மாற்றத்தை தந்திருக்கிறதா? இந்த புனித ரமழான் மாதம்?
நேற்று, இன்று,
நாளை என்று நம்முடைய நாட்களை பரிச்சித்துப்பார்க்க நல்ல தருனம் இது.
ரமழானுக்கு முன்
(நேற்று), ரமழானின் போது (இன்று), ரமழானுக்கு பின் (நாளை) என்று மூன்று காலங்கள் நமக்கு
இருக்கின்றன.
நம்மை வந்து சென்ற,
சந்தித்துச் சென்ற புனித ரமழான் மாதம் எமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றதா?
இது ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும்
எழவேண்டிய ஒரு கேள்வி.
எமது நடத்தை, செயற்பாடுகளில்
என்ன மாற்றம் ஏற்பட்டது? அன்றாட வணக்க வழிபாடுகளில் என்ன மாற்றம் வந்திருக்கிறது? என்பதை
கவனத்தில்கொண்டு நாம் எதிநோக்கும் அடுத்தடுத்த நாட்களை கடத்த முன்வரவேண்டும்.
காரணம் அல்லாஹ்
மாற்றத்தையே முழுமையாக எதிர்பார்க்கின்றான்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment