Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

Educational development in Rural area Schools கிராமிய பாடசாலைக் கல்வியை தரமியர்த்துதல்

Click to watch the video 
Educational development in Rural area Schools கிராமிய பாடசாலைக் கல்வியை தரமியர்த்துதல்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

what's criticism..................? By Issadeen Rilwan

#விமர்சனம் என்றால் என்ன............? By இஸ்ஸதீன் றிழ்வான்
What's #criticism ...........? video by Issadeen Rilwan


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

manage your time from your home in during curfew season

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.


நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.

வடக்கு மக்கள் 1990களில் அகதியாகிய வரலாற்றையும் கடந்த 27 வருடங்களாக நிம்மதியை தொலைத்து வாழ்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்வேன்.

அவர்களுக்கான நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத்தரும்படியும் வேண்டுவேன்.

செல்பி எடுப்பதற்கு பதிலாக, தேர்தலுக்கு சீட் கேற்பதற்கு பதிலாக நீங்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

தனி மரங்களாகிய தோப்பு - video







எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

"அடிக்கல் நாட்டு விழாக்களை அரசு தடைசெய்யவேண்டும்" Government should stop stone laying ceremonies

"அடிக்கல் நாட்டு விழாக்களை அரசு தடைசெய்யவேண்டும்"

மன்னிக்கவும், தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்கான கட்டுரையல்ல இது.

சேவைகளை மட்டும் தமது முழுநேரப் பணியாக செய்த நேர்மையான சமூகத் தலைவர்கள் எம்மவிட்டுப் பிரிந்துவிட்டார்கள் நேற்று, வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குறுநில மன்னர்களைதான் இப்போது நாம் அரசியல் தலைவர்களாக தோலில் தூக்கி மாலைபோட்டு அழங்கரித்துவருகின்றோம்.
பல இலட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்து, பல கட்சி உறுப்பினர்களின் அன்றாட தொழில் நேரங்களை வீணடித்து, பாதைகளை மூடி, பல பொலிஸ் உத்தியோத்தர்களின் சங்கிளித்தொடர் பாதுகாப்புடன் தலைவர் வருகிறார்.................... எதுக்கு...? அடிக்கல் நாட்டு விழாவுக்கு தான்.

இத்தனை செலவுக்கு பின் நாட்டப்பட்ட 'அடிக்கல்' சில காலங்கள் பின்னால் அடியோடு காணமல் போய் அரசியல்வாதிகளுக்கும் அவர் கட்சிக்கும் அடிமனதிலிருந்து மறந்து போய்விடுகிறது.

பாடசாலை, பல்கலைக்கழம், துறைமுகம் என்று பெரும் திட்டங்களை நம் சமூகத்திற்கு சேவையாகச் செய்து தந்துவிட்டு மறைந்த தலைவர்கள் அடிக்கள் நாட்டு விழாக்களை கவனத்தில்கொண்டதில்லை தங்கள் அரசியல் வாழ்வில்.

30 வருடங்கள் கடந்தும் அகதியாக வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மலசல கூடத்தையாவது நிர்மாணித்துத் தரமுடியாத தலைவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் கக்கூஸ் கட்டப் போவதாக கதை விடுவது எவ்வளவு அபத்தமான வார்த்தை.....?

தளபாடங்கள், ஆசிரியர்கள் இல்லா பாடசாலைகளில் நம் குழந்தைகள் கல்வி கற்கும் இந்த நிமிடத்தில் கல்முனையை துபாய் போன்று மாற்றுவேன் என்று வார்த்தையின் / வாக்கின் விபரீதம் தெரியாது வாய் திறந்து வாக்களித்த மக்களை மடயர்களாக்கும் முயற்சி ஒரு சமூகத்துரோகமான செயலாகும்.
வீண் செலவுகளை ஏற்படுத்தும் அடிக்கல் நாட்டு விழாக்களை மறந்துவிட்டு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்றாற் போல் சேவைசெய்ய ஒன்றிணையுமாறு தம் தலைவர்களை அன்பாய் அழைக்கின்றேன்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் ..

மகனையும்
மருமகளையும் பிரித்துப்பார்க்கும் குடும்பங்களுக்குள் வாழ்ந்துகொண்டு தான் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக அணிதிரள அழைப்புவிடுக்கிறோம்.
என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் .. .. ம்......ம்.. ??

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

பிறரை ஏமாற்றுவது எப்படி ..? (வயது வந்தவர்களுக்கு மட்டும்) (How to cheat others (Only for 18++)


பிறரை ஏமாற்றுவது எப்படி ..? (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
(How to cheat others (Only for 18++)
------------------------------------------------------------------
‪1. பிறரை‬ கண்டால் நம் முழு பற்களும் தெறிகின்ற மாதிரி சிரிக்க வேண்டும்,

‪#2. கடன்‬ வாங்கி ஆடம்பரமாக வாழவேண்டும்,

‪#3. கடனை‬ திறுப்பிக் கேட்டால் காலம், நேரம் மற்றும் இடத்தை சரியாக சொல்லிவிட்டு வருடக்கணக்கில் அழையவிடனும்,

‪4. நமது‬ பதவி உயர்வுக்கு பிறரின் குறைகளை தேடி, தோண்டி பகிரங்கப்படுத்தனும்,

5. நமது இயலாமையை மறைக்க பிறரின் பெயரை கெடுக்கனும்.
6. பிறர்‬ சந்தேகப்படாத மாதிரி "நான் பொய் சொல்லமாட்டேன், ஜவேளை தொழுகிறேன்" என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளனும்.

‪7. யாரை‬ ஏமாற்றினாலும் அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான மோதல்குறித்து வெட்கப்படுகிறேன்


முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான மோதல்குறித்து வெட்கப்படுகிறேன்

இது ரம்புட்டான் காலம் மாதிரி இருக்கு,
அப்படித்தான் இதுவும் ஒரு வியாபாரம் தானே.........!

ஊர் ஊராக போய் கூவி விற்கப்படும் வியாபரமாக பர்ணமித்திருக்கிறது இந்த தேர்தல் பிரச்சாரங்கள்.

மேடைகள் அமைத்து, சத்தத்தை உயர்த்தி சாதனைகளை சொல்லவேண்டிய தலைவர்கள் (தன் குற்றம் மறைக்க, மறைத்து) அவன் சொத்து எண்ணிக்கையையும் இவன் மனைவிகளின் எண்ணிக்கையையும் சொல்லி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை உண்டுபண்ணும் காலமாக மாறி இருக்கிறது இந்த தேர்தல் காலம்.

குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொது மேடைகளில் மிக மோசமாக நடந்துகொள்வது கண்டு வெட்கப்படுகிறேன்.

ஒரு சமூக எழுத்தாளராக, சிந்தனையாளராக இருந்து வெட்கி நிற்கின்றேன் நம் சமூக நிலை கருதி.

முஸ்லிம்கள் நாங்கள், எங்களுக்கிடையில் சண்டையிட்டு மோதல்களை உண்டுபண்ணுவதால் பிற‌ இனச் சகோதர்களுக்கும் எமக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு பதில் யார் தருவா.......?

நாம் இஸ்லாத்தை பின்பற்றுகிறேம் என்று வாய் வீச்சுக்கள் மட்டும் போதுமானதா.........?

சிந்தித்து செயற்படுவோம்.


மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

எழுத்தாளர் Issadeen Rilwan facebook கனக்கு திருடப்பட்டுள்ளது


எழுத்தாளர் Issadeen Rilwan facebook கனக்கு திருடப்பட்டுள்ளது

மேலுள்ள இந்த புகைப்படம் இடப்பட்ட எனது முகப்புத்தக கணக்கு என் நண்பர் வட்டத்தில் உள்ள ஒருவராலேயே திருடப்பட்டிருக்கின்றது.

இந்த கணக்கிலிருந்து வரும் செய்திகள், தொடர்பாடல்கள் பிழையானதாக இருந்தால், யாரையும் தாக்குவதாக அல்லது பலிவாங்குவதாக இருந்தால் மன்னிக்கவும்.

எனது அண்மைக்கால வளர்ச்சி குறித்து ஏற்பட்டுள்ள எதிர்ப்ப்த்தன்மையே இந்த அநாகரிகமான செயலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கத்தோன்றுகிறது.

இந்த கணக்கு மீண்டும் எனது கைக்கு கிடைப்பதற்கு எனக்காக பிரார்த்திக்கவும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

பலஸ்தீனத்திற்கு பணம் சேர்த்தவர்கள் மரிச்சிக்கட்டிக்கு மெளன‌ம் காப்பது ஏனோ.....?

லஸ்தீனத்திற்கு பணம் சேர்த்தவர்கள் மரிச்சிக்கட்டிக்கு மெளன‌ம் காப்பது ஏனோ.....?

இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில்.

பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும்.

அதுபோல்,

மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி.

நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த பூமி தீர்வற்றுகிடக்கின்றது. அரசியல் மற்றும் இனவாதம் இதில் கலந்திருப்பதனால்.

பழமைவாந்த இந்த முஸ்லீம் கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்கு நாடு பூராவும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் குரல்கொடுக்கவேண்டும் என தயவாய் வேண்டுகிறேன்.

எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Marichchikatti vs Vilpattu forest issue



இன்று மன்னார் மரிச்சிக்கட்டி - வில்பத்து சரணாளயம் தொடர்பான விடயம் ஒரு தேசிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது.

மரிச்சிக்கட்டி அகதிகள் மீது முடிக்கிவிடப்பட்டுள்ள இந்த வதந்திகள் நியாயமற்றது.
.
உண்மையில் மரிச்சிக்கட்டிக்கென நீண்ட, பழையான வரலாறு இருக்கிறது, அதனை மூடிமறைத்து அரசியல் செய்யவரும் இன்வாதிகளுக்கு ஒரு சில விளக்கங்களை எடுத்துச் சொல்லும் வீடியோ இது.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இரண்டு வேறுபட்ட கொள்கைவாதிகள் ஒரே மேடையில்................?!



ரண்டு வேறுபட்ட கொள்கைவாதிகள் ஒரே மேடையில் என்ன ? எப்படி? பேசுவர்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி கிராமங்களுக்கான 5 வருட வேலைத்திட்டம்


மன்னார் மரிச்சிக்கட்டி, பாலைக்குளி மற்றும் கரடிக்குளி ஆகிய கிராமங்களுக்கான 5 வருட வேலைத்திட்டம் ஒன்று மிக விரைவில் பா.உ.கெளரவ Rishad Bathiudeen மற்றும் கெளரவ Hunais Farook ஆகியோரிடம் மிக விரைவில் கையளிக்கப்படும்.
இதில் உள்ளடங்கவேண்டிய, நீங்கள் பரிந்துரைக்கும் வேலைத்திட்டங்களை எனக்கு தெரியப்படுத்தவும்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

மாற்றி எழுதப்படும் 9ம் திகதி (date for changes)

மாற்றி எழுதப்படும் 9ம் திகதி
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
லங்கை தேசம் என்றும் இல்லாதவாறு இந்த 2015க்கான ஜனாதிபதி தேர்தல் பொதுமக்களை வீரியப்படுத்தி விட்டிருக்கின்றது.
இலங்கை தேசம் பல்வேறு தேர்தல்களை சந்தித்திருக்கிறது, ஆனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலைப் போன்ற எதிர்நீச்சல்களும் பாய்ச்சல்களும் வேறு எப்போது நடந்ததில்லை.
தினம் ஒரு புதிய செய்தியாகவே எதிர் அணிக்கு ஆளும் அமைச்சர்களும் பிரமுகர்களும் தங்களது ஆதரவுகளை பிரகடப்படுத்தி வருகின்றனர்.
மொத்தத்தில் மக்கள் மாற்றத்தை வேண்டுகிறார்கள், மாற்றத்தை எதிர்பாக்கின்றார்கள் என்பது மட்டும் சுருக்கமாக சொல்ல முடியுமாக இருக்கின்றது.
குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருதல்,
சர்வதிகார சரித்திரத்திற்கு சாவுமணி அடித்தல்,
விலைவாசிக்கெதிரான குரலாக மாறுதல்,
ஊளழுக்கெதிரான ஆட்சியை நிருவுதல்,
மொத்த இலங்கைக்குமான அபிவிருத்தியை ஊக்குவித்தல்,
உயர்ந்திருக்கும் இனவாதம் மதவாத்திற்க்கெதிரான ஆட்சி மாற்றத்தை கொண்டுவருதல் என்று தொடர்கின்றது மக்கள் கோக்ஷங்கள்.
நம் சமூகத்தைச் சார்ந்த சில சில்லைறை அரசியல் வாதிகள் மட்டும் தங்களது சுயநலனை கவனத்தில் கொண்டு தொடர்ந்தும் சால்வை தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் 8ம் திகத்திற்கு முன்னர் அவர்களில் சிலர் துள்ளி குதிப்பர் என்பதும் தின்மம்.
வருகிற 9ம் திகதி இலங்கை வரலாற்றை மாற்றி எழுதும் ஒரு நாளாக விடிய ஒன்றிணைவோம்,
இனவாத, குடும்பவாத அரசியல் தோற்கடிக்கப்பட்டு மக்களுக்கான அரசு ஒன்றை உருவாக்க‌ முன்வருவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர் ‍ "என் மகன் ஒரு லீடர்"
ஆய்வு மாணவன் University of Wolverhampton, UK

‪தனித்த_பிரதேச_சபைக்கான_கோரிக்கை‬ - Demand for separate piradesa saba



ம‌/முசலி மரிச்சிக்கட்டி, கரடிக்குளி மற்றும் பாலைக்குளியை இணைத்த தனிப் பிரதேச சபைக்கான கோரிக்கை என்பது
1. வடக்கிலங்கை தமிழ் மக்கள் கோரிய தனித் தமிழ் ஈழத்திற்கு ஒப்பானதல்ல‌

2. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கோரிய தனி முஸ்லிம் மாகாண சபைக்கு ஒப்பானதல்ல‌

3. தனிப் பிரதேச சபை என்பதை சிலாவத்துரையில் உள்ள பிரதேச சபை காரியாலயத்தை உடைத்து மரிச்சிக்கட்டியில் கட்டுவதல்ல‌

4. தனிப் பிரதேச சபை என்பது தனித்த முஸ்லிம்களுக்கான கோரிக்கையல்ல‌

5. எத்தனை பிரதேச சபைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து இலைங்கை உள்ளூராட்சி நிருவாகவியல் சட்டத்தில் வரையருக்கப்படவில்லை.

6. தனித்த பிரதேச சபை என்பது பின்தங்கிய எங்கள் கிராமங்களை அவசர அவசியமாக முன்னேற்றுவதற்கான ஒரு தூரநோக்கு சிந்தனை மட்டுமே.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3வது முறையும் ஜனாதிபதியானால்....?



3வது முறையும் ஜனாதிபதியானால்....?
இன்னும் பல பள்ளிகள்
இன்னும் பல அளுத்கமைகள்
இன்னும் பல நோலிமிட்கள்
இன்னும் பல மரிச்சிக்கட்டிகள்
இன்னும் பல நீ(நா)தி அமைச்சுக்கள்
இன்னும் பல
மாற்றங்கள் தேவை
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

New Year celebration 2014


"I don't celebrate the new year because I am a Muslim"

1. Our Prophet Mohammed (Sal) didn't celebrate such a events,
2. I have no time or money to celebrate this, I have to work for community, because their in poverty,
3. I never copy anything from other's culture and faith,
4. I am freely thinking personality. 

Issadeen Rilwan, 
Author - "MY Son is a Leader"

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் இலாபங்களுக்கு அப்பால்……………


தேர்தல் இலாபங்களுக்கு அப்பால்……………

தேர்தல் இலாபங்களுக்கு அப்பால் சிந்திக்க, சிந்தித்துச் செயல்படவேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.

மாகாணசபைத்தேர்தல் வெகுவாக சூடுபிடித்திருக்கின்றது, தங்களது நாளாந்த கடமைகளை கைவிட்டுவிட்டு வீடுவீடாக அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் படையெடுத்துள்ளனர்.

சிறுபான்மை இனங்களுக்குக்கெதிராக முடக்கிவிடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கை மூலம் இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் புதிய பல பதிவுகளை ஈட்டித்தரும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறிவருகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிகள் மீது வீசப்பட்ட கற்களை மட்டும் தங்களுக்கு எதிரான சவாலாக நினைத்துக்கொண்டு மீண்டுமொறு பள்ளியை தாக்கும் வரை அழ்ந்த தூக்கத்தில் நம் சமூகம் …….

பள்ளிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை தவிர முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய திட்டமிடல்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த BBS போன்ற இனவாதிகளில் கால்கள் உடைக்கப்படவில்லையென்றால் இன்னும் எண்ணி மூன்று வருடங்கள் கடக்கும் போது வரலாற்றில் சில கவலைகரமான பதிவுகளை படித்து கண்ணீர் சிந்த நேரிடும்.

உதாரணமாக,
1.   சட்டக்கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது போகும்,

2.   உள்ளூர் நிருவாக சேவைகளுக்காக நடாத்தப்படும் போட்டிப் பரிட்ச்சைகளில் தேர்ச்சிபெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கேள்விக்குறியாகும்,

3.   எந்த மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகளை வென்று தேர்தல்களில் வெற்றிபெற முடியாத துர்பாக்கிய நிலை உருவெடுக்கும்,

4.   எங்கு சென்றாலும் ”நீ முஸ்லிமா? பயங்கரவாதி” என்று சீல் குத்தி வெளியேற்றப்படும் நிலை தோன்றும்,

5.   அந்நிய பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகளின் நிலை கவலைக்கிடமாகும்.

6.   பெரும்பான்மை மக்கள் செரிந்து வாழும் பிரதேசங்களுக்குள் சென்று வியாபாரம் அல்லது ஏனைய விடயங்களில் சுதந்திரமாக ஈடுபடமுடியாத நிலை தோன்றும்.

இந்த மோசமான சூழலை உருவாக்குவதற்கான காய்நகர்த்தல்கள் மிகக் கச்சிதமாக முன்னெடுக்கப்படுவருகின்றன.

விடயங்கள் தெளிவாகிய பின்னரும் நம்முடைய மக்களை வழிநடாத்தப் புறப்பட்ட சமூக, சமய இயக்கங்கள் எவ்வாறு செயற்படுகின்றன?

இந்த கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பட்டியலிடலாம்;
1.   இனவாதிகளை முழுமையாக எதிர்க்கும் இயக்கம்,
2.   வெளிநாடுகளில் கிலாபத் உருவாகுவது பற்றி மட்டும் சிந்திக்கும் இயக்கம்,
3.   நடப்பது நடக்கம் நமது பணி தொடரட்டும் என செயற்படும் இயக்கம்.

இதில் நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்? எதன் மூலம் பயனடைய முடியும் என்பதை தொடர்ந்து பேசுவோம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை பிக்குகள் பர்மாவின் கற்றுக்கொண்ட பாடங்கள்

லங்கை பிக்குகள் பர்மாவின் கற்றுக்கொண்ட பாடங்கள்

கடந்த ஒருவருடங்களாக பர்மாவில் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் நாம் அறிந்ததே.

பர்மாவின் அரச ஆதரவுடன் பர்மா நாட்டு பெளத்த பிக்குகள் மிக மோசமான முறையில் அங்கு வாழும் முஸ்லிம்களையும் அவர்களது சொத்துக்களையும் தீயிடுவதையும் சித்திரவதை செய்வதையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவடையும் செய்திகள் பிரசுரித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

நியாயமான காரணங்கள், குற்றங்களுக்கு அப்பால் வடிகட்டிய இனவாத்தை வீரியமாக முன்னெடுக்கும் ஒரு காட்டுமிராண்டிய வேட்டை அறங்கேற்றப்படுகிறது, அதுவும் காவி உடை அணிந்த, மதம் போதிக்கும் பிக்குகளின் தலைமயில் காண்பது கவலைக்கிடமானது.

பல மாதங்களை தாண்டி, இலட்சம் உயிர்களை காவுகொண்ட இந்த இனவாத மோதல் இன்றுவரைக்கும் எந்த சர்வதேச தடங்களையும் சந்திக்கவில்லை.

தொடரும் இந்த இனவாத வேட்டையை அடிப்படையாக கொண்டு இலங்கையிலும் ஒரு கூட்டம் தனது கைவரிசையை திட்டமிட்டமுறையில் மிகத் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது, அது வெற்றியும் கண்டு தனது பணியை தொடர்கின்றது……

இந்த பிக்குகள் பர்மாவிடமிருந்து பல பாடங்களை கற்று செலயாற்றுகின்றன என்றால் மிகையாகாது.

அதில் சில,
1.   பர்மாவில் அறங்கேற்றப்படும் இனவெறியாட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுமதி கிடைத்திருப்பது,

2.   உள்நாட்டு அரசாங்கமோ வெளிநாட்டு அரசுகளோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது,
3.   சதாம் ஹுசைனை தூக்கில் இட்டவர்கள், முஅம்மர் கதாபியை சித்திரவதை செய்தவர்கள் பர்மா பிக்குகளை கண்டிக்கவில்லை, இவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவுமில்லை.

4.   பர்மாவில் பணியாற்றும், செயற்படும் வெளிநாட்டு தூதுவரகங்கள் எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை,
5.   பர்மாவில் முஸ்லிம்கள் தீண்டப்படுவதற்கு எதிராக எந்த முஸ்லிம் நாடுகளும் எதிர்குரல் கொடுக்கவில்லை.

6.   பர்மாவில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களது முழுமையான எதிர்ப்புக்களை வெளிகாட்டவில்லை

ஆங்காங்கே கண்டன அறிக்கைகள் மட்டும்,

இந்த நிலையில்,
இந்த பாடங்களையும் உண்மைகளையும் இலங்கையைச் சேர்ந்த அரசும் பெளத்த பிக்குகளும் அறிந்துகொண்டு அவர்களை முழுமையாக அல்லது அதனைவிடவும் ஒரு படி உயறச் சென்று ஹலால், நிகாப் என்று ஆரபித்திருக்கிறார்கள்.


இலங்கை முஸ்லிம்களே எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும்……

அல்லாஹ் போதுமானவன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.