சகோதரி மாஷா நசீமுக்கு ஒரு திறந்த மடல்



சகோதரி. மாக்ஷா நசீம்
தமிழ் நாடு,
இந்தியா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அன்பின் தங்கை மாக்ஷா நசீம் அவர்களுக்கு! அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் (உலகை படைத்த, படைத்தவற்றை திறம்பட நிருவகிக்கின்ற) அல்லாஹ் ஒருவருக்கு. உங்கள் திறமைகளைக் கண்டு சந்தோக்ஷப்பட்டேன், ஒரு தடவை அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மறுபக்கம் நான் ஒரு கொள்கைச் சகோதரனாக இருந்து உங்களுக்கு சில விடயங்களை ஞாபகத்திற்கொண்டு வர வேண்டுமென ஆவல்கொண்டேன்.

அது இந்த நாள், இந்த பக்கத்தின் மூலம் நிறைவேறுகிறது.
பல்கோடி முஸ்லிம் பெண்கள், குறிப்பாக பாடசாலை பருவத்தினர்  வாழும் இப்பூமியில் அல்லாஹ் ஒரு சிலரை தெரிவுசெய்து அவர்களுக்கு பல திறமைகளை வழங்கி, சாதனைகள் பலதை சாதிக்க சந்தர்ப்பம் வழங்குவது என்பது அவனை தினந்தினம் தொழுது நன்றிசொல்லத்தக்க ஒரு விடயமாகும். அதனை நீங்கள் செய்துவருகிறீர்கள் என்று நல்லெண்ணம் கொள்கிறேன்.

பெண்கள் தொடர்பாக, அவர்களது நடத்தைமுறைகள் வாழ்க்கை அணுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் ஏனைய கடவுள் கோட்பாடுகளை விட நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றது என்பது எவறாலும் மறுக்க முடியாத ஒன்றாகும். அந்த நிலையில் கண்டுபிடிப்புக்கள், சாதனைகள் மூலம் பல வெளிவூர் பயணங்களை மேற்கொள்ளல், அந்நிய மனிதர்களை சந்தித்தல் என உங்கள் செயற்பாடுகள் தொடரும் நிலையில் நீங்கள் இஸ்லாம் அனுமதிக்கும், வழியுறுத்தும் ஆடை ஒழுங்கு மற்றும் ஏனைய நட்த்தை முறைகளை சரிவர பேண வேண்டும் என்பதே இந்த திறந்த மடலின் முழு நோக்கமாகும்.

இந்த சுருக்கச் செய்தி உங்களுக்கு பிரயோஜமளிக்குமென்ற நம்பிக்கையுடன் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கின்றேன்.
அல்லாஹ்வெ எல்லாம் அறிந்தவன்.
இஸ்ஸதீன் றிழ்வான்.
இலங்கை
2010-08-09







எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

Good Job Brother

Anonymous said...

Dear Brothers in Islam,

this advise is help for your our women,

please pass the message to all our women.

Thanks
Abdul Rahman

Anonymous said...

Narrated Anas bin Malik:

Allah's Apostle said, "There is none amongst the Muslims who plants a tree or sows seeds, and then a bird, or a person or an animal eats from it, but is regarded as a charitable gift for him."

Anonymous said...

She have her father & mother.They know better how to rise their children.

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லஹ், ஒரு பெயர் இல்லாச் சகோதரர் சொல்லுகிறார் //She have her father & mother.They know better how to rise their children// 1. நாங்களும் அதைத் தான் சொல்லுகிறோம். அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த சகோதரிக்கும் ஒரு ஞாபகமூட்டலாகத் தான் இதை அமைத்திருக்கிறோம். 2. இந்த சகோதரர் மீண்டும் அந்த மடலை வாசிக்கும் படி தயவாய் வேண்டுகிறேன். 3. அவர் அவரது பெயரைச் சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.