அம்பாந்தோட்டையில் மத்தல ராஜபக்ச அனைத்துலகவிமான நிலையம் கடந்த மார்ச் 18ம் நாள் சிறிலங்கா அதிபர்மகிந்த ராஜபக்சவினால் திறக்கப்பட்டது.
அதன் பின்னர், 40 பயணிகள் மட்டுமே இந்த விமானநிலையம் ஊடாகப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவிமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒரு மாதம்கடந்துள்ள போதிலும், இதன் ஊடாகப் பயணத்தைமேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பானதகவல்களை நிர்வாகம் மூடி மறைத்து வருகிறது.
குறைந்தளவு பயணிகள் மட்டுமே இந்த விமானநிலையத்தை பயன்படுத்தி வருவதாலும், தரையிறங்கும்விமானங்களுக்கு பறவைகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்இருப்பதாலும், மத்தல விமான நிலையம் ஊடாகசேவையை நடத்த ஏற்கனவே இணங்கியிருந்த பல விமானநிறுவனங்கள் சேவையைத் தொடங்க மறுத்த வருகின்றன.
அதேவேளை மத்தல விமான நிலையத்தில் எரிபொருள்தாங்கி அமைக்கப்படாததால், சிறிலங்கா பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மில்லியன் கணக்கான ரூபா நட்டமடைந்துவருகிறது.
நாளாந்தம் மத்தல விமான நிலையத்துக்குகொலன்னாவவில் இருந்து பாரிய எரிபொருள் தாங்கிகள்மூலம் விமான எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.
மத்தலவுக்கு ஒரு தாங்கியில் விமான எரிபொருளைகொண்டு செல்வதற்கு 64 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு 5 எரிபொருள் தாங்கிகளில் விமானஎரிபொருள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
எரிபொருள் கொலன்னாவில் இருந்த வரத் தாமதம்ஏற்பட்டால் விமானம் நீண்டநேரம் மத்தலவில் தரித்துநிற்பதும் வழக்கமாகியுள்ளது.
இதனிடையே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாஅமைத்துக் கொடுத்துள்ள எரிபொருள் தாங்கி நிலத்தினுள்கீழ் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தரமான முறையில் கட்டப்படாததே இதற்குக் காரணம்என்றும் ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளன.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment