

கம்பனி விடுதிகளில் சமைக்கும் போது சமைத்த உணவுக்கு என்ன பெயர் என்று தெரியாமலே வருடங்கள் கடக்கின்றன.

உண்மையில் வெளிநாட்டு உழைப்பு முற்றுப்பெறாமைக்கு சில காரணங்கள்

இருக்கின்றன:

நீண்ட காலம் வெளிநாடுகளில் கடத்துபவர்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் கொள்வது,

வயது கடந்து மீண்டும் நாடு திரும்பும் போது சொந்த நாட்டில் தேவையான வேளைவாய்ப்பு இல்லாது போதல்,

வெளிநாடுகளில் பெரிய சம்பளம் எடுத்துவிட்டு சொந்த நாட்டில் சிறிய சமபளத்திற்கு வேலை செய்ய முடியாது என்ற மனோ நிலை.

கணவன் வெளிநாட்டில் சில வருடங்கள் தங்கும் போது உள் நாட்டில் மனைவி, பிள்ளைகள் கட்டுபாடற்ற வாழ்க்கையை அனுபவித்த பின் மீண்டும் கணவன் அல்லது தந்தையின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் போது அனுபவத்திற்கு மாற்றமான நாற்களை சந்திக்க வேண்டி வருகிறதுஇதனால் மீண்டும் கணவன் அல்லது தந்தை வெளிநாட்டில் இருப்பது தான் நல்லது என்று ஏதாவது காரத்தைச் சொல்லி அனுப்பிவிடுவது.

வெளிநாட்டில் மாதாந்தம் பெற்றுவந்த ஊதியம் ஆடம்பர வாழ்க்கைக்கு உதவிய நிலையில் மீண்டும் உள் நாட்டில் அதே நிலையை ஈடுகொடுக்க முடியாமை.

இப்படி ஆண் தரப்பால் அல்லது பெண் தரப்பால் சில சுய நல ரீதியான அல்லது பொது நல ரீதியான காரணங்கள் வெளிநாட்டு ஆயுளை நீடிக்கின்றது.

ஆனால் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்களை உணர முன் வர வேண்டும்.

இஸ்லாம் அதனை மிக உறுதியாக போதிக்கின்றது.

நீண்ட நாற்கள் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை இஸ்லாம் கடுமையான எதிர்க்கின்றது, இதனால் ஏற்படும் தீமைகளே அதற்கான காரணங்களாகும்.

குடும்பங்களை துறந்து பல வருடங்கள் வெளிநாடுகளில் காலம் கடத்தும் நண்பர்களே விழித்தெழுவோம் வாருங்கள்.

 நாம் சாதிக்கத் தகுதியானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்,

 எம்மை படைத்த இறைவன் நமக்கு உணவு தருவான் என்பதை நம்புவோம்,

 வெளிநாட்டு உழைப்பு த்ற்காளிக ஒரு முயற்சி என்பதை மறக்காமல் இருப்போம்.

யா அல்லாஹ் போதும் என்ற மனநிலையை கொடுஎன்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.

வெளிநாட்டில் கிடைத்த அனுபவத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சிறந்த வேலையை தேடுவோம்,

வெளிநாட்டில் உழைத்த பணத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சுய தொழிலை ஆரம்பிப்போம்,

தொழில் புரிகிற அதே இடத்தில் குடும்பத்துடன் செட்டாக முயற்சிப்போம்,

உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்குரிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது உரிய நேரத்தில் அதனை பயன்படுத்த முயற்சிப்போம்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

சிந்தனை, எழுத்து & ஆக்கம்                                                                                      

public speaking skills / பேச்சுத் திறன்

public speaking skills / பேச்சுத் திறன்



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

‪தனித்த_பிரதேச_சபைக்கான_கோரிக்கை‬ - Demand for separate piradesa saba



ம‌/முசலி மரிச்சிக்கட்டி, கரடிக்குளி மற்றும் பாலைக்குளியை இணைத்த தனிப் பிரதேச சபைக்கான கோரிக்கை என்பது
1. வடக்கிலங்கை தமிழ் மக்கள் கோரிய தனித் தமிழ் ஈழத்திற்கு ஒப்பானதல்ல‌

2. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கோரிய தனி முஸ்லிம் மாகாண சபைக்கு ஒப்பானதல்ல‌

3. தனிப் பிரதேச சபை என்பதை சிலாவத்துரையில் உள்ள பிரதேச சபை காரியாலயத்தை உடைத்து மரிச்சிக்கட்டியில் கட்டுவதல்ல‌

4. தனிப் பிரதேச சபை என்பது தனித்த முஸ்லிம்களுக்கான கோரிக்கையல்ல‌

5. எத்தனை பிரதேச சபைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து இலைங்கை உள்ளூராட்சி நிருவாகவியல் சட்டத்தில் வரையருக்கப்படவில்லை.

6. தனித்த பிரதேச சபை என்பது பின்தங்கிய எங்கள் கிராமங்களை அவசர அவசியமாக முன்னேற்றுவதற்கான ஒரு தூரநோக்கு சிந்தனை மட்டுமே.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..04

  Part - 04
 சந்தித்த விவாத மேடைகள்



அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பல விவாத களங்களை சந்தித்து சந்துபொந்துகள் முழுதும் சத்திய முலக்கமிடச் செய்தவர்

அவைகள் அனைத்தும் வரலாற்றில் மைற்கற்கல்  (Mile stones) எனலாம், அவைகள் உலக மக்களுக்கு பாரிய பிரயோசனங்களை வகுத்துக் கொடுக்கக் கூடியவைகளாக இருந்து வருகின்றன.

அந்த விவாதங்களில் ஒரு சில இங்கு குறிப்பிடத்தக்கவை:

1. ஏ. டபுல்யு. ஹாமில்டன் (A.W. Hamilton of Kimberle) என்பவருடன் 1961ம் ஆண்டு செய்த விவாதம்.

2. பேராசிரியர் சிரில் சிம்கின்ஸ் (Cyril Simkins - Professor of New Testament Exegesis from Tennessee) என்பவருடன் ஒரு விவாதம் 1963ம் ஆண்டு நடந்தேரியது.

3. 1966ம் ஆண்டு பிரபல பைபிள் அறிஞர் டேவிட் லூகெல் (David -  prominent Seventh Day Adventist)  என்பவருடன் ஒரு விவாத மேடையில் சந்தித்தார்.
 
4. பாலஸ்தீன அமெரிக்க அறிஞர்களில் ஒருவரான  கலாநிதி.  அனிஸ் சரோஸ் (Dr. Anis Sarrosh) என்பவருடன் இரு தடவைகள் விவாதம் செய்யப்பட்டன.
 
1985ம் ஆண்டு  டிசம்பர் மாதம்இயேசு கடவுளா?” (is Jesus God?) என்ற தலைப்பிலான விவாதம் Royal Albert hall – UK” ரோயல்  ஆல்பர்ட் ஹாலில்  நடந்தேறியது,  
 
# 1988ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  7ம் தேதி இங்கிலாந்திலுள்ள பிர்மிங்கம் (Birmingham- United statues)ல்  "இறை வேதம் அல் குர்ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற  (the Quran or Bible, which is God’s word?)" தலைப்பில்  ஒரு விவாதமும் அரங்கேற்றப்பட்டன.
 
# இவர்களால் நடத்தப்பட்ட விவாதத்தில் தான் முதன் முதலில் கேள்வி பதில் என்ற ஒரு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு விவாத மண்டபத்திற்கு சமூகமளிக்கும் பொதுமக்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
5. “சிலுவை மரணம் நிஜமா அல்லது கற்பனையா? (Crucifixion: Fact or Fiction.) என்ற தலைப்பிலான விவாதம் கலாநிதி இராபர்ட் டக்லஸ் (Dr. Robert Douglas, PhD) அவர்களுடன கான்சாஸ் பல்கலைக்கலகத்தில் (Zwimmer Institute) at the University of Kansas நவம்பர் 1986ம் ஆண்டு நடந்தேறியது.

§   
  இந்த விவாதத்தின் போது அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் சிலுவை மரணம் கற்பனை என்பதை தோலுரித்துக் காட்டியதுடன் இயேசுவின் நிலை என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்லத் தெரியாது திகைத்து தலைப்பை மாற்றிய கலாநிதி இராபர்ட் டக்லஸ் அவர்களின் காட்சி கவலைக்குரியத்தும் சிந்திக்கத்தக்கதுமாகும்.

·  அதே மேடையில் இயேசு யோனா போன்றுஎன்ற கீழ் வரும் பைபிள் வசனம் கூறும் யோனாவின் அடையாளம் என்பது எப்படியானது (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற கேள்விக்கு தலை சிறந்த பல பெரிய பைபிள் அறிஞர்களால் பதிலளிக்க முடியவில்லை என்பதையும் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பகிரங்கமாக கூறினார்கள்.

(அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக; இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுக்ஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12 :39 -40)

  இந்த பைபிள் வசனத்தை விளக்கும் முகமாக யோனா வின் அடையாளம் என்ன? (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற தலைப்பில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்கள். 

6. 1984ம் ஆண்டு வத்திகான் மாநகரில் பகிரங்கமான விவாதமொன்றுக்கு அறிஞர் தீதாத் அவர்கள் இரண்டாம் ஜான் பவுல் அவர்களுக்கு சவால் விட்டிருந்தார். அதற்கு அவர், விவாதம் நடப்பதாக இருந்தால் மூடப்பட்ட அரையில் தான் நடக்க வேண்டுமென்று மறுத்துவிட்டார். இவர் பின்வாங்கியதனால் 1985ம் ஆண்டு அது தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றையும் அஹ்மத் தீதாத் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

7. 1991ம் ஆண்டு இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன,

§ கிறிஸ்துவ அறிஞர் பாஸ்டர் ஸ்டான்லிவ் ஸ்ஜோபர்க் (Pastor Stanley Sjöberg) என்பவருடன் சுவிடனில் ஸ்டொக்லம் (Stockholm) நகரில் புனித பைபிள் உண்மையான கடவுள வார்த்தைகளா?என்ற தலைப்பில் ஒன்றும்
 
அதே ஆண்டு டென்மார்க்கில் (Copenhagen - Denmark) பாஸ்டர் எரிக் பொக்  (Pastor Eric Bock) என்கின்ற அறிஞருடன் இயேசு கிறிஸ்து கடவுளா? (Is Jesus God?) என்ற மகுடத்தில் இரண்டாவது ஒரு விவாதமும் இடம்பெற்றது.

8. மேற்கத்திய தொலைக்காட்சி திரைகளில் அதிகம் பேசப்பட்ட,  கிறிஸ்து உலகம் நம்பிய பைபிள் பேரஞர்களில் ஒருவரான ஜிம்மி சுவேகாத் (Jimmy Swaggart) என்ற அமெரிக்கருடனான விவாதம், அறிஞர் அஹ்மத் தீதாதின் அறிவையும் அந்தஸ்தையும் உலக மக்களிடத்தில் மிக ஆழமாக படம்பிடித்து காட்டியது என்றால் மிகையாகாது. இந்த விவாதம் 1986ம் ஆண்டு பைபிள் அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்களின் சொந்த நகரில் லூசியான பல்கலைக்கழக மண்டபத்தில் (University of Louisiana) எட்டாயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்துகொள்ளும் விதத்தில் அறங்கேறின. இந்த விவாதத்தில் பைபிள் கடவுள் வார்த்தைகளா?  (is Bible Gods word?) என்ற தலைப்பில் இது அமைந்திருந்தது.

§  அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் இந்த விவாத்ததின் போது அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் பற்றியும் மேற்கத்திய நாடுகள் சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் ஒழுக்க சீரழிவுக்குள்ளாகி இருப்பது பற்றியும் மக்களுக்கு மிகச் சுருக்கமாக விளக்கினார்.

§  இந்த விவாத்ததின் போது மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் (western Christian society) நம்பிய ஜிம்மி சுவேகாத் அவர்களால் பைபிள் கடவுள் வார்த்தைகள் என்பதை சரியான ஆதாரங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தக்க, அறிவுப்பூர்வமாக விளக்கமுடியாமல் திகைத்த்துடன் இது கடவுள் வார்த்தைகள் தான் என்பதற்கு இந்த பைபிளை படிப்பதால் பின்பற்றுவதால் தான் நேர்மையான நல்ல மனிதனாக இருக்கிறேன் என்று சாதாரணமாக கூறி பார்வையாளர்களின் இழிபார்வைக்குள்ளானார். இவ்வாறு பகிரங்கமாக சொல்லி ஒரு சில மாதங்களில் இரு தடவை பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

§  இஸ்லாம் 4 திருமணத்தை அங்கீகரிப்பதாகவும் கிறிஸ்தவம் ஒரு திருமண முறையை அனுமதிப்பதாகவும் கூறிய அவர் தான் எனக்கு பிடித்த ஒரே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். கூறி சில மாதங்களில் பாலியல் குற்றவாளியாக மாட்டி உலகம் சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இங்கு மறக்காமல் சொல்ல வேண்டிய அம்சமாகும்.

§  விவாதம் நடந்தேறிய திகதியிலிருந்து தொடர்ந்து வந்த ஜந்து வருட காலப் பகுதிகளில் 2 பெரிய பாலியல் சம்பவங்களில் சிக்கி சந்தி சிரித்தது உலகமறிந்த உண்மையே.

§ அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹூக்கே, இந்த விவாத்திற்கு பின் மேற்க்குலகில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாரிய மதிப்பும், கெளரமும் கிடைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

9.  A televised debate - channel SABC, Islam and Christianity - Cape Town - South Africa - 1984 

இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்என்ற தலைப்பில் ஒரு விவாதம் 1984ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் (Cape Town - South Africa) இயங்கிவரும் SABC என்ற தொலைக்காட்சி அலைவரிசையினால் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முஸ்லிம்கள் சார்பாக அஹ்மத் தீதாத் மற்றும் மெளானா ஏ. ஆர்.  சூபி அவர்களும் கிறிஸ்துவர்கள் சார்பாக  பாதர் பொனாவெந்தர் ஹின்வுட் (father Bonaventure Hinwood)  மற்றும் ஜான் கில்கிரிஸ்ட் ( John Gilchrist) ஆகியோரும் பங்கேற்றனர்.

10. 1985ம் ஆண்டு July 7அமெரிக்க கிறிஸ்தவ போதகர் Professor Floyd Clark ஒரு விவாதம் பிரித்தானிய ரோயல் ஆல்பர்ட் மண்டபத்தில் Royal Albert Hall - LONDON – Britain ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழமை போல் இந்த விவாதத்திலும் கிறிஸ்தவ சகோதர்கள் கைசேதத்துடன் வீடு திரும்பினர்.

சிலுவை என்பது உண்மையா? (Is the crucifixion of Christ, right?) என்ற தலைப்பில் கனடாவில் (Maple Leaf Gardens - Canada.) கிறிஸ்தவ அறிஞர், போதகர் வெஸ்லி ஜெனரல் (ًwesley H. Wakefield General) அவர்களுடன் ஒரு விவாத்த்தில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் மேடையேறினார்கள்.

அறிஞர் அஹ்மத் தீதாத்  அவர்கள் கலந்துகொண்ட  விவாதங்களை மிக அமைதியா செவியுறுகின்ற போது புதுமையாக  அறிவுபூர்வமான பல தந்திரங்களும், வழிகாட்டல்களும், தேவையான வழிகாட்டல்களும் எமக்கு கிடைக்கும்.
 
பைபிளை கடவுள் வார்த்தைகள் அல்லது இயேசு கடவுள் அல்லது இயே கடவுள் மகன் என்று  நிரூபிக்க  வரும் எந்த கிறிஸ்துவ  சமூக பிரதிநிதிகளும்,  அல்லது கிறிஸ்துவ  உலகில்  பிரபல்யம்  பெற்றுள்ள எந்த  பைபிள்  அறிஞர்களும் விவாதத்தின் போது போதுமான அல்லது தேவையான இடங்களில் பைபிள் வசங்களையோ அல்லது அதற்கு எதிர்தரப்பில் இருக்கும், புனித இஸ்லாம் மார்க்கம் சார்பாக  பேச வந்த அஹ்மத் தீதாத் அவர்களால் வேத நூலாக  கொண்டுள்ள அல்குர் ஆனிலிருந்தோ எந்த வசனக்களையும் சரியான மக்கள் நம்புகின்ற அளவுக்கு வசன வாக்கிய எண்களுடன் கேடிட்டுக்காட்டியதாக அல்லது எதிர்தரப்பில் இருக்கும் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஆதாரங்களாக காட்டும் எந்த பைபிள் வசங்கலையும் அல்லது அல்குர் ஆன் வசங்களையும் அல்லது ஏனைய வரலாற்று ஆதாரங்களை நியாயமாக மறுத்து பேச முடியாத சாதாரண பாமர மக்களை போன்று கலந்துகொண்டதை இன்று வரை அந்த காட்சி வீடியோக்கள் எமக்கு சான்றுபகர்வனவாக இருக்கின்றன.

எந்த விவாதங்களையும் கருத்தூந்திப்பார்க்கும் போது, ஒரு ஆச்சரியமான செய்தி புலப்படும். அதாவது, அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களுக்கு எதிரணியில் விவாதிக்க வரும் எவரும் சுதந்திரமாக, ஆழமாக திடகாத்திரமாக தங்களது கருத்துக்களை, விவாத தகவல்களை அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையை வழங்கியதாக சரித்திரம் இல்லை.


இதிலிருந்து ஒரே ஒரு உண்மை மட்டும் தெரிகின்றது,  அதாவது சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது, அசத்தியம் எப்போதும் அழிந்துகொண்டே இருக்கும் என்ற அல்லாஹ்வின் புனித வாக்கியம் மட்டும் உலகில் உண்மைப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே அதுவாகும்.

தொடரும்.......

 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.