கடைய அடைக்கப் போறாங்க அவசரமா போ!ழையான மாலை அது, பூந்தூறலாகத்தான் அந்த மழை  இருந்தது, இடையிடையே குளிர் காற்று இடம் மாறி ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது. மரங்களில் குடியிருந்த நீர்த் துளிகள் இலையசைவில் உதிர்ந்து என் மேலே சொரிந்தன. ஆங்காங்கே  பறந்து தெரிந்த புறாக்கள் மரக் கிளைகளில் உட்கார்ந்து க்ரும் க்ரும்என்று ஓசை எழுப்பின.

டேய் பேய் பாயும் பாலை மரத்தால இந்த ராத்தியில் எங்கடா போரா?

அது ஒரு கிழட்டுக் குரல், யாரெண்டு தெரியாது, ஆனால் பேயும் இல்லை, பிசாசும் இல்லை இந்த நேரத்தில் என்று தன்னை திடகாத்திரப்படுத்திக்கொண்டு........

ஒற்றையடிப்பாதையை விட்டு பெற்றோல் வண்டிகள் பயணிக்கும் பாதைக்குப் பக்கமாய நடக்கலானேன், ஒரு நல்ல இருட்டு அந்த நேரம், அதற்கு எங்கள் ஊர் கிழவி ’கும் இருட்டு’ என்று பெயர் சொல்லுவால்......

முன்னே செல்லும் ஆல் யார் என்று தெரியாது, ஆனால் நேரமும் அவ்வளவுவாக இருக்கவில்லை, கையில் ஒரு விலக்கெண்ணை போத்தலுடன் கடையை நோக்கி பொடி நடையாய் புறப்பட்டேன்.

என்னை கண்டவர்கள் கவலையாய் ’ஏன் இந்த இருட்டில்?

இல்லை வீட்டில் விலக்குக்கு எண்ணை இல்லை, பக்கமாக இருக்கும் கடையில் வாங்கலாம் தானே?

அங்க கடன் கொடுக்க மாட்டாங்க, காசு ஒரு சதமும் கையில் இல்லை,
அப்பா கொஞ்ச நாளா சும்மா இருக்காரு, வேல இல்லை, அதா அங்க தூரமா மீசான் அப்பா கடையில கேட்டுப் பாக்கலாமுண்டு அம்மா அனுபி வைத்தாங்க.............!

சரி கவனமா போ, இருட்டு, மழ, மாடெல்லா இப்பா வீடு தேடுது என்று சொல்லிவிட்டு ஒரு வயது தாத்தா இரட்டை சக்கர வண்டியை வேகமாக மிதித்தார்.

உள் மனம் ஏதோ பயத்தால் ஆர்பாட்டம் செய்கிறது, வெளிமனம் தைரியப்படுத்திக்கொள்கிறது, இடையிடையே கடந்து செல்லும் வாகன வெளிச்சங்களை உபயோகித்து அந்த மீசான் அப்பா கடையை அடைந்தேன்,

என்ன மின்சார விளக்குகள் வீரியமாய் செயற்படும் இடத்திலா இவ்வளவு இருட்டா இருக்கு என்று எண்ணிக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்தேன், ஈசல்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.

ஈசல்களில் காலதான் இது என்றாலும் அவைகளுக்குள் என்ன இவ்வளவு சண்டை என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு, கடைக்கார அப்பாவை தேடினேன்,
என்ன? இந்த ராத்தியிலையுமா கடன் கேட்டு வந்திட்டாய் என்று குளரலான வார்த்தையில் கடிந்துகொண்டு,

யார் பழைய பாக்கியைத் தருவார் என்று கேள்வி எழுப்பினார்?
இல்ல, கஸ்டமா இருக்குது, கொஞ்சம் பொறுத்துகுங்க அவசரமா தருவோ என்று என் அம்மா சொன்ன வார்த்தைகளை அவர் காதில் தாழ்மையாய் ஊதினேன்.
நேரம் வேகமாய் கடந்து செல்கிறது, பசியும் பாதி எனக்குள் வன்முறை செய்ய ஆரம்பித்தன,

ஒரு லீட்டர் எண்ணையெல்லா தர முடியாது, இந்தா என்று ஒரு கரண்டி விளக்கெண்ணையை தந்து என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கடவுளே, தூங்கும் வரைக்குமாவது வெளிச்சத்தில் இருக்கலாமே என்று நன்றி சொல்லிக்கொண்டு வேகமாய் வீரியமாய் நடக்க ஆரம்பித்தேன்,

என்னை கடந்த ஒரு சைக்கில்காரரிடத்தில் கையை நீட்டி நானும் வரவா என்று ஒரு அனுமதி விண்ணப்பம் செய்தேன்.

இல்ல, பின் சில்லுக்கு காற்று கொஞ்சம் குறைவா இருக்கு, வேற ஒரு நாளைக்கு....... 
என்று சொல்லிவிட்டு ஊண்டி மிதித்தார் ...

ம்ம், என்று என்னை நான் சமாதானம் பண்ணிவிட்டு நடக்கலானேன்.
ஒரு மாதிரி வீடு வந்து சேர்ந்தேன்.

இந்தா இருக்கு எண்ணை, இனி மீதி காசு தராம சாமானுக்கு வர வேண்டாம் என்று சொன்னார் கடக்கார அப்பா என்று அவர் செய்தியை என் அம்மாவுக்கு எத்திவைத்தேன்.

நடந்த கலைப்பை போக்க ஒரு இடத்தை பார்த்து அமர முயற்சித்தேன்.

தம்பி நீ பசியோடிருப்பாய், இந்தா சாப்பாடு என்று என்னை அன்பாய் அழைத்தால் தாய்
கொஞ்சம் சோறு, தொட்டுக்க பெயர் தெரியா ஒரு கறி.
பாதி வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் தூக்கம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

தூயவனின் அடிமை said...

//கொஞ்சம் சோறு, தொட்டுக்க பெயர் தெரியா ஒரு கறி.பாதி வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் தூக்கம்.//

உலகத்தில் இந்த பாதி வயிறு கூட நிரம்பாமல் நிறைய மக்கள் இருக்கிறார்கள்.

Issadeen Rilwan said...

இதை மறுக்க பேரில்லை இந்த பாரில்

Shifa said...

கொஞ்சம் சோறு, தொட்டுக்க பெயர் தெரியா ஒரு கறி.
பாதி வயிறு நிரம்பியும் நிரம்பாமலும் தூக்கம்

Many scholars had same story in their early life

Anonymous said...

http://kadayanallur.org/?p=3594
You can read same here