நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய மடல்கள்.......

மாற்றங்கள் தேவை - சுவை 25

பி முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் உயிர்வாழும் காலம் முழுதும் ”இஸ்லாம்” என்கின்ற உலக மைதிக்கான கோட்பாட்டை அனைத்து மக்களூக்கும் எத்திவைப்பதில் கடுமையான கஸ்டங்களையும் தியாகங்களை சந்தித்திருக்கின்றார்கள்.


அந்த்த் தொடரில் தான் கடிதங்கள் மூலமும் அன்றைய பெரும்பெரும் அந்நிய நாட்டுச் சக்கரவத்திகளையும் அந்த ”இஸ்லாம்” என்கின்ற அமைதிக்கான கோட்பாட்டின் பக்கம் அழைப்புவிடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய அந்த கடிதங்கள் இன்றலவிலும் பாதுகாக்கப்பட்டுவருவது குறிப்பிட்த்தக்கது.

அவர்கள் அனுப்பிய கடிதங்களில் சில இங்கு உங்கள் பார்வைக்காக பதியப்பட்டுள்ளது.

1)  ஹிர்குலிஸ் மன்னருக்கு எழுதிய கடிதம்;


புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹிர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய கடித்ம்;

அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார்.

ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார்.அந்தக் கடிதத்தில்,

 "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...



அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி



ஹிர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக!



நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக!



நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான்.



(இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்களின் பாவமும் உம்மைச்சாரும்.



வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்கக் கூடாது;



அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நம்முடைய இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக் கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயாமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகி விடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.”
(ஸஹீஹுல் புஹாரி, பாகம் 1 அத்தியாயம் - இறைச்செய்தியின் ஆரம்பம்)

2) ஹபஸ் நாட்டு மன்னர் நஜ்ஜாஸி அவர்களுக்கு எழுதிய மடல்:


3) முஹம்மத் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் எழுதிய கடிதம்

 
4)   பஹ்ரைன் மன்னர் முன்திர் அவர்களுக்கு எழுதிய கடிதம்;


இவைகளை புஹாரி  அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் 7264 ஹதீஸ், அபூ சுஃப்யான் ரலி) அறிவிக்கும் 7541 ஹதீஸிலும் மற்றும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: