என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 18


தொடர்   - 18

வாழ்க்கை அதுவும் ஒரு வித நீண்ட கால விளையாட்டுத் தான், சிந்தித்து, சந்தித்து பயணிக்கும் போது அதன் ரசனை தனியானது.

‘புரிந்து கொண்டு எடுத்து வைக்கின்ற எட்டுக்களும் தெரியாமல் வைக்கின்ற எட்டுகளும் வித்தியாசமானது என்பது தெரிந்தது அந்த பகல் மட்டுமே.

பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது நான் வந்த வேகமும் என் முகம் காண்பித்த கோபமும் அதனை கற்றுத்தர வைத்தது.

பாடசாலையில் இருக்கும் போது கடைசி பாடத்திற்கு ஆசிரியர் வரவில்லை, நண்பர்களுடன் கதைத்துக்கொண்டே அந்த 40 நிமிடங்களும் என்னை அறியாமல் கடந்துபோனது, அப்போதுதான் என்னை அறியாமல் ஆத்திரமும் விரக்தியும் தலைக்கேரியது.

ஏன்? எல்லோறும் இப்படியே இருக்கிறார்கள்? நான் மட்டும்தான் மோசமானவனா? அல்லது இவர்கள் தான் தவறான வழியில் போகின்றாகளா? என்று எனக்குள் கேல்விகேட்டுக்கொண்டே நடந்து வீட்டு வாசல் படியிலேயே புத்தக பையை தூக்கிப் போட்டேன் என்னை அறியாமல்…………!

தந்தை காரணம் கேட்கும் முன்னரே சில அறிவுரைகளை அவரிடம் கேற்க வேண்டும் என்றென்னி பகல் உணவுக்கு முன் அவரை சந்தித்து என் நண்பர்கள் நிலையைச் சொல்லலானேன்.

மகனே! எதுவாக இருந்தாலும் அமைதியாகப் பேசு என்று அன்பாய் தோளை தட்டிக்கொடுத்தார் தந்தை.

இல்லை! ஏன் எல்லா நண்பர்களும் இப்படியே இருக்கிறாங்க? எப்படி? பத்து பேரும் பத்து விதமாகவும, நான் மட்டும் தனியாக...
என்ன விசயம்? என்றார் தந்தை.

அதாவது, ஒரு நண்பன், கிரிகட் பந்தயத்தில் விளையாடும் கிரிகட் வீரர்களின் போட்டோக்களை கொப்பிகளுக்குள் வைத்துக்கொண்டு அது தொடபாகவே அவனது பேச்சு, சிரிப்பு, எல்லாமே இருக்கிறது.
இன்னொரு நண்பன், சினிமா ஹீரோக்கள், ஹீரோயினிகள் போட்டாக்களை புத்தக பைக்குள் வைத்துக் கொண்டு அவர்களை பற்றியே புகழ்பாடிக் கொள்கிறான்.

வேரு ஒரு நண்பன் கொம்பியூட்டர் கேம்ஸில் சூப்பர் விளையாட்டெல்லாம் இருக்கு என்று மூச்சு விடும் போதெல்லாம் பேசிக்கொள்கிறான்.

எப்படி இவர்களுடன் இருப்பது? ஏதோ பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது!?

தந்தை என்னை பார்த்துச் சிரித்துக்கொண்டு, வா பகல் உணவை சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என்று என்னை சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

எல்லோறும் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்க மாட்டார்கள், ஒவ்வொருவரும் நம் கைகளில் உள்ள விரல்கள் போன்று வித்தியாசமானவர்களே.

உன் வகுப்பில் படிக்கின்ற எல்லோறும் ஒரு நாளும் சம புள்ளிகளை வாங்கி சித்தியடைபவர்களாக இருக்க மாட்டார்கள்.
அதற்குப் பல காரணங்கள் உண்டு,

அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்கள் கிடைப்பதில்லை,
நேரத்தின் முக்கியத்துவம் தெரியாமல் போகின்றது,

எந்த வயதில் எது முக்கியமானது என்பதை அவர்களுடைய பெற்றார்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை,

சிலர் தங்களது பெற்றோர்களின் உபதேசங்களுக்கு செவிசாய்ப்பதில்லை,
கல்வி, அதன் பயன், அது இல்லாத போது நமது எதிர்காலம் குறித்து அவர்கள் தவறாக புரிந்துவைத்துள்ளமை என்று நிறைய இருக்கிறது.
ஆனால் நீ இந்த குறைபாட்டிலிருந்து முழுமை பெற்றிருக்கிறாய், தொடர்ந்தும் உனது முயற்சியை தக்கவைத்துக்கொள்!.

இப்படியான நண்பர்கள் இருக்கும் அவையில் இருக்க வேண்டி வந்தால் அமைதியாக இருந்துகொள்!,

நாம் பேசுவதை கேற்க அவர்கள் தயாரில்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடு!.

ஆனால் ஒரு நாள் வரும், அப்போது உன்னை அவர்கள் முற்படுத்துவார்கள்.

எப்போது? என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

நீ ஒரு சிறந்த சிந்தனையாளனாக அவர்கள் முன்னில் காட்சி தரும் போது.

ம் ம், அது மிகத் தூரத்தில் இல்லை என்று என்னை தைரியப்படுத்தினார் என் அன்புத் தந்தை.

இன்னும் கொஞ்சம் சோறு வைத்துக்கொள் என்று தாயின் குரல் என்னை உபசரித்தது.

தந்தையின் வார்த்தைகளும் கொத்துக் கொத்தான தாயின் புன்னைகளும், மிகுந்த குழப்பத்தில் இருந்த என்னைத் தெளிவுபெறச் செய்து, என் மனதை-மூளையின் பாரத்தைக் குறைத்து,  என்னை தைரியப்படுத்தி நிம்மதியாக்கியது


படரும்...........


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Shifa said...

உண்மை இதனை எல்லா பாடசாலைகளிலும் காணலாம் . இந்த சிறார்களின் இவ்வாறான பழக்கத்தை எவ்வாறு மாற்றலாம்.
இது யார் குறை------- பெற்றோரின் கவனம் இன்மையா? அல்லது கெட்டே நண்பெர்களின் சாவகாசமா?

Issadeen Rilwan said...

உண்மையில் இரண்டு தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் நல்ல வழிகாட்டல்களை வழங்குவதுடன் பிள்ளைகள் தான் என்ன செய்கிறேன்? அது சரியா அல்லது தவறா? என்பதை பிறித்தரியும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

himma said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
உண்மையில் என் ம‌க‌ன் ஒரு லீட‌ர் எனும் உங்க‌ள் தொட‌ர் ப‌டைப்பு சுவார‌ஷ்ய‌மான‌து."இது ந‌டைமுறைக்கு ஒத்து வ‌ராது" என்று சாக்குப் போக்கு கூற‌ முடியாத‌து.(ந‌டை முறைக்குச் சாத்திய‌மான‌து)
இந்த‌ ஆக்க‌ங்க‌ள் அனைத்தும் நூல் வ‌டிவ‌மாகி, பெற்றோர், பிள்ளைக‌ளின் கைக‌ளில் த‌வ‌ழ‌ வேண்டும் என்று ஆசைப்ப‌டுகிறேன்.

நன்றி