வளைகுடாவிலிருந்து ஒரு குரல்.....

(இது சிறுகதையல்ல... சோகக்கதை)

பகுதி 1

னது தாய் தந்தையர் என்னை படி படி என்றார்கள். என்னால் முடியவில்லை. எனது மாற்று மத நண்பர்களில் சிலர் நன்றாக படித்தார்கள். காரணம், அவர்களின் தாயார் நன்றாக படித்தவர்கள், ஆசிரியர்கள். தந்தையோ அலுவலகங்களில் பணி புரிபவர்கள். அவர்கள் எனது நண்பர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். போதாக்குறைக்கு டியூசனுக்கு வேறு செல்வார்கள். ஆனால் எனது தாய், தந்தையோ படிப்பறிவு இல்லாதவர்கள். கூலி வேலை செய்பவர்கள். உடல்நிலை சரியில்லாமல் ஒரு நாள் வேலைக்கு போகவில்லையென்றால் கூட மறு நாள் பட்டினி தான். இதற்கிடையில் டியூசனுக்கு பணம் தரவும் அவர்களால் இயலவில்லை. எனவே அந்த மாணவர்களுக்கு இணையாக என்னால் படிக்க இயலவில்லை.

மதிய வேளையில் அரசு தந்த சத்துணவை உண்டு பசியை போக்கிய பின் மாலையில் பள்ளி முடிந்து வரும் போது ஒரு ஆசிரமத்தில் தரும் ரவையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்வேன். ஏனென்றால் வீட்டில் என் தங்கை பசியோடிருப்பாளே!

இவ்வாறு வாரத்தில் ஐந்து நாட்களாவது வயிறார உண்டு பிளஸ் டூ வரை படித்து விட்டேன். இனி ஒரு பியூன் வேலைக்காவது போய்விடலாம் எனச் சென்றபோது ஒரு லட்சம் செலவாகும் பரவாயில்லையா? என்றார்கள்.

ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று கைவிரலை மடக்கி எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஏம்பா உனக்கு இந்த வேலை.. நான் ஒரு பாய் முகவரி தர்றேன். அவரு உன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவார் போகிறாயா? என்றார் ஒருவர்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. என்னுடைய உழைப்பெல்லாம் என் சொந்த நாட்டிற்கு பயன்பட வேண்டுமென எண்ணினேன். மென்மேலும் படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும். என் தாய் தந்தையரை நன்றாக கவனிக்க வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. ஆனால் கல்லுரிக்கு ஃபீஸ் கட்ட பணமில்லை. எனவே கல்லூரிக்கு செல்வதை கற்பனையோடு நிறுத்திக் கொண்டேன். நிறைய படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால் தொலைதூரக்கல்வியில் படிக்க எண்ணினேன். அதற்கும் பணம் வேண்டுமே!
அதிகாலையில் எழுந்து ஒரு ஹோட்டலுக்கு காய்கறி வாங்கி கொடுத்துவிட்டு
ஒரு மருந்துகடைக்கு வேலைக்கு செல்வேன்.
அந்த பணத்தை பெற்று தொலை தூரக்கல்வி வழியாக படிப்பை தொடர்நதேன். இரவின் அரை பகுதி நேரத்தை அதற்காக ஒதுக்கினேன். இளநிலை பட்டத்தையும் பெற்றேன்.

வேலைக்கு பதிவு செய்த போது தான் படித்தவுடன் வேலை கிடைக்காது, 45 வயதான ஒருவருக்கே இப்பொழுது தான் இன்டர்வியூ வருகின்றது, இந்தியாவில் படித்தவர்களுக்கு போதுமான வேலையில்லை என்பதை உணர்நதேன்.

என் தந்தைக்கு குடும்பத்தை நடத்த போதுமான வருமானமில்லை. ஏனென்றால் என் தந்தை படிக்கவில்லையாம். இதோ நான் படித்திருக்கிறேன். எனக்கு ஏன் வேலையில்லை என்றேன். இந்தியாவில் போதுமான வேலை இல்லை என்றதோடு உன்னைவிட அதிக மதிப்பெண்களை பலர் பெற்றிருக்க உனக்கு எப்படி வேலை கிடைக்கும் என்றார்கள்.

பணமுள்ளவர்களாலும் படித்தவர்களாலும் மட்டுமே மீண்டும் மீண்டும் கல்வியையும் வேலை வாய்ப்பையும் பெற முடியுமென்றால் எங்களின் நிலை என்னாவது? இப்படியே தினக்கூலியாக வாழ்ந்து மடிய வேண்டியது தானா? எங்களின் வாழ்க்கையை உயர்த்த அரசு ஏன் சலுகைகளை தரக்கூடாது? வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சில இடங்களை ஏன் எங்களுக்கு ஒதுக்கக் கூடாது? என நான் கேள்விகளை கேட்ட போது, நிச்சயமாக செய்ய வேண்டும்! பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஒரு சமுதாயத்தை உயர்த்த அரசு முயற்சிக்க வேண்டும், ஆனால் தனி மரம் தோப்பாகாது,.. நீங்கள் ஒன்றுபட்டு அரசின் காதுகளுக்கு இதை கொண்டு செல்லுங்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

என்னருமை சகோதரர்களே!

என் கதையைப் போன்று எத்தனையோ சகோதரர்களின் கதைகளும் இருக்கும் என்பதை நான் அறிவேன்.

வாருங்கள் ! ஒன்றுபட்டு போர்க்குரல் எழுப்புவோம்!

நமக்கு ஏற்பட்ட இந்த அவலம் நம் சந்ததிகளுக்கு வேண்டாம். விருப்பு வெறுப்புகளை மறந்து ஒரே கோரிக்கையை வைப்போம்.

அரசின் கதவுகளை தட்டுவோம்!
திறக்க மறுத்தால் உடைத்தே திறப்போம்!!

என்ற உற்சாக குரலெழுப்ப ஜூலை 4 ம் தேதி சென்னையில் சங்கமிப்போம்!

அடங்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு கொடுத்தே தீர்வது.. எனும் நிலையை அரசுக்கு ஏற்படுத்துவோம்.

எனக்கு இந்தியாவில் வேலை கிடைத்ததா? எனது நிலை என்னவானது என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் வடிக்கின்றேன் கண்ணீராக!..

-- ஒரு வளைகுடாவாசி

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

5 comments:

Anonymous said...

i am waiting for your 2nd one.

thanks

Anonymous said...

i like some articles on this.

thanks

Anonymous said...

i like some articles on this.

thanks

இஸ்ஹாக் said...

I Am waitng 4 ur 2nd Part real story.

ka.ishaq@gmail.com

Anonymous said...

இந்திய நடைமுறை எழுத்தால் வடிக்கப்பட்டுள்ளது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.