இலங்கையில் வெகுவிரைவில் ஆட்சி
மாற்றம்………….!
பயங்கரவாத யுத்தத்தின் போது முஸ்லிம்கள்
அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததையும் ஜெனிவாவில் இலங்கை ஜனாதிபதி குற்றவாளியாக கைகட்டி
நின்றபோது முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் மறந்து செயற்படும் இந்த ஜனாதிபதியை நாம் இப்போது
தெரிந்துகொண்டோம்.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக
பதவி வகித்துக்கொண்டு பயங்கரவாத்தை தூவும் இந்த கோத்தாவையும் நாம் தெரிந்துகொண்டோம்,
இப்போது நிலைமை நாளுக்கு நாள்
மோசமடைந்து வருகின்றது, இந்த சூழ்நிலையை வெகுவிரைவில் கட்டுப்படுத்தி மீண்டுமொறு ஆரோக்கிய
நிலைமைக்கு இலங்கை நாட்டை மீட்டியெடுக்க முடியாது.
போகுகின்ற இந்த நிலை தொடருமானால்,
நாட்டில் குண்டுகள் வெடிக்கலாம்,
இரத்தங்கள் சிந்தலாம்,
இனமோதல்கள் தீவிரமடையலாம்,
வியாபார ஸ்தாபனங்கள் தீப்பற்றி
எறியலாம்,
ஆனால்
யார் யாருக்குச் செய்கின்றார் என்று தெரியாமல் மூன்று இனங்களும் மாறி மாறி மோதிக்கொள்ளும்
சூழல் வெகுதூரத்தில் இல்லை.
ஒரு அரசியல் அவதானியாக(Political
analysis) இருந்து இந்த எதிர்கூவலை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.
ஆனால் இந்த முஸ்லிம் எதிர்வாத,
பெளத்த இனவாதப்போக்கை துரத்தி மீண்டுமொரு சமாதான போக்கை இலங்கையில் தோற்றுவிப்பதற்கு
சில அவசர, அவசிய மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்,
1.
நாம் அனைவரும் ஆளும் அரசாங்கத்தின்
இரட்டைவேடத்தை சரிவர புரிந்துகொள்ள வேண்டும்,
2.
ஆளும் கட்சியில் இருக்கும்
முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்கள், மாகாண, மாநகர, நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்
பதவி விலகவேண்டும், அத்துடன் ஒரு மாத காலப்பகுதிக்குள் கட்சி மாற வேண்டும், (அல்லாஹ்வின்
மீது பொறுப்புச்சாட்டிவிட்டு வெளியேறுங்கள்),
3.
இலங்கையில் இயங்கிவரும்
வெளிநாட்டு தூதுவரகங்களுக்கு இன்றைய நிலைமையை கடிதமூலம் தெறியப்படுத்த வேண்டும்,
4.
மனித உரிமை அமைப்புக்கள்,
ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கு நிலைமையை நாளுக்கு நாள் அறியப்படுத்த
வேண்டும், (இவர்கள் கொஞ்சம் பிசிதான், இருந்தாலும் தட்டி எழுப்பிவிடவேண்டும்),
5.
இலங்கையில் இயங்கிவரும்
முஸ்லிம் அமைப்புக்கள் ஒத்த கருத்துக்கு வரவேண்டும்,
6.
உலமா சபை தனது முடிவில்
உறுதியாக இருக்க வேண்டும், (ஹலால் விவகாரத்தில் அரசின் கைக்கூலியாக மாறியது போது ஏனைய
விடயங்களில் நாடகமாடக்கூடாது,)
7.
முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த
புத்திஜீவிகள் நாட்டுநடப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டும்,
8.
எழுத்தாழர்கள், பத்திரிகையாளர்கள்
தங்களது எழுத்துக்களை விமர்சனங்களை சிங்களம், அறபு மற்றும் ஆங்கிள மொழிகளில் செய்திகளை
உடனுக்குடன் வெளியிட வேண்டும்,
9.
முஸ்லிம் சமூகம் தங்களுக்கான
தனியான ஊடகங்கள் இன்மையால் ஏற்பட்டிருக்கும் பாரிய நக்ஷ்டத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்,
10. பள்ளிகளை
நிர்ணயிக்க பணஉதவி செய்யும் நிருவனங்கள் தற்காளிகமாக அவைகளை நிறுத்திவிட்டு, ஏற்கனவே
இயங்கும் பள்ளிகளை பாதுகாப்பதிலும் அவைகளை உயிரூட்டுவதிலும் தங்களது முழுமையான பங்களிப்பைச்
செலுத்த வேண்டும், (கொஞ்சம் கஸ்டமாக இருக்கும், சமூகத்தை, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டுமென்றால்
செய்துதான் ஆகவேண்டும்),
11. அரசாங்கத்தின்
நடத்தைகளுக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவளிக்கும் இயக்கங்கள், தனிநபர்கள் இத்துடன்
அவைகளை நிறுத்த வேண்டும்,
12. இந்த
க்ஷாத்தான்களிடமிருந்து பாதுகாப்புவேண்டி நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க
வேண்டும்.
13. முழுக்க
முழுக்க தோல்கொடுத்த முஸ்லிம் சமூகத்தின் நன்றியை மறந்து இனத்துவேசத்தை பயிரிடும் அரசாங்கள்
வெகுவிரைவில் வீடு திரும்பும், இன்க்ஷா அல்லாஹ்.
’மாற்றங்கள்
செய்வோம், மாற்றங்கள் எப்போது சாத்தியமானதே’
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
4 comments:
நாட்டில் குண்டுகள் வெடிக்கலாம், இரத்தங்கள் சிந்தலாம்,
இனமோதல்கள் தீவிரமடையலாம்,
வியாபார ஸ்தாபனங்கள் தீப்பற்றி எறியலாம்,
ஆனால் யார் யாருக்குச் செய்கின்றார் என்று தெரியாமல் மூன்று இனங்களும் மாறி மாறி மோதிக்கொள்ளும் சூழல் வெகுதூரத்தில் இல்லை.
its true
I every time spent my half an hour to read this weblog's content everyday along with a mug of coffee.
Look into my web site: Email Console
Insha allah, changes should be affected as soon as possible....
Incredible points. Great arguments. Keep up the
amazing effort.
Here is my homepage - click the up coming web page
Post a Comment