Sustainable Approaches for Drinking and irrigation Water in Rural Area, / தண்ணீர் பிரச்சினையை தீர்பதற்கு சில திட்டங்கள் By Issadeen Rilwan









Potential Solutions to Water Scarcity / Sustainable Approaches for Drinking and irrigation Water in Rural Area, By Issadeen Rilwan

கரடிக்குளி கடல், வியாயடி நீர்பாசனத் திட்டம் மற்றும் மோதகம ஆறு என்று பல முக்கிய நீர் வளங்களை சூழப்பெற்ற முசலிப் பிரதேச முக்கிராமங்கள் தண்ணீர் இல்லாது தல்லாடுவது என்பது ஏற்கமுடியா ஒரு சமூகப் பிரச்சினையாகும்.

தண்ணீர் பிரச்சினையை தீர்பதற்கு சில திட்டங்கள் பின்வருமாறு:
1.   மரங்களை அதிகம் நடல் (developing social forestry through planting trees),
2.   மழை வேண்டிய தொழுகைகளை அதிகப்படுத்தல் ( Prayer For Rain),
3.   வீடுகளில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீர் வீணாவது, கசிவது மற்றும் தவறாகப் பயன்படுத்துவது பற்றி ஊரார் கவனம் செலுத்தவும் வேண்டும் (Awareness & Education)

4.   மாசுபடுதல் (Contamination), ஆவியாதல், வீண்விரயமாகல் போன்றவற்றை தடுக்கவேண்டும்,( decrease evaporation losses)

5.   கிடைக்கக்கூடிய நீர்வளங்களை நிர்வகிப்பதற்கான புதிய வழிகள் பின்பற்றப்பட வேண்டும் (new ways of managing available water resources must be adopted),

6.   மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரும் முறைமை அறிமுகம் செய்தல் (Instruction and implementing Rainwater harvesting and recycled wastewater),

7.   கால்வாய்களை சரிசெய்து உள்ளூர் குளங்களை இணைத்தல் (Satisfactory maintenance of canals and the distribution system with local lake inter - connection)


8.   ஒவ்வொரு ஆண்டும் குளங்கள் தூர்வாரப்படுதல், சுத்தம் செய்தல், தாமரை நடல், பராமரித்தல் (Excavation, cleaning, maintenance and lotus planting)
 
9.   குளங்களை சுற்றி மர நடல் வேலையை அவசரமாக முன்னெடுக்கவேண்டும்,
10. மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க  நடவடிக்கை எடுத்தல்,
11. மழை நீர் சேகரிப்பு திட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும், (The Collection of Rainfall and Runoff in Rural Areas.)
 


12. ‘புரட்சிகர மீள் வியாயடி நீர்பாசனத் திட்டம்’ என்ற ஒரு புது சிந்தனை உறுவாக்கப்பட வேண்டும் (Rehabilitation and Modernisation Projects)

13. மகாவலி வடக்கிலங்கை இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தி மன்னார், முசலி வரை உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய நதிகள் இணைப்பு (National river inter-link System) ஒன்றை அமுலாக்க வேண்டும். (கடந்த காலங்களில் மகாவலி இணைப்புத் திட்டத்தின் மூலம் சிங்கள குடியேற்றங்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

14. கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது (இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வு பிரிவு இதற்கு உதவலாம்) (Desalination and water treatment),


15. வியாயடி நீர்தேக்கம் அல்லது மரிச்சிக்கட்டி குளத்தை மையப்படுத்தி பம்ப் ஹவ்ஸ் திட்டம் ஒன்றை ஸ்தாபித்து முக்கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்யலாம் (Construction of Pump House),


16. பாசனத் திட்டங்கள், தடுப்பணைகள் மற்றும் மழைநீர் சேமிப்பு போன்றவை மூலம் நிலைமையை சமாளிக்க வேண்டும்.  

17. எந்த கோடையிலும் வற்றாத விதத்தில் தண்ணீரை சேகரிக்கும் முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

18. புவியியல் நிலைமைகள் (geological conditions.) நுண்ணுயிரியல் மாசுபாடு (microbiological contamination)  கனிம உரங்கள் (mineral fertilizers.) நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் (nitrate and phosphate ) பற்றிய அறிவை ஊர் மக்களுக்கு விளக்கப்படுத்த வேண்டும்
போர்கால நடவடிக்கை போல் கூடிய கவனம் செலுத்தினால் தன் தண்ணீர் பிரச்சினையை அவசரமாக தீர்க்க முடியும்
இன்னும் சில பல ஆலோசனைகள் இருக்கின்றது, ஆனால் அவை இப்போதைக்கு அல்லது எமது பிரதேசத்திற்கு தேவையற்றது / சாத்தியமற்றது என்பதால் விட்டுவிடுகிறேன்
இன்க்ஷா அல்லாஹ், டைம் கிடைத்தால் மேலதிக விபரங்களை வீடியோ வடிவில் வெளியிவேன்,
இவைகள் அனைத்தும் எனது தேடலில் கிடைத்த பொய்ன்ஸ்கள், கூடுதல் விபரங்கள பெற இது தொடர்பாக கழந்துரையாடல்களை மேற்கொள்ளலாம்
கடந்த காலங்களில் முக்கிய அமைச்சுகளை கையில் வைத்திருந்த இரண்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினைக்கான தீர்வை தராமல் விட்டது கண்டிக்கத்தக்க விடயமாகும்


FURTHER READING

1. M. Banskota and S. R. Chalise . editors. 2000. Waters of Life: Perspectives of Water Harvesting in the HKH. Proceedings of the Regional Workshop on Local Water Harvesting for Mountain Households in the HKH, Kathmandu; 14–16 March 1999. Kathmandu, Nepal: International Centre for Integrated Mountain Development.

2. S. Hafeez 1998. Appropriate Farm Technologies for Cold and Dry Zones of the Hindu Kush–Himalayas. Kathmandu, Nepal: International Centre for Integrated Mountain Development.

3. R. Lu 1994. The Application of Plastic Film Technology in China. Kathmandu, Nepal: International Centre for Integrated Mountain Development. 

4. J. Merz, G. Nakarmi, S. Shrestha, B. Shrestha, P. B. Shah, and R. Weingartner . 2002. Water and Erosion Studies of PARDYP Nepal: The Water Demand and Supply Survey. CD-ROM. Kathmandu, NEPAL: International Centre for Integrated Mountain Development. 

5. A. Pacey and A. Cullis . 1986. Rainwater Harvesting: The Collection of Rainfall and Runoff in Rural Areas. London, UK: Intermediate Technology Publications. 


வியாயடி நீர்பாசனத் திட்டம்.
.......................................................................
வில்பத்து சரனாலயத்தையும் வடமாகாணத்தையும் பிரிக்கும் எல்லையாக முசலி பிரதேசத்தின் தென் எல்லையில் அமைந்துள்ள உப்பாற்றின் (மோதரகம ஆறு ) வடக்கு எல்லையில் அவ்வாற்றுக்குச் சமாந்தரமாக காணப்படுவதே வியாயடி நீர்பாசனத் திட்டமாகும். இரண்டாம் அக்கர போதி மன்னனின் காலத்திற்கு முன்னரே அமைக்கபட்ட (புரோகியர் 1937) இந்நீர்பாசனத் திட்டம் இறுதியாக 1962ல் புனரமைக்கப்ட்டது. உப்பாற்றின் முகத்துவாரத்திலிருந்து 7 கிலோமீட்டர் கிழக்கே காணப்படும் வியாயடி நீர்த்தேக்கம் அதற்கு மேல் 10 கிலோமீட்டர் கிழக்கில் பில்மடு எனும் இடத்தில் உப்பாற்றில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து நீரினைப் பெற்று மரிசுக்கட்டி பிரதேசத்தில் காணப்படும் 18 குளங்களுக்கும் அதன் கீழ் உள்ள 2200 ஏக்கர் நெற்செய்கை பரப்புக்கும் நீரினை வழங்குகிறது.
(பார்க்க படம்: வியாயடி நீர்பாசன திட்டம்)

ஆய்வு, தொகுப்பு மற்றும் சிந்தனை
Issadeen Rilwan MBA, UK)
21/03/2020



Friends!! PDF வடிவில் தேவைப்பட்டால் உங்களது ஈமெயில் முகவரியை இன்பொக்ஸ் பன்னவும்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: