அளுத்கம, அழிக்கப்பட்டுவரும்
ஆதாரங்களும் அமைதிகாக்கும் அரசியல்வாதிகளும்
பலஸ்தீனம்,
கஸா என்று நாம் உள்ளார்ந்து திசைதிரும்பிபோய் இருந்தாலும் அளுத்கம அழிவை மறந்துவிட
முடியாது,
உலகம்
மீண்டுமொறு முறை விழித்துக்கொண்ட, ஜீரணீக்கமுடியாத நாசகாரச் செயல்தான் அளுத்கம அழிப்பு,
நீண்ட
திட்டமிடலின் வெளிப்பாடு இது,
இப்படியான
ஒரு அழிவு நடக்குமென்று தெரிந்துகொண்டும் அமைதிகாத்தது நமது தலைமைகள்,
BBS
திட்டமிட்டபடி தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றியது, உலக மீடியாக்கள் அதனை அப்பட்டமாக
வெளிகாட்டியது, பிரச்சினை பூதாகரமானதை பொறுக்கமுடியாமல் காவிகள் அழிவின் ஆதாரங்களை
அழிக்கும் பணியைச் செய்துவருகின்றனர், அதுவும் நம் தலைவர்களுக்குத் தெரியும் ஆனால்
சுயநலவாதிகளாக அசமந்துபோய்நிற்கின்றனர்.
2014
ஜூன் 15 அன்று திட்டமிடப்பட்டது போல் BBSன்
பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது,
முஸ்லிம்களின்
சொத்துக்கள் சூரையாடப்பட்டன,
தீ
மூட்டப்பட்டு சாம்பலானது வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்கள்,
ஆதாரங்கள்
கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது,
இந்த
அழிவுக்குக் காரணம் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்கள் ஜோடித்துவருகின்றனர் இந்த
BBS மற்றும் அவர்களுக்கு உதவும் உயர் அதிகாரிகளும் இணைந்து…………..
அளுதகம,
தர்காநகர் பகுதிகளில் அதிகம் முஸ்லிம் அடிப்படைவாதிகள், தீவிவாதிகள் வாழுகின்றனர் என்ற
பிரச்சாரம்,
முதலில்
கல்லை அடித்ததது முஸ்லிம்கள்தான் என்ற போலிப் பிரச்சாரம்,
அளுத்கமைக்கு
பிறகு மீண்டுமொறு அழிப்புக்கான திட்டமிடலின் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற அவதூறு,
முஸ்லிம்கள்
தீவிரவாதிகள்,
என்று
தொடர்கிறது இவர்களின் பிரச்சாரங்கள் எந்த தடைகளுமின்றி………
முஸ்லிம்களின்
சொந்த்துக்களை எரிக்கும் போது நவீன் இரசாயணம் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பது பால்பட்ட
உண்மை, ஆனால் அதனை விசாரிக்க சட்டமில்லை இந்த நாட்டில்…………….
துப்பாக்கிச்
சூட்டில் உயிர்நீத்தவர்களுக்கு போலி இறப்புச் சான்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது……….
இதற்கு பரிகாரம் இல்லை இந்த நாட்டில்.
இந்த
உண்மைகளை உயர்த்திப் பேசும் சகோதரர். முஜீப் ரஹ்மான், ஆசாத் சாலிஹ் போன்றவர்கள் குற்றப்புலநாய்வுப்
பிரிவினர்களால் விசாரணைக்குற்படுத்தப்பட்டு, கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்……….. தீவிரவாதிகள்
வெளியில் நிம்மதியாக உளாவரும்போது.
அளுதகம அழிவு நமக்கு கற்பித்த பாடங்கள் என்ன………..?
1.
நம்
சமூகத்திற்கெதிரான திட்டமிடலை எம் ஆளும் தரப்பு அரசியல் தலைவர்கள் தெரிந்துகொண்டும்
அமைதியாக இருந்துவந்தனர்,
2.
முஸ்லிம்கள்
அழிக்கப்பட்டாலும் ‘நான் பிடித்த முயலுக்கு 3 கால்’ என்று தனது கட்சி, தனது கொள்கை,
தனது பதவி என்று செயற்பட்டுவருகின்றனர்,
3.
எதிர்க்
கட்சிகளில் இருந்துகொண்டு எதிர்த்தும் பேசும் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட விருப்பமில்லை,
4.
நம்
சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் பல நிதிநிருவனங்கள் சமூப் பிரச்சினைக்கு குரல்கொடுக்க
முன்வராமை,
5.
வெளிநாட்டு
அரசியல் அவலம் என்று பேசும் சில அமைப்புக்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட முன்வராமை,
6.
சமூகப்
பிரச்சினை பற்றி பேசும் பலரை காட்டிக்கொடுக்கும் பணியை தொடர்கின்றமை,
என்ன செய்ய வேண்டும்?
1.
அளுத்கம
அழிவுதொடர்பான ஆதாரங்கள் சேகரிப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்,
2.
அளுத்கம
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்,
3.
நம்
சமூகத்திற்காக குரல் கொடுக்கும் பிற சமூகத்தைச் சார்ந்த கல்விமான்கள் அரசியல் தலைவர்களையும்
இணைத்து செயலாற்ற நம் தலைவர்கள் முன்வரவேண்டும்,
4.
எதிர்வரும்
தேர்தல்களில் களமிரங்கும் சமூகத்துரோகிகளை தோற்கடிக்க வேண்டும்,
5.
மெளனிகளாக
மறைந்து வாழும் நிதிநிறுவனங்களை அவமதிக்கவேண்டும், சமூகத்திலிருந்து ஒதுக்கவேண்டும்,
6.
ஆட்சி
மாற்றப் பணியை மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
7.
எந்த
நேரத்திலும் சாத்வீகப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
8.
பொதுவிடயங்களிலாவது
கொள்கை மறந்து பணியாற்ற முன்வரவேண்டும்.
26/07/2014
இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர்: ‘என் மகன் ஒரு லீடர்’
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment