என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 10

தொடர்   -பத்து

“இன்றிலிருந்து இன்னும் இரண்டு வாரத்திற்கு எந்த பாடசாலை பயிற்சிக் கொப்பிகளிலும்
1. பிழை வாங்கி இருகக்கூடாது,
2. சிவப்பு எழுத்து குறிப்புக்கள் வாங்கி இருக்க கூடாது,
3. புத்தகங்களில் கொப்பிகளில் தேவையற்ற எழுத்துக்கள், கீரல்கள் இருக்ககூடாது

என்று இந்த மூன்று முக்கிய நிபந்தனைகளை முன் வைத்து உடன்படிக்கை வாங்கிக் கொண்டார்.

நான் முழுமையாக கட்டுப்பட்டு சம்மதம் தெரிவித்தேன், அவர் தொட்டுவிட்ட பாடத்தை தொடர வேண்டும் முடியும் வரை என்பதற்காக.
இப்போது எனக்கு ஒரு சந்தோஷம், அதற்குப் பதிலாக ஒரு பயம். நான் தந்தையிடம் நிறைய படிக்க இருக்குறேன் என்ற சந்தோஷமும் அதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையை சரிவர பாதுகாக்க வேண்டும் என்கின்ற பயமும் தான் அவைகள்.

சந்தர்பங்களுக்காகக் காத்திருந்தேன்.

''விளையாடிப் பார்! வெற்றியா தோழ்வியா என்பது தெரியும் இந்த வரியைக்கொண்டு எனது உள்ளத்தையும் உணர்வையும் உரமாக்கிக் கொண்டேன் கொண்டு.........

அதிகாலை நேரம் அது, அமைதியான பொழுது, தந்தையின் அன்பான அழைப்பு, கண்விளிக்கும் போது பக்கத்துப் பள்ளியிலிருந்து,

ஹை அலல் பலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்
ஹை அலல்வெற்றியின் பக்கம் வாருங்கள்

அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்“  ”தூக்கத்தை விட தொழுகை சிறந்தது
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்“  ”தூக்கத்தை விட தொழுகை சிறந்தது

என்ற அழைப்புக்குத்தான் இந்த தந்தையின் அழைப்பு என்பதை மனதில் உணர்ந்து கொண்டு தொழுகைக்குத் தயாரானேன்.

அல்ஹம்துலில்லாஹ்! தொழுகையை முடித்துவிட்டு சூடாக ஒரு தேநீரும் அருந்தி முடிந்ததும், சுற்றுச் சூழலில் புதுமையான அமைதியையும் என் மேனியில் தங்கி மென்மையாக கதை சொல்லும் காற்றின் சுலற்சியையும் உணர்ந்து சுவாசித்துக்கொண்டு மீண்டுமொருமுறை தூங்கலாமா என எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் போது, மகனே!“ என்று, என் தாயின் விழிப்பு.
மகனே! சென்ற சனிக்கிழமை தந்தையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்துவிட்டாயா? என்று கேள்வி கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.

இல்லை, இல்லை, நான் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன், நேரம் வரும் போது பிடிப்பேன் என்று பதில் சொல்லுகையில், இப்போதே பிடிப்போம் வா என்று என்னை அழைத்துச் சென்றாள்.

எங்கே இருவரும் திட்டமிட்டு என்னை வட்டமிடுகிறீர்கள்? என்றார் தந்தை.
இல்லை. அன்று விட்டதை தொட்டுவிடத்தான் என்று முனங்கியது போல வாய் விட்டாள் தாய்.
பேசலாம் தாராளமாக, வாருங்கள் என்று ஓய்வரைக்கு அழைத்துச் சென்று வார்த்தைகளை பீரிடச் செய்தார்.

”...மூன்று விடயம் என்று சொல்லி, ஒன்றுடன் மட்டும் நிருத்தி இருந்தோம், அதில் அடுத்த விடயம் தான் “பாடசாலை கற்பித்தல் முறை’”


 “பாடசாலை கற்பித்தல் முறை’”
ஒன்று:
ஒரு சர்வதேச கால் பந்து விளையாட்டை டீவியில் பார்க்கும் போது, நமது உணர்ச்சியும் உடலும் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.
எதிரணியிலிருந்து பந்தை பரித்துக்கொண்டு எல்லையை நோக்கி ஓடும் போது பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கோல், கோல் என்று எழுந்து நின்று கை தட்டி, நம்மையறியாமல் நாமே உணர்ச்சி வசப் படுகிறோம்.
ஒரு காட்ரூன் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கும் போதும் இது போன்றதொரு உணர்வுப்பகிர்வு நடை பெறுகிறது.

இருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியாக இருந்தால், அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே, நாம், எமது கை கால்களை உயர்த்தி ஆ,, ஊ என்று சப்தமிடுவதை வழக்கத்தில் காண்கிறோம்.

இப்படி இந்த உணர்வுப் பகிர்வு எமது மூளையில் ஆழமாகப் பதிந்துகொள்கிறது, பல வருடங்களானாலும் கூட, இந்தக் காட்சி, மறக்காமல் இருக்கும்.

ஆனால் பாடசாலைகளில் இந்த உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுமுறை மாணவர்களுக்குக் கிடைப்பது மிக அறிது.

காலையில் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியருக்காக காத்திருப்பார்கள், ஆசிரியர் வந்து பாட புத்தகத்தில் உள்ள தலைப்பை முடியுமானவரை வாசித்து விளக்கிவிட்டு விடை பெற்றுவிடுவார்.

இங்கு கேட்பது, பார்ப்பது மட்டுமே, (சில நேரம் பேசுவது அல்லது கலந்துரையாடுவது) மாணவர்களுக்குரிய கற்றல் ஊடகமாகவும் மாணவர்களுக்கு முன்னால் பேசுவது மட்டுமே ஆசிரியரின் கற்பித்தல் முறை, நீண்டு செல்கிறது.

கேட்டல், பார்த்தல் முறை மனதில் பதிந்து நீண்ட நாட்களுக்கு அந்த செய்தி தேங்கிக் கிடைப்பது மிகக் குறைவு,

ஆனால் கேட்டல், பார்த்தல், கலந்துரையாடல், உணர்வு பூர்வகவமாக தன்னை அந்த நிகழ்ச்சியுடன் ஈடுபடுத்துவது என்பது, குறித்த செய்தியை மூளையில் நிலையாக பதிய வைப்பதற்கும், பின்னர் அதே போல் எடுத்துக் காண்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

கால்பந்துப் போட்டியைப் பார்த்து அதில் பந்து ஓடும் வேகத்தில் நாமும் எமது கண், காது, மூளை நரம்புகளும் பின் தொடர்வது என்று அதிக ஈடுபாட்டைத் தருகிறது.

இது போன்ற ஈடுபாடு பாடசாலை கற்றல், கற்பித்தல் முறையில் தேவையை விட, குறைவாக இருப்பது சிறுவர்களாகிய உங்கள் மூளை வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது.

சில பாடசாலைகளில் மாதத்தில் அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை என்ற விகிதத்தில் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் பல நூறு பேர் படிக்கும் பாடசாலையில் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கி அவர்களை கலை உணர்வுடைய துறைசார் மாணாக்கராக மாற்றுவதற்குரிய வாய்ப்பு மிகக் குறைவாக கிடைக்கும்.

‘நவீன கல்விக் கொள்கை என்ற பெயரில் அதிகமான நாடுகளில் சில இலகு முறை பாடத்திட்டங்களை அண்மைக் காலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள், இந்தக் கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் மிக குறைவாகக் கிடைக்கிறது.

இந்த நவீன கல்வி முறையில் மாணவர்களை விட ஆசிரியர்கள் ‘மாணவர்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு  மற்றும் அதிக ‘பேப்பர் வேலைகள் (Paper work, documentary preparation) என்று சுமத்தப்படுகிறது.
இதனால் தான் வீட்டில் இருக்கும் போது பார்க்கின்ற டீவி நிகழ்ச்சிகளை பாடசாலையில் இருக்கும் போதே சக மாணவர்களுடன் பேசி, பகிர்ந்து சிரித்துக் கொள்கிறார்கள் என்றவாறே.....

நீயும் அப்படித்தானே! என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார் என் தந்தை......

ஒரு உழவாளி தனது வீட்டிலிருந்து வயலை நோக்கி நெல் மூடையைச் சுமந்து செல்லும் போது, நடை பாதையில் உள்ள வயல் நிலங்கள், தண்ணீர் படிந்த இடங்களிலெல்லாம் சில நெல் மணிகள் சொரிந்து விடுகின்றன, மழை பெய்ந்து சில நாற்களில் ஆங்காங்கே சிந்திய நெல் மணிகள் முளைத்து சில நாற்களுக்கு பச்சென்று எழுந்து நிற்பதை பார்த்திருக்கிறாயா?

தனது சிந்தனையை விருத்தி செய்து கொள்ள வேண்டும், நாளுக்கு நாள் புதிய புதிய சிந்தனைப் போக்கும் திறனும் வளர வேண்டும் என்று நினைக்கும் நீங்களும் அந்த நெல் மணிகள் போன்றவர்கள்தாம்.
வயலுக்குச் செல்வதற்கு முன்னர் போகிற வழியிலேயே தங்கி விட்டோம் என்றாலும் அங்கேயே தங்கி காரியத்தை சாதிப்பேன் என்பது போல்.
சிறுசுகளாகிய உங்கள் மூளை வர்ச்சி, விஞ்ஞானிகளைப் போல் சிந்திக்கும் திறன் எல்லாமே பாடசாலை எல்லைக்குள் நின்றும் வளர வேண்டும்.

பாடசாலை கட்டிடங்களுக்குள் காணும் நூலக புத்தகங்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் எல்லோரிடத்திலும் நாளுக்கு நாள் புதுவிதமான கற்றல் முறை பிரதிபலிக்க வேண்டும்.

இரண்டாவது;
அதிகாலையில் கட்டிலிலிருந்து இறங்கு முன்னர், என்ன... எல்லா நாளும் அதே பாடம்... அதே ஆசிரியர்கள் தானே, நாளைக்கும் அதை பார்க்கலாம், என்று சலிப்படைந்து பாடசாலைக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைக்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலை ஏன் என்று நினைக்கிறாய்....?


படரும்.....




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

>>கால்பந்துப் போட்டியைப் பார்த்து அதில் பந்து ஓடும் வேகத்தில் நாமும் எமது கண், காது, மூளை நரம்புகளும் பின் தொடர்வது என்று அதிக ஈடுபாட்டைத் தருகிறது.

இது போன்ற ஈடுபாடு பாடசாலை கற்றல், கற்பித்தல் முறையில் தேவையை விட, குறைவாக இருப்பது சிறுவர்களாகிய உங்கள் மூளை வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது>>
மாணவர்களின் இன்றைய நிலையை படம் பிடித்துக்காட்டும் வசனங்கள் இவை.

Anonymous said...

//ஆனால் கேட்டல், பார்த்தல், கலந்துரையாடல், உணர்வு பூர்வகவமாக தன்னை அந்த நிகழ்ச்சியுடன் ஈடுபடுத்துவது என்பது, குறித்த செய்தியை மூளையில் நிலையாக பதிய வைப்பதற்கும், பின்னர் அதே போல் எடுத்துக் காண்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்//

//கால்பந்துப் போட்டியைப் பார்த்து அதில் பந்து ஓடும் வேகத்தில் நாமும் எமது கண், காது, மூளை நரம்புகளும் பின் தொடர்வது என்று அதிக ஈடுபாட்டைத் தருகிறது//

சரியாகச் சொன்னீர்கள்.இதனை நமது நிஜ வாழ்க்கையில் நாளாந்தம் கான்கின்றோம். சினிமாவைப் பார்க்கும் சிறியவர்கள் தொடக்கம் பெறியவர்கள் வரை ஆடலுடன் பாடலாகட்டும், சீறியல்கலாகட்டும், எதுவாக இருப்பினும் அதன் தாக்கங்கள் (Reaction) (அதன் எதிர் வினை) எந்தளவு மனதளவில் தாக்கம் செலுத்துகிறது என்பதை நன்றாகப் புறிந்து கொள்ளலாம்.
சில இளைஞர்களுடைய பேச்சுக்களே சில நேரங்களில் வித்தியாசமானதாக இருக்கும். என்னவென்று பார்த்தால் எங்கோ அவர் பார்த்த படத்தின் வெளிப்பாடுதான் அது.
எனவே, ஒரு விஷயத்தைக் காட்சிப் படுத்தி புறிய வைப்பது என்பது, வாசித்து கேட்டு புறியவைப்பதை விட, ரொம்பவும் சுலபமான வழியாகும்.

நபியவர்கள் கூட சில விஷயங்களைப் புறிய வைக்க இந்த நடையைக் கையான்டுள்ளார்கள் என்பதை வரலாற்றைப் புரட்டும் போது கிடைக்கிறது. மரக்கிளையை உசுப்பி, இரந்து போன ஆட்டை, மலையை,உதாரணம் காட்டி, மிம்பரிலே தொழுகையை செய்து காட்டி,... (என்று காட்சியின் மூலமாக)இப்படி தேடினால் அநேகமானவைகளை காட்சிப் படுத்தி விளக்கியிருப்து அந்த செயல் எங்கும் எப்பொழுதும் எச்சந்தர்ப்பத்திலும் மறவா வடுவாக இருக்கிறது.
சகோ அபூ றிழா குறிப்பிட்டிருப்பது போன்று
"உணர்வு பூர்வகவமாக தன்னை அந்த நிகழ்ச்சியுடன் ஈடுபடுத்துவது என்பது, குறித்த செய்தியை மூளையில் நிலையாக பதிய வைப்பதற்கும், பின்னர் அதே போல் எடுத்துக் காண்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்."
எந்தவொரு செய்தியானாலும் அதனை காட்சிப் படுத்தி விளக்கும் பட்சத்தில், அது மறவாச் சின்னமாக அமையும் மாத்திரமின்றி தகுந்த சந்தர்ப்பத்தில் அதனை வெளிக்கொனரவும் முடியும் என்பது திண்னம்.

ஆய்வோடு மாற்றங்களைத் தந்து கொண்டிருக்கும் சகோ.அபூ றிழாவுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புறிவானாக.தடைகளை தகர்க்க வல்லவன் துணை என்றும் உங்களுக்கு கிடைக்கட்டுமாக.
நன்றி
அன்ஸார்(தோஹா)

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

அல்ஹம்துலில்லாஹ்,
மாற்றங்கள் தேவை என்று ஆசைப்படும் பலர் “மாற்றங்கள் தேவை” யுடன் இணைந்து எம்மை ஊக்கப்படுத்துவது சந்தோஷத்தை அள்ளித்தருகிறது.

கடந்த சில வாரங்களாக தொடரும் “என் மகன் ஒரு லீடர்” தொடரை வாசிக்கும் நீங்கள் எதிர் வரும் தொடர்களில் சேர்க்க வேண்டிய செய்திகளையும் சிந்தனைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் படி தயவாய் வேண்டி நிற்கிறோன்.

அன்புடன்

Shifa said...

காலத்துக்கு தேவையான தகவல்.இன்று பலய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.காரணம் காலத்துக்கு தேயையான இலைஜர்களை உருவாக்க.இவ்வாறு இருக்கையில் "அதிகாலையில் கட்டிலிலிருந்து இறங்கு முன்னர், என்ன... எல்லா நாளும் அதே பாடம்... அதே ஆசிரியர்கள் தானே, நாளைக்கும் அதை பார்க்கலாம், என்று சலிப்படைந்து பாடசாலைக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைக்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள்"ஆசிரியர்கள் மிது மாணவர்களுக்கு வெறுப்பு.
TEACHERS ARE RESPONSIBLE FOR THIS
How can we change this? Firstly, the teacher has to leave out the psychological barriers that learners bring to the class. Secondly, she has to vary her teaching method. If she established daily routine, probably, students feel bored. There are many methods of teaching like Direct method, Desuggestopedia, community language learning, Total physical response………
At least, if she uses some techniques from these methods, she can get students' attention plus she can makes them to learn.

Issadeen Rilwan said...

சகோதரர் ஆன்சார் மற்றும் சிபா அவர்களுக்கு எங்களது நன்றிகள் என்றென்றும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்த தயவாய் வேண்டுகிறேன். நன்றி