Showing posts with label மாணவர் விருந்து. Show all posts
Showing posts with label மாணவர் விருந்து. Show all posts

Let's research the Quran - By Issadeen Rilwan


ரமழான் மாதத்தை அல் குர்ஆனை ஆய்வுசெய்யும் மாதமாக மாற்றுவோம் BY Issadeen Rilwan

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

ஒரு கருத்து கணிப்பீடு about Higher Education center in Musali





ஒரு கருத்து கணிப்பீடு:
முசலிப் பிரதேசத்தில் எப்படியான கல்லூரி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.....?
1. கல்விக் கல்லூரி
2. தொழில்நுட்ப கல்லூரி
3. பல்கலைக்கழகம்
4. பல்கலைக்கழக கிளை
5. திறந்த பல்கலைக்கழகம்
6. வேறு.....

இஸ்ஸதீன் றிழ்வான்
14/09/2018

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி - Young Inventors’ Competition





இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி

அல்ஹம்துலில்லாஹ், 

கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்துமுடிந்த கட்டுரைப்போட்டியைத் தொடர்ந்து புதியதொரு போட்டியை அறிவிக்க தீர்மானித்திருக்கின்றேன்.

ம/ மரிச்சிக்கட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மரிச்சிக்கட்டி, கரைடிக்குளி மற்றும் பாலைக்குளி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களில் இளம் கண்டுபிடிப்பாளர்களை தேடும் போட்டியே இது.

இளம் கண்டுபிடிப்பாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இப்போட்டியில் பங்குகொள்ள விரும்புவோர் பெயர், கிராமம், பாடசாலை, கல்வித் தரம் மற்றும் சமர்பிக்க தீர்மானித்திருக்கும் கண்டுபிடிப்பு போன்ற தகவ‌ல்கள் உள்ளடக்கிய விண்ணப்பப் பத்திரத்தை 30/08/2017ம் திகதி அல்லது அதற்கு முன்னர் rila27@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

குறிப்பு: இப்போட்டியை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க எம்முடன் இணைந்து பணியாற்ற / உதவ முன்வருவோர் என்னை தொடர்பு கொள்ளலாம்.

போட்டி முடிவுத் திகதி: 30/11/2017
இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.

பரிசு:
முதலாம் பரிசு: 15,000.00 ரூபாய்
இரண்டாம் பரிசு: 10,000.00 ரூபாய்
மூன்றாம் பரிசு: 5,000.00 ரூபாய்
ஆறுதல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

தொடர்புகளுக்கு:
rila27@gmail.com
Issadeen Rilwan
ChangesDo Foundation


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

முக்கிராம மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது (Awarding scholarship for special courses)



முக்கிராம மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது
--------------------------------------------------------------------
மரிச்சிக்கட்டி பாலைக்குளி மற்றும் கரடிக்குளி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் கீழுள்ள ஏதாவது துறையில் மேற்படிப்பை தொடர முன்வந்தால் ChangesDo Foundation உதவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.
1) Law faculty / Law college
2) Medical Faculty
3) Engineering Faculty
எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்,
சேர்ந்த பயணிப்போம்,
வெற்றி பெறலாம் என்ற தூய எண்ணத்துடன்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா (prize giving ceremony) 2015











வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா

The Essay competition prize giving ceremony successfully staged on last Wednesday (02/09/2015)

எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடாந்துமுடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

அறிவிக்கப்பட்டபடி கடந்த புதன் அன்று (02/09/2015) புத்தளம், வேப்பமடு அர்ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர், ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்படி பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.

இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசீல்களை பெற்றுக்கொண்ட வெற்றியாளர்கள் பின்வருமாறு;

1st prize: Hameem Nilam (10000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

2nd prize: Kaleel Rahman Safana  (6000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)


3rd prize: Mohamed Rafi Fathifa Rifa (4000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

4th Prize: Segu Ismail Mohamed Ihsan (2000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

இந்நிகழ்வை தலைமை தாங்கிய‌ கெளரவ அதிபர் கலீல் ரஹ்மான் அவர்களுக்கும் முழுமையாக நெறிப்படுத்தி நடாத்திமுடித்த மூத்த கணித ஆசிரியர் S.M பசீர் அவர்களுக்கும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க என்னுடன் தோல்நின்ற பிரதி அதிபர் லாபிர், ஆசிரியர் ஜாஹித் பதுர்தீன் (ஸலபி), O.M.இர்சாத், A.C. உபைதுல்லாஹ், ஆசிரியர் S.H.ராபி, சகோதரர் முஜாஹித் மற்றும் ஏனைய பலறுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பாக எம‌து மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

பரிசளிப்பு விழா (Essay Competition prize giving ceremony by Author Issadeen Rilwan) 2015





























எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் நடாத்திய கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா இடம்: அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயம் கேட்போர் கூடம், வேப்பமடு, புத்தளம் நேரம்: 11:30 காலம்: 02/09/2015 (புதன் கிழமை) ஏற்பாடு: Issadeen Rilwan ChangesDo Foundation rila27@gmail.com

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர். Part - 03

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பற்றி கிடைக்கும் ஆவணச் சுருக்கங்கள்

தொட்டால் சிணுங்கிக்கென்று ஒரு வரலாறு, 
கட்டெரும்புக்கு என்று ஒரு வரலாறு, 
காட்டு எருமைக்கு என்று ஒரு வரலாறு, 
வேட்டைக்காரனுக்கு என்று ஒரு வரலாறு, 
வேளையில்லாதவனுக்கு என்று ஒரு வரலாறு என்று எது எதற்கோ எல்லாம் வரலாறு எழுதவேண்டுமென்று விவரமறியாதவர்களுக்கு  விவரம் தேவைப்படுகிறது.


சத்தியம் அசத்தியம் அதன் வேறுபாடு, நாகரிகரம் அநாகரிகம் அதன் வேறுபாடு, வாழ்க்கை, விவஸ்தை அதன் வேறுபாடு என்று நெறி காட்டித்தந்தவர்கள் உலகில் பலர் மைல்கற்களாக பர்ணமிக்கிறார்கள்.
                                                                                                             ஆதாரமற்றவைகளுக்கு ஆதாரம் தேடும் ஆணவர்களை தலைகுனியச் செய்த ஆன்மாக்களின் வரலாற்று தடங்கள் நிறையவே இருக்கின்றன.
முஸ்லிம் உலகில் சிங்கமாய், சிகரமாய், சீரிய வரலாறு அஹ்மத் தீதாத் என்ற ஒரு அறிஞருக்குமுண்டு.

கிறிஸ்தவர்கள் நிறைய பேர் நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் இவர்.
காரணம் அவர்கள் சிந்திக்கக் கற்றது இவரில் தான்.
அந்த அறிஞருக்கு பல வரலாற்றுத் தகவல்கள், ஆவணச் சுருக்கங்கள் இன்று பிற மொழிகளில் கிடைக்கின்றன. குறிப்பாக ஆங்கிலம், சூளு, ஆபிரிக்கானா, அரபு போன்ற பல மொழிகளில் கிடைக்கப்பெருகின்றன.
அவைகளில் இங்கு தமிழிலும் ஒன்று:

1)
2006 நவம்பர் 17ம் திகதி கானூ குடியரசைச் )Kanoo state) சேர்ந்த ஆளுநர் மாலம் இப்ராஹிம் செகாரு (Governer Malam Ibrahim Shekarau) தனது குடியரசு சார்பாக இரண்டு பேர் கொண்ட ஒரு தூதுக்குழுவை அறிஞர் அஹ்மத் தீதாதின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அறிஞர் அஹ்மத் தீதாத் முஸ்லிம் உலகிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் நோக்கிலும் ஷேக் அஹ்மத் தீதாதை பிரிந்த கவலையில் இருக்கும் அவரின் வீட்டாருக்கு ஆறுதல் கூறும் எண்ணத்துடனும் இந்த ஏற்பாடு அமைந்திருந்தது.
இவர்கள் இருவரும் தெர்பன், தெந்நாபிரிக்கா (Durban, South Africa) வில் அமைந்துள்ள ஷேக் அஹ்மத் தீதாத் அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது மகன் யூசுப் அஹ்மத் தீதாத் அவர்களை கண்டு தங்களது செய்திகளை பரிமாரிக்கொண்டனர்.

இவர்களின் வருகையை மையமாக வைத்து “ஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை ஒரு விசித்திரமான வரலாறு” (My Father Sheikh Ahmed Deedat, A moving story) என்ற தலைப்பில் ஒரு ஆவண தகடை வெளியிட்டனர்.

ஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை சுருக்கத்தை சொல்லும் இந்த தகடில் அவரது மகன் யூசுப் தீதாத் அவர்கள் தனது தந்தையின் வாழ்க்கையின் முக்கிய பல செய்திகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த ஆவணச்சுருக்கத்திலிருந்துள்ள செய்திகள் இந்த புத்தகத்தில் வேறு சில தலைப்புக்களில் உள்ளடக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2)
ஜக்கிய அரபு இராச்சியத்தின், அபூதாபி கெளரவ ஷேக் ஸைத் பின் சுல்தான் அல் நஹ்யான் (His Royal Highness Sheikh Zaid Bin Sultan Al Nahyan) அவர்கள் ஷேக் அஹ்மத் தீதாதை அவரது மாளிகையில் சந்திக்க விஷேட ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கது என்று ஷேக் அஹ்மத் தீதாத் அவர்கள் இஸ்லாத்தின் சேவகன் (the servent of Islam) என்ற கருத்தையும் உலக மக்களுக்கு பதிவு செய்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அபூதாபியிலுள்ள தொலைக்காட்சி அலைவரிசை (UAE TV 2 )யில் Sheikh Ahmed Deedat on the spotlight என்ற தொனியில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது.

இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையின் வீழ்ச்சி, வளர்ச்சி, தான் எதிர்நோக்கிய சவால்கள், முகங்கொடுத்த முக்கிய சந்தர்ப்பங்கள் என்று பல செய்திகளை எமக்கு தந்திருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இடம்பெரும் தகவல்களுக்கு அவரது இந்த பேட்டியும் ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் என்பது மறக்காமல் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.

3)
சர்வதேச இஸ்லாமிய அழைப்பு மையம் (IPCI) அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கைச் (Ahmed Deedat a Man with a Mission / the life and times of Sheikh Ahmed Deedat) சுருக்கம் என்ற தலைப்பில் ஒரு கானொலி தகடு வெளியிட்டிருந்தனர்.
இந்த சிறிய வரலாற்றுக்குறிப்பில் அவர்கள் வாழ்ந்த வீடு, படித்த பாடசாலை, வேலை செய்த தொழிற்சாலை, அவர் ஸ்தாபித்த அஸ் ஸலாம் கல்வி நிருவனம் மற்றும் வேறு சில முக்கிய காட்சிகளை உள்ளடக்கியதாக அமைத்திருக்கின்றார்கள்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தஃவா பணியின் போது அவர் கையாண்ட நுட்பங்கள், சாணாக்கியங்கள் தொடர்பான பல செய்திகளையும் சொல்லியிருக்கிறார்.

4)
Dr. சாகிர் நாய்க் அவர்கள் பல இடங்களில் அறிஞர் அஹ்மத் தீதாதி வரலாற்றை சிறு சிறு துணுக்காக, தேவைப்படுகின்ற போது தேவையான விதத்தில் சொல்லியிருக்கிறார்.

5)
Dr. சாகிர் நாய்க் அவர்களின் தலைமையில் இயங்கும் Peace தொலைக்காட்சி அலைவரிசையில் அறிஞர் அஹ்மத் தீதாதின் சொற்பொழிவுகள், விவாதங்கள், சிந்தனைகள் ஒலிபெருக்கப்படுவதுடன் தேவையான சந்தர்ப்பத்தில் இடத்தில், அவரது வரலாற்றின் பகுதிகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

6)
எழுத்துவடிவில் கட்டுரைகளாக பல ஆக்கங்கள் இணையத்தளங்களில் கிடைக்கின்றன. (அந்த இணைத்தள விபரங்களை இந்த தொடரின் முடிவில் வெளியிடுவோம்.)
தொடரும்..........

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.