இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா?


லங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி மிகத் தவறாக எழுதப்பட்டு சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதை வரலாறுகளை புறட்டும் போது அறிந்து கொள்ளலாம், அது ஒரு சில முஸ்லிம் புத்திஜீவிகளால் இனங்காணப்பட்டு உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும்  பொருட்டு, பல நூல்கள் வெளிவந்தவண்னமுள்ளன.
ஆனால் இந்த கட்டுரை அது பற்றி இப்போது எதையும் பேசவில்லை, அதற்கு வேறு ஒரு தலைப் பை தேர்ந்தெடுப்போம்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல.
அப்படியென்றால் ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தலைப்பை இப்படியும் சிந்திக்கலாம்,
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி ஆன்மீக தலைகள் சிந்திக்குமா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி கல்விமான்கள் சிந்திப்பார்களா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி இளைஞர் யுவதிகள் சிந்திப்பார்களா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி பணக்கார தலைகள் சிந்திக்குமா?
இப்படி ஒவ்வொரு தலைகளின் மேல் இந்த பொறுப்பை ஏற்றி வைத்து சிந்தித்துப் பார்த்தேன், ஆனால் எதையும் அரச அனுமதியுடன் முன்னெடுக்க அரசியல் தலைகளின் துணையும் பங்களிப்பும் தேவை என்பதை நமது இலங்கை அரசியல் நிலவரம் சொல்லிக் கொண்டிருப்பதனால் அரசியல் தலைகளுக்கு அந்த பொருப்பு சுமத்தப்படுகிறது.
சமூகத்திற்கு தேவையான ஒரு பணியை ஆன்மீக, பணக்கார அல்லது யுவன் யுவதிகள் முன்னின்று செய்ய, சாதிக்க முனைந்தாலும் முடிவாக அரச அனுமதியையும் அரசியல் வாதிகளின் ஒப்புதலையும்தான் வேண்டிநிற்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி எல்லா தரப்பினரும் சிந்திக்க வேண்டும், எல்லா வகையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் முதல் இலங்கையின் அரசாங்கங்களை நிர்ணயிப்பது வரை முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஈடுபாடும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவமும் மிக முக்கியமானதாகும்.
இலங்கைக்கான சுந்தந்திர பிரகடன செய்திகளைப் படிக்கும் போது அப்போது கலத்தில் இருந்த தலைவர்களாக நமது மூத்த அரசியல்வாதிகளாக பலர் திகழ்ந்திருக்கிறாகள்.
சேர். ராஸிக் பரீத், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், எம்.ஸீ.எம். கலீல் மற்றும் டாக்டர் டீ.பி. ஜாயா போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகும்.
அதனால் தான் 1948 ம் ஆண்டு டாக்டர் டீ.பி.ஜாயா அவர்கள் தொழிலார் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக (Minister of Labour and Social Services) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் இன்னும் ஒரு செய்தி,
1939ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி அனைத்து முஸ்லிம் அரசியல் செயலகத்தினால் (the Secretary of the All Ceylon Muslim Political Conference) கொழும்பு ஸாஹிரா படசாலையில் நடந்த மாநாட்டில் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இப்படிச் சொன்னார்; இலங்கைக்கு சுதந்திரம் வேண்டி போராடுபவர்களின் நானும் ஒருவன் என்பதை சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்துகின்றேன் (Let me assure my Sinhalese countrymen that I am one among them in demanding complete freedom for our country). 

இலங்கை அரசியல் வரலாற்றில் உயிரான (சுதந்திர போராட்டம்) சந்தர்ப்பங்களிளும் அதே நேரம் பல அரசாங்க முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை (கல்வி அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுக அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு) வகிப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் வாய்ப்புப் பெற்றிருந்தனர்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக பல மரண, மர்ம அடிகளும் காலா காலமாக இருந்துவந்திருக்கின்றது.
அது பல பணக்காரர்களை பிச்சைகாரர்களாக மாற்றி இருக்கின்றது, பல முஸ்லிம் கல்விமான்களை இழக்கச் செய்திருக்கின்றது.
பல பிரதேசங்களை துரக்கச் செய்திருக்கின்றது, பலரை அநாதையாக, அகதியாக மாற்றி இருக்கின்றது.
ஏறாவூர், காத்தான்குடி, அழிஞ்சிப் பொத்தானை, பங்குராணை, மூதூர், வடகிழக்கு என்று பல பிரதேசங்களில் இந்த அழிவுகளும் இழப்புக்களும் நடந்தேறி இருக்கின்றன.
மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்ற பல முஸ்லீம் புத்தி ஜீவிகள், உயரதிகாரிகள் எம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.
மாவனல்லை நகரம் இரவோடு இரவாக சாம்பலாகி பல பணக்காரர்கள் ஒரே இரவில் பிச்சைக்காரர்களாகிய நிகழ்வுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக துக்ககரமான பக்கங்களாகும்.
முஸ்லிம்கள் வாழுகின்ற எந்த பிரதேசத்தையும் ஒரு நிமிடம் மீட்டிப் பாருங்கள், அங்குள்ள வாழ்க்கை நிலைமைகள், சூழல்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான், இத்தவரைக்கும் நீடிக்கிறது. அது இலங்கையின் தலைநகர் கொழும்பாக இருக்கட்டும். அங்கும் இதே நிலைதான்.
இலங்கை முஸ்லிம்களின் தேவைகளை, குறைகளை நிறைகளை பட்டியலிட்டு எதிர்கால நோக்குடன் செயற்படும் எந்த நிருவனங்களாவது நம்மிடத்தில் இருக்கின்றனவா?
எத்தனை முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள்?
வனத்தொகைப் பெருக்கம் ஒரு வருடத்தில் என்ன சதவீதம்?
அவர்களின் கல்வி நிலை என்ன?
கல்விக்கூடங்கள் எத்தனை இயங்குகின்றன?
பள்ளிவாயல்கள் எத்தனை இருக்கின்றது?
கட்டப்பட்ட அனைத்துப் பள்ளிவாயல்களும் இயங்குகின்றனவா?
மார்க்கம் போதிக்கும் எத்தனை மத்ரஸாக்கள் இயங்குகின்றன?
அவை அனைத்தும் உண்மையில் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா?
நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கல்விக் கோட்பாடுகள் அங்கு கற்பிக்கப்படுகின்றனவா?
பாடசாலை வயதிலுள்ள அனைத்து முஸ்லிம் பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்கின்றார்களா?
அல்லது சிறுவர் துஷ்பிரயோத்தில் சிக்குண்டிருக்கிறார்களா?
அந்நிய பாடசாலைக்குச் செல்லும் எமது மாணவிகளின் நிலைமை எவ்வாறானாது?
அது ரோக்கியமானதா?
கற்பிக்கப்படும் பாடசாலை பாடத்திட்டங்கள் எமது பிள்ளைகளுக்குத் தேவையானது தானா?
நமது பிள்ளைகள் படிக்கும் பாடத்திட்டங்கள் இஸ்லாமிய மயமானதா? என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவது மிக இன்றியாமையாத ஒன்றாகும்.
இதனை எழுதும் போதே எனக்கு ஒரு சந்தேகம், இலங்கை முஸ்லிம்களின் சமய பண்பாடுகளை பாதுகாக்க இயங்கும் திணைக்களமே இஸ்லாத்தில் இல்லாத மீலாத் விழா போன்ற கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடாத்தும் போது, எங்கே பாடசாலை புத்தகங்களில் கொள்கைக்கு மாற்றமானவை உள்ளது என்று பார்க்க போகிறார்கள்??
இதன் ஏனைய பகுதிகளை உங்கள் சிந்தனைக்கு விட்டுச் செல்கிறேன்.
ஏன் அதிகமான முஸ்லிம் யுவதிகள் வெளிநாடுகளில் வாழ்க்கையைத் துலைத்து நடுரோட்டில் நிர்கதிக்குள்ளாகுகிறார்கள்??
வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் நிலை தொடருமா? எண்ணிக்கை அதிகரிக்கின்றனவா?
அவர்கள் குடும்பங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?
ஊருக்கு ஊர் ஸகாத், ஸதகா வசூல் விநியோகம் நடைமுறையில் இருக்கின்றனவா?
எமது சமூகத்தில் ஏழைகளின் நிலை என்ன?
விதவைகளின் நிலை என்ன?
எமது மக்கள் வாழும் கிராமங்களில் அத்தியவசிய தேவைகளான வைத்தியசாலை, பாடசாலை, மின்வசதி, நீர் வசதிகள் கிடைக்கப்பெருகின்றனவா?
என்று பல கேள்விகள் இந்த தலைப்பினூடாக எழுகின்றன.
இவைகள் பதிலளிக்க முடியாத பிரச்சினைகளாக மாறி நிற்பதற்கு கீழ்வருவன காரணங்களாக அமையலாம்
சமூக சேவை நிருவனங்கள் பல குழுக்களாக பிரிந்து குருகிய வட்டத்திற்குள் நின்று பணியாற்றுகின்றமை.
மார்க்கத்தை போதிக்கும் அமைப்புக்கள் தனித்தனியாக துண்டாடப்பட்டு தங்களுக்கென ஆதரவாலர்களை வைத்துக்கொண்டு அவர்களின் நல்லது கெட்டதை பார்க்கின்றமை.
இளைஞர், யுவதிகள் எதிர்கால இலட்சியம், சமூகம் பற்றிய அக்கறை இல்லாமல் வளர்க்கப்படுகின்றமை.
தொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள் எமது சமூகத்தில் உள்ள பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு தொழில் வாய்ப்பளிக்காமை.
கல்விமான்கள் தங்களுடைய தகுதிகளையும் திறமைகளையும் ஊதியத்திற்காக மட்டும் பயன்படுத்தும் போக்கு.
குறித்த சிலரின் அல்லது குறித்த அமைப்பின் வழிகாட்டல்களை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதும் அடுத்தவற்றையை ஆய்வுக்குள் உட்படுத்தாமை.
முஸ்லிம் தலைவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள கட்சி பேதம்.
முஸ்லிம் தலைவர்களிடம் எவ்வித தூர நோக்குப் பார்வையும் இல்லாமை.
அரசியல் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை சந்திக்கின்றமை.
அரசியல் களத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கிடையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பற்றி நீண்டகால சிந்தனைகள் எதுவும் இல்லாமை.
தேர்தல் காலங்களில் மட்டும் சமூக சேவைகள் பற்றி பேசுவது.
தேர்தலில் வெற்றியாகி ஆட்சி அமைக்கின்ற கட்சிக்குள் சீட்டெடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கிடையில் பாரிய இடைவெளி ஒன்று வருவதுடன் மோதல்களும் நிழவுகின்றமை.
அரசியல் என்று வருகின்ற போது முஸ்லிம்கள் நான்கு முக்கிய பிரிவாக பிரிந்து மோதிக்கொள்கின்றமை.
1.    ஆளும் கட்சி ஆதரவு
2.   எதிர்கட்சி ஆதாரவு
3.   முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
4.   சுயேட்சைக்குழுக்களாக நிற்பது மட்டும்……
கட்சிகளாக குழுக்களாக பிரிந்து தேர்தலில் பங்கேற்கின்ற போது முஸ்லிம்களின் வாக்குகள் முஸ்லிம்களின் கைகளினாலே சிதருண்டு போகின்றது.
உதாரணமாக, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டமான புத்தளத்தில் நிலையான பிரதிநிதிகள் தேர்வு இன்மை,
சேவை செய்கின்ற போது அல்லது உதவி கேற்கின்ற போது எந்த கட்சியை சார்ந்தவர், எந்த கட்சிக்காரருக்கு உதவுவார் என்ற பார்வையும் அளவை நிர்வையும் புலக்கத்தில் இருந்து வருவது.
முஸ்லிம்களைப் பாதிக்கக் கூடிய தேசியப் பிரச்சினைகள் பற்றி அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் இணைந்து எந்த முடிவும் எடுக்க தயக்கம் காட்டுவது.
இவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது.
அரசியல் நீர்வோடையில் நம் முஸ்லிம் அரசியல் தலைகளின் பங்களிப்புக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது எல்லாக் காலங்களிலும் மாறுபட்ட செயற்பாடுகளும் தனிக் கட்சி போக்குகளும் இருந்து வந்திருக்கின்றது.
அது நம் சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்நோக்க துணையாக அமைந்திருக்கின்றது, அமைகிறது.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைப் புரட்டுகின்ற போது பல அரசியல் கட்சிகளின் தோற்றத்தை பார்க்க முடியும்.
சேர்.ராஸிக் பரீத் தலைமையில் - All Ceylon Moors Association
எம்.ஸீ.எம். கலீல் தலைமையில் - சிலோன் முஸ்லிம் லீக்
பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் - இஸ்லாமிக் சோஷலிஸ்ட் முன்னணி
எம்.எச். முஹம்மத் தலைமையில் - மார்க்ஸிஸ்ட் எதிர் முன்னணி,
எம்.எச்.எம், அஷ்ரப் தலைமையில் - சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரவூப் ஹக்கீம் தலைமையில்  - சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பேரியல் அஷ்ரப் தலைமையில் NUA
அதாவுல்லாஹ் தலைமையில் National Muslim congress
ரிஷாத் பதியூதின் தலைமையில் All Ceylon Muslim congress
இன்னும் சில……..

இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைகள் காலத்தின் தேவை என்ன என்பதை சிந்திக்கும் சக்திகளாக மாறி தேவையை உணர்ந்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் ஒரு குடையை தெரிவு செய்ய வேண்டும்.
எங்குமே ஒரே தலைமைத்துவத்தை ஏற்க சிலருடைய கெளரவச் சிக்கல்களும் சுய இலாபங்களும் அனுமதிப்பதில்லை.

ஆனால் தேவைப்படுகின்ற போது அவைகளை தூக்கி எறிந்துவிட்டு காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.
தற்போது இலங்கை திருநாட்டில் 325 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றின் 225  பிரதேச சபைகள், 28 மாநகர சபைகள் (Municipal Council), 18 நகராட்சி (Urban Council) ளும் இருக்கின்றன.
இவைகளுக்கிடையில் பாராளுமன்றத்தில் நல்ல எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இருக்கின்றன.

ஆனால் சமூக நலன், சமூக முன்னேற்றம் என்ற ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேர இத்தனை தலைகளையும் மாற்றங்கள் தேவை அன்பாய் அழைக்கின்றது.

மத்திய சப்ரகமுவ மாகாணங்கள்
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அமைச்சர் பைஸல் முஸ்தபா
அமைச்சர் அப்துல் காதர்
பா.உ.கபீர் ஹாசிம்

மேல் வடமேல் மாகாணம்
அமைச்சர் எம்.எச்.முஹம்மது
பா.உஅஸ்வர்
முஸ்னி ஹாஜியார்

வட- வட மத்திய மாகாணம்
அமைச்சர் ரிஷாத் பதியூதின்
பா.உ.ஹுனைஸ் பாரூக்
பா.உ.பாரூக்;
சட்டத்தரணி என்.எஸ்.ஷஹீத்

திகாமடுல்ல மாவட்டம்
அமைச்சர் அதாவுல்லாஹ்
பா.உ.ஹஸானார்
பா.உ.பைஸல்காஸிம்

மட்டக்களப்பு மாவட்டம்
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா
பிரதி அமைச்சர் பஷீர்
ஹாபீஸ் நஸீர் அஹமது

திருகோணமலை மாவட்டம்
பா.உ.நஜீப்
பா.உ.தௌபீக்
மு.பா.உ. தௌபீக்
மு.பா.உ.மஹ்;ரூப்
அனைவரும் ஒன்றிணைகின்ற போது நிச்சயமாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,
காரணம்,
 
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் நகர்வுகளில் அவரின் கடைசி காலத்தைப் பார்த்தால் பூரிப்படைவீர்கள், முஸ்லிம்களின் ஒரே ஒரு தனிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை உயர்த்திய போது இலங்கையின் பொதுத் தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளாக முஸ்லிகளின் வாக்குகள் முக்கியமாகிப் போனது.
ஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளாத வாக்குகளாக சில்லரை நாணயங்களாக சிதரிக்கிடக்கின்றன.
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் ஊக்கமும் ஆக்கமும் ஒலிவில் வெளிச்சவீடு, கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றிச் சின்னங்களாகும்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, பூரண உரிமைகளும் பெற்று சுயமாக எழுந்து நிற்கின்ற சமூகமாக மாற, மாற்ற அரசியல் தலைகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்த சமூக முன்னேற்ற நடவடிக்கையின் போது அதற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க சமூக அமைப்புக்கள், தொழில் அதிபர்கள், கல்விமான்கள், இளைஞர் யுவதிகள் தயாராகுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

16 comments:

Anonymous said...

<<<<1. ஆளும் கட்சி ஆதரவு2. எதிர்கட்சி ஆதாரவு3. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு4. சுயேட்சைக்குழுக்களாக நிற்பது மட்டும்……>>>>>>

ஏன் எல்லாவற்றுக்கும் பொதுவான புலிஎதிர்ப்பு என்கின்ற ‘குழு’ வை விட்டுவிட்டீர்கள். வசதிதான் இல்லையா? புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்பதனை!

Issadeen Rilwan said...

பெயர் சொல்லத் தயங்கும் அன்பின் வாசகரே!,
அந்த நான்கு வகையானவர்களிலும் இவர்கள் அடங்குவர்.
இந்த கட்டுரையின் நோக்கம் நம் சமூகத்தாரை சிந்திக்கத் தூண்டுவதும் சமூகத்திற்காக செய்ய வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுவது தான்.

இதை ஒரு நடுநிலையான கட்டுரையாக பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தவறாது இங்கு பதியுங்கள்.

நன்றி.

Anonymous said...

<<<<<>>>
நல்ல வசதியான பதில்.
இன்னும் ஒருபடி மேலே போய் மனிதர்கள் என்கின்ற ஒருவகையில் எல்லோரையும் வகையிடுங்கள். அது மிகவும் இலகுவானது. யாரையும் பகைக்கவும் தேவையில்லை! இன்னும் ஒரு நல்ல ஐடியா சொல்கிறேன் கேளுங்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் தம்மை முதலில் ஸ்ரீலங்கா காரர் என அழைப்பதையே விரும்புவர் என கதை விட்டதை ஞாபகம் கொள்ளுங்கள். இலகுவாக இருக்கும்!

<<<<<<>>>>

அவ்வாறாயின் ஏன் அடக்கம், ஒடுக்கம் என 4வகைக்குள் ஒழிக்க வேண்டும்? சிந்திக்கவைப்பதாயின் வெளிப்படையாகச் சொல்லலாம் அல்லவா? அவ்வாறு சொல்லாமல் தவறு விடும் பட்சத்தில் அதை ஒத்துக்கொள்வதயாதல் செய்யாமல் பூசி மெழுகுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை!

<<<<<<<>>>>>>>>
அவ்வாறாயின் உண்மையை ஒத்துக்கொள்ளவேணுமல்லவா? இல்லை ஆயின் ஏன் நடுநிலை எடுக்க வேண்டும் நான்? நடுநிலை என்றால் என்ன? அதேபோல மதம் என வரும் போது நடுநிலை எடுக்க முடியுமா உங்களால்?
நடுநிலையும் பம்மாத்தும்

Anonymous said...

சகோதரர் இஸ்ஸதீன் றிழ்வான், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், சிந்திக்கத் தூண்டும் ஆக்கம், நன்றி. இந்த பெயர் சொல்ல தகுதியற்ற நண்பரின் எxஉத்திலிருந்து நான் புரிந்துகொண்டது - நீங்கள் எல்லோறும் இலங்கையர் தான் என்றால், எல்லோறும் ஒரே உலக மக்கள் தானே என்று விதண்டா வாதம் பேசுவார். அதானல் இவருக்கு ஏற்றாட் போல் பதில் கொடுங்கள். வஸ்ஸலாம். அமீர் ரஜா கடார்.

Anonymous said...

அர‌சிய‌லில் இதுவ‌ரை ஆர்வ‌ம் இருந்த‌தில்லை, ஏனெனில் அதுவ‌ரை அர‌சிய‌லை நான் பார்த்த‌ க‌ண்ணோட்ட‌ம் வேறு. இப்போது புரிகிற‌து எந்த‌க்க‌ண்ணோட்ட‌த்தில் நோக்க‌ வேண்டும் என்ப‌து..
அருமையான‌ ஆக்க‌ம்.
ந‌ன்றி..

Anonymous said...

<<<<<>>>

கட்டாரைச் சேர்ந்த அமீர் ராஜா அவர்களே,
ஏன் உங்களிடம் பதில் இல்லையா? பதிவாளர் இசாதீன் உங்கள் கருத்துகளைக் கேட்கிறார். உங்களிடம் இல்லை என்று புரிகிறது. நேற்று கிழக்கில் நடந்த ஒரு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் ஸ்ரீலங்காவில் முஸ்லிம்கள் சம உரிமையுடன் வாழ்கின்றனர் என கதைவிட உதவியாக நீதி அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் ராவும் ஹக்கீம் கலந்து கொண்டு பேசியபோது நடந்த அமர்க்களம் பார்த்தீர்களா? நீதி அமைச்சரான அவரின் கூட்டத்தில் அவரின் அமைச்சின்கீழ் வரும் பொலிஸ்துறை செய்த அட்ட்டகாசம் காணக்கண்கோடி வேண்டும்!
முன்னர் என்றால் புலியுடன் சேர்ந்து விடுவோம் என ’பூச்சாண்டி’ காட்டி புலியையும் திட்டி வாழ்க்கை நடத்தலாம். இப்போது எல்லாம் போச்சு இல்லையா? இது முடிவல்ல ஆரம்பமே!!!!!

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

அமீர் ராஜாவின் ஆலோசனைக்கு நன்றி.

பெயர் குறிப்பிடா எம் சகோதரருக்கு //முஸ்லிம் தலைவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள கட்சி பேதம்.// இந்த விடயம் கூட என்னுடைய கட்டுரையில் சொல்லப்பட்டது தான். இதனால் தான் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சமூக நலன், சமூக முன்னேற்றம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேர மாற்றங்கள் தேவை அன்பாய் அழைக்கின்றது.

நன்றி

Anonymous said...

ஆம் இவ்வளவு நாளும் நடுநிலை என பம்மாத்து விட்டார்கள். ஆனால் இவர்களின் அகராதியில் நடுநிலை என்பது புலியை வைத்து குளிர்காய்தல் எனப்பொருள்படும் என்பது எமக்கு முன்னரே தெரிந்ததுதான். நீங்களும் உங்களுக்கு வசதியாக கட்டுரையை நடுநிலையாக பார்க்கும் படி கூறி இருந்தீர்கள். இப்போ என்னடாவென்றால் எல்லா அரசையல் வாதிகளையும் வசதியாக அன்பாய் அழைக்கிறீர்கள். முஸ்லிம்கலை ஒன்று சேர அழைப்பது ‘நடுநிலையா?
எல்லாம் புலிசெத்ததால் வந்த வினை. இது முடிவல்ல ஆரம்பமே!

அன்ஸார் said...

பெயர் குறிப்பிட விரும்பாத கோழைக்கு!
அன்புச் சகோ. இஸ்ஸுத்தீன்,

இன்று இணையங்களில் “கருத்துக்கள்“ என்ற போர்வையில் முகவரியற்ற சில கோழைகள் உலா வந்த வண்ணமுள்ளனர். அந்த வரிசையில்தான் தங்களின் வீரமிக்க துணிந்து சொல்லுகின்ற கட்டுரைக்கு திராணியற்ற ஒருவன் பெயர் குறிப்பிடாமல் தனது கருத்துக்களை வெளியிடுகிறான் எனின் அவன் எவ்வளவு பெறிய கோழை-பயந்தான்கொள்ளி என்று உணராமல், தாங்கள் அக்கோழைக்கு பதிலளிப்பது அவ்வளவு நாகரீகமாகத் தெரியவில்லை. ஏனெனில் தான் யார்? தான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவன்? அல்லது தான் எந்த சமயத்தைத் தழுவியவன் என்ற குறைந்த பட்ச அறிமுகத்தை தர மறுக்கும் நாகரீகம் தெரியா ஒரு அநாகரீகவாதிக்கு பதில் என்ற போர்வையில் அவனுக்கு பதிளலிப்பதென்பது, நமக்கென இருக்கும் தனிச் சிறப்பை அவன் தரத்திற்கு கொண்டு செல்வது போலாகி விடுகிறது.

தான் இன்னார்தான் என்று தனது விபரங்கள் தெரியப் படுமாயின் தனக்கு குட்டு விழும் என்ற ”கிறுமினல்“ கண்ணோட்டத்தோடு குறுட்டுத் தனமான தந்திரத்தோடு நேருக்கு நேர் தைரியமாக நின்று எதையும் எதிர்கொள்ளத் திராணியில்லாத இது போன்ற கோழைகளுக்கு பதிலளிப்பதே பெரும் தவறு எண்பது எனது தாழ்மையான கருத்து.

எனவே இன்னும் இக்கோழை இது போன்ற கருத்துக்களை??? (தன் பெயர் கூட குறிப்பிடாமல்) தொடர்வாரானால் அதற்கு பதிலாக, ”தங்களின் தரமற்ற கோழைத் தனமான கருத்து செல்லுபடியற்றது“ என்ற பதிலை அளிப்பதுதான் நல்லது. அதன் பின்தான் அவருக்கு பதில் அழிக்க முடியும்.
நன்றி
அன்ஸார்

Anonymous said...

<<<<(தன் பெயர் கூட குறிப்பிடாமல்) தொடர்வாரானால் அதற்கு பதிலாக, ”தங்களின் தரமற்ற கோழைத் தனமான கருத்து செல்லுபடியற்றது“ என்ற பதிலை அளிப்பதுதான் நல்லது. அதன் பின்தான் அவருக்கு பதில் அழிக்க முடியும்.
நன்றி
>>>>>

அன்புள்ள அன்சார்,
சும்மா சொல்லக்கூடாது பொன்கிப் பிரவாகித்து தள்ளிவிட்டீர்கள்!!!!
கேட்ட கேள்விக்கௌப்பதில் அளிக்காமல் கேள்வி கேட்டவன் என்னமாதிரியான ஆள் என கேள்வியையே திசை திருப்பி எனக்கு கோழை பட்டம் வேறு கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
பரவாயில்லை பதில் உங்களிடம் இல்லை எனத்தெரிகிறது. அதென்ன குட்டு விழும் கதை. பதில் இல்லை எனவே ஆளைன் தனிப்பட்ட அடையாளத்தை வைத்து குட்டித்தள்ளலாம் பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்கலாம் என்கின்ற ‘புத்திசாலித்தனம்’ இல்லையா?
இன்னும் பரவாயில்லை. எனக்கும் உங்களைப்போல் றிஸ்வாண், இஸ்தார், முகமட், சங்கர், சத்தியமூர்த்தி, போல்,பீற்றர், சமந்தா, மஹிந்தா, ரோஹன என பஎரிட்டௌ ப்பதிவிட முடியும். இணையத்தில் இப்பெயர்களுக்கும் உங்கள் பெயர் ‘அன்ஸார்’ க்கும் என்ன வேறுபாடு? நீங்கள் அன்ஸார் என உங்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரமா இங்கு இணைத்திருக்கிறீர்கள்? மேலும் கருத்துக்களத்தில் ‘Comment as: ' Select profile..." எனும் பட்டியலில் வலைப்பதிவாளர் Anonymous என்கின்ற வகையையும் அனுமதித்திருக்கிறார். ஆகவே என்னை அனானியாக வந்த கோழை என எவ்வாறு பட்டம் சூட்டுவீர்கள்.
இன்னும் இன்னும் பரவாயில்லை. நான் மேலே குறிப்பிட்ட பெயர்களில் ஒன்றைத்தெரிவு செய்து (உங்கள் விருப்பம்) அப்பெயரில் நான் எழுதியதாகக் கொண்டு பதிலளித்து குருட்டுத்தனமான தந்திரக்காரனான எனக்கு குட்டுங்கள் பார்ப்போமே!!!!
கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலையில் தொப்பியா, கழுத்தில் சிலுவையா, நெற்றியில் விபூதியா எனப்பார்த்தபின்னரே பதில் இலாவிட்டால் அவன் கொழை எனப்பட்டம் கொடுப்பது குறுக்குத்தனமாம தந்திர தைரியமற்ற தன்மையா? ஆஹா ...அற்புதம்...அபாரம்!
இப்படிக்கு
அன்புள்ள
(ஸ்ரீலங்காவில் இருக்கும் எந்தப்பெயரை வேண்டுமென்றாலும் தெரிவு செய்ய்யுங்கள்) ஆனால் பதிலளிப்பீர்கள் என நினைக்கிறேன்!

அன்ஸார் said...

சபாஷ்!!
அன்புச் சகோதரர்???
“ஆடற மாட்டை ஆடி கறக்கணும். பாடற மாட்டை பாடி கறக்கணும்“ என்ற பழமொழிதான், தங்களைப் நினைக்கும் போது ஞாபகத்தில் வருகிறது.
நீங்கள் ஒருவரிடம் உன் பெயர் என்ன? என்று கேட்டால் “றிஸ்வாண், இஸ்தார், முகமட், சங்கர், சத்தியமூர்த்தி, பீற்றர், சமந்தா, மஹிந்தா, ரோஹன “ என்று கூறி விட்டு இதில் எதையாவது ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்றால் அவனைப் பார்த்து என்ன சொல்வீர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு விடுகிறேன்.

//நீங்கள் அன்ஸார் என உங்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரமா இங்கு இணைத்திருக்கிறீர்கள்? மேலும் கருத்துக்களத்தில் ‘Comment as: ' Select profile..." எனும் பட்டியலில் வலைப்பதிவாளர் Anonymous என்கின்ற வகையையும் அனுமதித்திருக்கிறார். ஆகவே என்னை அனானியாக வந்த கோழை என எவ்வாறு பட்டம் சூட்டுவீர்கள்//

பிறப்பத்தாட்சிக்குப் பதிலாகத்தான் அதிலுள்ள பெயரை தந்துள்ளேன். பொய்ப் பெயர்களையோ அல்து புனைப் பெயர்களையோ தரவில்லை. Anonymous என்கின்ற வகையை தந்திருந்தாலும் கமான்டின் இருதியில் எழுதியவன் யார் என்பதை குறிப்பிடுவதர்க்கு தாங்கள் ஒன்றும் இது பற்றி அறியாதவர் அல்லவே! (தங்களை பெயர் குறிப்பிடாதவர் என விமர்சிக்கப் படும் தருணத்தில் தாங்கள் பெயரை குறிப்படுவதுதான் புத்திசாலித் தனம்.மறைந்து கொண்டு ஒழிந்து கெண்டு எழுதுவது...?)

சரி அதை விடுங்கள். இங்கு கீழே நான் தந்துள்ள தங்களின் கருத்துக்களை தயவு செய்து முடிந்தால் விளக்கமாக கூறுங்கள்.

//ஏன் எல்லாவற்றுக்கும் பொதுவான புலிஎதிர்ப்பு என்கின்ற ‘குழு’ வை விட்டுவிட்டீர்கள். வசதிதான் இல்லையா? புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள்//

புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள் என்று யாரை குறிப்பிட வருகிறீர்கள்?

//ஆம் இவ்வளவு நாளும் நடுநிலை என பம்மாத்து விட்டார்கள். ஆனால் இவர்களின் அகராதியில் நடுநிலை என்பது புலியை வைத்து குளிர்காய்தல் எனப்பொருள்படும் என்பது எமக்கு முன்னரே தெரிந்ததுதான். நீங்களும் உங்களுக்கு வசதியாக கட்டுரையை நடுநிலையாக பார்க்கும் படி கூறி இருந்தீர்கள். இப்போ என்னடாவென்றால் எல்லா அரசையல் வாதிகளையும் வசதியாக அன்பாய் அழைக்கிறீர்கள். முஸ்லிம்கலை ஒன்று சேர அழைப்பது ‘நடுநிலையா? எல்லாம் புலிசெத்ததால் வந்த வினை. இது முடிவல்ல ஆரம்பமே//

நடுநிலை என்பதை தாங்கள் எவ்வாறு புறிந்துள்ளீர்கள்? மற்றும் நடுநிலை என்பதர்க்கு யாருடைய அகராதியில் புலியை வைத்து குளிர்காய்தல் என குறிப்பிட வருகிறீர்கள்?

மேலும் தங்களின் கருத்துக்களின் இருதியில் //இது முடிவல்ல ஆரம்பமே//“ என்பது, எது முடிவல்ல? எது ஆரம்பம்? என்பதையும் விளக்கவும். அதன் பின் தங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
நன்றி
அன்ஸார்

அன்ஸார் said...

சபாஷ்!!
அன்புச் சகோதரர்???
“ஆடற மாட்டை ஆடி கறக்கணும். பாடற மாட்டை பாடி கறக்கணும்“ என்ற பழமொழிதான், தங்களைப் நினைக்கும் போது ஞாபகத்தில் வருகிறது.
நீங்கள் ஒருவரிடம் உன் பெயர் என்ன? என்று கேட்டால் “றிஸ்வாண், இஸ்தார், முகமட், சங்கர், சத்தியமூர்த்தி, பீற்றர், சமந்தா, மஹிந்தா, ரோஹன “ என்று கூறி விட்டு இதில் எதையாவது ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்றால் அவனைப் பார்த்து என்ன சொல்வீர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு விடுகிறேன்.

//நீங்கள் அன்ஸார் என உங்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரமா இங்கு இணைத்திருக்கிறீர்கள்? மேலும் கருத்துக்களத்தில் ‘Comment as: ' Select profile..." எனும் பட்டியலில் வலைப்பதிவாளர் Anonymous என்கின்ற வகையையும் அனுமதித்திருக்கிறார். ஆகவே என்னை அனானியாக வந்த கோழை என எவ்வாறு பட்டம் சூட்டுவீர்கள்//

பிறப்பத்தாட்சிக்குப் பதிலாகத்தான் அதிலுள்ள பெயரை தந்துள்ளேன். பொய்ப் பெயர்களையோ அல்து புனைப் பெயர்களையோ தரவில்லை. Anonymous என்கின்ற வகையை தந்திருந்தாலும் கமான்டின் இருதியில் எழுதியவன் யார் என்பதை குறிப்பிடுவதர்க்கு தாங்கள் ஒன்றும் இது பற்றி அறியாதவர் அல்லவே! (தங்களை பெயர் குறிப்பிடாதவர் என விமர்சிக்கப் படும் தருணத்தில் தாங்கள் பெயரை குறிப்படுவதுதான் புத்திசாலித் தனம்.மறைந்து கொண்டு ஒழிந்து கெண்டு எழுதுவது...?)

சரி அதை விடுங்கள். இங்கு கீழே நான் தந்துள்ள தங்களின் கருத்துக்களை தயவு செய்து முடிந்தால் விளக்கமாக கூறுங்கள்.

//ஏன் எல்லாவற்றுக்கும் பொதுவான புலிஎதிர்ப்பு என்கின்ற ‘குழு’ வை விட்டுவிட்டீர்கள். வசதிதான் இல்லையா? புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள்//

புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள் என்று யாரை குறிப்பிட வருகிறீர்கள்?

//ஆம் இவ்வளவு நாளும் நடுநிலை என பம்மாத்து விட்டார்கள். ஆனால் இவர்களின் அகராதியில் நடுநிலை என்பது புலியை வைத்து குளிர்காய்தல் எனப்பொருள்படும் என்பது எமக்கு முன்னரே தெரிந்ததுதான். நீங்களும் உங்களுக்கு வசதியாக கட்டுரையை நடுநிலையாக பார்க்கும் படி கூறி இருந்தீர்கள். இப்போ என்னடாவென்றால் எல்லா அரசையல் வாதிகளையும் வசதியாக அன்பாய் அழைக்கிறீர்கள். முஸ்லிம்கலை ஒன்று சேர அழைப்பது ‘நடுநிலையா? எல்லாம் புலிசெத்ததால் வந்த வினை. இது முடிவல்ல ஆரம்பமே//

நடுநிலை என்பதை தாங்கள் எவ்வாறு புறிந்துள்ளீர்கள்? மற்றும் நடுநிலை என்பதர்க்கு யாருடைய அகராதியில் புலியை வைத்து குளிர்காய்தல் என குறிப்பிட வருகிறீர்கள்?

மேலும் தங்களின் கருத்துக்களின் இருதியில் //இது முடிவல்ல ஆரம்பமே//“ என்பது, எது முடிவல்ல? எது ஆரம்பம்? என்பதையும் விளக்கவும். அதன் பின் தங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
நன்றி
அன்ஸார்

Issadeen Rilwan said...

அன்பின் சகோதாரர் இந்த கேள்விகளுக்கு தவராமல் நல்ல பதில்களை தருவார் என எதிர்பார்க்கின்றோம்.

Anonymous said...

<<<>>>

உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியவில்லை என நினைக்கிறேன். இங்கே பெயர் முக்கியமில்லை கேள்விக்குப் பதிலே முக்கியம். யார் கேள்விகேட்கிறார் என்பதல்ல முக்கியம் பதிலே முக்கியம். தயவு செய்து ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள் எனக்குக்கவலை இல்லை எனக்கு க்ருட்டுத்தனம் கொண்ட கோழைத்தனம் பிடித்தவன் எனப்பட்டம் சூட்டியிருக்கிறீர்கள் இதைவிடவா மேலே சொன்ன பெயர்கள் கீழ்த்தரமானவை? இத்தனைக்கும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் எனக்கு பட்டம் சூட்டியிருக்கிறீர்கள்.
பரவாயில்லை ஒரு பெயரைத்தெரிந்தெடுத்து பதில் தாருங்கள்.

<<<>>
எனக்கு பெயர் முக்கியமில்லை கேள்விகளுக்கு நியாயமான பதில் தருவேன். ஆனால் நீங்கள் ஓடி ஒழிக்கிறீர்கள்!!!

<<>>>

ஆனால் எனெக்கு எப்படித்தெரியும் அது உண்மை என? எனெவே எனக்கு அனானியும் இணையத்தில் இடும் பெயரும் ஒன்றுதான். இல்லையா? நான் எனது பெயர் முஹமட் எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? சரி அவ்வாறே ஏற்றுக்கொண்டு பதில் தாருங்கள் பார்ப்போம்!
<<<>>

அனானி என்பது அனானி! அடைப்புக்குள் பெயர் தருவது என அர்த்தமல்ல. பதிவாளர் அனானியாக ஒருவர் கருத்துச் சொல்ல அனுமதிக்கும் பட்சத்தில் அவர் அன்னானியாக வந்து கேள்விகேட்பவருக்கு பதிலளிக்கும் தார்மீக கச்டமையை ஏற்கிறார் இல்லையா? இல்லை என்றால் அனானியாக கருத்தெழுதும் வகையை நீக்கிவிடவேண்டியதுதானே? அது மிக இலகு!

<<<<< (தங்களை பெயர் குறிப்பிடாதவர் என விமர்சிக்கப் படும் தருணத்தில் தாங்கள் பெயரை குறிப்படுவதுதான் புத்திசாலித் தனம்.மறைந்து கொண்டு ஒழிந்து கெண்டு எழுதுவது...?)>>>

என்ன சொல்ல வருகிறீர்கள்? புத்திசாலித்தனமா?
கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பெயரைச் சொல்லு இல்லையேல் உனக்கு பட்டம் சூட்டுவேன் எனச் சொல்வது எவ்வகை?
பட்டம் சூட்டினாலும் சூட்டினீர்கள் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் பதிலைத்தாருங்கள்!

<<<<>>>

கட்டுரையின் சாராம்சம் என்ன என கிரகித்திருந்தால் தெரியும் பதில்!

<<<<>>>>>
எனது பதில் நடுநிலை என்பது பம்மாத்து எனச் சொல்லி இருக்கிறேன். ஆனால் நீங்களோ அவசரப்பட்டு அதனை வாசிக்காமல் எனக்கு பட்டம் தருவதில் கவனம் கொண்டீர்கள்.
ஸ்ரீலங்கா இனப்பிரச்சினையில் நடுநிலை என்பதற்கு புலிக்காய்ச்ச்லில் அரசுடன் நிற்றல் ஆனால் அவர்களைவைத்து குளிர்காய்த்தல் எனப்பொருள் படும்.

<<<< என்பது, எது முடிவல்ல? எது ஆரம்பம்? என்பதையும் விளக்கவும். அதன் பின் தங்களுக்கு பதில் அளிக்கிறேன்.>>>
கட்டுரையாளர் ஏன் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அவரின் ஆதங்கம் போல் இன்னும் பலர் அங்கலாய்க்க இருக்கிறார்கள். அதனைச் சொல்லி இருக்கிறேன்.

அன்ஸார் said...

அன்புச் சகோ....???
//உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியவில்லை என நினைக்கிறேன்//

புரிகிறது. எல்லாம் காரண காரியத்திற்காகத்தான் கேட்கிறேன்.
மேலும் நான் தங்களுக்கு பதில் தர முடியாது அல்லது தரமாட்டேன் என்று கூறவில்லை. ஆனால் இது வரைக்கும் தனது சொந்தப் பெயரைக் கூறுகின்ற அளவுக்கு தாங்கள் இங்கு யாருக்கு பயப்படுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

//நான் எனது பெயர் முஹமட் எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?//

சிலர் பொய்யையே தனது வழக்கமாக்கிக் கொண்டிருப்பதனால் அவர்களை திருத்தவே முடியாது. இன்று சமூகத்தில் இவ்வாறானவர்கள் தங்களை அறிமுகப் படுத்தும் விதமாக நீங்களும் மாறியிருப்பது (அதுவும் முஹமட் என்ற பெயருடன்) ஆச்சரியமாகவுள்ளது. தயவு செய்து அப்பெயருக்கு தாங்கள் சொந்தக்காரர் இல்லையெனின் மாற்றிக் கொள்ளுங்கள்.

//கட்டுரையின் சாராம்சம் என்ன என கிரகித்திருந்தால் தெரியும் பதில்!//

சகோ.?? ரே_! நான் நினைக்கிறேன் தங்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பம்தான் தங்களை இவ்வாறு எழுத வைத்துள்ளது. ஏனெனில் இக்கட்டுரையில் இலங்கை முஸ்லீம்களின் எழுச்சி குறித்து சிந்திக்கும் சமகால அமைப்புகளினால் அல்லது நிறுவனங்களினாலோ அல்லது தனி நபர்களினாலோ யாராக இருப்பினும் அரசின் அங்கீகாரமின்றி எதையும் செய்ய முடியாத தருணத்தில், தற்பொழுது பதவியேற்றிருக்கும் அமைச்சர்கள், முஸ்லீம்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டியும், சதிகாரக் கும்பல் புலிகள் மூலமாக இழந்த அத்தனை இழப்புக்கள் மீட்கப் படவேண்டுமெனவும் சுறுக்கமாக சுட்டிக் காட்டியும், அரசியல் என்று வரும் போது முஸ்லீம்கள் பல கூறுகளாகப் பிரிவதனால் வருகின்ற வந்த இழப்புக்களையும் இங்கு விளக்கியுள்ளார்.

ஆனால் தாங்கள் //ஏன் எல்லாவற்றுக்கும் பொதுவான புலிஎதிர்ப்பு என்கின்ற ‘குழு’ வை விட்டுவிட்டீர்கள். வசதிதான் இல்லையா? புலிஎதிர்ப்பில் கூதல் காய்ந்தவர்கள் நிர்வாணமாக நிற்கிறார்கள்//

என்று இங்கு சதிகாரக் கும்பல் புலிகளை மையய்யப் படுத்தி அவர்களை வைத்து அரசாங்கத்தோடு கூதல் காய்ந்தவர்கள் என யாரை குறிப்பிட வருகிறீர் என்றுபுரிகிறது. ஒரு அரசாங்கத்துக்கே (ஏன் தனது சொந்த மக்களுக்கும் இதர மக்களுக்கும்)எதிராக செயல் படும் ஈவிரக்கமற்ற கொலைகாரக் கும்பலோடு தோலோடு தோல்கொடுத்து நின்றால் அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் நமக்கும் என்பதனால் குளிர் காயாமல் சரியான தண்டனை கொடுக்கப் படவேண்டும் என்பதர்க்காக மௌனியானோம். இதையும் தாண்டி இன்னும் அவர்கள் பெற வேண்டியதை காலம் கொடுத்தே தீரும். //இது முடிவல்ல ஆரம்பமே// என்பதை ஒருக்காலும் மறக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

//ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் தம்மை முதலில் ஸ்ரீலங்கா காரர் என அழைப்பதையே விரும்புவர் என கதை விட்டதை ஞாபகம் கொள்ளுங்கள். இலகுவாக இருக்கும்!//

பெயர் தாங்கி முஹம்மட்!! இதை சொல்வதர்க்கு தாங்கள் லாயிக்கே (தகுதியே)இல்லாதவர். ஒரு சொந்த நாட்டுப் பிரஜை தன்னை வேறு நாட்டுப் பிரஜையென அழைப்பதை தங்களின் அறிவு எங்கனம் ஏற்றுக் கொள்கிறது எனப்புரியவில்லை.

//அதேபோல மதம் என வரும் போது நடுநிலை எடுக்க முடியுமா உங்களால்? //
இங்கும் இது பற்றிப் பேசுவதர்க்கு தங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவரவர் மதத்தை அவரவர் பின் பற்ற அவரவருக்கு உரிமைகளும் சலுகைகளும் உண்டு. நடுநிலையை மதம் கொண்டு நிலைநாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மதங்கள் அவரவர் உரிமைகளையும் விருப்பங்களையும் பேணுவதர்க்கு தடையாக இருப்பதில்லை. இந்த இடத்தில் நடுநிலை என்ற கண்ணோட்டத்தோடு தங்களை வேண்டிக் கொள்ளப் பட்டது தாங்கள் ஒரு நீதியாக நேர்மையான சிந்தனையோடு பக்கச் சார்பின்றி சிந்திக்கின்ற ஒரு நல்லவர் என்ற கண்ணோட்டத்தில்தானே தவிர_“ இது போன்ற தங்களின் செல்லாக் காசு கருத்துக்களைப் போன்றவைகளுக்கல்ல. சகோ.அமீர் ராஜா கூறியது போன்று நீங்கள் எல்லோரும் இலங்கையர் தான் என்றால், எல்லோரும் ஒரே உலக மக்கள் தானே என்று விதண்டா வாதம் பேசுவார்_“ என்பது எவ்வளவு நிஜமான வார்த்தை என்பது தங்களின் கருத்துக்கள் என்ற போர்வையில் உளரித் தள்ளயிருப்பதிலிருந்து நன்றாகப் புரிகிறது. விதண்டா வாதமெனின் தங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பது பொருள். அல்லது இதுதான் தங்களின் தொழில் எனின் இதற்கடுத்து வரும் கமான்ட்டை வாசிக்கவும்.

நன்றி
அன்ஸார்

அன்ஸார் said...

நண்பர் சௌந்தர் தனது ப்ளக்கில் அனானியாக வருபவர்களுக் எழுதிய கட்டுரையை தேவையின் பொருட்டு இங்கு இடுகிறேன்.

என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் !

நவீன உலகத்தை நோக்கி நகரும் மனிதர் கூட்டத்தில் நாங்களுமிருக்கிறோம் என்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்காள்.....சற்றே நில்லுங்கள்.....!

கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றரியா பிறப்பில் தவறு இருக்கும் கூட்டங்கள் அனானியாய் வந்து பதிவுகளின் கருத்துகளில் அத்துமீறுகிறதே இவர்களையும் சேர்த்துதான் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரியுமா? மூடனே....கோழையே..முட்டாளே..இன்னும் என் தாய்த்தமிழ் தாண்டியும் அத்தனை மொழிதோறும் நீசனை வசைபாட இருக்கும் வார்த்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்த முதுகெலும்பில்லாத கோழைகளின் முகத்திலே காறி உமிழ்ந்து பறைகிறோம்.....!

வலைப்பூவினில் எமது பெயரிட்டு எமது மூதாதையரின் பெயரிட்டு, எமது முகம் காட்டி கருத்தினை தெள்ளத்தெளிவாய் எடுத்தியம்பும் பிறவிகள் நாங்கள்..! ஈனமானவனே யாராடா உனக்கு தைரியம் கொடுத்தது தோழர்களின் வலைப்பூக்களிலே வந்து குடும்ப உறவுகளை சொல்லி தவறான வார்தை பிரயோகம் செய்ய? உமது பிறப்பின் புனிதம் எங்கணம் போற்றுகிறாயோ அங்கணம்தான் மற்ற உயிரும் என்றறியா மடையனே......மூர்க்கணே....

பெயரிடாமல் வந்து அவச்சொல் சொல்லிவிட்டு நீ எங்கணம் நிம்மதியாய் உறங்குகிறாய் என்று நானும் பார்க்கிறேன்.....! இன்னும் இருக்கிறது இந்த பிரபஞ்சமும் அதைச் சுற்றிய அதிர்வலைகளும்...எமது உக்கிரத்தின் வேர்கள் நீண்டு உமது கழுத்தினை நெரிக்கும்.....! கடவுளைப் பற்றி பேசவும் வாழ்க்கையைப் பற்றி பேசவுமுனக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதை விட ஒரு படி அதிகமாக முகம் காட்டி உலகத்தை திமிராய் நோக்கும் எமக்கு உண்டு....அறிவாயா? ஏதோ வலைப்பூவில் எழுதிகிறோம் என்று கோழைகள் என்று எண்ணிவிடாதே... அனானி உன் முகவரி கொடு....உன் வீட்டு வாசலில் வந்து நேருக்கு நேராய் சந்திக்கிறோம்...

ஏதோ ஒன்று உனக்கு நடக்கும் உன் வாழ்வில் தவறாக....அப்போது நினைத்துக்கொள்...எமது எண்ணத்தின் விளைவு அது என்று.....!

நன்றி
அன்ஸார்