எமது கிராமங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், புத்தக நிலையங்களே போதும். - இஸ்ஸதீன் றிழ்வான்


மது கிராமங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், புத்தக நிலையங்களே போதும்.
- இஸ்ஸதீன் றிழ்வான் -

இது தேர்தல் காலம், எமது வீடுகளை நோக்கி வேட்பாளர்கள் தினம் தினம் வந்தவண்ணமுள்ளனர். இந்த வேட்பாளர்களின் 5 அல்லது 10க்களை புடுங்கிக்கொண்டு வாக்களிப்பதாக ஏமாந்துவிடாமல் எமது தேவைகளை முன்வைக்க முன்வருவோம்.

எம்மை வந்து எம்முடன் பேசி வாக்கு கோரும் வேட்பாளர்களிடத்தில் நாம் எமது கிராமங்களை அபிவிருத்திசெய்ய, முன்னேற்றுவதற்கான கோரிக்கைகளை முன்வைப்போம்.

எமது கிராமங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், புத்தக நிலையங்களே போதும்.

எமது கிராமங்களுக்கு துறைமுகங்கள் தரும் முன், எமது கிராமங்களை சுற்றுலா தளமாக மாற்றும் முன் எங்கள் ஏழைகளுக்கு வீடுகளை தாருங்கள்
பாடசாலைகளை தரமுயர்த்த உதவுங்கள்,

எங்கள் பெண்கள் வெளிநாடுகளுகளுக்கு தொழில் தேடிச்செல்வதை நிருத்த மாற்று ஒழுங்குகளை செய்து தாருங்கள்

எமது அடிப்படைத் தேவைகளை கோரி வேட்பாளர்களை வற்புறுத்துவோம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

No comments: