Online shopping inside Qatar - Paid Ad
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு / abroad jobs
தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு
வெளிநாட்டுக்கு போகிறேன் என்றால் ஒரு புதுமையான சந்தோஷம் பலருக்கு,
ஆனால் அங்கே செல்லும் போது தான் உண்மையில் அங்கு என்ன வாழ்க்கை என்பதை சரியாகத் தெரிந்து கொள்வோம்.
கம்பனிக்குப் போனால் முதீர் (Boss / Supervisor) தொல்லை,
ரூமுக்கு வந்தால் மூட்டைத் தொல்லை என்று சொல்லிச் சொல்லி பல வருடங்களை நாம் வெளிநாடுகளில் கடத்திவருவது கவலைகுரிய விடயமாகும்
தன் தாயை தந்தையைப் பிரிந்து, மனைவி, குழந்தைகளைப் பிரிந்து நாடு துறந்து கடல் கடந்த ஒரு பயணம் தான் இந்த வெளிநாட்டு சம்பாத்தியம் என்பது.
ஒரு நாட்டின் இராணுவ வீரர்களை விட வெளிநாட்டில் சம்பாதிக்கும் தொழிளாலர்களை அந்த நாட்டு அரசாங்கம் கன்னியப்படுத்தி கைளரவப்படுத்தி உரிய வசதிகளை செய்திகொடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வெளிநாட்டு தொழிலாளிகளாக வாழும் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கம் சர்வதேச தொழிலாளிகள் சட்டத்திற்குற்பட்டு உரிய உரிமைகளை வழங்கி கெளரவப்படுத்த தகுதியானவர்கள் நாங்கள்.
ஆனால் உள்நாட்டிலும் இல்லை
வெளிநாட்டிலும் இல்லை நிம்மதி என்று நாட்களை கடத்தி வருகிறோம்.
தன் வீட்டில் இருக்கும் போது தந்தை என்ற தன் குழந்தையின் அன்பான அழைப்பு,
தாய் வீட்டில் இருக்கும் போது மகன் என்று தாயின் இனிமையான அழைப்பு,
மாமனார் வீட்டில் இருக்கும் போது மருமகன் என்ற ஆரவாரமான உபசரிப்பு.
இவைகளை துறந்து கம்பனி முதலாளியுடைய அழைப்பு.
அடுத்த வருடம் ஊருக்குப்
போகலாம்,
அடுத்த டிசம்பரில் போகலாம் என்று அடுத்து அடுத்து வரும் வருடங்களை எண்ணி, எதிர்பார்த்து பல வருடங்கள்
கடந்துசெல்கின்றன.
தாயகம் திரும்பி தன் சொந்தங்களுடன், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் போது கூனிக் குறுகி, கம்பு ஊன்றும் வயதில் அல்லது விபத்து, நெஞ்சு வலியில் சிக்கி உயிர் இலந்து பிணமாய் திரும்புகின்றோம்.
1. படித்து முடித்துவிட்டு அல்லது பரீட்சையில் பெயிலாகி வெளிநாட்டுக்குப் போய் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் பணம் சம்பாதித்துக்கொண்டு நாடு திரும்பி ஏதாவது வியாபரம் செய்யலாம்,
2. வீடு கட்ட வேண்டி இரண்டு
வருடம் வெளிநாட்டுக்குப் போகலாம்,
3. தன் வீட்டில் இருக்கும்
வயதுப் பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும், அதற்காக கொஞ்ச நாளைக்கு
வெளிநாட்டுக்குப் போய் உழைக்கலாம்,
4. வியாபாரம் செய்து நக்ஷ்டப்பட்டு கடனாளியாகி, அதனை அடைப்பதற்காகவும் மீண்டும் அதே வியாபாரத்தை தொடர்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்று இரண்டு வருடங்கள் சம்பாதிக்கலாம்
இப்படி ஏதோ ஒரு முக்கியமான காரணத்தை வைத்து குறைந்த இரண்டு வருடத்தை எல்லையாக வைத்து விமானம் ஏறுகின்றோம்.
ஆனால் அந்த இரண்டு வருடங்கள் இருவது முதல் முப்பது வருடங்களையும் தாண்டி வெளிநாட்டில் காலம் கடத்துவது கண்ணீர் வார்த்தைகளால் சொல்லப்பட வேண்டிய செய்திகளாகும்.
கடைசியில் இன்டெர்நெட்டில் குடும்பம் நடத்தும் மனிதர்களாக மாறிவிட்டோம்..
இரண்டு வருடங்கள் என்று ஆரம்பிக்கும் போது அந்த பயணத்திற்குரிய செலவுக்காக கடன் வாங்குகின்றோம், அந்த கடனை மொத்தமாகக் கொடுத்து, வீட்டாருக்குரிய மாதாந்த செலவையும் கொடுத்து வரும் போது குறித்த இரண்டு வருடங்கள் முடிந்து விட்டு பார்த்தால் கை எம்டியாகி விடும், விடுமுறையில் ஊருக்குத் திரும்பி அங்கே செலவு செய்யப் பணமிருக்காது.
இன்னும் இரண்டு வருடத்திற்கு இருந்தாலாவது ஏதாவது மீதப்படுத்தலாம் என்று வெளிநாட்டு உழைப்புக் காலம் நீடிக்கப்படுகிறது.
கணவன் வெளிநாட்டில் இருக்கின்றான் என்ற தைரியத்தில்
தாராள செல, ஆடம்பர வாழ்க்கை என்று எல்லையற்ற
வீண் விரயங்கள்,
நவீன கண்டு பிடிப்புக்களாய் நாளுக்கு நாள் மார்க்கட்டுக்கு வரும் பொருட்களை வாங்க வேண்டி அதற்காக அதிக பணம் செலவிட வேண்டும்,
பக்கத்து விட்டார் வாங்கிய பொருளை அல்லது அதை விட
நல்லதை, விலை கூடுதலானதை வாங்க வேண்டும்
என்ற பேராசையும் ஈகோவும் கணவனின் வெளிநாட்டு வாழ்க்கைக்கான காலத்தை நீடிக்கச் செய்கின்றது.
ஆனால் வெளிநாட்டுக்கு வந்து பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்
கணவன், மகன், நண்பன் எப்படியான தொழில் செய்கின்றான் என்பதை.
வீட்டில் இருக்கும் பெண்கள் தன் வீட்டார் ஒட்டகம் மேய்ப்பாலனா அல்லது மந்தையர் மேய்கும் இடையனா என்பது தெரியாமல் பணத்தை மட்டும் கணக்கிட்டுப்பார்ப்பவர்களாக இருந்து வருகின்றனர்.
காலத்திற்கேற்ற தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வெளிநாட்டு வாழ்க்கைக்கான எல்லையை நீடிக்கிறது.
கணவன் வெளிநாட்டில் இருக்கிறார், உள்நாட்டில் மனைவி வேலிபாய்கிறால்
தந்தை வெளிநாட்டில் மகன் மூக்குக் கயிறற்ற குதிரைகளாக, நினைத்தை வித்தைகளை தைரியமாக சாதித்து வருகிறார்கள்.
வெளிநாட்டு வேலைக்கு வந்து ஒரு சில வருடங்கள் கடந்ததும்
கஸ்டத்திற்கு மத்தியில் கிடைக்கின்ற நிம்மதி, சொகுசுகளை அனுபவிக்க ஆரம்பிக்கும் போது மீண்டும்
ஊரில் சென்று கஸ்டப்பட விருப்பமில்லாது போகின்றது.
ஒரு கம்பனி முகாமையாளராக இருந்தால் வாகனம், உதவியாளர நினைத்த நேரம் ஓய்வு என்று.......
ஒரு கூலித் தொழிலாளி வெளிநாடுகளில் வேலை செய்யும் போது இயந்திரங்கள் உதவியுடன் தனது தொழிலை முன்னெடுப்பது அதிக சுகங்களை கொடுத்து நீண்ட காலமாக வெளிநாட்டில் வாழ சந்தர்ப்பமூட்டப்படுகிறது.
இதை சிலர் கவனத்தில் கொண்டு வாழ்வின் பாதியை வெளிநாடுகளில்
கடத்துவது குடும்ப, ஊர் மட்டத்தில் பாரிய நக்ஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையில் வெளிநாடுகளில் நீண்ட நாள் பணி புரியும்
ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காணும் போது ஏற்படும் உணர்ச்சி, கெட்ட எண்ணம்
வீடுகளில் தனியாக இருக்கும் மனைவிமார்களுக்கும் ஏற்படும் என்பதை மன சாட்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்கள் நீண்ட நாள் வெளிநாடுகளில் தங்க விரும்பமாட்டார்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பெண்கள் வேலிபாய்கிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் ஆண்கள் எந்த பெண்ணாவது கைகளில்
மாட்டமாட்டார்களா என்று வாழ்வைக் கடத்துகின்றனர்.
இதற்கான பயிற்சியையும் வழிகாட்டல்களையும் இன்றைய சினிமா மிக அழகாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை சமூக சீரழிவுகளை உண்டுபண்ணுகிறது,
குடும்ப கட்டமைப்பை தகர்க்கின்றது,
தகாத நோய்களை தோற்றுவிக்கின்றது,
அல்லாஹ்விடத்தில் தீமையாளிகளாக மாற்றுகின்றது,
நெறிமுறையையற்ற எதிர்கால சந்ததியினர் வளர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலைமைகளை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் கணவன் வாழும் போது வீட்டில் மனைவி
பல பிரச்சினைகளை சந்திக்கின்றால்,
ஏற்கனவே சொன்னது போல், மனிதனுக்குரிய இயற்கையான காம உணர்ச்சியை பகிர்ந்து கொள்ள ஆல் இல்லை.
தகவல் தொழில்நுட்பம் அதிக வேக வளர்ச்சி கண்டிருப்பதை
பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தினம் தினம் மனைவியுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்கின்ற
கணவன் திறந்த மனம் கொண்டு பல செய்திகளை பகிர்ந்துகொள்வர்,
தொலைபேசியில் பேசும் போது எதிர்முனையில் இருப்பது என் சொந்த மனைவி தானே என்று ஆபாசமாக பேசுவது சர்வ சாதாரணம் தான்.
ஆனால் கணவனும் மனைவியும் இவ்வாறு பேசிவிட்டு தொடர்பு துண்டிக்கப்படுகின்ற போது பேசப்பட்ட காமச் செய்திகள், ஆபாசங்கள் எந்த நிலைக்கு தூண்டிவிடும் என்பதை பற்றி சிந்திப்பதில்லை. இது பாரிய தீமைகளுக்கு வித்திடும்.
தொலைபேசி உரையாடல்களை கல்லத்தனமாக செவியுறுகின்ற சமூகத் துரோகிகளும் நமது சமூகத்தில் இருந்து வருகின்றார்கள்.
அன்றாடம் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரு ஆண் வீட்டில் இல்லை.
கணவனைத் தவிர பிறருக்குச் சொல்ல முடியாத மன வேதனைகளை பகிர ஆல் இல்லாது போகிறது,
திடிரென ஏற்படும் ஆபத்து, நோய்களுக்கு உதவ கணவனில்லை.
பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டு செல்கிறது.
வெளிநாடுகளில் ஆண்களும் இது போன்ற பல பிரச்சினைகளை அல்லது கஸ்டங்களை சந்திக்கின்றனர்.
சரியான உணவில்லை, சமைக்கத் தெரியாது, எத்தனை நாளைக்குத் தான் கடைகளில் உண்ணுவது என்று சொல்லிச் சொல்லியே காலம் கடத்தப்படுகிறது.
கம்பனி விடுதிகளில் சமைக்கும் போது சமைத்த உணவுக்கு
என்ன பெயர் என்று தெரியாமலே வருடங்கள் கடக்கின்றன.
உண்மையில் வெளிநாட்டு உழைப்பு முற்றுப்பெறாமைக்கு
சில காரணங்கள்
இருக்கின்றன:
நீண்ட காலம் வெளிநாடுகளில் கடத்துபவர்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் கொள்வது,
வயது கடந்து மீண்டும் நாடு திரும்பும் போது சொந்த நாட்டில் தேவையான வேளைவாய்ப்பு இல்லாது போதல்,
வெளிநாடுகளில் பெரிய சம்பளம் எடுத்துவிட்டு சொந்த நாட்டில் சிறிய சமபளத்திற்கு வேலை செய்ய முடியாது என்ற மனோ நிலை.
கணவன் வெளிநாட்டில் சில வருடங்கள் தங்கும் போது உள் நாட்டில் மனைவி, பிள்ளைகள் கட்டுபாடற்ற வாழ்க்கையை அனுபவித்த பின் மீண்டும் கணவன் அல்லது தந்தையின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் போது அனுபவத்திற்கு மாற்றமான நாற்களை சந்திக்க வேண்டி வருகிறது, இதனால் மீண்டும் கணவன் அல்லது தந்தை வெளிநாட்டில் இருப்பது தான் நல்லது என்று ஏதாவது காரணத்தைச் சொல்லி அனுப்பிவிடுவது.
வெளிநாட்டில் மாதாந்தம் பெற்றுவந்த ஊதியம் ஆடம்பர வாழ்க்கைக்கு உதவிய நிலையில் மீண்டும் உள் நாட்டில் அதே நிலையை ஈடுகொடுக்க முடியாமை.
இப்படி ஆண் தரப்பால் அல்லது பெண் தரப்பால் சில சுய
நல ரீதியான அல்லது பொது நல ரீதியான காரணங்கள் வெளிநாட்டு ஆயுளை நீடிக்கின்றது.
ஆனால் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்களை உணர முன் வர வேண்டும்.
இஸ்லாம் அதனை மிக உறுதியாக போதிக்கின்றது.
நீண்ட நாற்கள் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை இஸ்லாம் கடுமையான எதிர்க்கின்றது, இதனால் ஏற்படும் தீமைகளே அதற்கான காரணங்களாகும்.
குடும்பங்களை துறந்து பல வருடங்கள் வெளிநாடுகளில் காலம் கடத்தும் நண்பர்களே விழித்தெழுவோம் வாருங்கள்.
நாம் சாதிக்கத் தகுதியானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்,
எம்மை படைத்த இறைவன் நமக்கு உணவு தருவான் என்பதை நம்புவோம்,
வெளிநாட்டு உழைப்பு த்ற்காளிக ஒரு முயற்சி என்பதை மறக்காமல் இருப்போம்.
‘யா அல்லாஹ் போதும் என்ற மனநிலையை கொடு’ என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.
வெளிநாட்டில் கிடைத்த அனுபவத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சிறந்த வேலையை தேடுவோம்,
வெளிநாட்டில் உழைத்த பணத்தை வைத்து உள்நாட்டில் ஒரு சுய தொழிலை ஆரம்பிப்போம்,
தொழில் புரிகிற அதே இடத்தில் குடும்பத்துடன் செட்டாக முயற்சிப்போம்,
உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்குரிய சந்தர்ப்பம்
கிடைக்கும் போது உரிய நேரத்தில் அதனை பயன்படுத்த முயற்சிப்போம்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
சிந்தனை, எழுத்து & ஆக்கம்
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
Political participation

Overcoming the challenges / தடயங்களை தாண்டுதல் ..!