Showing posts with label பேசும் படங்கள். Show all posts
Showing posts with label பேசும் படங்கள். Show all posts
உன் சதி என் சாதனை

அளுத்கம தாக்குதல், அட்டகாசத்தின் ஆதாரங்கள்

MODI Go back

புலம்பெயர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களே………!
புலம்பெயர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களே………!
கல்வி, வேலை வாய்ப்பு அல்லது ஏனைய காரணங்களால் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர்களே நல்ல பல சமூக காரண காரியங்களை கவனத்தில்கொண்டு முடியுமானவரை எல்லோருடைய தகவல்களையும் இணைத்து பெயர் பட்டியலொன்றை தயாரிக்க முன்வந்திருக்கின்றேன்.
ஆங்காங்கே வாழும் நண்பர்களே எழுத்தாளர்களே உங்களுடைய சுயவிபரங்களை எனக்கு எழுதுங்கள்.
இந்த மாத முடிவில் முழுமையாக அனைவரையும் உள்ளடக்கி பட்டியலை தயாரித்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
இந்த சிறிய முயற்சி பல பாரிய சாதனைகளுக்கு வித்திடும் என்று நன்புகின்றேன்.
இன்க்ஷா அல்லாஹ்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இப்படியுமா செய்யனும்?
உலகில் மனிதன் வழமைக்கு மாற்றமாக சிந்திக்கின்ற (thinking differently) போதுதான் புதிய புதிய கண்டுபிடிப்புக்களும் நடைமுறைகளும் பிறக்கின்றன.
எல்லோறும் சிந்திக்கின்றார்கள், எதையாவது கண்டுபிடிக்கிறார்கள், என்னவெல்லாம் புதிதாகச் செய்கிறார்கள் என்பதற்காக சிலர் இப்படியெல்லாம் செய்கிறார்கள்:
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

ஊனமுற்ற படைப்புக்கள்.....!!
கண்கள் இல்லாத போது பாலின் நிறத்தை க்ண்டுகொள்ள ஆர்வப்படுவது, காதுகள் இல்லாத போது காகத்தின் சத்தத்தை கேட்கத்துடிப்பது, கைகள் இல்லாத போது கடலில் நீந்திப் பார்க்க ஆசைப்படுவது எல்லாமே இயல்புதான்.
இருப்பவர்கள் இருப்பதைக் கொண்டு ஒரு நாளும் திருப்திப்படுவதுமில்லை, அதற்கு நன்றி செலுத்துவதுமில்லை.
ஊனமுற்றுப் பிறப்பவர்களும் இருக்கிறார்கள், பிறந்தபின் ஊனமாகுபவர்களும் இருக்கிறார்கள்.
தன்னால் ஏதாவது சாதிக்கமுடியுமா என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு முயற்xசிப்பவர்கள் சாதிக்கிறார்கள்.
அது கூட ஊனமுற்றவர்கள் பிரப்பதற்கு ஒரு காரணம்.

ஊனமுற்ற படைப்புக்களில் மரணத்திற்கு பின்னுல் மனிதர்கள் எழுப்பப்டுவதற்கான நியாயம் நிறூபிக்கப்படுகிறது.
மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு நாம் அறியாத, அல்லாஹ் நாடுகிற அவன் திட்டமிட்டுள்ள பல காரணங்கள் இருக்கலாம்.
அல்லாஹ்வே மறைவானவற்றை அறியக்கூடியவன். .எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இயக்குனர், நடிகர் சேரனின் பொக்கிஷமற்ற 'பொக்கிஷம்'
Condemn on Director, Actor Cheren’s “Pokishan”
Publishing and showing the Islamic basic activities in very bad nature.
எனது நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு பரிதாபித்த என்னை பார்க்கும் படி வேண்டிய ஒரு படம் இது. நல்ல கவி வரிகளுடன் மிதக்கும் சினித்திறையாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் பெண்ணின் ஒழுங்கு மற்றும் ஒரு முஸ்லிம் அடியானின் சில அடிப்படை விடயங்களை இஸ்லாத்தின் தூய நெறிமுறைகளுக்கப்பாட்பட்ட நிலையில் வைத்து எடுக்கப்பட்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
* ஒரு முஸ்லிம் பெண் தனது முழு முகத்தையும் திறந்து ஒரு அந்நிய ஆடவனுக்கு காண்பிப்பது,
* தொழும் போது இறை சிந்தனையிலிருந்து விளகி தனது காதலனுடைய நினைப்பில் தொழுகையை திசை திருப்புவது,
* ஒரு முஸ்லிம் வாக்கு கொடுத்துவிட்டு அதற்கு மாற்றமாக நடப்பது போல சித்தறிப்பது,
* “யா முகையிதீன் ஆண்டவர்” என ஒரு முஸ்லிம் அழைப்பதாக காண்பிப்பது, இஸ்லாமிய அடிப்படை இறைகொள்கைக்கு மாற்றமானது.
* ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் சந்தோசமாக வாழ்ந்து குழந்தை குட்டிகள் பலதை கண்டு வாழ்வை ஓட்டும் ஒரு முஸ்லிம் தனது மூதாட்டி வயதில் பழைய காதலனை நினைத்து கதருவது, கண்ணீர் சிந்துவது.
இவ்வாறு நிறைய விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய அம்சங்களாகும்
-நன்றி: வஜி-
.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

தர்ஹாக்களை வலம் வரும் பிரபலங்கள்
மாற்றங்கள் தேவை - சுவை 34
இன்னொரு புறம் தர்ஹா எனும் பெயரில் ஏதேனும் சவக்குழியின் மீது பட்டுத்துணி போர்த்தி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்தனை செய்வதும் இருந்து வருகின்றது. அங்கும் இந்த பிரபலங்கள் சுற்றி வருகின்றன. கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தில் இருக்கும் இச்செயல்கள் இஸ்லாத்தில் இல்லை என்பது அந்த பிரபலங்களுக்கு மட்டுமல்ல சில இஸ்லாமியர்களுக்கே தெரிவதில்லை.
மனித வரலாற்றில் போதிக்கப்படும் மார்க்கம், மதங்கள், கடவுள் கோட்பாடுகளில் வித்தியாசமான, பகுத்தறிவுக்குட்பட்ட, அறிவுபூர்வமான கடவுள் கோட்பாட்டை வழங்கும், விளங்கப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இதனை ஒவ்வொரு தனிமனிதனும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்கின்றார்கள்.
‘அல்லாஹ்’ என்று தனது தனித்துவமிக்க பெயரையும் ஆற்றலையும் தன்னகத்துக் கொண்டு பேசும் அல்லாஹ் “வணக்கத்திற்கு தகுதியானவன் இப்பூமியில் யாருமில்லை, அல்லாஹ்வாகிய ஒருவனைத்தவிர’ என்ற தனிச்சிறப்புமிக்க, துணை கற்பிக்க முடியாத, இணைதுணையை சேர்த்துப் பார்க்க முடியாத விதத்தில் உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றான்.
அவன் வாழ வழிகாட்டி இருக்கும் ‘இஸ்லாம்’ என்கின்ற சாந்தி, சமாதானம் நிறைந்த மார்க்கத்தை பின்பற்றி வெற்றி பெறுவதாக இருந்தால் இந்த கலிமாவை உள்ளத்தால் ஏற்று நாவால் மொழிந்து, நடத்தையால் செயற்படுத்திக் காட்டுவதை மட்டுமே அங்கீகரிக்கின்றான்.
சிறு குழந்தையின் கையில் ஒரு கோப்பை தூய வெண்நிற பாலைக் கொடுத்து வெள்ளை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விளங்கப்படுத்துவது போல்தான் அல்லாஹ் தனது இணை துணையற்ற பேராற்றலை உலக மக்களுக்கு விளங்க வழி செய்கின்றான்.
“மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு அவர் அவருக்கு உபதேசம் செய்தவராக, என் அருமை மைந்தனே! அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) அல் குர் ஆன் 31 : 13)
ஆனால் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு கூட்டம் தங்களது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள ‘தர்ஹா வழிபாடு’ என்கின்ற இணைவைப்புக் கொள்கையை உருவாக்கி பாமர மக்களையும் சேர்த்து பாதாளக் குழியில் தள்ளிக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
வாழும் போது முகவரியற்ற மனிதன், மரணித்த பின்னர் மாமனிதராகி, கடவுள் நேசராகி, அவ்லியாக் குஞ்சாகி வாழும் மனிதர்களுக்கு உதவி செய்வதாக இந்த அறிவற்ற, சிந்தனையற்ற சமூகம் நம்பி வணங்கி வருகின்றது. ஏனெனில் சவக்குழிக்குள் இருப்பது மனிதப் பிணமா அல்லது மிருகத்தின் பிணமா என்பது கூட அதை வணங்குபவர்களுக்கு தெரியாது.
இந்நிலையால் பெரும்பாலான மக்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டவாளிகளாக, நிரந்தர மன்னிப்புக் கிடைக்காத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவது கவலைக்கிடமானதாகும்.
அதிலும் குறிப்பாக இந்த அப்பாவி முஸ்லிம் பெயர்தாங்கிகளின் அறிவற்ற வழிகாட்டல்களை ஏற்று பிறமத பிரபலங்களும் இந்த தர்ஹாக்களை வலம் வருவது கேலியானதாகும்.
தர்ஹாக்களை புனிதத்தலங்களாகவும் அதில் அடக்கப்பட்டவர்களை அவ்லியாக்களாகவும் பார்க்கும், மதிக்கும் மக்களை அவர்களது நிலைமைகளையும் தரங்களையும் கவனத்தில் கொள்ளும் போது நோக்கங்கள் வேறுபடுவதை அவதானிக்கமுடியும்.
1. படித்தவர்கள், உலமாக்கள் தர்ஹாக்களை வழிநடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் காரணம் அங்குள்ள உண்டியல்களை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக.
2. முஸ்லிம், முஸ்லிமல்லாத பிரபலங்கள் தர்ஹாக்களை வலம்வரக் காரணம், மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக. 3. பாமர மக்கள் தர்ஹாக்களை வலம் வருவது சில உலமாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலேயாகும்.
4. பதவி படைத்தவர்கள் பலதரப்பட்ட மக்களையும் தன்வசப் படுத்துவதற்காக.
இது போன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
எனவே நாம் உலகில் படைக்கப்பட்டிருப்பது அல்லாஹ்வை அவன் சொல்லும் விதத்தில் வணங்கி வழிப்படத்தான் என்பதை கவனத்தில் கொண்டு இணை துணையற்றவன் அவன் என்பதை எமது வாழ்வில் உறுதிப்படுத்தி, நிலைநாட்டி, இந்த தர்ஹா வழிபாடு இஸ்லாத்தில் இல்லாதது என்பதை இந்த பிரபலங்களுக்கு எடுத்துக்கூறி மாற்றங்கள் செய்வோம்
***இது ஒரு changesdo.com யின் படைப்பு***
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

ஹிட்லரும் அவரது பிரதிநிதிகளும்..........
கடந்த ஆக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி அன்புக்குரிய பராக் ஒபாமா அவர்களுக்கான ஒரு திறந்த மடலாக வரைந்திருந்தேன், சில அன்பு வாசகர்கள் போதிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என வேண்டிக்கொண்டனர்.
அதனை நிவர்த்திசெய்யுமுகமாக பலஸ்தீன மண்ணில் நடந்தேரும் இன்னும் சில நடப்பு நினைவுகளை, சோக சரிதைகளை, தினந்தோரும் ஓய்வில்லா ஓடும் இரத்த ஆற்றின் சில படங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர முனைகின்றேன்.
இவைகள் அடிப்படை மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டனவா?
அடிப்படைச் சுதந்திரங்ககளுக்கு அப்பாற்பட்டனவா?
ஏன் சக்திவாய்ந்தவர்கள் அமைதிகாக்கின்றார்கள்?
அநியாயங்கள் எல்லா காலங்களும் தொடராது என்பதுதான் உண்மை.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Subscribe to:
Posts (Atom)