புலி வேடப் புதுமைகள்


மாற்றங்கள் தேவை - சுவை 21
முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட மாதங்களில் ஒன்றாகும். இம்மாத்ததிற்குச் சில சிறப்புக்கள் உள்ளன, அதை நபியவர்கள் கூறியிருக்கின்றார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூட நம்பிக்கைகளை இஸ்லாத்தை சரியாக அறியாத முஸ்லிம்களில் ஒரு சாரார் செய்து வருகின்றனர்.

இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகையே உள்ளது. இது இந்துக்களின் வழி முறை.

இதேபோல், நமது சமுதாயத்திலுள்ள ஒரு சாராரும் செய்துவருகின்றார்கள்.

பஞ்சா என்ற ஒன்றை உருவாக்கி, பேண்டுக்கு மேல் ஜட்டியைப் போட்டுக்கொண்டு சிலம்பாட்டம் ஆடுவர், இன்னொரு சாரார், இந்த பஞ்சாவுக்காக நேர்ச்சை செய்து விட்டு உடல் முழுவதும் சந்தணம் பூசிக்கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றுவர். இன்னும் சிலர் புலிவேஷம் போட்டு மக்களைப் புல்லரிக்கச் செய்கின்றனர்.

மேற்கண்ட இரு நிகழ்வுகளிலிருந்து முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாதது தெரிகின்றது

 அதனால் இத்தையவர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ள எச்சரிக்கையை தமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

யார் பிற மத கலாச்சாரங்களுக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர், அந்த மதத்தைச் சேர்ந்தவரே” (புஹாரி) 
 இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றும் இந்த மார்க்க விரோதச் செயல்களைவிட்டும் நாமும் தவிர்ந்து பிறரையும் தடுப்போம்.

1 comment:

Anonymous said...

Dear Brothers,

How we can change this situations?

YOur brother.
Aslam