தேசிய ஷூறா சபை என்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!


தேசிய ஷூறா சபைஎன்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!

1. இலங்கை நாட்டில் ஜம்மியத்துல் உலமா என்ற பெயரில் நாடுமுழுவதுமுள்ள உலமாக்களை உள்ளடக்கிய பழமைவாய்ந்த ஒரு அமைப்பு இருக்கும் போது தேசிய க்ஷூறா சபை என்ற ஒரு அமைப்பின் தேவை என்ன?

2. இந்த சிந்தனையை முன்வைப்பவர்கள் இதற்கு முன்னர் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையின் தீர்வுக்காக குரல்கொடுத்தவர்களா? குறைந்தது ஒரு ஆர்ப்பாட்டதிலாவது பங்குகொண்டுப்பார்களா?

3. இதற்கு பின்னர், இப்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வைப்பெற்றுத்தர குரல்கொடுத்து வருகின்றார்களா?

4. ஜம்மியத்துல் உலமா சபையில் உயர்பதவிகள் கிடைக்காத பல தலைகள் இந்த தேசிய க்ஷூறா சபை என்ற ஒரு சிந்தனையை முன்வைப்பதன் மூலம் தாங்கள் உயர்ந்த பதவிக்கு தயாராகின்றார்கள் என்று கருத்துக்கொள்வது தவறில்லை தானே?

5. முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க ஆரம்பிக்கும் இந்த அமைப்பில் ஏன் தரீக்கா வாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டும்?

6. கடந்த காலங்களில் ஜம்மியத்துல் உலமா சபை சீய்யாக்களுக்கெதிராக குரல் கொடுத்த போது தேசிய க்ஷூறா சபை என்ற சிந்தனையை முன்மொழியும் சிலர் ஈரான் தூதுவரகத்துடன் இணைந்து பல சீய்ய சித்தாந்தவியல் நிகழ்வுகளில் போஸ்கொடுத்ததை எந்த கணக்கில் கொள்வது?

7. எந்த நோக்கத்திற்காக தேசிய க்ஷூறா சபை என்ற ஒன்றை அமைக்கப் போகிறீர்களோ அதே நோக்கத்தையும் எண்ணத்தையும் ஏன் ஜம்மியதுல் உலமா சபை மூலம் நிறைவேற்ற முடியாது?

8. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பள்ளிகட்டுதல், கிணறு கட்டுதல் மற்றும் வெளிநாட்டுப் பணத்தில் முட்டிபோடுகிறவர்கள் என்று விமர்சித்தவர்கள் அவர்களே அந்த பணியை தலையாய பணியாக செய்து வருவது போல,
ஜம்மியதுல் உலமா என்ற அமைப்பில் உயர்பதவிகளில் இல்லாதவர்கள் தேசிய க்ஷூறா சபை என்ற ஒன்றுக்கு தயாராகும் போது இந்த இரண்டிலும் இல்லாதவர்கள் நாளைக்கு மூன்றாவது ஒரு அமைப்பை தோற்றுவித்தால் எப்படியான பதிலை அவர்களுக்கு வழங்குவீர்கள்?

இந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் போது இன்னும் சில முக்கியமான பிரச்சினைகளை வைக்கத்தயாராக இருக்கின்றேன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

rashad said...

உத்தேச தேசிய ஷூரா சபை குறித்து :
சுருக்கமாக கூறின் இது ஒரு 1001 ஆவது அமைப்பு அல்ல, தற்போது இருக்கின்ற அமைப்புக்களை முஸ்லிம் தேசிய விவகாரங்களை கையாள்வதற்காக உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறிமுறையாகும்.

தேசிய அளவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்க வழி காட்டலுடனும் ஒத்துழைப்புடனுமேயே உத்தேச தேசிய ஷூரா அமையும். அதேபோன்று முஸ்லிம் கவுன்ஸில் உற்பட தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சகல் அமைப்புக்களையும் தேசிய ஷூரா ஒருங்கிணைக்கும்.

சமூகத்தில் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களையும் தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் உள்வாங்குகின்ற ஒரு பொறிமுறையுமாகும்.

உத்தேச தேசிய தற்பொழுது சமூகத்தில் இருக்கும் எந்தவொரு சன்மார்க்க,சிவில் அரசியல் தலைமைகளையோ ,இஸ்லாமிய தாவா அமைப்புக்களையோ தொண்டர் நிறுவனங்களையோ பிரதியீடு செய்யும் புதியதொரு அமைப்புமல்ல.

எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழோ அல்லது மேலோ அல்லது அரசியல், இயக்க நிகழ்ச்சி நிரல்களின் ஆதிக்கத்தின் கீழோ தேசிய ஷூரா அமைய மாட்டாது.

நேரடியாக அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதில் இடம் பெற மாட்டார்கள், ஆனால் குழுநிலை பிரதிநிதித் துவத்தை அவர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் ஆராயப் பட்டு வருகின்றன.

பொதுவாக தற்பொழுது சமூகத்தில் இருக்கும் அமைப்புக்களினால் தனித்து முகம் கொடுக்க முடியாத அல்லது சுமக்க முடியாத விவகாரங்களை சகல தரப்புக்களும் இணைந்து பொறுப்பேற்கின்ற ஒருங்கிணைப்புப் பொறிமுறையாகும்.


தேசிய ஷூரா மஹல்லா மட்டத்திலிருந்து ஆரம்பித்து , சனத்தொஅகி செரிவிற்கேற்ப பிரதேச செயலாளர் பிரிவு அல்லது மாவட்ட மட்டம் முதல் தேசிய மட்டம் வரை ஒருங்கிணைப்புப் பொறிமுறையினை கொண்டிருக்கும்.

இந்த இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் உத்தேச தேசிய ஷூரா சபை அமையப் பெறின் தமது பணியை நிறைவு செய்துகொள்வர், பணியின் தூய்மை கருதி தேசிய ஷூராவில் இடம் பெறுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஷூராவின் கட்டமைப்பு, யாப்பு, நிர்வாகம், செயலகம், நிதிநிர்வாகம், உறுப்பினர் தகைமைகள் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் தற்பொழுது நிபுனர்த்துவ ஆலோசனைகளுக்கு உற்படுத்தப் பட்டு விரிவாக பல்வேறு தரப்புக்களுடனும் ஆராயப்படுகின்றன. இறுதி வரைவு விரைவில் அமைய விருக்கும் இடைக்கால தேசிய ஷூரா சபையிடம் கையளிக்கப் படும். இன்ஷா அல்லாஹ்.

இறுதியாக தனிப்பட்ட முறையில் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஒருசிலரை அல்லது இதற்கு ஆதரவு வழங்கும் பிரபலங்களை அல்லது தரப்புக்களை காரணமாக வைத்து உத்தேச தேசிய ஷூரா எனும் மகோன்னதமான வரலாற்றுப் பணியை விமர்சிக்க வேண்டாம் என சிலரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நல்ல உயரிய பணிகளுக்கு முட்டுக் கட்டைகளாக விழுந்து விடக் கூடாது . ஸூரத் ஹூத் 88, 89 ஆவாது வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.

rashad said...

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தரீகாக்கள் எனப் பல்வேறு அமைப்புக்களோடு, துறைசார் வல்லுனர்கள், புத்தி ஜீவிகள், வியாபாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஆலோசனை செய்வதற்கு இஸ்லாம் வழங்குகின்ற முக்கியத்துவத்தை தனது ஆரம்ப உரையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் யூசுப் முப்தி விளக்கினார். ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், ஷரீஆ கவுன்ஸில் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ், ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா, பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். சித்தீக், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் ஏ.எல்.எம். இப்றாஹீம், உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஈரானுக்கான முன்னாள் தூதுவர் எம்.எம். ஸுஹைர், சவூதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் ஜாவித் யூசுப், ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், ஷெய்க் இஸ்மாஈல் (ஸலபி), மௌலவி ஏ.எல்.எம். ஹாஷிம், மற்றும் மன்ஸூர் தஹ்லான் எனப் பலரும் இதன் போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் சில தகவல்களுக்கு:http://www.latheeffarook.com/index.php/my-articles/other-countries-articles/604-national-shoora-council