மாற்றி எழுதப்படும் 9ம் திகதி (date for changes)

மாற்றி எழுதப்படும் 9ம் திகதி
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
லங்கை தேசம் என்றும் இல்லாதவாறு இந்த 2015க்கான ஜனாதிபதி தேர்தல் பொதுமக்களை வீரியப்படுத்தி விட்டிருக்கின்றது.
இலங்கை தேசம் பல்வேறு தேர்தல்களை சந்தித்திருக்கிறது, ஆனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலைப் போன்ற எதிர்நீச்சல்களும் பாய்ச்சல்களும் வேறு எப்போது நடந்ததில்லை.
தினம் ஒரு புதிய செய்தியாகவே எதிர் அணிக்கு ஆளும் அமைச்சர்களும் பிரமுகர்களும் தங்களது ஆதரவுகளை பிரகடப்படுத்தி வருகின்றனர்.
மொத்தத்தில் மக்கள் மாற்றத்தை வேண்டுகிறார்கள், மாற்றத்தை எதிர்பாக்கின்றார்கள் என்பது மட்டும் சுருக்கமாக சொல்ல முடியுமாக இருக்கின்றது.
குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருதல்,
சர்வதிகார சரித்திரத்திற்கு சாவுமணி அடித்தல்,
விலைவாசிக்கெதிரான குரலாக மாறுதல்,
ஊளழுக்கெதிரான ஆட்சியை நிருவுதல்,
மொத்த இலங்கைக்குமான அபிவிருத்தியை ஊக்குவித்தல்,
உயர்ந்திருக்கும் இனவாதம் மதவாத்திற்க்கெதிரான ஆட்சி மாற்றத்தை கொண்டுவருதல் என்று தொடர்கின்றது மக்கள் கோக்ஷங்கள்.
நம் சமூகத்தைச் சார்ந்த சில சில்லைறை அரசியல் வாதிகள் மட்டும் தங்களது சுயநலனை கவனத்தில் கொண்டு தொடர்ந்தும் சால்வை தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் 8ம் திகத்திற்கு முன்னர் அவர்களில் சிலர் துள்ளி குதிப்பர் என்பதும் தின்மம்.
வருகிற 9ம் திகதி இலங்கை வரலாற்றை மாற்றி எழுதும் ஒரு நாளாக விடிய ஒன்றிணைவோம்,
இனவாத, குடும்பவாத அரசியல் தோற்கடிக்கப்பட்டு மக்களுக்கான அரசு ஒன்றை உருவாக்க‌ முன்வருவோம்.

இஸ்ஸதீன் றிழ்வான்
ஆசிரியர் ‍ "என் மகன் ஒரு லீடர்"
ஆய்வு மாணவன் University of Wolverhampton, UK

No comments: