"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?"

மாற்றங்கள் தேவை - சுவை 32


"றை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?"  என்ற தலைப்பிலான, உலகம் புதுமையாக சந்தித்த,  குறிப்பாக கிறிஸ்துவ சமூகம் சிந்திக்க தூண்டப்பட்ட ஒரு மிகப்பிரமாண்டமான விவாதம் 1988ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 7ம் திகதி இங்கிலாந்திலுள்ள பிர்மிங்ம் (Birmingham- United statues) என்ற இடத்தில் நடந்தேறியது.

இந்த விவாதத்திற்கு செல்லுவதற்கு முன்னர் தென்னாபிரிக்காவிலுள்ள அத்லோன் சிவிக் மையத்தில் (Athlone civic centre – South Africa) அதே ஆண்டு ஏப்ரில் 12ம் திகதி ஒரு ஒத்திகை பார்க்கப்பட்டது, அதில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பேசிய " இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கம் தான் இங்கு வரையப்பட்டுள்ள இத்தனை பக்கங்களும்.

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் இந்த உரையில் பைபிள் எந்தளவு தரமானது என்பதையும் அல் குர்ஆன் எந்தளவு நிஜமானது என்பதையும் ஓப்பீட்டு ரீதியாக அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

மதங்களுக்கிடையிலான ஓப்பீடுகளை பற்றி பேசக்கூடிய அல்லது ஏனைய சர்வதேச மற்றும் பிரபல்யமான அறிஞர்களைவிட வித்தியாசமான, வியக்கத்தக்க பல விடயங்களை அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் பல உரைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக, இந்த " இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற உரையை தொடரும் போது அல்லாஹ் இவ்வுலகிற்கு சவாலாக முன்வைக்கின்ற (அல் குர்ஆன் 17 : 88) என்ற அத்தியாயத்தை ஓதி ஆரம்பம் செய்கின்றார்கள்.

அதே போல் எந்த ஒரு பகிரங்க மேடைப் பேச்சுக்களையும் ஆரம்பிக்கும் போது அந்த தலைப்புக்கேற்ற அல்லது இடத்திற்கேற்ப அமையும் அல் குர்ஆனிய வசனங்களை ஓதியவர்களாக தனது உரையை ஆரம்பம் செய்வார்கள்.

"இக் குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக!" (அல் குர்ஆன் 17 : 88)

தலைப்புக்கேற்றாற் போல் வசனத்தை ஓதியவர் ஏன் இந்த நிகழ்ச்சி, ஒத்திகை என்பதையும் அல்குர் ஆனிய வசனத்தினூடாக மக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதுதான் அல்லாஹ் சொல்லுகின்ற இந்த அழகிய வசனம்: ”உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்" (அல்குர் ஆன் 8 : 60)

இந்த வசனம் நாம் வாழ்கின்ற இப்போதைய உலகிற்கு எமது முஸ்லீம் சமூகத்திற்கு எல்லா விடயத்திற்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இதற்கமைய நடக்க இருக்கின்ற விவாதத்திற்கு தயாராகுமுகமாகத் தான் இந்த ஒத்திகையாக அமைந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற விவாதம் அல்லாஹ்வின் உதவியுடன் பாரியளவில் முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்திற்கும் சாதகமாகவே அமைந்தது என்றால் தவறாகாது.

இப்போது தலைப்புக்குள் நுழைந்த அறிஞர்;

இரண்டையும் ஒப்பீட்டு ஒரு அளவை நிருவைமுறையை மேற்கொள்ளுவது போலான வாதங்களை மக்கள் முன் மிக விபரமாக முன்வைத்தார்.

சான்று ஒன்று:

அல் குர்ஆன் மட்டுமே அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு:

அதே அல் குர்ஆனில் அல்லாஹ் இது எனது வேதம்,  புத்தகம்,  இதை நானே இறக்கியருளினேன் என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கின்றான்.

“அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்." (அல் குர்ஆன் 55 : 1 , 2)

"ஹாமீம், (இது) மிகைத்தவனும் ஞானமிக்ْகேனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டது." (அல் குர்ஆன் 45 : 1-2)

ஆனால் இந்த பைபிளை பார்த்தால், இது யூதர்களுடைய வேதத்தைக்கொண்ட பழைய ஏற்பாடு எனவும் கிருஸ்தவர்களின் வேத நூலைக்கொண்டு புதிய ஏற்பாடு எனவும் மொத்தத்தில் 66 புத்தகங்களை கொண்ட ஒரு கலைக்களஞியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல நூல்கள்கொண்டு கோர்க்கப்பட்ட ஒரு நூலகம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இதில் எங்கும் பைபிள் என்ற சொல் இடம்பெற வில்லை அல்லது இறைவன் ”இந்த பைபிள் என்னுடையது, இதை நானே கொடுத்தேன்” “இது எனது வசனங்கள்” என்று எங்கும் சொல்லியதாக இல்லை.

மொத்தத்தில் அதன் பெயரும் கடவுளாகிய உரியவர் உரிமைகொண்டாடும் தன்மையும் இங்கு இல்லை.

எழுததththத்தெரியாத, வாசிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு சொல்லுகின்றான்:

”அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியி-ருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்! நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல் குர் ஆன் 2 : 22 – 24)

இவ்வாறு சொல்லி உலக மக்களுக்கு சவால் விடுகின்றான். இந்த சவால் கடந்த 14 நூற்றாண்டுகளுக்கு மேல் நீடிக்கின்றது.

இந்த சவால் விடப்படும் போது மக்காவில் இணைவைக்கின்ற பல அறபியர்கள் இருந்தார்கள் இன்று கிறிஸ்துவ உலகில் சிரியாவில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான கிறிஸ்துவ அறபியர்கள் இருக்கின்றார்கள், முஸ்லிம்கள் கூட அறபு இலக்கியம், இலக்கணம் படிப்பதற்கு இவர்களை நாடவேண்டி இருக்கின்றது. இவர்கள் எழுதும் புத்தகங்களை அல் குர்ஆனிய அமைப்பில் எழுதி முஸ்லிம்கள் மனதில் இடம்பிடித்துக்கொள்ள முனைகின்றார்கள்.

அல் குர்ஆன் பயன்படுத்தும் அதனது தனித்தன்மைகளை பிரதிசெய்து தங்கள் வேத நூலான பைபிளை அல்லது அது போன்ற எனைய புத்தகங்களை வடிவமைத்து அறபு முஸ்லிம்களை அவர்கள் பக்கம் திருப்புவதில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். அண்மையில் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தக்ங்களில் ஒன்றைப் பார்த்தால் அதில் "அல் குர்ஆனிய அத்தியாயங்களை ஆரம்பிக்கும் போது “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)” என்பது போல் அதே வாசகத்துடன் அறபியில் பாவிக்கப்பட்டுள்ளது.

அறபு மொழியில் சில சாணாக்கியங்களை பயன்படுத்தி அறபு முஸ்லிம்களை தன்வசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதனால் தான் அல்லாஹ் பகிரங்காமாக சவால் விடுகின்றான்,  ”இது போன்ற ஒன்றை உறுவாக்குங்கள், உங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவிசெய்தாவது” ஆனால் ஒருபோதும் இது போன்ற ஒன்றை அல்லது
ஒரு அத்தியாயத்தை அல்லது
வசனத்தை இவர்களால் கொண்டுவர முடியாது.


தொடர்ந்தும்...............


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

Mr. Robin got the answer

Brother Rilwan keep it up.

thanks
Muzammil

Anonymous said...

Assalamu alaikkum,

please publish the 2nd article.

Thanks
Waseem Ishaq / Oman

Anonymous said...

engkee cristian brothers???

no commands???

பைபிளில் உள்ளவை. said...

பைபிளில் உள்ளவை.
ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....

அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்.

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌.

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌.

3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்.
----------------

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்.

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்.
------------------

மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.
------------------------

இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை "ஈஸா குரான்" எனவும் ஏசுவை "அல்லா" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
--------------------------

கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது
---------------

MORE.....

click link to read

பைபிளில் உள்ளவை.

.......................