இலங்கை பிக்குகள் பர்மாவின் கற்றுக்கொண்ட பாடங்கள்

லங்கை பிக்குகள் பர்மாவின் கற்றுக்கொண்ட பாடங்கள்

கடந்த ஒருவருடங்களாக பர்மாவில் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் நாம் அறிந்ததே.

பர்மாவின் அரச ஆதரவுடன் பர்மா நாட்டு பெளத்த பிக்குகள் மிக மோசமான முறையில் அங்கு வாழும் முஸ்லிம்களையும் அவர்களது சொத்துக்களையும் தீயிடுவதையும் சித்திரவதை செய்வதையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவடையும் செய்திகள் பிரசுரித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

நியாயமான காரணங்கள், குற்றங்களுக்கு அப்பால் வடிகட்டிய இனவாத்தை வீரியமாக முன்னெடுக்கும் ஒரு காட்டுமிராண்டிய வேட்டை அறங்கேற்றப்படுகிறது, அதுவும் காவி உடை அணிந்த, மதம் போதிக்கும் பிக்குகளின் தலைமயில் காண்பது கவலைக்கிடமானது.

பல மாதங்களை தாண்டி, இலட்சம் உயிர்களை காவுகொண்ட இந்த இனவாத மோதல் இன்றுவரைக்கும் எந்த சர்வதேச தடங்களையும் சந்திக்கவில்லை.

தொடரும் இந்த இனவாத வேட்டையை அடிப்படையாக கொண்டு இலங்கையிலும் ஒரு கூட்டம் தனது கைவரிசையை திட்டமிட்டமுறையில் மிகத் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது, அது வெற்றியும் கண்டு தனது பணியை தொடர்கின்றது……

இந்த பிக்குகள் பர்மாவிடமிருந்து பல பாடங்களை கற்று செலயாற்றுகின்றன என்றால் மிகையாகாது.

அதில் சில,
1.   பர்மாவில் அறங்கேற்றப்படும் இனவெறியாட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுமதி கிடைத்திருப்பது,

2.   உள்நாட்டு அரசாங்கமோ வெளிநாட்டு அரசுகளோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது,
3.   சதாம் ஹுசைனை தூக்கில் இட்டவர்கள், முஅம்மர் கதாபியை சித்திரவதை செய்தவர்கள் பர்மா பிக்குகளை கண்டிக்கவில்லை, இவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவுமில்லை.

4.   பர்மாவில் பணியாற்றும், செயற்படும் வெளிநாட்டு தூதுவரகங்கள் எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை,
5.   பர்மாவில் முஸ்லிம்கள் தீண்டப்படுவதற்கு எதிராக எந்த முஸ்லிம் நாடுகளும் எதிர்குரல் கொடுக்கவில்லை.

6.   பர்மாவில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களது முழுமையான எதிர்ப்புக்களை வெளிகாட்டவில்லை

ஆங்காங்கே கண்டன அறிக்கைகள் மட்டும்,

இந்த நிலையில்,
இந்த பாடங்களையும் உண்மைகளையும் இலங்கையைச் சேர்ந்த அரசும் பெளத்த பிக்குகளும் அறிந்துகொண்டு அவர்களை முழுமையாக அல்லது அதனைவிடவும் ஒரு படி உயறச் சென்று ஹலால், நிகாப் என்று ஆரபித்திருக்கிறார்கள்.


இலங்கை முஸ்லிம்களே எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும்……

அல்லாஹ் போதுமானவன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: