கிறிஸ்தவ மதம் சினிமாவைப் போதிக்கிறதா?

சினிமா என்ற சாக்கடையில் சிக்கித் தவிக்கிற பலரை விடுவிக்க எடுத்த முயற்சியின் ஒரு பகுதியாய்.....

“சினிமா என்பது நாம் பயணிக்கும் வாழ்க்கைப்பாதையில் ஆங்காங்கே நான் சந்திக்கும் அபாயக் குழிகளாகும்.

இதற்கு முன்னர் இது தொடர்பாக பல ஆக்கங்களை எழுதி மக்கள் மனங்களை தட்டிவிட்டிருக்கிறோம், அத்துடன் இஸ்லாத்தில் சினிமாவின் நிலை மற்றும் இஸ்லாம் எப்படி அதை தடுக்கிறது என்பதையும் நாம் எழுதியிருந்தோம்.

ஆனால் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்களும் இந்துக்களும் தான் அதிகமாக சினிமாவில் சிக்கி அடுத்தவரையும் சிக்க வலை வீசுகிறார்கள் என்பது பலராலும் பேசப்பட்டதாகிப்போன அம்சமாகும்.

இந்த நிலையில் கிறிஸ்துவமும் இந்து மதமும் சினிமாவை ஆதரிக்கிறதா? அல்லது சினிமாவில் இன்று காட்சிப்படுத்தப்படும் செயல்கள் அந்த வேத நூல்களில் கிடைக்கின்றனவா? என்பதை சிறிதாக தொட்டுவிட்டுச் செல்லும் ஒரு முயற்சிதான் இது.

சினிமாவை இரசித்து பார்த்த காலம் போய் பைபிளையும் இந்து மத வேத நூல்களையும் அல் குர் ஆனுடன் ஒப்பிட்டு பார்க்கிற, படிக்கிற பேசுகிற ஒரு காலப் பகுதி தான் நான் இப்போது இருக்கும் ஆண்டு.
சினிமாவை பார்க்கும் போது;
ஒரு கதாநாயகன் ஒரே நேரத்தில் பலரை அடிப்பான், உதைப்பான்,
ஒரு கதாநாயகி, பலர் அவளுக்குப் பின்னால் காதலாய் பின் தொடர்வர்,
போதிய புகைப்பலக்கமுள்ள பல காட்சிகள்,
மது அருந்தும் காட்சிகள்,
விபச்சாரம், விபச்சார வீடுகளை தர்சிக்கும் பல காட்சிகள்,
என்று பட்டியலிட்டுச் சொல்ல முடியாத, சமூகத்தை நரக விளிம்புக்குச் சுமந்து செல்லும் செயல்முறை படங்கள், இந்த அபிவிருத்தியடைந்த நவீன யுகத்திலும் தாராளமாய் காட்சிப்படுத்தப்படுகிறது.

இவைகள் வேண்டாம், இது நம்மை ஷாத்தானின் நண்பனாய் மாற்றிவிடும் என்று விட்டுவிட்டு ஆண்மீக ஆய்வுகளுக்குள் இரங்கினால் அங்கு நான் படித்து, படிக்கும் போது குறிப்பெடுத்த சில பைபிள் வசனங்களை சினிமா காட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்,

நான் படித்த அந்த செய்திகளை வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர் பல புத்தகங்கள், இணையத்தள பக்கங்கள், வலைபதிவுகளுக்குச் சென்று தேடிய போது இன்னும் சில ஆதாரங்களை பெற்றுக்கொண்டேன்.
அதிலிருந்து சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கத்தைய மற்றும் நமது மொழி சினிமாக்களில் நமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பல செய்திகளை, காட்சிகளை பார்க்கிறோம், அவைகளுக்கு இது போன்ற வசனம் ஆதாரமாக எடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதோ?

கல்லறைகள் அனைத்தும் திறந்தன, தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள                              (மத்தேயு : 27 : 52 - 53)

"And the graves were opened; and many bodies of the saints which slept arose, 
And came out of the graves after his resurrection, and went into the holy city, and appeared unto many".                                      (Matthew 27 : 52 -53)

சினிமாவில் மது, போதை காட்சிகள் தாராளமாக கிடைப்பதற்கு இந்த வசனம் ஒத்துப்போவதாக தெரிகிறதா? ஆமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நோவா (நூஹ் அலை என்கிற கர்த்தரின் ஒரு தீர்க்கதரசி) குடித்த திராட்சை ரசம்

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.                                        (ஆதிகாமம் 9: 20, 21)

And Noah began to be a farmer, and he planted vineyard. Then he drank of the wine and was drunk, and became uncovered in his tent                                                                 (Genesis 9: 20,21)

லோத்து  (லூத் அலை என்கிற கர்த்தரின் ஒரு தீர்க்கதரசி) குடித்த மது பானம்

நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்தாரிகள்.
அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.      (ஆதிகாமம் 19 : 32 -35)

"Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.
And they made their father drink wine that night: and the firstborn went in, and lay with her father; and he perceived not when she lay down, nor when she arose.
And it came to pass on the morrow, that the firstborn said unto the younger, Behold, I lay yesternight with my father: let us make him drink wine this night also; and go thou in,  and lie with him, that we may preserve seed of our father.
And they made their father drink wine that night also: and the younger arose, and lay with him; and he perceived not when she lay down, nor when she arose".  (Genesis 19: 33)

புகைபிடிக்கும் காட்சிகளை அதிகமாக எல்லா சினிமாக்களிலும் காண முடிகிறது, அதற்கும் பைபிளிலிருந்து ஆதாரத்தை எடுத்தார்களா என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

தேவனே புகையுடன் காட்சி தருகிறார்:

தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.                  (2 சாமுவேல் 22 : 9)

பொது மக்களை, பார்வையாளர்களை நம்பவைப்பதற்காக பல பொய்களையும் தேவையற்ற செய்திகளையும் சொல்லுவதுடன் தேவைக்கேற்ப மாறு வேடங்களையும் சினிமாவில் தயாரிக்கின்றார்கள்.

இந்த பொய்களும் மாறு வேசங்களும் இந்த வசனங்களை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்டதோ?

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.  நியாயப் பிரமாணமில்லாதவர் களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனா யிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே  இப்படிச் செய்கிறேன்.
(1 கொரிந்தியர்-9:19-23)

For though I be free from all  men, yet have I made myself servant unto all, that I might gain the more.
And unto the Jews I became as a Jew, that I might gain the Jews; to them that are under the law, as under the law, that I might gain them that are under the law;
To them that are without law, as without law, (being not without law to God, but under the law to Christ,) that I might gain them that are without law.
To the weak became I as weak, that I might gain the weak: I am made all things to all  men, that I might by all means save some.
And this I do for the gospel's sake, that I might be partaker thereof with you".
  (1 Corinthians 9 : 19 – 23)

அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன். அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான்".                                                    ( இரண்டாம் கொரிந்தியர் 11:22)

Are they Hebrews? so am I. Are they Israelites? so  am I. Are they the seed of Abraham? so  am I.                                  (second Corinthians 11 : 22)

இன்றைய சினிமாவில் ஆபாசம், விபச்சாரம், தகாத உறவு என்று எங்கிலும் காணப்படுவதை நாம் காணலாம். இவைகள் இந்த பைபிள் வசனங்களை மையமாக வைத்துத் தான் எடுக்கப்படுகிறதா? என்று கேள்வி கேற்க தூண்டுகிறது.

சிம்சோன் என்பவனின் சம்பவம்:
ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான், அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். (நியாயாதிபதிகள் 16 : 1)  
"Then went Samson to Gaza, and saw there an harlot, and went in unto her". (Judges 16 : 1)

தனது இரு மகள்களுக்கும்  லோத்து  (லூத் அலை என்கிற கர்த்தரின் ஒரு தீர்க்கதரசி) என்பருக்குமிடையில் நடந்த ஆபாசம்:

அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பாh;த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார்; பூமியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.                        நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.                 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தாh;கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.         மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பாh;த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திhpயும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.                                 அப்படியே அன்று ராத்திhpயிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.                                                      இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.”                                                    (ஆதிகாமம் 19 : 31 35)

And the firstborn said unto the younger, Our father  is old, and  there is not a man in the earth to come in unto us after the manner of all the earth:
Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.
And they made their father drink wine that night: and the firstborn went in, and lay with her father; and he perceived not when she lay down, nor when she arose.
And it came to pass on the morrow, that the firstborn said unto the younger, Behold, I lay yesternight with my father: let us make him drink wine this night also; and go thou in,  and lie with him, that we may preserve seed of our father.
And they made their father drink wine that night also: and the younger arose, and lay with him; and he perceived not when she lay down, nor when she arose.
Thus were both the daughters of Lot with child by their father.  (Genesis 19: 31 -35)

ஒரு நடிகன் ஒரே சண்டையில் பலரை கொலைசெய்வான், அடித்து உதைப்பான். இதே செய்தியை பைபிளும் சொல்லுவது இந்த வசனங்கள் மூலம் தெரிகிறதா?

அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்த்து, அத்தாடையெலும்பால் அவன் 1000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.                                                                         (நியாயாதிபதிகள் 15 : 15)

"And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men therewith"                       (Judges 15 : 15)

ஏற்கனவே நாம் சொன்னதுபோல ஒரு விபச்சாரியுடன் போன அந்த சிம்சோன் என்கின்றவர் இங்கு அதே அவர் ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1000ம் பலஸ்தீனர்களை கொலைசெய்கின்றார். பின்னர் அது குறித்து ஒரு பாட்டும் பாடுகின்றார்,
  
பின்பு சிம்சோன் ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1000 பேரைக் கொன்றேன்!                                                                கழுதையின் தாடையெலும்பால் அவர்களை ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்என்றான்.              (நியாயாதிபதிகள் 15 : 16)


"And Samson said, With the jawbone of an ass, heaps upon heaps, with the jaw of an ass have I slain a thousand men".                  (Judges 15 : 16)

இவைகள் ஒரு சில உதாரணங்கள், இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்ற, தேவைப்படும் போது அவைகளையும் இணைத்துக்குக் கொள்வோம்.

சமூகத்தை சீர் கெடுக்கும் சினிமாவிலிருந்து தூரப்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதே எமது மொத்த நோக்கமாகும்.

தொடர்வது “இந்து மதம் சினிமாவை ஆதரிக்கிறதா?”

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments: