இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" - 04

 
சான்று ஒன்பது:

"ஒரு மனிதன் சொல்ல நினைத்ததிலிருந்து எந்தத் தீர்க்கதரிசனமும் வந்ததில்லை, ஆனால் மக்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு தேவனிடமிருந்து வந்த செய்திகளைக் குறித்துப் பேசினார்கள் ( 2 பேதுரு 1 : 21) 
                                                         வழிநடத்தவென அனுப்பப்பட்ட தீர்க்கதரசிகளால் மக்களை வழிநாடத்த முடியாமல் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டார்களாம்.

சான்று பத்து:

"அவர் பெரியவராய் இருப்பார், மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர், அவரது முன்னோராகிய தாவிதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். சதாகாலமும் யாக்கோபின் மக்கள் மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒரு போதும் முடிவுறுவதில்லை” என்றான்.         (லூக்கா 1 : 32 33)                                                                                                                                                                         
அப்படியென்றால் யார் இப்போதும் இஸ்ரேலை ஆட்சி செய்வது?                                               ஏன் கடவுள் வசனம் பொய்பிக்கப்படுகின்றது?

இயேசு கிறிஸ்து வேறு ஒரு இடத்தில் சொல்லுகின்றார்                                                    “எனது குடியரசு, ஆட்சி இந்த உலகத்தில் இல்லை” என்று சொல்லும் வசனமும் இந்த மேல் சொல்ல வசனத்தை பொய்பிப்பதாக அமைகின்றது.

சான்று பதினொன்று:
"அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது, அத்தாடையெலும்பால் அவன் 1000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.”                                                                                                                                                                   (நியாயாதிபதிகள் 15 : 15)

ஏற்கனவே நாம் சொன்னதுபோல ஒரு விபச்சாரியுடன் போன அந்த சிம்சோன் என்கின்றவர் இங்கு அதே அவர் ஒரு கழுதையின் தாடையெலும்பால் 1000 பலஸ்தீனர்களை கொலைசெய்கின்றார். பின்னர் அது குறித்து ஒரு பாட்டும் பாடுகின்றார்,

பின்பு சிம்சோன் ஒரு கழுதையின் தாடையெலும்பால்  1000 பேரைக் கொன்றேன்!         கழுதையின் தாடையெலும்பால் அவர்களை ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்என்றான்.                                                                                (நியாயாதிபதிகள் 15 : 16)
  
அதே சிம்சோனின் அடுத்த சாதனையைப் பாருங்கள்;
”பின்பு சிம்சோன் வெளியே சென்று 300 நரிகலைப் பிடித்தான். அவற்றை இரண்டு இரண்டாகச் சேர்த்து அவற்றின் வாலைக் கட்டி, வால்களுக்கிடையில் நெருப்புப் பந்தத்தை வைத்தான். பின்பு சிம்சோன் அவற்றைக் கொளுத்தி வாலில் நெருப்பு வைக்கப்பட்ட அந்நரிகளைப் பெலிஸ்திரியரின் தானியங்கள் விளையும் வயல்களுக்கிடையில் துரத்தி விட்டான். இவ்வாறு அவர்களின் வயல்களில் விளைந்து கொண்டிருந்த பயிர்களில் விளைந்து கொண்டிருந்த பயிர்களையும், அறுவடை செய்து தனியே குவித்து வைத்த கதிர்க்கட்டுகளையும் நெருப்பால் அழித்தான். மேலும் திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எரித்தான்.                                                                      (நியாயாதிபதிகள் 15 : 4 5) 

இந்த வசனங்களினூடாக மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தியாக பார்க்கமுடிகின்றது.
150 ஜோடு நரிகளை சிம்சோன் என்கின்ற தனியாக ஒரு மனிதன் பிடித்து இணைத்து நெருப்பிட்டு அனுப்புவது என்பது எவ்வாறு?
எந்தளவு அறிவுபூர்வமானது? 

சான்று பனிரெண்டு:

மன்னரின் மகளை திருமணம் செய்வதற்கு என்ன செய்தார் ஒரு கிறிஸ்துவர் என்பதை பாருங்கள்:
“எனவே தாவிதும் அவனது வீர்ரகளும் உடனே பெலிஸ்தியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டுவந்து சமர்ப்பித்தான். அரசனின் மரு மகனாக விரும்பினபடியால் தாவிது இதைச் செய்தான். தன் மகள் மீகாளை தாவிது மணந்துக் கொள்ள சவுல் அனுமதித்தான்.”                   (1சாமுவேல் 18 : 27)

எனது மகளை அடைவதாக இருந்தால் 200 பலஸ்தீனர்களின் நுனித்தோலைக்கொண்டுவர வேண்டும் என்கின்ற மன்னரது உத்தரவுக்கிணங்க சரியாக 200 பேரை கொலை செய்தார்.            எப்படி இது சாத்தியமாகும்?
யுத்தகலத்திலுள்ள படைவீர்ரகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் முக்கியமான ஒன்றை இங்கு கவனியுங்கள்:                                                                                 ”எந்தவொரு மனிதனோடும் பாலிய உறவு கொள்ளாத இளம் பெண்ணை )Virgin) மட்டும் வாழவிடுங்கள்”                                                                                          (எண்ணாகமம் 31 : 18)

இவ்வாறு கட்டளை கிடைத்தபின்னர் அவர்கள் பிடித்த கன்னிப் பெண்களின் எண்ணிக்கையை புனித பைபிளில் தேவர் இப்படிச் சொல்லுகின்றார்;

(32000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.”                                        (எண்ணாகமம் 31 : 35)           
கடவுள் இப்படியொரு கட்டளையை இருவாரா?
”வீர்ரகள் 16000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.”                                                                     (எண்ணாகமம் 31 : 40) 

கட்டளைக்கினங்க அந்த கைப்பற்றப்பட்ட கன்னிப் பெண்களில் 32 பேரை கர்த்தருக்குக் கொடுத்தார்கள், என்றால் அவர்களை ஏன் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்?   
அவர்களை கர்த்தர் என்ன செய்திருப்பார்?

அதனால் தான் அல்லாஹ் திருக்குர் ஆனின் இவ்வாறு சொல்லுகின்றான்:
"தம் கைகளால் நூலை எழுதி,  அதை அற்ப விலைக்கு விற்பதற்காக 'இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுஎன்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.    (அதன் மூலம்) சம்பாதித்தற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.”                                                                        ( அல் பகறா 2 : 79)

முகம்மது (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து பிரதிசெய்து தான் அல்  குர்ஆனை எழுதியுள்ளார் என்றும் 75 வீதம் பைபிள் செய்திகள் இடம்பெருகின்றது என்றும் பைபிள் அறிஞர் என கிறிஸ்துவ மக்களால் சொல்லப்படும். அனிஸ் செரோஸ் அவர்கள் சொல்லுகின்றார்.
அப்படியானால், பைபிளில் 10 முறைதகாப் புணர்ச்சி முறைகள் (incest) சம்பவங்கள் இந்த புனித பைபிளில் இடம்பெற்றுள்ளது. (உதாரணமாக தந்தை தனது மகளுடன், தாய் தனது மகனுடன், சகோதரன் தனது சகோதரியுடன் உடலுறவு கொள்வதைத்தான் இவ்வாறு incest என்று சொல்லப்படும்). அப்படியானால் முகம்மத் (ஸல்) ஏன் அந்த 10ல் ஒன்றையாவது பிரதிசெய்து அல் குர்ஆனின் பதியவில்லை?

அதனால் தான் இங்கிலாந்தில் ஒரு பெண்: "ஆபாசம் நிறைந்த பைபிள் தடைசெய்யப்பட வேண்டும்" என்று குரல் கொடுக்கின்றால்.

இன்னொருவர் ஜோர்ஜ் பெர்நாட் சோ என்பவர் சொல்லுகின்றார், ”உலகில் மிக ஆபத்தான பொட்டியில் பூட்டி வைக்கப்பட வேண்டிய பிள்ளைகளின் கையில் கிடைக்ககூடாத ஒரு புத்தகமாக பைபிள் இருக்கின்றது.”

அவ்வாறு பைபிளை முகம்மது (ஸல்) அவர்கள் பிரதிசெய்வதாக இருந்தால் அதிலுள்ள ஆபாசங்கள், மோசமான செய்திகளையெல்லாம் சேர்த்து பிரதிசெய்திருந்தால் அன்றைய அறபுகளிடத்தில் எந்த எதிர்ப்பையும் பெறாத அவர்களின் விருப்பத்திற்குரிய கதாநாயகனாக மாறியிருப்பார்.

 தொடர்ந்தும்............ 

தொடர் -02

தொடர் - 01 

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: