Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

public speaking skills / பேச்சுத் திறன்

public speaking skills / பேச்சுத் திறன்



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Child psychology/ குழந்தை உளவியல் part2

Child psychology/ குழந்தை உளவியல் part2


#child #psychology #குழந்தை




please share your feedback / எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

child psychology / குழந்தை உளவியல்

child psychology / குழந்தை உளவியல்


குழைந்தை வளர்ப்பு பற்றிய சுருக்
க / அவசர வீடியோக்களை பார்வையிட.......



Share your feedback / எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா (prize giving ceremony) 2015











வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா

The Essay competition prize giving ceremony successfully staged on last Wednesday (02/09/2015)

எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடாந்துமுடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

அறிவிக்கப்பட்டபடி கடந்த புதன் அன்று (02/09/2015) புத்தளம், வேப்பமடு அர்ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர், ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்படி பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.

இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசீல்களை பெற்றுக்கொண்ட வெற்றியாளர்கள் பின்வருமாறு;

1st prize: Hameem Nilam (10000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

2nd prize: Kaleel Rahman Safana  (6000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)


3rd prize: Mohamed Rafi Fathifa Rifa (4000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

4th Prize: Segu Ismail Mohamed Ihsan (2000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

இந்நிகழ்வை தலைமை தாங்கிய‌ கெளரவ அதிபர் கலீல் ரஹ்மான் அவர்களுக்கும் முழுமையாக நெறிப்படுத்தி நடாத்திமுடித்த மூத்த கணித ஆசிரியர் S.M பசீர் அவர்களுக்கும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க என்னுடன் தோல்நின்ற பிரதி அதிபர் லாபிர், ஆசிரியர் ஜாஹித் பதுர்தீன் (ஸலபி), O.M.இர்சாத், A.C. உபைதுல்லாஹ், ஆசிரியர் S.H.ராபி, சகோதரர் முஜாஹித் மற்றும் ஏனைய பலறுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பாக எம‌து மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

அளுத்கம, அழிக்கப்பட்டுவரும் ஆதாரங்களும் அமைதிகாக்கும் அரசியல்வாதிகளும்


அளுத்கம, அழிக்கப்பட்டுவரும் ஆதாரங்களும் அமைதிகாக்கும் அரசியல்வாதிகளும்

பலஸ்தீனம், கஸா என்று நாம் உள்ளார்ந்து திசைதிரும்பிபோய் இருந்தாலும் அளுத்கம அழிவை மறந்துவிட முடியாது,

உலகம் மீண்டுமொறு முறை விழித்துக்கொண்ட, ஜீரணீக்கமுடியாத நாசகாரச் செயல்தான் அளுத்கம அழிப்பு,

நீண்ட திட்டமிடலின் வெளிப்பாடு இது,
இப்படியான ஒரு அழிவு நடக்குமென்று தெரிந்துகொண்டும் அமைதிகாத்தது நமது தலைமைகள்,
BBS திட்டமிட்டபடி தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றியது, உலக மீடியாக்கள் அதனை அப்பட்டமாக வெளிகாட்டியது, பிரச்சினை பூதாகரமானதை பொறுக்கமுடியாமல் காவிகள் அழிவின் ஆதாரங்களை அழிக்கும் பணியைச் செய்துவருகின்றனர், அதுவும் நம் தலைவர்களுக்குத் தெரியும் ஆனால் சுயநலவாதிகளாக அசமந்துபோய்நிற்கின்றனர்.

2014 ஜூன் 15 அன்று திட்டமிடப்பட்டது போல்  BBSன் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது,
முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன,
தீ மூட்டப்பட்டு சாம்பலானது வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்கள்,
ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது,
இந்த அழிவுக்குக் காரணம் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்கள் ஜோடித்துவருகின்றனர் இந்த BBS மற்றும் அவர்களுக்கு உதவும் உயர் அதிகாரிகளும் இணைந்து…………..
அளுதகம, தர்காநகர் பகுதிகளில் அதிகம் முஸ்லிம் அடிப்படைவாதிகள், தீவிவாதிகள் வாழுகின்றனர் என்ற பிரச்சாரம்,

முதலில் கல்லை அடித்ததது முஸ்லிம்கள்தான் என்ற போலிப் பிரச்சாரம்,
அளுத்கமைக்கு பிறகு மீண்டுமொறு அழிப்புக்கான திட்டமிடலின் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற அவதூறு,
முஸ்லிம்கள் தீவிரவாதிகள்,
என்று தொடர்கிறது இவர்களின் பிரச்சாரங்கள் எந்த தடைகளுமின்றி………
முஸ்லிம்களின் சொந்த்துக்களை எரிக்கும் போது நவீன் இரசாயணம் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பது பால்பட்ட உண்மை, ஆனால் அதனை விசாரிக்க சட்டமில்லை இந்த நாட்டில்…………….
துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தவர்களுக்கு போலி இறப்புச் சான்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது………. இதற்கு பரிகாரம் இல்லை இந்த நாட்டில்.
இந்த உண்மைகளை உயர்த்திப் பேசும் சகோதரர். முஜீப் ரஹ்மான், ஆசாத் சாலிஹ் போன்றவர்கள் குற்றப்புலநாய்வுப் பிரிவினர்களால் விசாரணைக்குற்படுத்தப்பட்டு, கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்……….. தீவிரவாதிகள் வெளியில் நிம்மதியாக உளாவரும்போது.

அளுதகம அழிவு நமக்கு கற்பித்த பாடங்கள் என்ன………..?
1.      நம் சமூகத்திற்கெதிரான திட்டமிடலை எம் ஆளும் தரப்பு அரசியல் தலைவர்கள் தெரிந்துகொண்டும் அமைதியாக இருந்துவந்தனர்,
2.      முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் ‘நான் பிடித்த முயலுக்கு 3 கால்’ என்று தனது கட்சி, தனது கொள்கை, தனது பதவி என்று செயற்பட்டுவருகின்றனர்,
3.      எதிர்க் கட்சிகளில் இருந்துகொண்டு எதிர்த்தும் பேசும் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட விருப்பமில்லை,
4.      நம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் பல நிதிநிருவனங்கள் சமூப் பிரச்சினைக்கு குரல்கொடுக்க முன்வராமை,
5.      வெளிநாட்டு அரசியல் அவலம் என்று பேசும் சில அமைப்புக்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட முன்வராமை,
6.      சமூகப் பிரச்சினை பற்றி பேசும் பலரை காட்டிக்கொடுக்கும் பணியை தொடர்கின்றமை,



என்ன செய்ய வேண்டும்?
  1.      அளுத்கம அழிவுதொடர்பான ஆதாரங்கள் சேகரிப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்,

    2.      அளுத்கம பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்,

  3.      நம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் பிற சமூகத்தைச் சார்ந்த கல்விமான்கள் அரசியல் தலைவர்களையும் இணைத்து செயலாற்ற நம் தலைவர்கள் முன்வரவேண்டும்,

4.      எதிர்வரும் தேர்தல்களில் களமிரங்கும் சமூகத்துரோகிகளை தோற்கடிக்க வேண்டும்,
5.      மெளனிகளாக மறைந்து வாழும் நிதிநிறுவனங்களை அவமதிக்கவேண்டும், சமூகத்திலிருந்து ஒதுக்கவேண்டும்,
6.      ஆட்சி மாற்றப் பணியை மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
7.      எந்த நேரத்திலும் சாத்வீகப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
8.      பொதுவிடயங்களிலாவது கொள்கை மறந்து பணியாற்ற முன்வரவேண்டும்.



26/07/2014
இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர்: ‘என் மகன் ஒரு லீடர்’



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.


துண்டைக்காணும் துணியக்காணும் என்று முஸ்லிம்கள் வீட்டை விட்டு விதிமறந்து ஓடிவரும் போது,

விரட்டப்பட்ட போது திறக்காத கண்கள், பேசாத வாய்கள், சொல்லாத சாட்சிகள், நடைபெறாத விசாரணைகள் ஏன் இன்று…………?

சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.

வடக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் படும் பாடு, பட்ட பாடு பற்றி தனித்தனியாக பேச, எழுத, வாதிக்கப்பட வேண்டும்.

இவர்கள் சந்தித்த, சந்திக்கின்ற பிரச்சினைகள் பற்றி முசலிப்பிரதேச முக்கிராமங்கள் புத்தகம் ஒரு சிரிய சான்றுதான்.

இவர்களின் கல்வி, அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று ஒவ்வொன்றையும் ஆய்வுசெய்யும் போது மொத்தத்தில் என்ன என்பதை உண்மையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.

தனித்தனியாக ஆய்வுசெய்ய தயாராகும் நீங்கள், முதலில் கல்வியை ஆய்வுசெய்து பாருங்கள்……..

இப்படியா இருக்கு ஒரு சமூகத்தின் நிலை என்று வாய்விடுவீர்கள்………
சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

லீடருக்கு ஒரு வெளியீட்டு விழா














லீடருக்கு ஒரு வெளியீட்டு விழா
’என் மகன் ஒரு லீடர் (My son is a Leader)’ புத்தக வெளியீட்டு விழா திட்டமிட்டபடி அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபம், வேப்பமடு, புத்தளத்தில் 25/ 09/ 2011 (ஞாயிறு) அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

700க்கும் மேலான மக்கள் பாடசாலை மண்டபத்தில் ஒன்றுக்கூடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மார்க்க, அரசியல், சமூக பிரமுகர்கள் மேடையை அழகுபடித்தினர்.

இந்நிகழ்வை ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் மெளலவி S.முகம்மத் அவர்கள் தலைமை தாங்கியதுடன் ஆசிரியர் O.M. இர்சாத் அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள்.

நிகழ்ச்சி முடிவடையும் வரை விருவிருப்பும் மக்கள் ஒத்துழைப்பும் அல்லாஹ்வின் துணைவுடன் சிறப்பாக அமைய துணைநின்றது.

இவ்விழாவில் பல பிரமுகர்கள் சமூகமளித்து சிறப்பித்திருந்தனர்.

குறிப்பாக,

Hon. Minister Rishad Badiudheen
(Ministry of Commerce and trade)

Hon. Hunais Farook LLB, BA, MA (MP)

Hon. M.B. Farook LLB, BA (MP)

Dhesamaniya W.M Yahyan
Chairman, Pradesiya Saba, Musali

S.Kaleel Rahman (B.com, Dip in Edu)
Principal, Ar Rahma Muslim M.V. Veppamadu

M.M.Shiyan
Senior assistant Secretary, MOE, Northern Province

M.B. Fousul salafi BA. (Hons), M.phil reading
Lecturer, University of south Eastern

S.H.M. Ismail Salafi, BA (Hons)
Editor of Unmai uthayam

A.G. Sufyan
Member, Pradesiya Saba, Musali

H.M.M Kamil
Member, Pradesiya Saba, Musali

S.I RIyas Salafi, BA.(Hons)
Member, Pradesiya Saba, Nindavur

S.M. Mahmoud
President, Noor Jumma Mosque (Marichchikatty)

M.M.M Thawfeek Madani
President, Maraikkaar theevu

K.M. Iqbal
Political Coordinator, Marichchikatty
President, Taqwa Jumma Mosque (Marichchikatty)

S.M. Haris
President, Haira Jumma Mosque (Palaikkuli), Ismail Puram,

விழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இங்கு காணலாம்.































இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்,

இதனை உங்கள் பிரதேசங்களில் விற்பனைசெய்ய விரும்புவோர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

மொட்டுக்கள் மலர…….. தொடர் 06



8 பிள்ளைகளை எதிலும் ஆர்வமுடையவர்களாக மாற்றுதல், (Encourage Your Children to be Curios)


பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க வேண்டும், எமக்கு தெரியாத போது எமது பிள்ளைகளுடன் சேர்ந்து அதனை தேட வேண்டும், அதற்காக நூலகப் புத்தகங்களை பயன்படுத்துவதையும் அதில் கிடைக்காத போது இணையத்தளங்களில் தேடுவதற்கும் உதவ, வழிகாட்ட வேண்டும்.

உரிய விடயங்களை சிந்திப்பதற்கும் அது தொடர்பாக தேடுவதற்கும் அவர்களின் சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்

இந்த முறை கல்வியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும். இது புதிய தகவல்களை தேடுவதற்கான இரகசியத்தையும் வழியையும் காட்டிக்கொடுக்க உதவும். இதன் மூலம் எமது பிள்ளைகள் அதிக பயனடைவதுடன் கற்பதில் உண்மையான சந்தோஷத்தையும் கண்டு கொள்ளவும் உதவும்.

9 பாடசாலைப் பாடத்திட்டங்களை அன்றாட நடத்தைகளுடன் தொடர்புபடுத்திக் காட்டுதல், (Connect school syllabus with Day to Day Life)

எமது சூழலில் நாம் காணுகின்ற, பயன்படுத்துகின்ற அல்லது வெளிப் பயணங்கள் மேற்கொள்கின்ற போது நாம் புதிதாக தரிசிக்கின்ற இடங்களை எமது பிள்ளைகளின் பாடப் புத்தகத்துடன் தொடர்புபடுத்தி விளங்கப்படுத்துவது அவர்களின் உள்ளங்களில் இலேசாக பதிய உதவுவதுடன் பாடப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரும்பிப் படிக்கின்ற தன்மையையும் உண்டுபன்னும்.

இரவில் வானத்தை நோக்கி எமது தலையை உயர்த்தி பார்க்கின்ற போது எமது கண்களைக் கவரச் செய்கின்ற நட்சத்திரங்களைக் காண்கின்ற போது பிள்ளைகளின் இஸ்லாம் புத்தகத்தில் அல்லது விஞ்ஞானப் புத்தகத்தில் இடம்பெறுகின்ற நட்சத்திரங்கள் தொடர்பாகவும் அதனை படைத்த, வணங்கத்தகுதியான அல்லாஹ் பற்றியும் அவனது பிற படைப்புக்கள் பற்றியும் சொல்லிக் கொடுக்கலாம்.
அநுராதபுரத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொள்கின்ற போது சீகிரிய மலையை தரிசிக்கின்ற போது சமூகக் கல்வி வரலாறுப் புத்தகத்தில் வருகின்ற மன்னர் காசியப்பன் தொடர்பாகவும் அவரது வரலாறு தொடர்பாகவும் விளங்கப் படுத்தலாம்.

இந்த செயற்பாட்டு முறைமை எமது பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி தொடர்பான நிஜத்தன்மையையும் யதார்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் உணரச்செய்கின்றது.

1. ஒளிமயமான எதிர்காலத்தைக் காண்பித்தல், (Give them the Edge)
வருடத்திற்கு வருடம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சையில் கலந்து கொண்டு சித்தியடைந்து அடுத்த கட்ட எல்லையை அடைய முயற்சிக்கின்றார்கள். ஆனால் கடுமையான போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தயக்கமின்றி முகங்கொடுப்பதற்கு எமது
பிள்ளைகளைத் தயார்படுத்த வேண்டும், அதற்கு முன் ஏற்பாடாக சில நடை முறை பயிற்சிகளைக் கையாளலாம்..

• பிள்ளைகளின் சக்திவாய்ந்த மூளையை சரியான முறையில் பயன்படுத்தல்,
• திறமையான கற்றல், கற்பித்தல் நுட்பங்களை கையாளல்,
• தொழில் வாய்ப்புக்கு ஏற்றாற் போல் கற்கைத்திறனை ஒழுங்கமைத்தல்,
• புதிய சிந்தனைகளைக் கையாளும் வகையில் சிந்தனைக்கூர்மையைத் தோற்றுவித்தல்,
• எதையும் நிர்வகிக்கும் திறமை
• நல்ல ஆளுமையை வளர்த்தல்.

இந்தப் பயிற்சித்திட்டங்கள் சாத்வீகமான சிந்தனை போக்கையும் எதையும் வெற்றிகொள்ளும் மன உறுதியையும், வெற்றிக்கான தகுதியையும், உள உறுதியையும் ஏற்படுத்துகின்றது.

இந்தப் பயிற்சிகள் மூலம் எமது பிள்ளைகளிடத்தில் வெற்றி, சாணாக்கியம், அமைதி, மனத் திருப்தி, மற்றும் வாழ்வின் நிம்மதி போன்ற அனைத்தையும் பிரதிபலிக்கச் செய்யும்.

2. தொடர் முயற்சிகள் இடை நிறுத்தப்படுவதைத் தடுத்தல் (Don’t let them to give up the targets/ Consistency).
எமது பிள்ளைகள் கற்றல் ரீதியாகவோ அல்லது வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான எந்த விடயமாக இருந்தாலும் அதனை ஆரம்பித்து அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே சந்திக்கின்ற சிறிய சிறிய பிரச்சினைகள், சவால்கள் காரணமாக விரக்தியடைந்து இடைநிறுத்துவதை தவிர்க்க வேண்டும்,
ஒரு சாரதி தனது வாகனத்தைப் பாதையில் செலுத்தும் போது இடையிடையே ஏனைய வாகனங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும், பாதை முழுவதும் ஆங்காங்கே சந்திக்கின்ற சிவப்பு சமிக்ஜை (Red signal) களுக்கும் விபத்துக்களுக்கும் நிறுத்தி நிறுத்தி கவனமாக ஓட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

அதே போல் தான் ஒரு பிள்ளை இடை நிலைப் பரீட்சையில், அல்லது அரையாண்டில் குறித்த ஒரு பாடத்தில் குறைந்த புள்ளிகளை வாங்கிவிட்டது என்பதற்காக அந்த பாடத்தை தொடர்ந்து படிப்பதையோ, மீட்டுவதையோ இடைநிறுத்துவது என்பது, தோல்வியாளனின் அடையாளமாகும், இது தொடர்பாக இன்னும் சில தகவல்களுக்கு கீழே தோல்வியாளர்களின் பண்புகள் சம்பந்தமாக பேசும் தலைப்பில் கவனிக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

 படிப்பைத் தொடர்வதற்கான சிறந்த வழியை அறிமுகப்படுத்தல் (introduce the Great way to start Studies).

உலகில் புத்தகம் சுமந்த, சுமக்கின்ற அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற ஒரு விடயம் தான் புத்தகத்தை கையில் எடுக்கும் போது அதை மனந்திறந்து படிப்பதில் உள்ள கஸ்டம்.

புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு படிப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தால், படிப்பதை தவிர அல்லது புத்தகத்தில் இருப்பதைத் தவிர வேறு அனைத்தும் ஞாபகத்திற்கு வரும், புத்தகத்தில் உள்ள பாடங்கள் கசக்கும், எமது கண் இமைகள் எழுத்துக்களை மறைத்துக் கொள்ளும், தாய் மொழியைக் கூட அது எமக்கு தெரிந்த மொழிதானா? என சந்தேகிக்க செய்யும், இது எமது வகுப்பு பாடப்புத்தகம் தானா? என தேவையற்ற சிந்தனைக்கு எம்மை இழுத்துச் செல்லும்..

இது அனைத்தும் ஆரம்ப பாடசாலைக் கல்வியில் எல்லோரும் எதிர்நோக்குகின்ற பாரிய சவால்கள் ஆகும்.
இதற்கு “ஆரம்ப சவால்” என்று சொல்லலாம்,
எமக்குள் இப்படிப்பட்ட சிந்தனா ரீதியான தடைகள் வருவதற்க்கு காரணம் படித்தல் என்ற செயல் எமது உணர்ச்சியுடன், மனவெழுச்சியுடன் மிக இறுக்கமான தொடர்பை கொண்டிருப்பதுவாகும்.

எப்போது நாம் நல்லதை உணர்கின்றோமோ அப்போது நாம் எமது செயற்பாடுகளுடன் மகிழ்ச்சியடைகின்றோம், எப்போது படிக்கும் மனநிலையில் இருக்கின்றோமோ அப்போது
நன்றாக படிக்கவும், படிப்பதை மனதில் பதித்துக்கொள்வதற்கும் சக்தி பெறுகின்றோம்,
எப்போது நல்ல சிந்தனையில் இல்லையோ, எப்போது படிக்கும் மனநிலையை
உணரவில்லையோ அப்போது படிப்பதற்கு அதிகமான நேரங்களைச் செலவழிக்க மாட்டோம்.

பாடப் புத்தகங்களைப் படித்து அதில் இடம்பெறுகின்ற பாடங்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது என்பது செங்குத்தான மலைச்சரிவில் ஏறிச் செல்வது போன்றதாகும்.
இப்போது நான் படிக்கும் மனநிலையில் இல்லை என்று சொல்லி விட்டு விலகிச் செல்கின்ற நிலை எமது மாணவர்களிடத்தில் அதிகரித்துவருகின்றது.

மாணவ தம்பி, தங்கைகளே!! படிப்பில் வெறுப்பூட்டுகின்ற இந்த மனநிலையிலிருந்து
ஆர்வமிகு நிலைக்கு எமது மனநிலையை மாற்ற வேண்டும்

அப்படியென்றால் திறமையான முறையில் அந்த நிலையை, அதாவது
படிப்பதற்கு மனநிலை இல்லை (Negative mindset to study) என்பதிலிருந்து படிப்பதற்கு மனநிலை இருக்கின்றது (Positive mindset to study)
என்ற நிலைக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

எமது மன நிலையை சாத்தியமான திசைக்கு மாற்றி, படிப்பில் ஆர்வபடுத்த வேண்டும்.
அதற்காகக் கீழ் வரும் 6 வழிமுறைகளைச் செயற்படுத்த முன்வாருங்கள்.

1) அமைதியான மனநிலையை தேடி பிரார்த்தி:

எப்போதும் அல்லாஹ்விடத்தில் எமது கல்வி வளர்ச்சிக்காக பிராத்திக்க வேண்டும். எமது எல்லா தொழுகையின் போதும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட வழிமுறையில் செயற்படுவதற்கும் பிரார்த்திக்க வேண்டும்.

எமது பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க அல்லாஹ் காத்திருக்கின்றான்.

மலர்வது தொடர் 07 …………

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

வடக்கிலங்கை முஸ்லிம்கள் – தொடரும் 2வது தலைமுறையின் தோல்விகள் (Northern Muslims - the continuing failures of the 2nd generation)



உலக வரலாற்றில் இப்படி ஒரு அகதிய வரலாற்றை பார்த்த, கேட்ட அனுபவம் உண்டா?
அது என்ன அப்படியென்று கேட்கிறீர்களா?
சொல்லுகிறேன், கொஞ்சம் பொருமையாக கேளுங்கள்………

21 வது வருடத்தை (1990 – 2011) ஆரம்பித்து கடந்து செல்லும் அகதி வாழ்க்கையில் வடக்கிலங்கையை விட்டு வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைச் சுருக்கத்தில் கல்வி ரீதியாக இந்த சமூகம் சந்தித்த, சந்திக்கின்ற நக்ஷ்டங்களை கட்டாயம் கோடிட்டுக் காட்டி, விடயத்தை சீரியஸாக கவனத்தில் எடுத்து அரச சார், சாரா உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தயவாய்ச் வேண்டிக்கொள்கிறேன்.

1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது முதலாம் ஆண்டை பூர்த்திசெய்யும் நிலையில் இருந்த ஒரு மாணவனையும் இந்த வருடம் (2011 – January) முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு மாணவனையும் இந்த தலைப்புக்குரிய ஆய்வாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டு மாணவர்களுக்கு (தலைமுறைகளுக்கு) மிடையில் 20 வருட வித்தியாசம் இருக்கிறது.
இந்த இரண்டு தலைமுறையினரும் எவ்வாரு தோல்வியை சந்தித்து வருகிறார்கள் என்பதை விவரிப்பதாக இந்த ஆக்கம் அமைகிறது.

ரு மாணவனது கல்விக் காலம் முழுதும் பின் தங்கிய பாடசாலையில் தொடர்ந்தால்,
வருடத்திற்கு வருடம் புதிய புதிய பாடசாலைகளுக்கான இடம்பெயர்வாக இருந்தால்,
நாளுக்கு நாள் புதிய ஆசிரியர்களாக இருந்தால்,
இருந்து, புத்தக எழுத்துக்களை பார்த்து வாசிக்க, எழுத சரியாக வெளிச்சம் இல்லை என்றால்,
ஓய்வெடுப்பதற்கே சரியான வீடிகள் இல்லை என்றால்,

காலையில் பாடசாலைக்குப் போகும் போது வயிற்றுப் பசியைப் போக்க உணவில்லை என்றால்,
நாளாந்த குடும்ப செலவுக்கு பணமில்லை என்றால்,
எப்படி ஒரு மணவனால் படிப்பை சரிவர தொடர முடியும்?
எப்படி ஒரு மணவனால் அதிக புள்ளிகளை பெற முடியும்?
எப்படி ஒரு மணவனால் விக்ஷேட திறமைகளை பெற முடியும்?
எப்படி ஒரு மணவனால் இந்த அடிப்படை சவால்களையும் பிரச்சினைகளையும் தாண்டி தனது கல்வி மீது மட்டும் தனது சிந்தனையை மட்டுப்படித்திக்கொள்ள முடியும்?
வீட்டில் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாவிட்டால் எப்படி பாடசாலையுடன் மட்டும் ஒரு மாணவனால் தனது கவனத்தை செலுத்த முடியும்?
இந்த இருண்ட, வருமை நிறைந்த ஏழ்மை சூழ்ந்த வாழ்க்கை இந்த இரண்டு தலைமுறையினரின் வாழ்க்கையிலும் பெரியளைவில் பாதிப்புச் செலுத்துகிறது.

1990ம் ஆண்டு வெளியேற்றத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட அந்த முதலாம் வகுப்பு மாணவன் கடந்த 20 வருடங்களிலும் நான் மேலே சொன்ன குறைபாடுகளுக்கு மத்தியில் பாடசாலை வாழ்வை கடத்தி உயர் தரப் பரிட்சையில் சித்தியடையாது தனது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கி இருக்கின்றான்.

2011ம் ஆண்டு முதலாம் வகுப்பில் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டு தனது பாடசாலை வாழ்வைத் தொடரும் இரண்டாம் தலைமுறைக்கு உதாரணமான மாணவனும் நான் மேலே சொன்ன பிரச்சினைகளுக்கும் குறைபாடுகளுக்கும் முற்றுமுழுதாக உள் வாங்கப்படுகிறான்.
எப்படி அது?
30 வருடங்கள் கடந்த நீண்ட நெடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் தாயகங்களுக்கு மீள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அங்குள்ள சொந்தக் கிராமங்களில் தற்காளிக பாடசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெயர்ந்த (சொந்த கிராமங்களுக்கு மீண்டுள்ள) மாணவர்களுக்கு தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தின் மூலம் (volunteer Teachers who sat for GCE Advanced Level examination) பாடசாலை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு தற்காளிகமாக அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகள் எப்போது தரம் வாய்ந்த பாடசாலையாக மாற்றப்பட்டு சிறந்த கல்விச் சமூகத்தை உலகிற்கு வழங்க முன்வரும்?
தற்காளிகமாக இயங்கி வரும் இந்த பாடசாலைகள் எப்போது தரமான, போதுமான ஆசிரியர்களை பெற்றுக்கொள்ளும்?

மாணவர்களுக்குத் தேவையான, போதுமான வசதிகளைக் கொண்ட வகுப்பறை (Class Rooms) களை எப்போது பெற்றுக்கொள்ளும்?
தேவையான நூலகம், விஞ்ஞான கூடங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் தடாகங்கள் (Library, Laboratory, Ground and Swimming pool) எப்போது அமைக்கப்படும்?
இவர்கள் இருந்து படிப்பதற்கு தேவையான வீடுகளை இவர்களது பெற்றோர்கள் எப்போது கட்டிக்கொள்வார்கள்?
அதற்கான மின் இணைப்பு எப்போது கிடைக்கப்பெரும்?
அவசர சிகிச்சைக்குத் தேவையான வைத்தியசாலை உதவி எங்கிருந்து, எப்போது கிடைக்கும்?
போக்குவரத்து வசதி எப்போது முழுமைபெரும்?
கேள்விகள் நீண்டுசெல்கின்றன, விடைகள் கிடைக்கப்பெறாமல்
கடந்த 20 வருடங்களாய் அகதி முகாம்களில் வாழ்ந்ததனால் முதல் தலைமுறையினர் கல்வியை இழந்தனர்,

மீண்டும் சொந்த குடியேற்றங்களுக்கு குடியேறி தங்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ள இன்னும் 20 வருடங்கள் செல்லும் என்பதால் அதற்குள் சிக்குண்டுள்ள இரண்டாம் தலைமுறையினரும் கல்வியை இழந்துபோவர்.

சமூகப்பற்றுள்ள, தேசப்பற்றுள்ள இளைஞர்களே!!
சமூகவியல்துறைசார் பொருப்புக்களில் கடமைபுரிந்து சம்பளம் பெற்றுக்கொள்ளும் அரச, அரச சாரா ஊழியர்களே!!
கல்விக்கூட உயர் அதிகாரிகளே!
உரிய அமைச்சர்களே!!
பெற்றோர்களே!
’கல்வியற்ற சமூகம் இடையர் இல்லா மந்தைக் கூட்டத்திற்கு ஒப்பானவர்கள்’ என்பதை கவனத்தில் கொள்வோம்.

மகிந்தைச் சிந்தனை மூலம் இலங்கைத் தேசத்தை சிறந்த, முன்ணுதார நாடாக கட்டியெழுப்புவோம் என்று முன்நின்று செயற்படும் ஜனாதிபதி ராஜபக்க்ஷ அவர்களுக்கு!
இரண்டாவது, மூன்றாவது ஒரு தலைமுறையினரும் கல்வியை இழந்து கைசேதப்படாமல் இருப்பதற்கு, வடக்கிலங்கை மக்களாகிய எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அவசர அவசியமாக செய்து தரும்படி மாற்றங்கள் தேவை தயவாய் வேண்டி நிற்கின்றது.

This is a humble request to honorable president of Srilanka Mahinda Rajapaksha to help us to develop our motherland Northern Srilanka with all basic facilities and let us to live with harmony and wise full.

This request is from ChangesDo Club / Need changes - https://changesdo.blogspot.com


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 10

தொடர்   -பத்து

“இன்றிலிருந்து இன்னும் இரண்டு வாரத்திற்கு எந்த பாடசாலை பயிற்சிக் கொப்பிகளிலும்
1. பிழை வாங்கி இருகக்கூடாது,
2. சிவப்பு எழுத்து குறிப்புக்கள் வாங்கி இருக்க கூடாது,
3. புத்தகங்களில் கொப்பிகளில் தேவையற்ற எழுத்துக்கள், கீரல்கள் இருக்ககூடாது

என்று இந்த மூன்று முக்கிய நிபந்தனைகளை முன் வைத்து உடன்படிக்கை வாங்கிக் கொண்டார்.

நான் முழுமையாக கட்டுப்பட்டு சம்மதம் தெரிவித்தேன், அவர் தொட்டுவிட்ட பாடத்தை தொடர வேண்டும் முடியும் வரை என்பதற்காக.
இப்போது எனக்கு ஒரு சந்தோஷம், அதற்குப் பதிலாக ஒரு பயம். நான் தந்தையிடம் நிறைய படிக்க இருக்குறேன் என்ற சந்தோஷமும் அதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையை சரிவர பாதுகாக்க வேண்டும் என்கின்ற பயமும் தான் அவைகள்.

சந்தர்பங்களுக்காகக் காத்திருந்தேன்.

''விளையாடிப் பார்! வெற்றியா தோழ்வியா என்பது தெரியும் இந்த வரியைக்கொண்டு எனது உள்ளத்தையும் உணர்வையும் உரமாக்கிக் கொண்டேன் கொண்டு.........

அதிகாலை நேரம் அது, அமைதியான பொழுது, தந்தையின் அன்பான அழைப்பு, கண்விளிக்கும் போது பக்கத்துப் பள்ளியிலிருந்து,

ஹை அலல் பலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்
ஹை அலல்வெற்றியின் பக்கம் வாருங்கள்

அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்“  ”தூக்கத்தை விட தொழுகை சிறந்தது
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்“  ”தூக்கத்தை விட தொழுகை சிறந்தது

என்ற அழைப்புக்குத்தான் இந்த தந்தையின் அழைப்பு என்பதை மனதில் உணர்ந்து கொண்டு தொழுகைக்குத் தயாரானேன்.

அல்ஹம்துலில்லாஹ்! தொழுகையை முடித்துவிட்டு சூடாக ஒரு தேநீரும் அருந்தி முடிந்ததும், சுற்றுச் சூழலில் புதுமையான அமைதியையும் என் மேனியில் தங்கி மென்மையாக கதை சொல்லும் காற்றின் சுலற்சியையும் உணர்ந்து சுவாசித்துக்கொண்டு மீண்டுமொருமுறை தூங்கலாமா என எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் போது, மகனே!“ என்று, என் தாயின் விழிப்பு.
மகனே! சென்ற சனிக்கிழமை தந்தையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்துவிட்டாயா? என்று கேள்வி கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.

இல்லை, இல்லை, நான் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன், நேரம் வரும் போது பிடிப்பேன் என்று பதில் சொல்லுகையில், இப்போதே பிடிப்போம் வா என்று என்னை அழைத்துச் சென்றாள்.

எங்கே இருவரும் திட்டமிட்டு என்னை வட்டமிடுகிறீர்கள்? என்றார் தந்தை.
இல்லை. அன்று விட்டதை தொட்டுவிடத்தான் என்று முனங்கியது போல வாய் விட்டாள் தாய்.
பேசலாம் தாராளமாக, வாருங்கள் என்று ஓய்வரைக்கு அழைத்துச் சென்று வார்த்தைகளை பீரிடச் செய்தார்.

”...மூன்று விடயம் என்று சொல்லி, ஒன்றுடன் மட்டும் நிருத்தி இருந்தோம், அதில் அடுத்த விடயம் தான் “பாடசாலை கற்பித்தல் முறை’”


 “பாடசாலை கற்பித்தல் முறை’”
ஒன்று:
ஒரு சர்வதேச கால் பந்து விளையாட்டை டீவியில் பார்க்கும் போது, நமது உணர்ச்சியும் உடலும் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.
எதிரணியிலிருந்து பந்தை பரித்துக்கொண்டு எல்லையை நோக்கி ஓடும் போது பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கோல், கோல் என்று எழுந்து நின்று கை தட்டி, நம்மையறியாமல் நாமே உணர்ச்சி வசப் படுகிறோம்.
ஒரு காட்ரூன் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கும் போதும் இது போன்றதொரு உணர்வுப்பகிர்வு நடை பெறுகிறது.

இருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியாக இருந்தால், அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே, நாம், எமது கை கால்களை உயர்த்தி ஆ,, ஊ என்று சப்தமிடுவதை வழக்கத்தில் காண்கிறோம்.

இப்படி இந்த உணர்வுப் பகிர்வு எமது மூளையில் ஆழமாகப் பதிந்துகொள்கிறது, பல வருடங்களானாலும் கூட, இந்தக் காட்சி, மறக்காமல் இருக்கும்.

ஆனால் பாடசாலைகளில் இந்த உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுமுறை மாணவர்களுக்குக் கிடைப்பது மிக அறிது.

காலையில் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியருக்காக காத்திருப்பார்கள், ஆசிரியர் வந்து பாட புத்தகத்தில் உள்ள தலைப்பை முடியுமானவரை வாசித்து விளக்கிவிட்டு விடை பெற்றுவிடுவார்.

இங்கு கேட்பது, பார்ப்பது மட்டுமே, (சில நேரம் பேசுவது அல்லது கலந்துரையாடுவது) மாணவர்களுக்குரிய கற்றல் ஊடகமாகவும் மாணவர்களுக்கு முன்னால் பேசுவது மட்டுமே ஆசிரியரின் கற்பித்தல் முறை, நீண்டு செல்கிறது.

கேட்டல், பார்த்தல் முறை மனதில் பதிந்து நீண்ட நாட்களுக்கு அந்த செய்தி தேங்கிக் கிடைப்பது மிகக் குறைவு,

ஆனால் கேட்டல், பார்த்தல், கலந்துரையாடல், உணர்வு பூர்வகவமாக தன்னை அந்த நிகழ்ச்சியுடன் ஈடுபடுத்துவது என்பது, குறித்த செய்தியை மூளையில் நிலையாக பதிய வைப்பதற்கும், பின்னர் அதே போல் எடுத்துக் காண்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

கால்பந்துப் போட்டியைப் பார்த்து அதில் பந்து ஓடும் வேகத்தில் நாமும் எமது கண், காது, மூளை நரம்புகளும் பின் தொடர்வது என்று அதிக ஈடுபாட்டைத் தருகிறது.

இது போன்ற ஈடுபாடு பாடசாலை கற்றல், கற்பித்தல் முறையில் தேவையை விட, குறைவாக இருப்பது சிறுவர்களாகிய உங்கள் மூளை வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது.

சில பாடசாலைகளில் மாதத்தில் அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை என்ற விகிதத்தில் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் பல நூறு பேர் படிக்கும் பாடசாலையில் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கி அவர்களை கலை உணர்வுடைய துறைசார் மாணாக்கராக மாற்றுவதற்குரிய வாய்ப்பு மிகக் குறைவாக கிடைக்கும்.

‘நவீன கல்விக் கொள்கை என்ற பெயரில் அதிகமான நாடுகளில் சில இலகு முறை பாடத்திட்டங்களை அண்மைக் காலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள், இந்தக் கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் மிக குறைவாகக் கிடைக்கிறது.

இந்த நவீன கல்வி முறையில் மாணவர்களை விட ஆசிரியர்கள் ‘மாணவர்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு  மற்றும் அதிக ‘பேப்பர் வேலைகள் (Paper work, documentary preparation) என்று சுமத்தப்படுகிறது.
இதனால் தான் வீட்டில் இருக்கும் போது பார்க்கின்ற டீவி நிகழ்ச்சிகளை பாடசாலையில் இருக்கும் போதே சக மாணவர்களுடன் பேசி, பகிர்ந்து சிரித்துக் கொள்கிறார்கள் என்றவாறே.....

நீயும் அப்படித்தானே! என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார் என் தந்தை......

ஒரு உழவாளி தனது வீட்டிலிருந்து வயலை நோக்கி நெல் மூடையைச் சுமந்து செல்லும் போது, நடை பாதையில் உள்ள வயல் நிலங்கள், தண்ணீர் படிந்த இடங்களிலெல்லாம் சில நெல் மணிகள் சொரிந்து விடுகின்றன, மழை பெய்ந்து சில நாற்களில் ஆங்காங்கே சிந்திய நெல் மணிகள் முளைத்து சில நாற்களுக்கு பச்சென்று எழுந்து நிற்பதை பார்த்திருக்கிறாயா?

தனது சிந்தனையை விருத்தி செய்து கொள்ள வேண்டும், நாளுக்கு நாள் புதிய புதிய சிந்தனைப் போக்கும் திறனும் வளர வேண்டும் என்று நினைக்கும் நீங்களும் அந்த நெல் மணிகள் போன்றவர்கள்தாம்.
வயலுக்குச் செல்வதற்கு முன்னர் போகிற வழியிலேயே தங்கி விட்டோம் என்றாலும் அங்கேயே தங்கி காரியத்தை சாதிப்பேன் என்பது போல்.
சிறுசுகளாகிய உங்கள் மூளை வர்ச்சி, விஞ்ஞானிகளைப் போல் சிந்திக்கும் திறன் எல்லாமே பாடசாலை எல்லைக்குள் நின்றும் வளர வேண்டும்.

பாடசாலை கட்டிடங்களுக்குள் காணும் நூலக புத்தகங்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் எல்லோரிடத்திலும் நாளுக்கு நாள் புதுவிதமான கற்றல் முறை பிரதிபலிக்க வேண்டும்.

இரண்டாவது;
அதிகாலையில் கட்டிலிலிருந்து இறங்கு முன்னர், என்ன... எல்லா நாளும் அதே பாடம்... அதே ஆசிரியர்கள் தானே, நாளைக்கும் அதை பார்க்கலாம், என்று சலிப்படைந்து பாடசாலைக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைக்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலை ஏன் என்று நினைக்கிறாய்....?


படரும்.....




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

List of Universities of the Saudi Arabia

அன்பின் உங்கள் கவனத்திற்கு,

சவுதியில படிக்க விரும்பினால் இந்த பட்டியலில் ஒன்றை தீர்வு செய்து விண்ணப்பியுங்கள்.
முயற்ச்சி  பயனளிக்கும், இன்சா அல்லாஹ். 

Saudi Arabia has a few number of major universities, Colleges, and Institutes.

King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in Dhahran, given university status in 1975

King Saud University in Riyadh, founded in 1957

King Faisal University in Dammam and Hofuf, founded in 1975

King Abdulaziz University in Jeddah, founded in 1967

Jubail Industrial College in Jubail, founded in 1978

Jubail Technical College in Jubail

University College of Jubail in Jubail, founded in 2006

Yanbu Industrial College in Yanbu, founded in 1975

Islamic University of Medina, founded in 1961

King Khalid bin Abdul Aziz University in Abha, founded in May 1998

Prince Mohammad Bin Fahd University in Khobar
Imam Muhammad bin Saud Islamic University in Riyadh, given university status in 1974

Umm Al-Qura University in Mecca, founded in 1979

Taibah University in Madina, founded in 2005

University of Ha'il in Ha'il City, founded in 2006
Qasim University in Qasim

Taif University in Taif

Arab Open University in Jeddah and Riyadh

Effat College in Jeddah

Dar Al-Hekma College in Jeddah

CBA College in Jeddah

Prince Sultan Aviation Academy in Jeddah

Prince Sultan University in Riyadh

Institute of Public Administration in Dammam, Riyadh, Jeddah, and Mecca

Dammam Technical College in Dammam

Najran University in Najran, founded in 2006

Jizan University in Jizan, founded in 2005

Al Jawf University in Al Jawf, founded in 2005

Al Bahah University in Al-Bahah, founded in 2006

Al Faisal University in Riyadh, founded in 2005

Al Yamamah University in Riyadh, founded in 2006 it is college later

King Saud Bin Abdulaziz Health Science University in Riyadh,founded in 2005 it is Academic Health later.

Girl's University in Riyadh

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.