தீ மிதித்தல் ஒரு ஏமாற்று நாடகம்


மாற்றங்கள் தேவை - சுவை 26
ண்டைய காலம் முதல் நெருப்பை வழிபடுபவர்கள் இருந்து வருகின்றார்கள். அதே போல் சூரியன், சந்திரன் போன்றவற்றையும் சில இனக் குழுக்கள் வணங்கி வழிபடுகின்றன.
நெருப்பை வணங்கும் வழிபாடு நபி (ஸல்) அவர்கள் வருகை தரும் போது, பாரசீக சாம்ராச்சியத்தில் கூட இருந்துள்ளது என்பதை நபிகளாரின் சில பொன் மொழிகளும் சல்மான் அல் பாரிஸி என்ற நபித்தோழரின் வரலாறும் உறுதிப்படுத்துகின்றன 
இந்துக்கள் மாரியம்மனின் அருள் வேண்டி அவர்களின் சாமியை நினைத்து தீ மிதிக்கின்ற  கலாச்சாரத்தை மத வழிபாடாகச் செய்து வருகின்றனர்

பக்தியின் பெயரால்  சில தாய்மார்கள் கையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீயில் ஓடும் போது, அது தவறி தீயில் விழுந்துவிட்டால் குழந்தையின் கதி என்னவாகும் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. 
நெருப்பை வணங்குபவர்களும், இந்துக்களும் ஷீஆ மதத்தினரும் தீ மிதிப்பதை வழிபாடாகச் செய்து வருகின்றனர். தீ மிதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக மக்கள் ஒன்று கூடவும் செய்கின்றனர். அதனால், தீயை வழிபடுபவர்கள் இதை ஒரு திருவிழாவாக ஆக்கிவிட்டனர்.
ஜப்பானில் யாகுவோயின் கோவிலில் அஹிம்சை பேசும் பவுத்தர்களும் தீ மிதிக்கின்ற காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம். 


தீயை மிதிப்பதற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை கல்லூரிகளில் மாணவ - மாணவிகளால் நடாத்தப்படும் கலைவிழாக்களில் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

 இதிலிருந்து தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம என்பது தெளிவாகிறது. 


ஒரு கம்பெனியில் வைக்கப்பட்ட விளையாட்டு போட்டியில் தீ மிதிக்கும் இளம் பெண்

இது பக்தியின் பெயரால் நடத்தப் படவில்லை. மாறாக  கலை நிகழ்ச்சியாக நடத்தப் பட்டுள்ளது.அடுத்ததாக பூச்சட்டி எனப்படும் தீச்சட்டியின் கதையைப் பாருங்கள். இங்கே ஒரு பெண் கோவிலில் பக்தியுடன் தீச்சட்டி தூக்குகிறாள். ஆனால், அடுத்த படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு கல்லூரி விழாவில் தீச்சட்டியை தலையில் வைத்து ஒரு கல்லூரி மாணவி ஆடுகிறாள். இங்கே பக்தி இல்லை. சாதாரண நிகழ்வே.

இவ்வாறு பக்தியின்றி தீ மிதிப்பதையும் தீச்சட்டியை கையில் தூக்கிக் கொண்டு நடனமாடுவதையும் பார்ப்போருக்கு இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மனிதனுடைய உடலுறுப்புக்களில் உள்ளங்கையும் உள்ளங்காலும் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் உள்ளதாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. எரியும் விளக்கில் விரலை நீட்டி நீட்டி எடுத்தால் ஒன்றும் செய்யாது. தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருந்தால் தான் சுட்டுப் பொசுக்கும் வாயால் நெருப்பை ஊதி ''இது ஒரு சாகசம் மட்டுமே" என செய்து காட்டும் இளம் பெண் மற்றும் இளைஞர் இருக்கின்றார்கள்.
கிராமத்துப் பெண்கள் கூட ஓர் அடுப்பிலுள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் சர்வசாதாரணமாகப் போடுவதை அவதானிக்கலாம். வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலுள்ள உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால் தான் பொசுக்குமே தவிர, நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் அல்லது வேகமாக நடந்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும். இதன் காரணமாகத்தான் கடவுள் மறுப்பாளர்கள் இதைச் சர்வசாதாரணமாகச் செய்து காட்டி, இதற்கும் கடவுள் பக்திக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்திலுள்ள சில அறிவீனர்கள் இந்த பிற மத தீமிப்புக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டுள்ளனர். அதனால், இஸ்லாத்தில் இல்லாத கர்பலா தினத்தில் தீ மிதிப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
நெருப்பு வணக்கம் பாரசீகத்தை தலமாகக் கொண்டுள்ளமையினால், ஷீஆயிஸமும் பாரசீகத்தைத் தமாகக் கொண்டு துளிர்விட ஆரம்பித்தது. அதனால், ஷீஆயிஸத் தாக்கம் காரணமாக சிலர் தீமிக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகின்றனர். 
பருவ வயதுப் பெண்கள் சிலர் தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் தீக்குளிப்பதாக நேர்ச்சை செய்து, மாப்பிள்ளை கிடைத்தவுடன் வயதுப் பெண்ணும் அவள் தாயாரும் முஹர்ரம் மாதப் பஞ்மாவுக்கு வந்து தீக்குளிப்பு நடத்துகின்றனர்
.அதே போல் கோயில் திருவிழாவில் தீமிதிப்பு நடைபெறுவது போன்று, முஹர்ரம் பத்து அன்று ஷீஆயிஸவாதிகள் தீமிதிக்கும் பழக்கத்தையும் நடை முறைப்படுத்திவருகின்றனர்.

முஹர்ரம் பத்தில் தீ மிதிக்கும் முஸ்லிம்கள்(!?)
முஹர்ரம் பத்து அன்று கர்பலாவில் ஹூஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதற்குத் துக்கம் அனுஷ்டிப்பதாக இவர்கள் நினைக்கின்றனர். தமது பாவம் இதன் மூலம் நீங்குவதாகவும் எண்ணுகின்றனர்.

ஒருவருடைய சுமையை மற்றவர்கள் சுமப்பது என்ற நம்பிக்கை கிறிஸ்துவ மதத்திலுள்ள கொள்கை. இஸ்லாம் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்றது.
         
وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى6:164  ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்' அல் குர் ஆன் (6 : 164)
தீ மிதித்தல் ஓர் அந்நிய கலாச்சாரம். இதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது
எனினும், அறியாமையின் காரணமாகச் செய்து வருகின்றனர். எல்லோராலும் செய்ய முடியுமான சாதாரண ஒரு விடயத்தை மதச் சாயம் பூசி அசாதாரண ஒரு விடயம் போல் காண்பிக்கின்றனர்.
கடவுள் அருளால்தான் இதைச் செய்கின்றனர் என்று இவர்கள் நம்பினால், தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்ட வேண்டும். அல்லது பத்து வினாடிகள் உட்கார்ந்து காட்ட வேண்டும். இதற்கு தீ வணங்கிகள் முன்வருவார்களா?  
ஒருபோதும் முன்வரமாட்டார்கள்.  இதிலிருந்தே இது ஒரு ஏமாற்றுவேலை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.   
மூடநம்பிக்கைகளை ஒழித்து, இஸ்லாத்தின் இளம் நிழலில் அனைத்துத் துறைகளையும் தழுவிய  ஒரு சமூக  மாற்றங்கள்  தேவை என்பதற்காக  இதனையும் இங்கு பதியவைத்திருக்கின்றோம்.


                                                     - அபூ ஹம்னா ஸலபி -

 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை. ஆனால் இது 20 வருடத்திற்கு முன்னால் வர வேண்டிய கட்டுரை. முஸ்லிம்கள் தீ மிதிப்பதை தற்போது எங்கும் பார்க்க முடியவில்லை. ஆனாலும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். அன்புடன், களிமண்

sathish said...

நாய் நீ உன் குண்ணையில் தண்ணி இருந்தால் வா என்னுடன் தீ மிதிக்க?

sathish said...

நாய் நீ உன் குண்ணையில் தண்ணி இருந்தால் வா என்னுடன் தீ மிதிக்க?

sathish said...

நீ நல்ல நாயா இருந்தா என்கூட வா நாய முடியுமால உன்னால? கால் பண்ணுல நாய 7094759495

sathish said...

Cal pannula vaa yenkuuda un paathi kaal posungalannaa paakkalaam votthukkeriya?