போதையில் 95% இளைஞர்கள்


'சமூகத்தின் முதுகெழும்பு' என்பது நமது சமூகத்தில் நம் இளைஞர்களுக்கு சொல்லப்படும் வியாக்கியாணம்.

இளைஞர்கள் தமது பலத்தையும் சாதிக்கமுடியுமான தன்மையையும் உணர்ந்து நடந்த காலம் ப்போது..
ஆனால் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது இப்போது.

தெரிந்தோ தெரியாமலோ நம் இளைஞர் சமூகம் போதையில் சிக்கித்தவிக்கிறது.

நம் கண் பார்வைக்கு தெரியாத, நமது உடலை ஊடுறுவிச் செல்கிற ஒளி ஒலிக் கதிர்கள் போல் சில நடத்தைகள், செயற்பாடுகளில் சிக்குண்டு கால நேரங்களை கடத்தி வருகின்றோம்.

போதைகள் என்பது;
சினிமா, இசை, இணையத்தள பக்கங்கள்) பாவணை, காதல், விளையாட்டு மது, மாது அனைத்தும் போதையே.

நமது சமூகத்தில் 95 வீத இளைஞர்கள் இந்த ஏதோ ஒரு வகை போதையான நடத்தையில் சிக்குண்டு மீள முடியாது தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 தொடக்கம் 8 மணித்தியாளங்கள் வரை போதையில் மாட்டுண்டு நாட்களை கடத்தி வருவது கவலைக்கிடமாக உள்ளது.

மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இருக்ககூடிய நேரங்களை தவிர ஏனைய நேரங்களை எவ்வாறு கடத்துகின்றார்கள்?

தொழில்புரியக்கூடிய இளைஞர்களின் தொழில் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களை எவ்வாரு போக்குகின்றார்கள்?

குடும்பப் பொருப்புள்ள இளைஞர்கள் தங்களுக்குக் கிடைகக்கூடிய ஓய்வு நேரங்களை எந்த வகையில் செலவிடுகிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் விடயத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வு நேரங்களை போக்க சிலர் சினிமாவை தேர்வு செய்து கொள்கின்றனர்.

முதல் வாரம் அல்லது மாதம் டீவிக்கு முன்னால் உற்காரும் போது நல்ல, பிரயோசனமான நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்பதாக சந்தோக்ஷப்பட்டுக்கொள்கிறோம்.

நாற்கள் கடந்துசெல்லும் போது டீவிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து அசிங்கங்களையும் வலமையாக்கிக்கொள்வோம்.

கெட்டதும் தடுக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்டுவிடுகிறது.
சில வாரங்கள், மாதங்கள் கடந்துசெல்லும் போது டீவி இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற கட்டாயமும் நிர்பந்தமும் நம்மை ஆட்டிப் படைக்கும், அது ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறது.

இசை இல்லாமல் வாழ முடியாத இளைஞர்கள் தொகை 60 வீதத்தையும் கடந்துசெல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

பயணிகும் போது, பணியில் இருக்கும் போது, படிக்கும் போது, தூங்கும் போது என்று எல்லா நேரத்திலும் இசையை அனுமதிக்கொன்றோம்.
பாவிக்கின்ற மொபைல் போன் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தந்துள்ள இன்றைய அனைத்துவிதமான கருவிகள் மூலமாகவும் இசைகளை செவிமடுக்கும் வசதிகளை செய்து வைத்திருக்கின்றோம்.

இணையத்தள இணைப்பு (internet connection) இன்றியமையா ஒரு தேவையாக மாற்றப்பட்டு இலவசமாக கிடைக்கும் Facebook, Zorpia, Skype போன்ற இணையத் தள பக்கங்கள் வீண்விரயமாக்கப்படுகிறது.

இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.

சினிமாப் பாடல்களை விளம்பரம் செய்வதிலும் சினிமா நடிகர் நடிகைகளை சந்திக்குக் கொண்டுவருவதிலும் நம் இளைஞர்கள் இந்த சமூக தளங்களை பாவித்துவருவது ஒரு சமூக துரோகமான செயலாக மாற்றங்கள் தேவை கருகிறது, கண்டிக்கிறது.

காதல் என்ற போதையில் நம் இளைஞர்களில் 70 வீதமானவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இது சரியா தவறா? என்று சிந்தித்து செயற்படுவதற்கு நேரம் இல்லை. சம்பாதிப்பதில் காதலுக்காக செலவளிக்கும் தொகை எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றது.

காதல் போதை இளைஞர்களை அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை.
குடும்ப பொருப்புக்களை கவனிக்க சந்தர்ப்பம் ஒதுக்குவதில்லை.
அங்கிகரீக்கப்பட்ட திருமண ஒப்பந்ததிற்கு பின்னர் செய்ய வேண்டி அனைத்து விடயங்களையும் காதலர்கள் என்ற பெயரில் முடித்துவிட்டு ஒரு சில பிரச்சினைகள், புரிந்துனர்வின்மையால் ஜோடுகளை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு போக்காக இன்று இளைஞர், இளைஜிகளின் வரலாறு பார்க்கப்படுகிறது.
இதனால் நம் சமூக யுவதிகளில் எத்தனை பேர் கற்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்ற கேள்விகூட பிறந்திருக்கிறது.

வீட்டார் நிச்சயித்த திருமண துணையரை கைசேர்ந்த பின்னரும் பழைய காதலனை நினைத்து, சந்தித்துக்கொள்வதனால் குடும்பங்களுக்குள் தகராருகளும் பிரிவினைகளும் தலைவிரித்தாடுகின்றன.
காதல் போதை தலைக்கடித்து தலையெழுத்தை பல இளைஞர்களுக்கு மாற்றி இருக்கிறது.

கிரிக்கெட் பைத்தியம் பலருக்கு, ரெஸ்லீன் பைத்தியம் பலருக்கு…….
இவ்வாறு விளையாட்டு போட்டிகள் பல இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கிரிக்கெட் மெட்ச்கள் பார்ப்பதற்காக பல மணிநேரங்களை செலவளிக்கின்றவர்கள், அதனை பார்ப்பதனால் நமக்கு என்ன பயன்? எதிர்காலத்தில் நமக்குக் கிடைப்பது என்ன? நமது தொழிக்கு பயந்தருமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதில்லை.

கிரிக்கெட் வீரர்கள், அந்த துறையில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் விளம்பர நிருவனங்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றன.
ஆனால் இந்த போட்டிகளை நேரம் எடுத்து ரசிக்கும் நம் இளைஞர்கள் சாதித்தது. சம்பாதித்தது, சம்பாதிப்பது எதனை?
இலஞ்சமும் ஊழலும் கிரிக்கெட் மைதானங்களில் போட்டிபோட்டுக்கொள்கின்றன.

கிரிக்கெட், ரெஸ்லின் போன்ற போட்டிகள் வெளியுலகிற்கு போட்டியாக காண்பிக்கப்பட்டாலும் அதற்குள் நடக்கினற திட்டமிட்ட நாடகங்கள் நம் பலருக்குத் தெரிவதில்லை.
நம் இளைஞர்கள் வெட்கம் கெட்டவர்களா?
சிந்திக்கத் தகுதியற்றவர்களா?
சுய சிந்தனையற்றவர்களா?
நன்பர்களே சிந்தியுங்கள்!!

இப்போது தெரிந்திருக்கும் நம் இளைஞர்களில் அதிகமானவர்கள் போதையில் சிக்குண்டு எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளார்கள் என்பது.

வாருங்கள் மாற்றங்கள் செய்யலாம்.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. (அல் குர்ஆன் 30 : 41)


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்


உண்மையில் அருமையான‌ க‌ருத்துக்க‌ள் அதிலும் குறிப்பாக இது மிக‌வும் பிடித்துள்ள‌து.

//சினிமா, இசை, இணையத்தள (Facebook, Zorpia போன்ற இணையத் தள பக்கங்கள்) பாவணை, காதல், விளையாட்டு மது, மாது அனைத்தும் போதையே//


ஜ‌ஸாக்க‌ல்ல‌ஹு ஹைர‌ன்

(Himma)