போர்முனையிலிருந்துகொண்டு .........

போர்முனையிலிருந்து கொண்டு உங்களுடன் தொடர்புகொள்வது -இஸ்ஸதீன் றிழ்வான்,


அன்பின் கல்விமான்களே, கடமையுணர்வு படைத்தவர்களே, அனுபவசாலிகளே, மார்க்க அறிஜர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலில்லாஹி வபரஹாதுஹு,

இன்று அனைவருடைய கையிலும் Internet, Magazines, News papers, Radio and TV channels,  என்று பலவகையான ஆயுதங்களை தாங்கிய ஆயுத தாரிகளாகவே இன்று அனைவரும் உளாவருகின்றார்கள்.

குறிப்பாக எல்லோருக்கும் மிக அதிகமாக கிடைக்கும் பலமான ஒன்றுதான் internet

இதற்கு முஸ்லிம், இந்து அல்லது கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் சிறியவர் பெரியவர் அல்லது படித்தவர் படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த ஆயுதங்களில் ஒன்றை அல்லது அனைத்தையும் சுமந்திருக்கின்றார்கள்.

ஆனால் அண்மைக்காலமாக நான் கண்ட அனுபவத்தில் முஸ்லிம்கள் தாங்கள் வைத்திருக்கும் Internet, Magazines, News papers,  Radio and Tv channels ஆயுதங்களை சரியாக, உரிய நேரத்தில் உரிய விதத்தில் பயன்படுத்த தவரிவிடுகின்றார்கள்.


அன்பின் நண்பர்களே !!

சில இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்தால் கவலையாக இருக்கின்றது.

முஸ்லிம்களையும் இஸ்லாமிய சட்டங்களையும் கொச்சைப்படுத்துவதிலும் முக்கியமான அகீதாக்களில் சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் முஸ்லிமல்லாதவர்களும் தங்களுடைய இந்த இணையத்தளம் என்கின்ற ஆயுத வசதிகளை ப்பயன்படுத்தி தாக்குவதை என்னால் பார்க்கமுடிகின்றது.

நாம் facebook, skype, yahoo massager, gmail, hotmail chat என்று சாட்டையடிப்பதிலேயே எங்களது நேரங்களை கடத்துகின்றோம், எங்கு, என்ன நடக்கின்றது என்பது குறித்து, எமது சமூகத்தை எப்படி ஒரு சமூகம் திட்டமிட்டு தாக்குகின்றது என்பதை தேடிப்பார்க்க, அவர்களை இணங்கண்டு உரியவிததில் பதிலளீக்கும் கடமையுணர்வும் பொருப்புணர்வையும் புரிந்துகொள்ளாமல் காலம் கடத்துகின்றோம்.

இஸ்லாத்திற்கு வெளியே நின்றுகொண்டு www.sengodiwordpress.com என்ற ஒரு பக்கம்,

அது போல்

முஸ்லிம் பெயர்தாங்கியாக இருந்துகொண்டு

www.azeezahmedwordpress.com

www.nagoreflesh.blogspot.com என்று பல பக்கங்களை அறிமுகப்படுத்தாலாம்.

இவர்கள் தவிற ஆரம்பகாலங்களில் கொள்கை பேசுகின்றோம் என்று தெளஹீத்வாதிகளாக தங்களை விளம்பரப்படுத்திய சிலர் மார்க்கத்திற்கு மாற்றமான அகீதாவை முழுமையான செயல்களை செய்யும் சில அமைப்புக்களுடன் வால் பிடித்துச் செல்வதையும்,

இன்னும் சிலர் மார்க்கம் பேசுவதற்காக அரசியல் கட்சிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு இலாபம் தேடுவதையும் பார்க்க முடிகின்றது.

அன்பின் சாகோதர்களே !!

இவைகளை பட்டியலிட்டு பார்க்கின்ற போது இவர்கள் அனைவரும் இஸ்லாத்தை மாசுபடுத்துவதற்கு வெளிவந்த சிந்தனை ரீதியான ஆயுத தாரிகளாகும்.

இவர்களுடைய பக்கங்களை திறந்து பார்க்கின்ற போது,

இவர்களுடைய நடத்தைகளை கவனிக்கின்ற போது நாம் மிகப்பெரிய யுத்தத்தை சந்திப்பதாக பார்க்க நேரிடும்.

வாருங்கள்

ஒன்று சேருவோம்.


வேசம்போடும் மோசமானவர்களை முதலில் களைவோம்.

சமூகத்திற்கு அடையாளப்படுத்துவோம்.

சிந்தனை ரீதியாக இவைர்களை விரட்டியடிப்போம்.

உங்களை அழைத்து உங்கள் அழைப்புக்காக காத்திருக்கின்றேம்.

உங்கள் சகோதரன்.

 
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: