கலாச்சாரத்தை சீரளிக்கும் வணிக முறைமை

கலாச்சாரத்தை சீரளிக்கும் வணிக முறைமை..............

ஒரு மனிதன் ஈருலகிலும் வெற்றிபெறுவதற்கு இஸ்லாம் போதிக்கின்ற கலாச்சார நாகரீகங்களை ஏற்று, பின்பற்றி அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அது தவிர நாளுக்கு நாள் இந்த கலியுகம் ஈன்றெடுக்கின்ற காவிக் கலாச்சாரங்களை பின்பற்றுவது அந்த சமூகத்தைச் சார்ந்தவனாக எங்களை மாற்றுகின்றது.

முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்கின்ற கிராமங்களுக்குள், நாட்டுக்குள் நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய கலாச்சாரம் அகற்றப்பட்டு புதிய போலிக் கலாச்சாரங்களும் நாகரிகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதை நாம் கடந்துசெல்கின்ற நாட்கள் 
சாட்சிப்படுத்துகின்றன.

ஒரு கலாச்சாரம் எவ்வாறு ஒரு ஊருக்குள் அல்லது நாட்டுக்குள் நுழைகின்றது என்பதை ஆய்வு செய்தால், சில நடைமுறைசார் சமூகவியல் பிரச்சினைகளுக்கான காரணிகளை இலகுவில் இனங்கண்டுகொள்ள முடியும். அத்துடன் அந்த நடைமுறை, கலாச்சாரம் தேவையற்றது என்பதை இனங்கண்டு அதனை வந்த இடத்தினூடாக வெளியேற்றவும் முடியும்.

சில தொற்றுநோய்கள் பரவுவதற்கு காற்று மற்றுமே போதும்,
சில விதைகள் முளைப்பதற்கு ஒரு மழைத்துளி போதும், அது போல் சில கலாச்சார, நவீன பழக்கவழக்கங்கள் பரவுவதற்கும் சில சிறிய வழிமுறைகளே காரணமாக இருக்கின்றன.

நாம் பயன்படுத்துகின்ற ஊடகங்கங்கள் (பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள், இணையத்தளங்கள் போன்றன), நமது பகுதிகளில் இயங்குகின்ற வணிக நிருவனங்கள், நமது பிரதேசத்திற்கு புதிதாக சமூகமளிக்கின்ற நபர்கள் மூலம் ஒரு புதிய கலாச்சாரம், நடைமுறைப்பழக்க வழக்கங்கள் நுழைகின்றன.

மேற்கூறிய வழிமுறைகளில் வணிகம் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை மாற்றுவதில் பாரிய பங்குவகின்றன.

இதன் அதீத செல்வாக்கு நகரப் புறங்களிலும் வளர்முக நாடுகளிலும் மிக மோசமாக செல்வாக்கைச் செலுத்துகின்றன.

அது எப்படி சாத்தியம்………? என்று நம்மை நமக்குள் கேள்விகேட்கச் சொல்லுகின்றது தானே?

உண்மைதான், நடைமுறையில் அதனை கண்டுகொள்ள முடியும்.
ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரங்கள் முழுமையாக துணை நிற்கின்றன.

பணக்கார நாடுகளில் எந்த பொருளையும் அழகான உரையிட்டு ஒரு கண்குளிர்ச்சியான பெண்ணின் கையில் கொடுத்தால் அதனை இலகுவில் விற்று தீர்க்க முடியும். (We can market any products if it’s with decent pack and beautiful girl promoter in a rich country)

ஒரு பொருளை விளம்பரம் செய்யும் போது பெண்களை விளம்பரப்படுத்துகின்றார்கள்.

ஒரு கல்லூரியை மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்குக் கூட ஒரு மாணவியை அல்லது அந்த பிரதேச நடிகையை பாதி உடையுடன் காட்சிப்படுத்துவது இன்றைய கலாச்சாரமாக மாறி இருக்கின்றது.

இன்றைய வணிக முறைமை எப்படி ஒரு பிரதேசத்தில் புதிய கலாச்சாரத்தை தோற்றுவிக்கின்றது என்பது பற்றி அதிகமான அரசுகள், சமூகவியல் நிருவனங்கள் ஆய்வுசெய்வதில்லை.

அதற்கான காரணமாக தங்களது சொந்த இலாபங்கள் கூட இருக்கலாம்,

புதிய ஆடைக் கலாச்சாரத்தை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருக்கின்றார்கள்?


குறித்த பிரதேசத்தில் இயங்குகின்ற வணிக நிருவனங்கள் அவைகளை சந்தைப்படுத்துகின்றன, அதற்காக ஊடகங்களில் பலவிதமான விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

தடுக்கப்பட்ட ஒரு பொருள் எப்படி குறித்த ஊருக்குள், நாட்டுக்குள் வருகின்றது?

வணிக நிருவனங்கள் இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்டு அந்த பொருளை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துகின்றன, அது அங்கு வாழும் குடிமக்களின் கைகளுக்கு  இலகுவில் சென்றடைகின்றன.

போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுத்திருக்கும் மார்க்கத்தை அமுல்படுத்துகின்ற யாப்பைக் கொண்டிருக்கின்ற பிரதேசத்திற்குள் எப்படி போதை பொருள் நுழைய முடியும்?

அதை சந்தைப்படுத்தி இலாபம் சேர்க்கும் வணிக நிருவனங்கள் இயங்குவதனால் மட்டும்தான்.

பாடசாலை மாணவர்கள் முதல் பாரிய பொருப்புக்களில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் வரை சிகரெட்டுக்கு அடிமையாகி இருப்பதற்காக காரணம் சில வணிக நிருவனங்கள் தங்களுடைய வையிற்றுப் பிழைப்பை மட்டும் நோக்காக கொண்டு இயங்குவதேயாகும்.

தலைமுடிக்கு நிறம் தீட்டுவதை தடுத்திருக்கும் மார்க்கத்தை அமுல்படுத்தும் யாப்பைக்கொண்டிருக்கின்ற பிரதேசத்திற்குள் எப்படி தலைமுடிக்கு நிறம் தீட்டும், அழங்கார நிலையங்கள் முளைத்திருக்க முடியும்?

உடலை பாதியில் திறந்துகொண்டு கடைத்தெருக்களில் யுவதிகள் நடைபோடுவதற்கு காரணம் அந்த பிரதேசங்களில் உள்ள துணிக்கடைகள் அந்த உடைகளை சந்தைப்படுத்துவதனால் தான்.

வணிக நிருவனங்கள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தி பாரிய நுகர்வோர் சந்தையை உண்டுபண்ண மீடியாக்களை பயன்படுத்துகின்றார்கள், இந்த குறித்த விளம்பரங்களை வெளியிடுவதற்கு துணை நிற்கும் மீடியாக்கள் கூட தங்களது வாருமானத்தை மட்டும் குறிக்கோளாக்கி இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.

ஒரு நாட்டில், ஒரு குறித்த பகுதியில் இயங்கும் மீடியா நிருவனங்கள் தங்களுடைய சமூக நலனை மட்டும் கருத்தில் கொண்டு, இலக்காக கொண்டு செயற்படுகின்றது என்றால் தேவையற்ற, கலாச்சாரத்தை பண்பாட்டை மாற்ற துணைநிற்கின்ற பொருற்களை சந்தைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

தடுக்கப்பட்ட, சமூக கலாச்சாரத்தை சீர்குழைக்க துணைநிற்கின்ற பொருள் இறக்குமதிக்கு சீல் வைக்க வேண்டும், மீறுவோருக்கெதிரியாக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாம் வாழுகின்ற பகுதிகளில் நமது கொள்கைக்கேற்றாற் போல் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடுகள் பேணி பாதுகாக்கப்படுவதற்கு நமது பகுதிகளில் இயங்குகின்ற வணிக நிருவனங்களுக்கும் மீடியாக்களுக்கும் குறித்த சட்டங்களை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொரு தனிமனிதர்களும் துணை நிற்க வேண்டும்.

நாட்டு நடப்பை தெரிந்துகொள்ள வீட்டில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டியைத் திறந்ததும் முழுமையாக நாம் விரும்பாத, தடுக்கப்பட்ட விளம்பரங்களும் நிகழ்ச்சி நிரல்களும் ஒளிபரப்பப்படுவதற்கான காரணம் என்ன?

வணிக நிருவனங்கள் அப்படியான நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நேயர்களுக்கு பரிசில்களை வழங்குகின்றன.

பல இலட்சம் ரூபாக்கள் கொடுத்த குறித்த நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்கு துணைபுரிகின்றார்கள்.

குறித்த விளம்பரங்களை செய்வதற்கு சினிமா, விளையாட்டுத்துறைகளில் பிரபல்யம் பெற்ற சிலரை வணிக நிருவனங்கள் பணம்கொடுத்து வாங்குகின்றன.

மனிதனுக்கு நன்மை தருவதை விட அதிக தீமைகளை ஏற்படுத்தக்கூடிய பொருளை இலகுவில் சந்தைப்படுத்தக்கூட குறித்த வணிக நிருவனங்கள் மீடியாக்களுக்கு பணங்களை காட்டி அவர்களை மோடையர்களாக்குகின்றன.

எப்போதும் நமக்கும், நாம் வாழும் சமூகத்திற்கு பயந்தரக்கூடியதை மட்டும் செய்ய முனைவோம்.

நமது முயற்சிகளையும் எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

** said...

//சில தொற்றுநோய்கள் பரவுவதற்கு காற்று மற்றுமே போதும்,
சில விதைகள் முளைப்பதற்கு ஒரு மழைத்துளி போதும், அது போல் சில கலாச்சார, நவீன பழக்கவழக்கங்கள் பரவுவதற்கும் சில சிறிய வழிமுறைகளே காரணமாக இருக்கின்றன.//100% உண்மை..
அருமையாக உள்ளது