இலங்கையின் புதிய அமைச்சுப் பொருப்புக்கள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சற்று முன்னர் 60 அமைச்சர்களும் , 31 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

அவர்களில் முஸ்லீம்களாக நான்கு சிரேஷ்ட அமைச்சர்களும் நான்கு பிரதி அமைச்சர்களும் அடங்குவர்.

சிரேஷ்ட அமைச்சர்கள்:
.எச்.எம்.பௌசி –      நகர அலுவல்கள்
.எல்.எம்.அதாவூல்லா –  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
ரிசாட் பதியூதீன் –       கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள்;
ரவூப் ஹக்கீம் –          நீதி

பிரதி அமைச்சர்கள்:
பைஸர் முஸ்தபா –        தொழில்நுட்பம் மற்றம் விஞ்ஞானம்
எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
பஷீர் ஷேகு தாவூத் –      கூட்டுறவூ மற்றும் உள்ளக வர்த்தகத் துறை
அப்தல் காதர் –           சுற்றாடல் துறை

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் முன்னைய ஆண்டுகளை விட இது மிக மேசமான நிலையாகும் என்பதை இந்த எண்ணிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி தண்ணீர் ஊற்றி வளர்த்த மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பிரியாவிடைக்குப் பிறகு ஏற்பட்ட இடைவெளி மிகக் கேவலாமான சூழலை உருவாக்கி இருக்கிறது என்பது எல்லா ஊடகங்களிலும் காணக்கிடைக்கும் ஒரு செய்தியாகும்.

இன்றைய இந்த நிலை, முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு மற்றும் உரிமைக்கான ஒன்றிணைந்த தேவை என்பவற்றின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால் அமைதியும் அபிவிருத்தியும் சுழல ஆரம்பித்திருக்கும் இந்த புதிய ஜனநாயக அரசியல் முயற்சியில் வேருபட்ட இன மக்களுக்கிடையில் உரிமையும் சுதந்திரமும் பரவலாக பேணப்படுவதை நாம் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.

மறக்காமல் சொல்ல வேண்டிய இன்னொமொரு செய்தி, மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புக்களையும் ஏற்று பதியேற்றிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் சமூகத்தின் தேவையை உணர்ந்து தூய்மையான சேவையை வழங்க வேண்டும் என்பதே அந்த செய்தியாகும்.

“ஒரு சமூகம் கலாச்சாரம் மற்றும் பொருளாதரத்தில் முன்னேறி அரசியலில் வீழ்ந்துவிட்டால் அவர்களைப் போல் தோழ்வியடைந்த எந்த சமூகத்தையும் உலக வரலாற்றில் பார்க்க முடியாது போகும்.”

இந்த யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட எமது பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய், நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொல்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!                             (அல் குர்ஆன் 3 : 26)




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

shifa said...

Really happy to hear that there some Muslim ministers.
كلكم راع وكلكم مسئول عن رعيته، فالإمام راع ومسئول عن رعيته..
We have to ask duaa to give them Thaqwa and Ihlas . I hope they will provide good service to our community.

Anonymous said...

சகோதரர் ரிழ்வானின் ஆலோசனை காலத்தின் தேவையாகும்.** முனீர் அஹ்மத்