ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
வருடம் முழுவதும் ஓய்வின்றி வேலை பார்த்து வருபவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை தருவதற்காக வருடத்தில் சில நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அது ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறு நாட்களில் பண்டிகைகள் எனும் பெயரில் உருமாறின. குடும்பத்துடன் குதூகலமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட நாட்கள் நாளடைவில் கூத்தடிப்பதற்காக மாற்றப்பட்டன.
கிறிஸ்துமஸ், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குடித்துவிட்டு கும்மாளமடிப்பது, புத்தாண்டு, காதலர் தினம் போன்ற தினங்களில் காதலர்கள் எனும் பெயரில் விபச்சாரம் செய்வது, பலபேர் சேர்ந்து பெண்களை பலாத்காரம் செய்வது போன்ற விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க செயல்கள் நடந்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். ஆனால் எவருமே அறியாமல் அல்லது அது ஒரு தவறாக தெரியாமல் தற்போது அந்த பண்டிகை நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீண் விரயமாக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளை மட்டுமே வீண் விரயமாக சிலர் சொல்கின்றனா;. அது அவ்வாறு இருந்தாலும் அதைவிட பன்மடங்கு தொகை கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் வீணாக்கப்படுகின்றன. புத்தாண்டு தினத்தில் உலகெங்கும் வாண வேடிக்கை எனும் பெயரில் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகின்றன. அந்த தொகையை செலவிட்டாலும் இல்லையெனினும் புத்தாண்டு வரவே செய்யும். 2010, டிசம்பா; 31 ல் மக்கள் என்ன நிலையிலிருந்தார்களோ அதே நிலையில்தான் அதற்கு அடுத்த நாளான ஜனவரி 01,2011 லும் இருந்தார்கள். புதிய ஆண்டு பிறந்துவிட்டதால் அவர்களிடத்தில் எந்த முன்னேற்றமும் வந்துவிடவில்லை. பின் ஏன் அதை இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து பணத்தை வீணாக்க வேண்டும்!
வரும் வருடங்களிலாவது வீணான களியாட்டங்களில் ஈடுபட்டு கோடிகளை காலி செய்யாமல் பண்டிகை தினங்களில் நான் உண்டு, உடுத்து, உறங்கி மகிழ்வது போல எனது உடன்பிறவா சகோதரர்களும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். புத்தாண்டு தினத்தில் பல்லாயிரம் போ; புதுவாழ்வு பெற்றனா; என்ற இனிப்பான செய்தி வர வேண்டும். அதற்கு கிறிஸ்தவ உலகம் தயாராகவேண்டும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment