உரிமைப் போராட்டங்கள் தேச எழுச்சியாக…!


 (இன்றைய அரசியல்)
பாவம் நம்ம இளைஞர்கள்,
 11 முட்டாள்களுக்கு பின்னால் கால நேரங்களை கடத்தும் போது அங்கே பல தேசங்களில் எழுச்சிப் போராட்டாங்கள்……!

’மாற்றங்கள் தேவை’ இந்த ஆண்டை (2011) மாற்றங்களின் ஆண்டாகவே பார்க்கின்றது,
காரணம் பல உலக நாடுகளின் தலை எழுத்துக்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது அந்த நாட்டு மக்கள் புரட்சியால் அல்லது பக்கத்து நாட்டு மன்னர்களின் வெளியேற்றம் கொடுக்கும் படிப்பினையால்.
தூனிசியா என்று ஆரம்பித்து சீனா வரை நீண்டு செல்லும் மக்கள் புரட்சி ஒரு முக்கிய செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

உலகில் அதிக நாடுகளின் அரசுகள் தங்கள் மக்களுக்கு செய்யும் துரோகமும் குறித்த சிலர் அனுபவிக்கும் இன்பகரமும் தான் அது.

வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நவீன உலகில் பட்டதாரி மாணவன் பெட்டிக் கடை வைத்து காலம் கடத்துவதும் அதிகார வர்க்கங்கள் கண்திறந்து தன் மக்கள் நிலையை உணராது இருப்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.
தூனிசிய பட்டதாரி முஹம்மது பின் அல்பூ-அஸீஸ் தன் அன்றாட உழைப்பாக பாதையோற பெட்டிக்கடை வாழ்க்கையை கடத்தி வந்தார். பாதையோற பெட்டிக்கடைக்கு அனுமதி மறுத்த பெலிஸாரால் பாதிக்கப்பட்ட இந்த 26 வயது நிறம்பிய இளைஞர் கடந்த ஆண்டு 2010 டிசம்பர் 17ஆம் திகதி தீயிட்டு உயிர் துறந்த சம்பவம் தூனிசிய இளைஞர்களை சிந்திக்கத் தூண்டியது.
அது இன்றைய தலைப்புச் செய்தியாக மாறி நிற்பதுடன் பல தேசங்களின் தலை எழுத்தையே மாற்ற உதவி வருகின்றது.
தொடர்ந்தும் பாதைக்கு வந்த மக்கள் அந்த நாட்டின் மன்னர் தூனிசிய அதிபர் ஸைனுல் ஆபிதீன் பின் அலீ, நாட்டைத் துறந்து அடைக்கலம் தேடி பிற நாட்டுக்கு ஓடி இருக்கிறார்.


இது போன்ற ஒரு மக்கள் புரட்சி புதிய எகிப்து தேசத்தை கட்டியெழுப்ப உதவுவதாக தெரிகிறது.
1981இல் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சியை அவரது 82ஆவது வயதில் அந்த நாட்டு மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க, இஸ்ரவேல் நாடுகளின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்பட்ட இவர் நாட்டின் வருமைக்கும் வீழ்ச்சிக்கும் துணைபோன செய்தி மக்களை விழிக்கச் செய்திருக்கிறது.

எகிப்திய மக்கள் புரட்சி தொடங்குவதற்கு பின்னணியாக பல காரணங்களும் சம்பவங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒரு சில சம்பவங்களைச் சொல்லலாம்.

கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்ற 26 வயதான இளம் யுவதி அஸ்மா மஹ்ஃபூஸ்  முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று தஹரீர் சதுக்கத்திற்கு அணி திரளுமாறு எகிப்திய மக்களை அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (Blog) பதித்தார், அந்த வீடியோ தான் எகிப்திய மக்கள் புரட்சிக்கு வித்திட்டதாக சொல்லப்படுகிறது.

தூனிசிய மக்கள் தங்கள் புரட்சி மூலம் அடக்குமுறை மன்னரை மாற்ற முற்பட்டது போல் நம் நாட்டிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் நான்கு எகிப்திய இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்திக்கொண்டனர்.

இந்த சம்பங்களைத் தாண்டி இளைஞர் காலிதின் பெயரும் பல செய்திகளில் சொல்லப்படுகிறது.

காலித் என்கின்ற எகிப்திய இளைஞன் கடந்த 6.6.2010 அன்று அலெக்ஸாண்ட்ரியாவின் 'ஸையிதி ஜாபிர்' பகுதியிலுள்ள ஒரு இன்டெர்நெட் கஃபேயில் இணையத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது எகிப்தின் காவலர்கள் இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்துத் தண்டித்ததில் 28 வயதான இந்த இளைஞன் மரணித்துப் போனான்.
இந்த தண்டனை எதற்காக என்று ஒரு கேள்வி? தனது நாட்டின் பாதுகாப்புத்துறையிலுள்ள போலீஸ்காரர் போதைப் பொருள் வியாபாரத்தின் ஈடுபட்டிருந்த செய்தியை படம் பிடித்து தன் மக்களுக்கு பரப்பிய அந்த சமூக சேவைக்குத் தான் இந்த தண்டனை.

இந்த ஒரு இளைஞரின் கொலை பல இளைஞர்களின் மன மாறுதலுக்கும் எகிப்தின் ஆட்சி மாறுதலுக்கும் காரணமாக மாறின.
இதனால் காலிதின் படுகொலைக்கு நீதிகேட்டு முதல் போராட்டமாக 14.06.2010 அன்று அந்த நாட்டு மக்கள் வீதிக்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தான் தலைநகர் கைரோவின் விடுதலைச் சதுக்கத்தில் ஜனவரி 25, 2011 கூடிய மக்களின் புரட்சி அரசியல் பரிணாமம் அடைந்திருந்தது.
அந்த மக்கள் வைத்த கோரிக்கைகள் உண்மையில் நியாயமானதுதான்.
ஆனால் அது ஆட்சி மாற்றத்திற்கும் அரசின் எதிர்புக்கும் தகுந்தவைதான்.

அந்த எகிப்திய மக்கள் சொன்னது ஹுஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்பதும் அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் அத்துடன் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதுவுமே.

ஒரு சிலரால் துவங்கி வைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் எந்த திட்டமிடலும் இன்றி, எந்த தலைமைத்துவமும் இன்றி பெரு மக்கள் புரட்சியாக, இராணுவத்தின் ஆயுதங்களால் கட்டுப்படுத்த முடியாத பலத்த சக்தியாக மாறியது.

இந்த மக்கள் புரட்சி எகிப்தை ஆண்ட முபாரக்கின் குடும்பத்தை பிரிட்டனில் புகலிடம் தேடிப் போகச் செய்திருக்கிறது.
இவரைத் தொடர்ந்து நாட்டின் நிருவாகம் இரானுவத்தின் கையில் தூக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் சீரான, மக்களுக்குத் தேவையான ஒரு நிருவாகம் வடிவமைக்கும் வரை மக்கள் தங்கள் உழைப்பை இடை நிருத்துவதாக தெரியவில்லை.

தொடர் உழைப்பு நல்ல பயனைத் தரும் என்பது போல தொடர் மக்கள் போராட்டம் நல்ல ஆட்சியைத் தரும் என்ற வரலாறு எழுதப்படுகின்றது இங்கு.
போராட்டம் நாளுக்கு நாள் புதிய நாடுகளை இனம் காட்டுகின்றது.

தனைத் தொடர்ந்து குவைத்தில் ஒரு போராட்டம்,
எந்நாட்டு குடியுரிமையும் இல்லாது பல வடுடங்களாக குவைத்தில் வாழும் பெடோன்ஸ் என்று சொல்லப்படும் பாலைவன அரபிகள் தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமை கோரி குவைத்தில் ஒரு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

தொடர்ந்து 42 வருடங்களாக லிபியா அதிபராக இருக்கும் முஆம்மர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது.
முஆம்மர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற கோசம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் எங்கும் இல்லாமல் இங்கு அதே கடாபிக்கு சார்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடி அவருக்கு ஆதரவு வழங்கு வருகிறார்கள்.
அவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய கதாபி, உமர் முக்தாரின் எழுச்சியை தன்னுடைய அரசியல் நடத்தையுடன் ஒப்பிட்டுக் காட்டியதுடன் நாட்டு மக்களை ஆடி பாடி சந்தோக்ஷமாக இருக்கும் படி வேண்டி இருக்கிறார்.
தனக்கு எதிராக போராட பாதைக்கு வந்துள்ள பொதுமக்களை எதிர்க்க, கட்டுப்படுத்த பின் வாங்க மாட்டேன் என்பதும் அவரது உறுதியான அறிவிப்பாக இருந்து வருகின்றது.
மன் நாட்டை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்து வரும் அதிபர் அலி அப்துல்லா சாலேவை பதவி விலகுமாறு எமனில் ஒரு மக்கள் புரட்சி தலை தூக்கியுள்ளது.
ன்று சீனா வரை மக்கள் விளித்துக் கொண்டார்கள், வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டுவது போல சில நாடுகளில் மக்கள் கரங்களை பிடித்து தங்களது ஆட்சிக்கு ஆதரவு திரட்டிக்கொண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்னும் சில நாடுகளின் தலைவர்கள் பீதியில்,
ஆனால் எங்கு அடக்கு முறைகளும் ஊழல்களும் எல்லை மீறி இருக்கின்றனவோ அங்கு ஒரு புரட்சியும் ஆட்சி மாற்றமும் கட்டாயம் தேவைப்படுகின்றது.
ஒரு தேசத்தின் உண்மையான ஆட்சி மாற்றம் அந்த சமுத்திரத்தையே மாற்ற உதவலாம்.
உதாரணமாக, எகிப்தி மக்கள் புரட்சிக்கு பின் துள்ளியமான தேர்வு முறை கையாளப்பட்டு தகுந்த ஒரு தலைவர் ஆட்சிக்கு வருவாராக இருந்தால் அது அறபு தேசத்திற்கும் அதன் பாதுகாப்புக்கும் கிடைக்கும் பெரும் வெற்றி தான், அந்த வெற்றி பலஸ்தீன விடுதலைக்கு துணை செய்யும்.

இது போக, நாட்டு மக்களின் வருமை, கல்வியின்மை போன்ற அடிப்படை தேவைகள் இனங்காணப்பட்டு நிவர்த்தி செய்யப்படும்.

அநியாயத்திற்கெதிராக தற்கொலையற்ற, சொத்து சேதமற்ற ஒரு புரட்சி காலத்தின் தேவைதான்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

இன்றைய அரசியல் நிலை குறித்து உங்கள் கருத்துக்களையும் செய்திகளையும் இங்கு பதியலாம்