தம்புள்ளை பள்ளிவாயல் கதை மறக்கடிக்கப்படுமா?

வெள்ளிக்கிழமை (20-04-2012) இலங்கை தம்புள்ளையில் அமையப் பெற்ற ஹைரிய ஜூம்மா பள்ளிவாசல் பெளத்த பிக்குகளின் உயர்த்த சத்தங்களுடன் கூடிய தகர்ப்பு சம்பவ நிமிடம் தொட்டு ஒரு சில நாட்கள் உலகில் நாளா திசைகளிலிருந்தும் முஸ்லிம்களின் குரல் உயர்ந்து நின்றது.

சில தலைவர்கள் கண்விழித்து தன் சமூகத்தில் அவலத்தை காண ஆரம்பித்தார்கள்,

சில தலைகளுக்கு நேரம் இருக்கவில்லை.

சம்பவம் நடந்த ஒரு சில தினங்களாக பதவியில் இருந்த பலறும் மீடியாக்களில் முகம் காண்பித்தது அறிந்ததே.

அன்று விழித்துக்கொண்ட தலைவர்கள், சமூக பிறமுகர்கள் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தொடர்ந்தும் கலத்தில் இருக்கின்றார்களா?

பள்ளி இடிப்புக்கு பின் முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டது என்ன?
இலங்கையில் ஜம்மியத்துல் உலமா சபை என்று இயங்கிவந்த ஒரு சபை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்று ஒரு குட்டியை ஈன்றுக்கொண்டது மட்டும் தான்.

பள்ளியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று முன்வைத்த சமூக தலைவர்கள் அதே கருத்தில் இன்னும் இருக்கின்றார்களா?

பதவியில் இருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் விடயத்தை சாதிக்கும் வரை தொடர்தேர்ச்சியாக முயற்சிக்கின்றார்களா?

சம்பவ அன்று 100 வீதம் உயர்ந்த குரல் இன்று 10க்கு குறைவான விகிதமாக மாறி இருக்கின்றது.

காரணம்?

எங்கோ தவறு நடந்துவிட்டதா?

தனது சொந்த விவகாரங்களில் செலுத்தும் கரிசணை, ஆர்வம், ஊக்கம், ஏனோ அல்லாஹ்வின் மாளிகை தகர்க்கப் பட்டு, ஓரிரு நாற்களில் உலகை திசை திருப்பி ஓங்கி ஒலித்த குரல்கள், இன்று அடங்கி மடிகிறதெனில், நம் ஈமானிய பலத்தின் இலட்சணம் இதுவோ... என்று என்னத் தோணுகிறது???

தூங்கி எழுந்தவுடன் நேற்று நடந்தது மறந்துவிட்டதா?

காயம் ஏற்பட்ட இடத்தில் இரத்தம் வந்த போது மட்டும் மருந்து தேடிய நாம் ஏன் காயம் ஆரும் வரை மருந்தை நாடவில்லை?

அந்த காயத்தின் பாதிப்பு உடலின் வேறு ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை ஏன் உணரவில்லை.

பள்ளிவாயல் இருந்த இடத்தில் மீண்டும் நன்றாக கட்டும் வரைக்கும் அதற்கு அரசு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் எழுந்துநிற்க வேண்டும்.

இல்லை என்றால் இன்னும் சில பள்ளிகள் பட்டியலில் இணைக்கப்படும் என்பதை மறவாமல் இருப்போம்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

rezamohideen said...

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு. 3:77

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?
14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....