மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர். Part - 03

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பற்றி கிடைக்கும் ஆவணச் சுருக்கங்கள்

தொட்டால் சிணுங்கிக்கென்று ஒரு வரலாறு, 
கட்டெரும்புக்கு என்று ஒரு வரலாறு, 
காட்டு எருமைக்கு என்று ஒரு வரலாறு, 
வேட்டைக்காரனுக்கு என்று ஒரு வரலாறு, 
வேளையில்லாதவனுக்கு என்று ஒரு வரலாறு என்று எது எதற்கோ எல்லாம் வரலாறு எழுதவேண்டுமென்று விவரமறியாதவர்களுக்கு  விவரம் தேவைப்படுகிறது.


சத்தியம் அசத்தியம் அதன் வேறுபாடு, நாகரிகரம் அநாகரிகம் அதன் வேறுபாடு, வாழ்க்கை, விவஸ்தை அதன் வேறுபாடு என்று நெறி காட்டித்தந்தவர்கள் உலகில் பலர் மைல்கற்களாக பர்ணமிக்கிறார்கள்.
                                                                                                             ஆதாரமற்றவைகளுக்கு ஆதாரம் தேடும் ஆணவர்களை தலைகுனியச் செய்த ஆன்மாக்களின் வரலாற்று தடங்கள் நிறையவே இருக்கின்றன.
முஸ்லிம் உலகில் சிங்கமாய், சிகரமாய், சீரிய வரலாறு அஹ்மத் தீதாத் என்ற ஒரு அறிஞருக்குமுண்டு.

கிறிஸ்தவர்கள் நிறைய பேர் நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் இவர்.
காரணம் அவர்கள் சிந்திக்கக் கற்றது இவரில் தான்.
அந்த அறிஞருக்கு பல வரலாற்றுத் தகவல்கள், ஆவணச் சுருக்கங்கள் இன்று பிற மொழிகளில் கிடைக்கின்றன. குறிப்பாக ஆங்கிலம், சூளு, ஆபிரிக்கானா, அரபு போன்ற பல மொழிகளில் கிடைக்கப்பெருகின்றன.
அவைகளில் இங்கு தமிழிலும் ஒன்று:

1)
2006 நவம்பர் 17ம் திகதி கானூ குடியரசைச் )Kanoo state) சேர்ந்த ஆளுநர் மாலம் இப்ராஹிம் செகாரு (Governer Malam Ibrahim Shekarau) தனது குடியரசு சார்பாக இரண்டு பேர் கொண்ட ஒரு தூதுக்குழுவை அறிஞர் அஹ்மத் தீதாதின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அறிஞர் அஹ்மத் தீதாத் முஸ்லிம் உலகிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் நோக்கிலும் ஷேக் அஹ்மத் தீதாதை பிரிந்த கவலையில் இருக்கும் அவரின் வீட்டாருக்கு ஆறுதல் கூறும் எண்ணத்துடனும் இந்த ஏற்பாடு அமைந்திருந்தது.
இவர்கள் இருவரும் தெர்பன், தெந்நாபிரிக்கா (Durban, South Africa) வில் அமைந்துள்ள ஷேக் அஹ்மத் தீதாத் அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது மகன் யூசுப் அஹ்மத் தீதாத் அவர்களை கண்டு தங்களது செய்திகளை பரிமாரிக்கொண்டனர்.

இவர்களின் வருகையை மையமாக வைத்துஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை ஒரு விசித்திரமான வரலாறு” (My Father Sheikh Ahmed Deedat, A moving story) என்ற தலைப்பில் ஒரு ஆவண தகடை வெளியிட்டனர்.

ஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை சுருக்கத்தை சொல்லும் இந்த தகடில் அவரது மகன் யூசுப் தீதாத் அவர்கள் தனது தந்தையின் வாழ்க்கையின் முக்கிய பல செய்திகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த ஆவணச்சுருக்கத்திலிருந்துள்ள செய்திகள் இந்த புத்தகத்தில் வேறு சில தலைப்புக்களில் உள்ளடக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2)
ஜக்கிய அரபு இராச்சியத்தின், அபூதாபி கெளரவ ஷேக் ஸைத் பின் சுல்தான் அல் நஹ்யான் (His Royal Highness Sheikh Zaid Bin Sultan Al Nahyan) அவர்கள் ஷேக் அஹ்மத் தீதாதை அவரது மாளிகையில் சந்திக்க விஷேட ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கது என்று ஷேக் அஹ்மத் தீதாத் அவர்கள் இஸ்லாத்தின் சேவகன் (the servent of Islam) என்ற கருத்தையும் உலக மக்களுக்கு பதிவு செய்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அபூதாபியிலுள்ள தொலைக்காட்சி அலைவரிசை (UAE TV 2 )யில் Sheikh Ahmed Deedat on the spotlight என்ற தொனியில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது.

இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையின் வீழ்ச்சி, வளர்ச்சி, தான் எதிர்நோக்கிய சவால்கள், முகங்கொடுத்த முக்கிய சந்தர்ப்பங்கள் என்று பல செய்திகளை எமக்கு தந்திருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இடம்பெரும் தகவல்களுக்கு அவரது இந்த பேட்டியும் ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் என்பது மறக்காமல் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.

3)
சர்வதேச இஸ்லாமிய அழைப்பு மையம் (IPCI) அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கைச் (Ahmed Deedat a Man with a Mission / the life and times of Sheikh Ahmed Deedat) சுருக்கம் என்ற தலைப்பில் ஒரு கானொலி தகடு வெளியிட்டிருந்தனர்.
இந்த சிறிய வரலாற்றுக்குறிப்பில் அவர்கள் வாழ்ந்த வீடு, படித்த பாடசாலை, வேலை செய்த தொழிற்சாலை, அவர் ஸ்தாபித்த அஸ் ஸலாம் கல்வி நிருவனம் மற்றும் வேறு சில முக்கிய காட்சிகளை உள்ளடக்கியதாக அமைத்திருக்கின்றார்கள்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தஃவா பணியின் போது அவர் கையாண்ட நுட்பங்கள், சாணாக்கியங்கள் தொடர்பான பல செய்திகளையும் சொல்லியிருக்கிறார்.

4)
Dr. சாகிர் நாய்க் அவர்கள் பல இடங்களில் அறிஞர் அஹ்மத் தீதாதி வரலாற்றை சிறு சிறு துணுக்காக, தேவைப்படுகின்ற போது தேவையான விதத்தில் சொல்லியிருக்கிறார்.

5)
Dr. சாகிர் நாய்க் அவர்களின் தலைமையில் இயங்கும் Peace தொலைக்காட்சி அலைவரிசையில் அறிஞர் அஹ்மத் தீதாதின் சொற்பொழிவுகள், விவாதங்கள், சிந்தனைகள் ஒலிபெருக்கப்படுவதுடன் தேவையான சந்தர்ப்பத்தில் இடத்தில், அவரது வரலாற்றின் பகுதிகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

6)
எழுத்துவடிவில் கட்டுரைகளாக பல ஆக்கங்கள் இணையத்தளங்களில் கிடைக்கின்றன. (அந்த இணைத்தள விபரங்களை இந்த தொடரின் முடிவில் வெளியிடுவோம்.)
தொடரும்..........

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: