தேர்தல் இலாபங்களுக்கு அப்பால்……………


தேர்தல் இலாபங்களுக்கு அப்பால்……………

தேர்தல் இலாபங்களுக்கு அப்பால் சிந்திக்க, சிந்தித்துச் செயல்படவேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.

மாகாணசபைத்தேர்தல் வெகுவாக சூடுபிடித்திருக்கின்றது, தங்களது நாளாந்த கடமைகளை கைவிட்டுவிட்டு வீடுவீடாக அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் படையெடுத்துள்ளனர்.

சிறுபான்மை இனங்களுக்குக்கெதிராக முடக்கிவிடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கை மூலம் இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் புதிய பல பதிவுகளை ஈட்டித்தரும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறிவருகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிகள் மீது வீசப்பட்ட கற்களை மட்டும் தங்களுக்கு எதிரான சவாலாக நினைத்துக்கொண்டு மீண்டுமொறு பள்ளியை தாக்கும் வரை அழ்ந்த தூக்கத்தில் நம் சமூகம் …….

பள்ளிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை தவிர முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய திட்டமிடல்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த BBS போன்ற இனவாதிகளில் கால்கள் உடைக்கப்படவில்லையென்றால் இன்னும் எண்ணி மூன்று வருடங்கள் கடக்கும் போது வரலாற்றில் சில கவலைகரமான பதிவுகளை படித்து கண்ணீர் சிந்த நேரிடும்.

உதாரணமாக,
1.   சட்டக்கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது போகும்,

2.   உள்ளூர் நிருவாக சேவைகளுக்காக நடாத்தப்படும் போட்டிப் பரிட்ச்சைகளில் தேர்ச்சிபெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கேள்விக்குறியாகும்,

3.   எந்த மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகளை வென்று தேர்தல்களில் வெற்றிபெற முடியாத துர்பாக்கிய நிலை உருவெடுக்கும்,

4.   எங்கு சென்றாலும் ”நீ முஸ்லிமா? பயங்கரவாதி” என்று சீல் குத்தி வெளியேற்றப்படும் நிலை தோன்றும்,

5.   அந்நிய பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகளின் நிலை கவலைக்கிடமாகும்.

6.   பெரும்பான்மை மக்கள் செரிந்து வாழும் பிரதேசங்களுக்குள் சென்று வியாபாரம் அல்லது ஏனைய விடயங்களில் சுதந்திரமாக ஈடுபடமுடியாத நிலை தோன்றும்.

இந்த மோசமான சூழலை உருவாக்குவதற்கான காய்நகர்த்தல்கள் மிகக் கச்சிதமாக முன்னெடுக்கப்படுவருகின்றன.

விடயங்கள் தெளிவாகிய பின்னரும் நம்முடைய மக்களை வழிநடாத்தப் புறப்பட்ட சமூக, சமய இயக்கங்கள் எவ்வாறு செயற்படுகின்றன?

இந்த கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பட்டியலிடலாம்;
1.   இனவாதிகளை முழுமையாக எதிர்க்கும் இயக்கம்,
2.   வெளிநாடுகளில் கிலாபத் உருவாகுவது பற்றி மட்டும் சிந்திக்கும் இயக்கம்,
3.   நடப்பது நடக்கம் நமது பணி தொடரட்டும் என செயற்படும் இயக்கம்.

இதில் நீங்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்? எதன் மூலம் பயனடைய முடியும் என்பதை தொடர்ந்து பேசுவோம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: