"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" - 02

புனித பைபிளை பார்த்தால் ”தேவனாகிய நானே இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்கிற செய்தியை அல்லது அது போன்ற ஒரு செய்தியை எங்கும் எதிலும் காணமுடியாது.

அதே நேரம் புனித பைபிளை புறட்டுகின்ற போது


சான்று இரண்டு:

புனித பைபிளில் லூக்கா முதலாம் அத்தியாயம் முதலாம் இரண்டாம் முன்றாம் வசனங்களில் லூக்கா சொல்லுகின்றார் “அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர், வேறுசிலர் மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்குச் சேவை செய்து கொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாக கற்று அறிந்தேன். (it seemed good to me also) அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன், எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன்.”

எல்லோரும் எழுதுகின்றார்கள், அதனால் என்னாலும் சிலதை சொல்ல முடியும் என்பதற்காக லூக்காவும் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கின்றார், இவ்வாறு 40 (நாற்பது)  பேர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பே இந்த பைபிளாகும்..

அல்லாஹ் சொல்லுகின்றான்;

“தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக ’இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.”                                                     ( அல் பகறா, அத்தியாயம் 2 : 79)சான்று மூன்று:

”கல்லறைகள் அனைத்தும் திறந்தன, தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள”                                                                                      (மத்தேயு : 27 – 52, 53)

இந்த காட்சியை, செய்தியை இவர் மட்டும் தான் அறிவிக்கின்றார், இப்படி ஒரு அற்புதமான செய்தியை பிறர் எவரும் காணவில்லையா?

கல்லறைகளிலிருந்து வெளியேறியவர்கள் எங்கே போனார்கள்?              திரும்பி அவர்கள் கல்லறைகளுக்குள் வந்து சேர்ந்தார்களா?                                  ஏன் அவர்கள் திரும்பி வர வேண்டும்?                                                              கல்லறைகளிலிருந்து தப்பிவற சந்தர்ப்பம் கிடைத்தால் எவரும் திரும்பி வர மாட்டார்கள்.


சான்று நான்கு:

"ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான், 600 பெலிஸ்தியர்களைச் சம்கர் தாற்றுக் கோலால் (Ox goad) கொன்றான்.”                                           (நியாயாதிபதிகள் 3 : 31)

எப்படி 600 பலஸ்தீனர்களை ஒரு சிறுவனால் கொல்ல முடியும்? இப்படிப்பட்ட செய்தியை சுமப்பது எப்படிபட்ட ஒரு வேத நூலாக இருக்க முடியும்?

இன்று கிறிஸ்தவர்களில் அதிகமானோருக்கு சம்கரை தெரியாது.

அல்லாஹ் புனித அல் குர்ஆனில் சொல்லுகின்றான்;

”அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”                                    (அல்குர் ஆன் 4 : 82)

இந்த இறைவாக்கியத்தை இன்று வரை அதே தன்மையில் பார்க்கமுடிகின்றது, ஆனால் புனித பைபிளை காலத்திற்கு காலம் மாற்றுவதை பார்க்கமுடிகின்றது,

இதனை ஒரு நிபந்தனையாக வைத்து மொத்த்த்தில் பரிசோதித்தால், அல் குர்ஆனுக்கும் முன் வந்த புனித பைபிளில் பல முரண்பாடுகளை பார்க்கமுடியும்.


சான்று ஜந்து:

"நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை        (I have lost none) என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது”                                                                                                  (யோவான் 18 : 09)


சிவப்பு எழுத்து பைபிளில் "நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்பது சிவப்பு எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

அதே யோவானில் இன்னுமொரு இடத்தில் “நான் அவர்களோடு இருந்த போது அவர்களை பாதுகாத்து வந்தேன், நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன், அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான்.(யூதாஸ்) (None of them is lost except the son of perdition)” (யோவான் 17 : 12)

ஒரே புத்தகத்தில் வரக்கூடிய இரண்டு வசனங்களும் தெளிவாக முரண்படுவதை பார்க்கமுடிகின்றது. இந்த செய்தியை வேறு ஒரு சிவப்பு எழுத்து பைபிளாகிய king James version ல் பார்க்கும் போது அதில் இந்த John 18 : 9 வசனத்தில் எந்த சிவப்பு எழுத்துக்களையும் பார்க்கமுடியவில்லை.


தொடர்ந்தும்...............எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

9 comments:

ராஜவம்சம் said...

சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது.
தொடர்ந்து ஆராயுங்கள்.
தெளிவாகப்பதிவிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

Alhamdulillah,

Islam is great

Asalamsmt said...

வாழ்த்துக்கள்

நன்றாக உங்களது ஆய்வு உள்ளது. மேலும்,மேலும் உங்களது ஆய்வை தொடர்ந்து வெளிடவும்.

அன்புடன்
அசலம்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
றிழ்வான் ப்ரேதர்,

அஷ்ஷேக் அஹ்மத் தீதாத் அவர்கள் பங்குபெற்ற விவாதங்கள் சிலதையும் எழுதி வெளியிட்டால் நமது கிறிஸ்துவ நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

அந்த விவாதங்களில் கிறிஸ்தவ மதம்சார்பாக விவாதிக்க வரும் அறிஞர்களது தலைப்புக்கு மாற்றமான வாதங்கள்,
வீணாக விவாத நேரங்களை கடத்துவது,
தேவையில்லா விடயங்களை பேசுவது, ஆதரமில்லாத செய்திகளை சொல்லுவது போன்ற அறிவற்ற அறிஞர்களின் வாதங்களையும் கோடிட்டு காட்டினால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என ஆசைப்படுகிறேன்.

நன்றி
முஹம்மது முஷப்பிர்,
ஏராவூர், இலங்கை

Issadeen Rilwan said...

எமது பகுதிக்கு வருகைதரும் அனைத்து நண்பர்களுக்கும்
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹ்,
வெளியிடப்பட்ட கடைசி ஆக்கத்திற்கு
சகோ. ராஜவம்சம், அசலம், முஹம்மது முஷப்பிர் மற்றும் பெயர் குறிப்பிடா நலன்விரும்பிகள் வருகை தந்து தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

அனைவருக்கு நன்றி.

சகோதரர்கள் சொல்லுவது போல அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் விவாதங்கள் மற்றும் உரைகளை தமிழாக்கம் பண்ணுவதில் கடுமுயற்சி எடுத்துவருகின்றேன்.

தனித்தனியாக பிரசுரிப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.

உங்களது பிராத்தனைகளும் அவசியமானதாகும்.

தொடர்ந்தும் உங்கள் வருகையையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தவண்ணம்......

இஸ்ஸதீன் றிழ்வான்.

பைபிளில் உள்ளவை said...

பைபிளில் உள்ளவை.
ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....

அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்.

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌.

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌.

3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்.
----------------

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்.

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்.
------------------

மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.
------------------------

இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை "ஈஸா குரான்" எனவும் ஏசுவை "அல்லா" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
--------------------------

கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது
---------------

MORE.....

click link to read

பைபிளில் உள்ளவை.

.......................

ஏகத்துவம் said...

அன்புக் சகோதரர் இஸாதீன் ரிழ்வான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான தொடர். தொடர்ந்து எழுதுங்கள். இளைஞனான நிங்கள் உங்கள் லட்சியங்களைத் தொடர்ந்து சாதிக்க எனது வாழ்த்துக்கள்.

வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவானாக!

இம்மை மறுமையில் வெற்றியை தருவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.

அபூ இப்ராஹீம், சென்னை
www.egathuvam.blogspot.com

Issadeen Rilwan said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ், அன்பின் அபூ இப்ராஹிம் அவர்களுக்கு, எம்முடன் இணைந்து எங்களை மேலும் தெள்ரியப்படுத்துவதற்கு ந்ன்றிகள் எப்போதும் இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.