அதிஷ்டமில்லை ? (No Luck?)

Sunday, April 11, 2010ன் தொடர்...3

மாற்றங்கள் தேவை - சுவை 13


து போல எம்முடம் எமது சூழலில் வாழக்கூடிய, நாம் இவர்கள் தான் அதிஷ்டசாலிகள் என்று விரல் நீட்டி அடையாளப்படுத்தக்கூடிய சில நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள், அவர்களிடத்தில் எமக்கு நல்ல முன்மாதிரிகள் நிறைய இருக்கின்றன.
உதாரணமாக, சில பணக்காரர்கள் வருடம் முடியும் போது தனது வருமானத்தை, சொத்தை கணக்கிட்டு உரிய முறையில் தருமம் கொடுக்கக்கூடியவராக இருப்பார்.
எந்த வசதியற்ற ஏழை உதவி கேற்கும் போதும் இல்லை என்று சொல்லாத மனம்படைத்தவர்கள் இருக்கின்றார்கள்.

உயர் பதவிகளில் இருக்கக்கூடிய சில நல்ல மனிதர்கள், ஊழல் செய்ய மாட்டார்கள், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு வேர்வை சிந்தும் முன் ஊதியம் கொடுப்பவர்கள், நியாயமான முறையில் ஊதியத்தை நிர்ணயிப்பார்கள்.
வாழ்க்கையில் வெற்றியடைந்த பல வியாபாரிகள் இருக்கின்றார்கள், அவர்கள் அளவை நிருவையில் மோசடி செய்ய மாட்டார்கள், பொய் சொல்லி வியாபாரம் செய்ய மாட்டார்கள்.
இவர்களை எமது வாழ்க்கையில் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் எமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நல்ல பண்புகளை முன்மாதிரியாக கொண்டு செயற்பட்டால் பத்து பேரிடத்தில் பத்து நல்ல பண்புகள் கிடைக்கும், அதனை கொண்டு நாமும் அதிஷ்டசாலி என்ற நிலையை அடைவதற்கு அந்த பத்து பண்புகள் மட்டுமே போதுமானதாகும்.
வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிகழ்வில் ஒரு நிகழ்ச்சியில் நாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை, முதலிடத்தில் வரவில்லை என்பதற்காக நாம் மொத்த வாழ்க்கையிலும் அதிஷ்டமில்லாதவர்கள் என்று நினைப்பது, பேசிக்கொள்வது மடமைத்தனமாகும்.

அல்லாஹ் எம்மை படைத்து நாம் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கின்றான்.
காற்றில்லாத போது எம்மால் வாழ முடியாது என்கின்ற போது இயற்கையாக எமக்கு கிடைக்கின்ற காற்றை எமக்கு வழமாக்கி வைத்திருக்கின்றான், நாம் அதிஷ்டசாலிகள் இல்லையா?
ஆனால் சில பகுதிகளில் காற்றினால் சிலர் வாழ முடியாது தவிக்கின்றார்கள்.
எமது உழவாளிகளுக்கு மழை தேவையானளவு கிடைப்பதனால் வருடத்தில் இரு போகங்களையும் சிறப்பாக வெற்றிகரமாக செய்து முடிக்கின்றார்கள், இவர்கள் அதிஷ்டசாலிகள் இல்லையா?
ஆனால் தேவையான போது மழை கிடைக்காததனாலும் தேவைக்கு அதிகமாக மழை கிடைப்பதனாலும் சில பகுதிகளில் சிலர் சாதரணமாக வாழ்வதற்கே கஸ்டப்படுகின்றார்கள்.
எத்தனை உப்பளங்களுக்கு சொந்தக்காரர்கள் கிடைக்கின்ற வெயிலை கொண்டு தனது அருவடையை சிறப்பாக செய்து முடிக்கின்றார்கள், இவர்கள் அதிஷ்டசாலிகள் என்ற பட்டியலில் இல்லையா?
அதே நேரம் வெயிலை கண்டால், வெயில் காலத்தில் சிலர் ஓடி ஒழிகின்றார்கள்,
எனது தந்தை எப்படி இருப்பார்?, என்ன நிறம்? உயரமா, கட்டையா?
எனது தாய் எப்படி இருப்பார்? எனது வீடு எப்படி கட்டப்பட்டிருக்கின்றது?
என்னை சுற்றியுள்ள சூழல், அதன் அழகு என்ன, எப்படி?
நான் குடித்த தாய் பால் என்ன நிறம்? என்று தெறியாது எத்தனை பேர், தனக்கு கண் பார்வை இன்மையால் தனது கண்ணால் எதையும் பார்க்கமுடியாமல் வாழ்வை முடித்துக் கொண்டு எத்தனை பேர் உயிர் பிரிகின்றார்கள்.

காகம் எந்த சத்தத்தில் கரைகின்றது?
இயற்க்கையில் பறக்கும் பறவைகள் எப்படி கத்துகின்றன?
எனது பிள்ளையின் மழலை மொழிகள் எப்படி இருக்கின்றது?
என்பதை கேட்க முடியாத, காது கேற்காத எத்தனை பேர் உலகில் வாழ்கின்றார்கள்?
எனக்கும் கால் இருந்தால் நானும் ஒரு அழகான செருப்பை அணியமாட்டேனா? நானும் ஒரு சாரதியாக இருந்து இந்த வாகனத்தை ஓட்டமாட்டேனா? இந்த இரண்டு வயது பிள்ளை நடப்பது போன்று நானும் நடக்கமாட்டேனா? என்று கால் இல்லாமல் கவளைப்படும் எத்தனை பேர் எனது சூழலில் இருக்கின்றார்கள்.
இவர்களுடன் எம்மை ஒப்பிட்டு பார்த்தால் யார் அதிஷ்டசாலிகள் என்பதை எம்மால் புறிந்து கொள்ள முடியும்.

எந்த குறையுமில்லாமல் போதிய ஆற்றலுடையவர்களாக நாம் படைக்கப்பட்டதற்காக எப்போதும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல தவறக்கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும் அவனை தொழுது அவனை புகழ்ந்து, ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க மறந்துவிடக்கூடாது.

அதிஷ்டசாலிகள் பலர் சில போது அதிஷ்டமில்லாமல் இருந்திருக்கின்றார்கள்:

உலகில் தமது வாழ்வில் சில போது தோல்வியடைந்துவிட்டு அல்லது எதிர்பார்க்கின்ற ஒன்று எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை அல்லது முயற்சித்தது கிடைக்கவில்லை, அல்லது ஒரு கஸ்டம் தொட்டவிட்டது என்பதற்காக மொத்தத்தில் எனக்கு அதிஷ்டமில்லை என்றால் கீழ்வரும் இந்த வரலாற்று மனிதர்களையும் அவர்கள் எதிர்நோக்கிய மிக கஸ்டமான சந்தர்ப்பங்களை என்னவென்று சொல்லுவது?
அல் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சிந்தனைக்கு சில சான்றுகள்:

நபி யூனுஸ் அலை (ஸல்) அவர்களின் அதிஷ்டசாலி இல்லையா?

நபி யூனுஸ் அலை (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை சொல்ல வந்த தூதுவர்களில் ஒருவர்,
பல கஸ்டங்களுக்கு மத்தியில் மார்க்கத்தை சொல்லும் போது எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளாத போது அந்த மக்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தார், ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக மக்கள் ஈமான் கொண்டார்கள், இதன் போது யூனுஸ் அலை (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் கோபம் கொண்டார்கள், அதன் விளைவு என்ன என்பதை அல்லாஹ் தனது திருமறையில் எமக்கு பாடமாக சொல்லித்தருகின்றான்,
“துன்னூனையும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூருவீராக! தம் சமூகத்தாரை விட்டு) அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில் (நாம் அவரை பிடித்து) நெருகடிக்குள்ளாக்கி (தண்டித்து) விடமாட்டோம் என்று எண்ணிக்கொண்டார்; (ஆகவே மீன் வயிற்றின்) இருள்களில் (நெருக்கடிக்குள்ளான அவர்,) உன்னை தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேரு ஒருவனும்) இல்லை; நீ மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்;” என்று (பிராத்தனை செய்து) அழைத்தார்.”
இந்த வசனம் நபி யூனுஸ் அலை அவர்களுக்கு அல்லாஹ் தண்டனை வழங்கினான் என்று சிந்திப்பதற்கு முன்னர் எவ்வளவு கஸ்டங்களை மனவருத்தங்களை எதிர்கொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துரதிஷ்டங்களை சிந்திக்க வேண்டும்.

யூஸுஃப் அலை அவர்கள் அதிஷ்டசாலி இல்லையா?

நபி யூஸுஃப் அலை அவர்கள் தனது வாழ்க்கையில் சொல்லமுடியாத பல கஸ்டங்களை சவால்களை பிரச்சினைகளை சந்தித்திருக்கின்றாகள்,

1) தனது சகோதர்களால் பாழ் கிணற்றில் தள்ளப்பட்டார்கள்,
“ஆகவே (யூஸுஃபாகிய) அவரை (அழைத்து)க் கொண்டு சென்று, அவரை ஆழமான ஒரு பாழ் கிணற்றில் ஆக்கிவிட வேண்டுமென்றே அவர்கள் ஒருமித்து முடிவு செய்த போது, அவர்களே (உம்மை) அறியாதவர்களாக இருக்க, அவர்களுடைய இக்காரியத்தைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு நிச்சயமாக தெறிவிப்பீர்” என்று (யூஸுஃபாகிய) அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்.” அல் குர் ஆன் – 12: 15

(பின்னர் அக்கிணற்றின் சமீபமான) ஒரு பிரயாணக்கூட்டமும் வந்தது: தங்களது தண்ணீர் கொண்டுவருபவரை(த் தண்ணீருக்காக) அவர்கள் அனுப்பினார்கள்; அவர் தன் வாளியை (அக் கிணற்றில்) விட்டார். (யூஸுஃப் அதில் உற்கார்ந்து கொண்டார். அதை கண்டு ஓ உங்களுக்கு (ஒரு) நன்மாரயமே! இதோ ஓர் (அழகிய) சிறுவன்! என்று யூஸுஃபை சுற்றிக்காட்டி கூறினார்; (அவரை கண்ணுற்ற அவர்கள், தங்களது) வர்த்தக பொருளாக அவரை (ஆக்கிக் கொள்ள கருதி) மறைத்துக் கொண்டார்கள்; மேலும் அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.” அல் குர் ஆன் –12 : 19

2) சந்தையில் அற்ப வெள்ளி காசுகளுக்காக விற்கப்பட்டார்கள்,
“மேலும் அவரை அவர்கள் அற்பக் கிரயத்திற்கு (விரல் விட்டு) எண்ணப்படுகின்ற (சொற்ப) வெள்ளிக் காசுகளுக்கு விற்று விட்டார்கள்; மேலும் அவர்கள் அதில் பற்றற்றவர்களாக இருந்தனர்” அல் குர் ஆன் – 12 : 20

3) காம பசிக்கு ஆழாக்க முயற்சித்தமை,
“மேலும் அவர் எவளுடைய வீட்டில் இருந்தாரோ, அவள் அவர் மீது காதல் கொண்டு தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லா கதவுகளையும் மூடிவிட்டு அவரை “வாரும்” என்றழைத்தாள்: அ(தற்)வர், “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) காத்தருள்வானாகவும்! நிச்சயமாக என் எஜமானனாகிய (உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார்; நிச்சயமாக இத்தகைய நன்மை செய்வோருக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்” என்று கூறினார்” அல் குர் ஆன் – 12 : 23

4) சிறை பிடிக்கப்பட்டமை,
“பின்னர் (யூஸுஃப் தூயவர் என்பதற்குரிய) அத்தாட்சிகளை அவர்கள் கண்டதன் பிறகு, சிறிது காலம்வரை (யூஸுஃபாகிய) அவரை, அவர்கள் நிச்சயமாக சிறையிலிடுவார்கள் என அவர்களுக்குத் தோன்றியது (ஆகவே, அவரைச் சிறையிலிட்டனர்)”
அல் குர் ஆன் – 12:35

இவைகள் அனைத்தையும் அனுபவித்ததற்கு பின்னரே அந்த நாட்டின் நிதி துறை அமைச்சர் பதவியில் அமர அல்லாஹ் வாய்ப்பளித்தான்.

அய்யூப் அலை அவர்கள் அதிஷ்டசாலி இல்லையா?
அல்லாஹ்வின் தூதர்களில் உள்ள இன்னொமொரு தூதுவர்தான் அய்யூப் அலை அவர்கள், இவர்கள் நீண்டகாலமாக நோயால் தீண்டப்பட்டு தனது மனைவி மற்றும் குடும்பத்தார்களால் புறக்கனிக்கப்படிருந்தார்,
அதன் போது அவர் அல்லாஹ்விடத்தில் பிராத்தித்ததையும் அல்லாஹ் அவரை பழைய நிலைக்கு திருப்பியதையும் தனது வசனங்கள் மூலம் எமக்கு விவரித்துக் காட்டுகின்றான்.
“(நபியே அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடத்தில், நிச்சயமாகத் துன்பம் என்னை பீடித்துக் கொண்டது; நீயே கிருபையாளர்கலெல்லாம் மிகக் கிருபையாளன் என்று (பிராத்தனை செய்து) அழைத்த போது நாம் அவருக்கு பதிலளித்து; பின்னர் அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம்; அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம்; இது நம்பிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கின்றது.”
அல் குர் ஆன் – 21 :83-84

முஹம்மத் (ஸல்) அவர்கள் அதிஷ்டமுள்ள ஒரு மாமனிதனில்லையா?
காபிர்களை எதிர்த்து எத்தனை சந்தர்ப்பம் யுத்தகலத்திற்கு செல்ல வேண்டி இருந்தது?
தொழுது கொண்டிருக்கும் போது அருக்கப்பட்ட மிருகங்களின் தோல்களை தனது உடம்பில் தூக்கிபோட்டமை,
செல்கின்ற பாதையில் முற்களை இட்டு கஷ்டப்படுத்தியமை?
அல்லாஹ்வுடைய தூய மார்க்கைத்தை எடுத்துச் சொன்னதற்காக சமூக பகிஷ்கரிப்புக்குள் உள்ளாகியமை.
இவைகளில் ஒரு பகுதி கூட எனது வாழ்வில் நாம் அனுபவிக்கவில்லை, ஆனாலும் நாம் அதிஷ்டமில்லை என்று புளம்புகின்றோம்.
எமது வாழ்க்கையில் நாம் நினைத்ததை, எதிர்பார்த்ததை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நாம் அதிஷ்டமில்லாதவர்கள், எனக்கு சான்ஸ் இல்லை என்று எம்மை தாழ்த்திக்கொள்கின்றோம், எமது வணக்கங்களை இடை நிறுத்திக்கொள்கின்றோம்.
உண்மையில் எல்லோரும் அதிஷ்டசாலிகள் தான், ஆனால் எல்லோரும் எல்லாவிடயத்திலும் அதிஷ்டசாலிகளாக வேண்டும் என்று நினைக்கின்ற போது தான் எல்லோரும் அதிஷ்டசாலிகள் இல்லை என்ற நிலைக்கு உள்ளாகுவோம்.
எல்லோரும் அதிஷ்டசாலிகள் தான், ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அதிஷ்டசாலிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்று நான் அதிஷ்டசாலி இல்லை என்று நினைப்பவர்கள் மேலே நாம் அடையாளப்படுத்திய அதிஷ்டசாலிகளுக்கும் துரதிஷ்டசாலிகளுக்குமிடையிளுள்ள வித்தியாசங்களை தெறிந்து கொண்டு தவருகளை உணர்ந்து எனது வாழ்வில் நாம் மாற்றிகொள்ள வேண்டிய குறைபாடுகளை திருத்தி நடந்தால் இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்பார்ப்பது போல் நாளைய தினம் நாமும் அதிஷ்டசாலிகள் தான்.
இந்த உலகில் சிந்திப்பவர்களுக்கு நேர்வழி நிச்சயம்.
படிப்பினைகளை பாடமாக கொண்டு செயற்படுபவர்களுக்கு முன்னேற்றம் நிச்சயம்.
காட்டில் தானாக முளைக்கின்ற மரங்கள் எப்படி சந்தோஷமாக இருக்கின்றன?
எமது சூழலில் உள்ள குளத்தில், தண்ணீர் குட்டைகளில் முளைக்கின்ற தாமரைப்பூக்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன?

காட்டு மிருகங்கள் எம்மை போன்று அடிக்கடி சண்டை பிடிப்பதில்லை,
எமது வீட்டு சேவால் எவ்வளவு சந்தோஷமாக கூவி எம்மை தூக்கத்திலிருந்து விழிக்க செய்கின்றது?, அதிகாலை நேரத்தை சொல்லித்தருகின்றது?
நாம் தெறிந்துகொண்ட அனைத்திலும் எமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.
அதனை உணர்ந்து நடப்பவர்களுக்கு அதிக பாடங்கள் இருக்கின்றன.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

சிறிய கட்டுரையில் பல செய்திகளை பதிந்ந்திருக்கின்றீர்கள்.

நன்றாக அமைந்திருக்கின்றது.

தொடருங்கள்
வாழ்த்துக்கள்