வடக்கிலங்கை முஸ்லிம்கள் – தொடரும் 2வது தலைமுறையின் தோல்விகள் (Northern Muslims - the continuing failures of the 2nd generation)



உலக வரலாற்றில் இப்படி ஒரு அகதிய வரலாற்றை பார்த்த, கேட்ட அனுபவம் உண்டா?
அது என்ன அப்படியென்று கேட்கிறீர்களா?
சொல்லுகிறேன், கொஞ்சம் பொருமையாக கேளுங்கள்………

21 வது வருடத்தை (1990 – 2011) ஆரம்பித்து கடந்து செல்லும் அகதி வாழ்க்கையில் வடக்கிலங்கையை விட்டு வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கைச் சுருக்கத்தில் கல்வி ரீதியாக இந்த சமூகம் சந்தித்த, சந்திக்கின்ற நக்ஷ்டங்களை கட்டாயம் கோடிட்டுக் காட்டி, விடயத்தை சீரியஸாக கவனத்தில் எடுத்து அரச சார், சாரா உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தயவாய்ச் வேண்டிக்கொள்கிறேன்.

1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது முதலாம் ஆண்டை பூர்த்திசெய்யும் நிலையில் இருந்த ஒரு மாணவனையும் இந்த வருடம் (2011 – January) முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு மாணவனையும் இந்த தலைப்புக்குரிய ஆய்வாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டு மாணவர்களுக்கு (தலைமுறைகளுக்கு) மிடையில் 20 வருட வித்தியாசம் இருக்கிறது.
இந்த இரண்டு தலைமுறையினரும் எவ்வாரு தோல்வியை சந்தித்து வருகிறார்கள் என்பதை விவரிப்பதாக இந்த ஆக்கம் அமைகிறது.

ரு மாணவனது கல்விக் காலம் முழுதும் பின் தங்கிய பாடசாலையில் தொடர்ந்தால்,
வருடத்திற்கு வருடம் புதிய புதிய பாடசாலைகளுக்கான இடம்பெயர்வாக இருந்தால்,
நாளுக்கு நாள் புதிய ஆசிரியர்களாக இருந்தால்,
இருந்து, புத்தக எழுத்துக்களை பார்த்து வாசிக்க, எழுத சரியாக வெளிச்சம் இல்லை என்றால்,
ஓய்வெடுப்பதற்கே சரியான வீடிகள் இல்லை என்றால்,

காலையில் பாடசாலைக்குப் போகும் போது வயிற்றுப் பசியைப் போக்க உணவில்லை என்றால்,
நாளாந்த குடும்ப செலவுக்கு பணமில்லை என்றால்,
எப்படி ஒரு மணவனால் படிப்பை சரிவர தொடர முடியும்?
எப்படி ஒரு மணவனால் அதிக புள்ளிகளை பெற முடியும்?
எப்படி ஒரு மணவனால் விக்ஷேட திறமைகளை பெற முடியும்?
எப்படி ஒரு மணவனால் இந்த அடிப்படை சவால்களையும் பிரச்சினைகளையும் தாண்டி தனது கல்வி மீது மட்டும் தனது சிந்தனையை மட்டுப்படித்திக்கொள்ள முடியும்?
வீட்டில் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாவிட்டால் எப்படி பாடசாலையுடன் மட்டும் ஒரு மாணவனால் தனது கவனத்தை செலுத்த முடியும்?
இந்த இருண்ட, வருமை நிறைந்த ஏழ்மை சூழ்ந்த வாழ்க்கை இந்த இரண்டு தலைமுறையினரின் வாழ்க்கையிலும் பெரியளைவில் பாதிப்புச் செலுத்துகிறது.

1990ம் ஆண்டு வெளியேற்றத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட்ட அந்த முதலாம் வகுப்பு மாணவன் கடந்த 20 வருடங்களிலும் நான் மேலே சொன்ன குறைபாடுகளுக்கு மத்தியில் பாடசாலை வாழ்வை கடத்தி உயர் தரப் பரிட்சையில் சித்தியடையாது தனது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கி இருக்கின்றான்.

2011ம் ஆண்டு முதலாம் வகுப்பில் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டு தனது பாடசாலை வாழ்வைத் தொடரும் இரண்டாம் தலைமுறைக்கு உதாரணமான மாணவனும் நான் மேலே சொன்ன பிரச்சினைகளுக்கும் குறைபாடுகளுக்கும் முற்றுமுழுதாக உள் வாங்கப்படுகிறான்.
எப்படி அது?
30 வருடங்கள் கடந்த நீண்ட நெடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் தாயகங்களுக்கு மீள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அங்குள்ள சொந்தக் கிராமங்களில் தற்காளிக பாடசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெயர்ந்த (சொந்த கிராமங்களுக்கு மீண்டுள்ள) மாணவர்களுக்கு தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தின் மூலம் (volunteer Teachers who sat for GCE Advanced Level examination) பாடசாலை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு தற்காளிகமாக அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகள் எப்போது தரம் வாய்ந்த பாடசாலையாக மாற்றப்பட்டு சிறந்த கல்விச் சமூகத்தை உலகிற்கு வழங்க முன்வரும்?
தற்காளிகமாக இயங்கி வரும் இந்த பாடசாலைகள் எப்போது தரமான, போதுமான ஆசிரியர்களை பெற்றுக்கொள்ளும்?

மாணவர்களுக்குத் தேவையான, போதுமான வசதிகளைக் கொண்ட வகுப்பறை (Class Rooms) களை எப்போது பெற்றுக்கொள்ளும்?
தேவையான நூலகம், விஞ்ஞான கூடங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் தடாகங்கள் (Library, Laboratory, Ground and Swimming pool) எப்போது அமைக்கப்படும்?
இவர்கள் இருந்து படிப்பதற்கு தேவையான வீடுகளை இவர்களது பெற்றோர்கள் எப்போது கட்டிக்கொள்வார்கள்?
அதற்கான மின் இணைப்பு எப்போது கிடைக்கப்பெரும்?
அவசர சிகிச்சைக்குத் தேவையான வைத்தியசாலை உதவி எங்கிருந்து, எப்போது கிடைக்கும்?
போக்குவரத்து வசதி எப்போது முழுமைபெரும்?
கேள்விகள் நீண்டுசெல்கின்றன, விடைகள் கிடைக்கப்பெறாமல்
கடந்த 20 வருடங்களாய் அகதி முகாம்களில் வாழ்ந்ததனால் முதல் தலைமுறையினர் கல்வியை இழந்தனர்,

மீண்டும் சொந்த குடியேற்றங்களுக்கு குடியேறி தங்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ள இன்னும் 20 வருடங்கள் செல்லும் என்பதால் அதற்குள் சிக்குண்டுள்ள இரண்டாம் தலைமுறையினரும் கல்வியை இழந்துபோவர்.

சமூகப்பற்றுள்ள, தேசப்பற்றுள்ள இளைஞர்களே!!
சமூகவியல்துறைசார் பொருப்புக்களில் கடமைபுரிந்து சம்பளம் பெற்றுக்கொள்ளும் அரச, அரச சாரா ஊழியர்களே!!
கல்விக்கூட உயர் அதிகாரிகளே!
உரிய அமைச்சர்களே!!
பெற்றோர்களே!
’கல்வியற்ற சமூகம் இடையர் இல்லா மந்தைக் கூட்டத்திற்கு ஒப்பானவர்கள்’ என்பதை கவனத்தில் கொள்வோம்.

மகிந்தைச் சிந்தனை மூலம் இலங்கைத் தேசத்தை சிறந்த, முன்ணுதார நாடாக கட்டியெழுப்புவோம் என்று முன்நின்று செயற்படும் ஜனாதிபதி ராஜபக்க்ஷ அவர்களுக்கு!
இரண்டாவது, மூன்றாவது ஒரு தலைமுறையினரும் கல்வியை இழந்து கைசேதப்படாமல் இருப்பதற்கு, வடக்கிலங்கை மக்களாகிய எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அவசர அவசியமாக செய்து தரும்படி மாற்றங்கள் தேவை தயவாய் வேண்டி நிற்கின்றது.

This is a humble request to honorable president of Srilanka Mahinda Rajapaksha to help us to develop our motherland Northern Srilanka with all basic facilities and let us to live with harmony and wise full.

This request is from ChangesDo Club / Need changes - https://changesdo.blogspot.com


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

munawwar said...

well done masha allah write more an more