கண்ணீர் சிந்தும் எழுத்தாளர்கள்........
இன்றைய சூழலில் சமூக நடத்தைகளை, அரசியல் அகங்காரங்களை பற்றி
எழுதுகின்ற ஒவ்வொரு சமூக எழுத்தாளர்களும் கண்ணீர் சிந்திக்கொண்டே தங்களுடைய கட்டுரைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.
நீதி, சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கான உண்மையான மீனிங் மாற்றப்பட்டதனால்
அதை எப்படி சொல்லுவது என்று தெறியாமல் கண்ணீர் சிந்துகின்றோம்,
நீதிக்காக போராடும் போராளி சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதி என
சீல் குத்தப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறான்,
அதை எழுதினால் எழுதியவன் குற்றவாளி,
அதை பேசினால் பேசியவன் குற்றவாளி,
அதை ஆதரித்தால் ஆதரித்தவன் குற்றவாளி,
தான் வாழும் வீடு அநியாயமாக தட்டிப்பறிக்கப்பட்ட போது அதை கேற்க
முனைந்தால் அவன் பயங்கரவாதி,
அதற்காக குரல் கொடுத்தால் அவன் குற்றவாளி,
உண்மையான பயங்கரவாதி அமைதிக்கான சர்வதேச விருதுவாங்கி முக்கிய
பிரதிநிதியாக வாழுகின்றான்,
உண்மையாக உரிமைக்காக போராடியவன் பயங்கரவாதியாக தூக்கிலடப்படுகின்றான்,
இந்த நாளாந்தச் செய்திகளை எந்த தலைப்பிட்டு எழுதுவதென்றே தெரியாமல்…..
இப்படியாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அநீதிகளை எழுதும் போது
எழுத்தாளர்களாகிய நாங்கள் அழுகின்றோம், கண்ணீர் சிந்துகின்றோம் தனிமையில்,
பொதுமக்களே, தலைவர்களே!! நீதிக்கு என்ன விலை? எங்கே கிடைக்கும்
சொல்லுங்கள் எங்கள் அழுகையை நிறுத்திக்கொள்ள.
அல்லாஹ் போதுமானவன்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment