இனி தனிப் பெரும்பான்மை கிடைக்குமா......?இனி தனிப் பெரும்பான்மை கிடைக்குமா? – (இலங்கையில் முஸ்லிம்கள்)

லங்கை ஒரு எழுத்துமூல யாப்பைக்கொண்ட ஜனநாயக நாடு,

அது இலங்கையில் வாழும் பல்லின மக்களும் தங்களது முழு உரிமையையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் எழுதப்பட்ட சட்டக்கோவையாகும்.

பெரும்பான்மைச் சமூகமாக வாழும் பெளத்தர்கள்தான் இலங்கையை ஆளவேண்டும் என்பதும் இங்கு எழுதப்பட்டதுதான், அதை தமிழர்களோ முஸ்லிம்களோ தட்டிப் பரிக்கவில்லை. அதற்குத் தயாருமில்லை.
ஆட்சித் தலைகளை பொதுத்தேர்தல்களும் ஜனாதிபதித்தேர்தல்களும் மாற்றுகின்றன.

கடைசியாக பதவிக்கு வந்த, சமகாலத்தில் ஆட்சியில் அமர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கும் தலைமை இந்த நாட்டில் என்றும் இல்லாத மாற்றங்கள் பலதை பார்க்கச்செய்துவருகின்றது.

எல்லா திசைகளிலும் பாதை அபிவிருத்திகள், குக்கிராமங்களை மின்சாரத்தால் வெளிச்சமூட்டல், பாடசாலை தரமுயர்வுகள், புதிய பதிவி நியமனங்கள், புதிய அரச கட்டிடங்கள் என்று தொடர்கின்றன பாரிய செய்தி விளம்பரங்களுடன்.

இதுபோக, விளம்பரங்களற்று, நாம் விழித்துக்கொண்டிருக்கும் போதே இன்னும் சில திட்டங்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டி வருகின்றன, அது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுதான் அரங்கேற்றப்படுகின்றனவா? அல்லது ஒரு சில இனவாதிகளில் செயற்பாடுகளா என்று நான் விடைதேடுகின்றேன்.

அது என்ன?
முஸ்லிம் பள்ளிகள், மதரஸாக்களை தகர்த்தல்,                
முஸ்லிம் பள்ளிகள், மதரஸாக்களின் முழு விபரங்களை திரட்டுதல் போன்றன.
ஆனால் இது பற்றி பலராலும் எழுதப்பட்டு பேசப்பட்டு வருவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆனால் இங்கு தலைப்பு அதுவல்ல,

இனி தனிப் பெரும்பான்மை கிடைக்குமா? என்பதுதான்.

இலங்கையில் குறித்த சில நகரங்களில் தமிழர்கள் பெரும்பான்மைச் சமூகமாக, 100வீதம் தமிழர்களைக்கொண்ட நகரங்களாக, கிராமங்களாக காணப்பட்டன,

அதற்கென அரச அலுவல்கள், அதில் முழுமையாக தமிழினத்தைச் சார்ந்த அரச அதிகாரிகள், ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்கள், அந்த பிரதேசங்களுக்குள் நுழைந்தால் வெளியேறும்வரை தமிழர்களின் மதச் சடங்குகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மொழிகள் கண்களிலும் காதுகளிலும் இசைபாடிக்கொண்டிருக்கும்.
ஆனால் இப்போது அது இருக்கின்றதா?

இதுபோன்று தான் சில குறித்த கிராமங்கள், நகரங்கள் முஸ்லிம்களின் பெயர் பேசிக்கொண்டிருந்தன,

அனைத்தும் தனிப்பெரும்பான்மையாக காட்சிப்பட்டன.

நிர்வாகம், அதிகாரிகள், வணக்கஸ்தளங்கள் என்று எல்லாமே முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவையானவைகளுமாக இருந்தன.

பெளத்தர்கள் வாழும் கிராமங்களில் எப்படி கோவில்கள் இருக்கவில்லையோ அப்படி இந்துக்கள் வாழும் ஊர்களில் புத்த சிலைகள் இல்லை.

இலங்கையை முழுமையான புத்த நாடாக மாற்றமுனையும் சில சக்திகள் முடியுமானால் மக்கள் மனங்களை வென்று அதன் பின்னர் அவர்கள் வாழும் பிரதேசங்களில் புத்தர்சிலைகளை நிர்மாணிக்கட்டும்.

புத்தரை வழிபட பெளத்த மக்கள் இல்லாமல் அங்கு புத்தசிலைகளை கட்டியெழுப்புவதன் தேவை என்ன?

அப்படியானால் எப்படி புத்தள நகருக்குள் பெளத்த தூபி முளைத்தது? இது சிலரின் நீண்ட கால திட்டமிடலினால் முளைத்த பயிர்தான்.


இதன் பின்னணி, தேவை என்ன? இது போன்று இன்னும் பல வீதிகளில், ஊர்களில்…….

இது புத்தள வரலாற்றில் முன்பு இல்லாதது, இது தற்காளிமானதா?

புத்தள நகருக்குள் வடக்கிலங்கை அகதி முஸ்லிம்களின் வருகை பற்றி விமர்சித்த சில சமூக பிரதிநிதிகள் இந்த புதிய முன்னெடுப்புக்கள் குறித்து ஏதாவது பேசுவார்களா?

தனிப்பெரும் கிராங்கள் என்று தலை எழுத்தை அனைத்துத்துறைகளிலும் மாற்ற இந்த திட்டமிடல் துணைபோகும் என்பதை தெரிந்துகொள்ளுவோம்.
இதனால், இந்த குறித்த பிரதேசங்களில் நடக்கும் நாளைய தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படும், நாளைய கலை கலாச்சார நடைமுறைப் பாரம்பரிய நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படும்.

சுதந்தந்திரமாக, பொதுவாக சில நிகழ்வுகளை அரங்கேற்றிப்பார்க்கமுடியுமா?

இது தனிப்பெரும்பான்மை கொண்ட ஊர் என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?

சிந்திக்க வேண்டும், செயல்களில் மாற்றங்கள் சில செய்ய வேண்டும்.
1.   அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் விலை போகக்கூடாது.

2.   தனது கட்சி, தனது சீட் என்பதுக்கு அப்பால்இலங்கை முஸ்லிகள்என்ற மனநிலை ஓங்கவேண்டும்.

3.   போலி ஒற்றுமைக்கோக்ஷங்கள் வேண்டாம்.

4.   ஏற்றுக்கொள்ளப்பட்ட அகீதாவின் கீழ் ஒன்று திரள வேண்டும்,

5. இரு குழுக்களுக்கிடையில் மோதல் நடைபெரும்போது அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நம் சமூக நிருவனங்கள் தங்களது செயற்பாடுகளை மாற்ற வேண்டும்.

6. எங்கோ நடக்கும் உள்நாட்டு யுத்தங்களில் தங்களது தலையை நுழைத்துக்கொண்டு, அது சரியா பிழையா? அது குறித்து அறிஞர் யூசுப் கர்ளாவி என்ன சொல்கிறார் அல்லது அவர், இவர் என்ன சொல்கிறார்கள் என்பதில் முழு நேரத்தையும் செலவிடுவதை கொஞ்ச நேரம் ஒதுக்கிவைத்து விட்டு நாம் வாழும், நம்மைச் சுற்றிய சூழல் என்ன நிலையில் உள்ளது? நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் என்ன தேவைப்படுகிறது? என்பதில் கவனம் செலுத்த வாருங்கள்.

7.   நமது தலை எழுத்துக்கள் நம் கைகளால் மாற வேண்டும்.

சமூக மாற்றம் வேண்டும் என்பதற்காக மட்டும் எழுத்தை உயர்த்துகிறது மாற்றங்கள் தேவை

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

rezamohideen said...

dear muslim plz join our party.dear bro asalmau alaikum.plz join our last true islamic effort fr unity n pure islamic politics fr allah swt jazakklah hair.ourpart link is-http/www.facebook.com/pages/international-justiceshareeah-party/209861559055257?ref=ts+sk=wal

rezamohideen said...

we need to create true islamic politicians following prophetic way personally n politically.insha allah

Issadeen Rilwan said...

இலங்கையில் முன்பெப்போதும் இல்லாத விதத்தில் ஆங்காங்கே பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன,

அவைகள் தனிப்பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் கிராமங்களில் இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்
http://changesdo.blogspot.com/2012/06/blog-post.html

Anonymous said...

http://www.jaffnamuslim.com/2012/07/blog-post_8988.html