கன்னிகளை கை பிடித்துக் கொடுக்கும் போது…..!


(எச்சரிக்கை: வயது வந்தவர்களுக்கு மட்டும்.)

மதம் அறிந்த பூசாரிகளுக்கும்  புரோகிதர்களுக்கும் அன்பாய் எழுதிக்கொள்வது,

இந்து சகோதர்களின் திருமணங்களுடன் பல சடங்குகள் பின்னப்பட்டிருப்பது

நாம் அறிந்ததே, குறிப்பாக ஐயர் வருவது, அக்கினி குண்டம் அமைப்பது,  தாரை வார்ப்பது,  தாலிகட்டுவது, அம்மி மிதிப்பது,  அருந்ததி பார்ப்பது என்று பல

பெயர்களில் தொடர்கின்றன.

ஆனால் என் இச்சிறிய கட்டுரையில் குறிப்பாக தாலி கட்டும் நிகழ்வு குறித்து சில செய்திகளை சொல்லுகிறேன், கேளுங்கள் நண்பர்களே.!

தாலிகட்டும்போது பின்வருமாறு மந்திரம் சொல்லப்படும்,


''
மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம்

ஜீவ சரதச்சதம்''

இதற்கு இந்த மந்திரத்தின் கருத்தென்ன தெரியுமா?
'
எனது வாழ்வுக்குக் காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கின்றேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழவேண்டும்'. என்பதே இதன் கருத்து
.

இதனை தனக்கு வாக்கப்படப் போகும் மனைவிக்கு கணவன் இவ்வாறு சொல்லி

அந்த தாலியை கட்டினால் அது கொஞ்சமாவது நியாயம் எனலாம்.

ஆனால் இந்த மந்திரத்தை சொல்லுவது திருமண பந்தல்களில் புரோகிதல் பண்ணும் புரோகிதர்கள்.

புரோகிதர் இவ்வாறு சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது எவ்வளவு பெறிய அநியாயம்!!?

சிந்தித்தால் மாற்றம் உண்டுபண்ணலாம்.

இத்துடன் முடிந்துவிடவில்லை, தொடர்ந்தும் படியுங்கள், சில வண்ட வாலங்கள்

நன்கு தெரிய வரும்.

திருமணத்தின் போது அதே புரோகிதர் சொல்லும் மந்திரத்தை பாருங்கள்,

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி புரோகிதரால் சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகளாக இருக்கும் இந்த கன்னிப் பெண், ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக கைபிடித்து தாலி கட்டி வாழ்க்கை நடத்தும் மணமகனுக்கு மனைவியாகப் போகிறாளாம்.

துரதிஷ்டம்!! இந்த மந்திரத்திற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்து பொது மக்களை மேலும் மடமைக்கு இட்டுச் செல்கின்ற பலரும் இருக்கின்றனர். 

இது முடிந்து கணவன் மனைவி வாழ்க்கை தொடரும் போது இன்னும் பல மந்திரங்கள் அவர்களை பின்தொடர்கிறது.

குறிப்பாக,

"
தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய மொழிபெயர்ப்பு:

‘நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும். 

தொடர்கிறது.....

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய மொழிபெயர்ப்பு:

பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக
பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள்
.

(தம்பதிகளை இவ்வளவு கவனமாக பாதுகாக்கும் தெய்வங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கும் யுத்தங்களை அடக்க முன்வராதது ஏனோ தெரியவில்லை.)

நண்பர்களே!

இந்துச் சகோதர்களே!!

உங்கள் சிந்தனைக்கு விட்டுவைக்கின்றேன். 

மத போதகர்கள் என்ற லேபளில் வரும் சமூக துரோகிகளை கண் மூடித்தனமாக நம்பாதீர்கள்.

மதத்தின் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ள அதன் வேத நூல்களை சொந்த மொழியில் படிப்போம், 

ஓ மனிதா!!

எந்ந விஷயம் உண்மை என்று உமக்குத் தெளிவானதோ, அதைப் பின்பற்ற

ஒருக்காலும் தயங்காதே!!  

எந்ந விஷயம் பொய்யென்று உமக்குத் தெளிவானதோ, அதை புரந்தள்ள ஒரு நிமிடமும் தயங்காதே!!
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

N. Abdul Hadi Baquavi said...

விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி. தொடரட்டும் உம் பணி.
நூ. அப்துல் ஹாதி பாகவி

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமுன் உங்கள் மீதி சொந்தமாகட்டும்,
உங்கள் ஆலோசனைகளும் தூண்டுதல்களும் எப்போதும் தேவைப்படுகிறது.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
தமிழ் பேசும் மக்களிடம் இந்த விஷயம் தி க வினரால் மேடை தோறும் முழங்கி இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தெரிந்தே தான் அதை அமோதிக்கிறார்கள்.
நமது மக்களிடம் மது, சிகரெட் போலதான் இதுவும். அவர்கள் சுயம் சிந்திக்காத வரை நேர்வழி பெற முடியாது. சிலரால் சிந்திக்க விடாமல் இதுதான் சரி என்று போதிக்கப்படுகிறது. தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

DHARUL HADHEES said...

இப்படிப்பட்ட சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தரமான ஆக்கங்கள் என்றும் இடம்பெற வாழ்த்துவதோடு, நம் இந்து நண்பர்களுக்கும் இந்த வலையமைப்பு சென்றடைய முயற்சிக்க வேண்டுமெனவும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

Issadeen Rilwan said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனதார நன்றிகள் எப்போதும். இந்த செய்தி சமூகத்திற்கு தேவை என்று பலராலும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நண்பர்களே இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தேவைப்படும் போது இதனை பிரின்ட் எடுத்து துண்டுப் பிரசுரமாக உங்கள் பிரதேசங்களில் விநியோகிக்க மாற்றங்க தேவை அனுமதிக்கின்றது.