கிரிகெட் – உலகிற்கு கொடுத்த பயன் என்ன.......?

நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து – 06

கிரிகெட் – உலகிற்கு கொடுத்த பயன் என்ன?

அரபு தேச இளைஞர்கள் மக்கள் எழுச்சி வேண்டும், ஆட்சி
மாற்றம் வேண்டும், படித்த எங்களுக்கு நல்ல 
வேளைவாய்ப்பு வேண்டும் என்று பாதைக்கு வந்த போது 
ஆசிய இளைஞர்கள் கிரிகெட்டுக்கு பின்னால் தங்களது 
ஆண்மையையும் சிந்தனையும் அடகுவைத்துக் கொண்டு 
டீவிகளின் பக்கம் தங்கது முகங்களை திருப்பிக்
கொண்டார்கள்.

இந்திய பகிஸ்தான் வீரர்கள் விளையாட மைதானத்திற்கு 
வந்தால் அந்த ஒரு பந்தில் தான் குறித்த இரண்டு நாடுகளின் 
ஒற்றுமை வேற்றுமை அளவிடப்படுகிறது.

இலங்கையும் பகிஸ்தானும் விளையாட வந்தால் இலங்கையில் 
உள்ள சில முஸ்லிம்கள் பகிஸ்தானுக்கு பகிரங்க ஆதாரவு 
வழங்குவது இலங்கையில் சமூக உறவில் விரிசலை தோற்றுவிக்கிறது........

தான் சப்போட் பண்ணிய வீரர்கள் தோற்றுவிட்டார்கள் 
என்பதற்காக தற்கொலை.....

கிரிகெட் மெட்ச் என்றால் வேளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு 
முழு நாளும் டீவிக்கு முன்னால்.......

சூதுவை உலகிற்கு தோற்றுவித்தது கிடிகெட் தானா? என்ற 
கேள்வியும் கூடா...........

ஒரு கூட்டம் கிரிகெட்டை வைத்து பணம் சம்பாதிக்கின்றது, 
இன்னொரு கூட்டாம் கிரிகெட்டால் வாழ்க்கையை துறக்கின்றது.

கிரிகெட் உலகிற்கு அல்லது தனிமனிதனுக்கு வழங்கிய பயன்
என்ன? என்ற கேள்வியுடன் மாற்றங்கள் தேவை இந்த கருத்துப் பரிமாற்றத்தை ஆரம்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள், சிந்தனைகளை இங்கு பதியுங்கள்.
அது நமது சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கட்டும்.
     **************

நேரம் for கருத்துப் பரிமாற்றம் மாற்றங்கள் தேவை
யின் புதிதாக  வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம்  உலகம்  சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள்  
தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும்  
அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன்  
சாத்தியமான மாற்றங்களையும் உண்டு பண்ணுவதற்கான 
ஒரு விஷேட திட்டமே இது.

இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக்  
கவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள்தவிர்க்க  வேண்டியவைபின்பற்ற வேண்டியவை குறித்து  உங்கள் 
கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.

கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான 
கட்டுரையாக வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் 
பார்வைக்கு வழங்கப்படும்.

இன்ஷா அல்லாஹ்மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் 
கருத்துச் சேகரிப்பு நடைபெரும்.

சமூகத்தின் தேவை கருதி உங்கள்  ஆலோசனைகளை 
இங்கு பதியும் படி வேண்டிக் கொள்கிறோம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

வலையுகம் said...

கிரிக்கெட் உலகிற்கு கொடுத்த கேடுகள் என்ன?

அல்லது இதனால் ஏற்ப்பட்ட தீமைகள் என்ன என்று தலைப்பு
இருந்திருக்க வேண்டும்.

நன்றி சகோ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

கிரிக்கெட் எனும் மக்களுக்கு மிகவும் பிடித்த நல்லவன்...

நேற்று சேரக்கூடாத கெட்டவர்களுடன் சேர்ந்து இன்று கெட்டுப்போய் கிடக்கிறான்.

முடிவு அந்த கெட்டவனுடன் சேர நினைக்கும் நல்லவர்கள் கையில்.
அவர்கள் முடிந்தால் அவனை திருத்தட்டும். இல்லையேல், அவனிடமிருந்து சமூகத்திற்கு ஏற்படும் தீங்கை தடுக்கட்டும்...

...அவனிடமிருந்து முற்றிலும் விலகி நின்று..!

நல்ல ஆக்கம், சகோ.ரிள்த்வான். நன்றி.