அல் குர்ஆன் பேசுகிறது.......03

ஹா, உலகிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை பார்த்தால் ஆச்சரியாமாகவும் சிரிப்பாகவும் இருக்கும். காரணம், இதற்கெல்லாம் பாடத்திட்டமா? இந்த படிப்புக்களையெல்லாம் படிப்பிக்க ஒரு காலெஜா என்று சிந்திக்க செய்யும் அளவுக்கு  பாடத்திட்டங்கள். மாணவர்களை அலையவிடுகிறன.
ஆனால் எது படிக்கவேண்டுமோ, எது படிப்பிக்கப்பட வேண்டுமோ அது குறைவாகவே படிப்பிக்கப் படுகிறது.

எப்படி காதல் செய்வது என்று கூட பாடத்திட்டமாம்?

எப்படி சைட் அடிப்பது என்று இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒரு பாடதிட்டமாம்?

சூபித்துவத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பு முடிப்பதில் கவனம் செலுத்தும் முஸ்லிம்கள் அல் குர்ஆனை படிப்பதில், அது தொடர்பான கலைகளை ஆய்வதில் பின்வாங்குகிறார்கள்.

அல் குர்ஆனை அதன் தூய வடிவில் படிக்க நிறைய கலைகள், பாடத்திட்டங்கள் போதியளவு வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல் குர்ஆனை அதன் இலக்கியம், விளக்கம் மற்றும் சட்டதிட்டங்களை சரிவரக் கற்றுக்கொள்வதற்கென இஸ்லாமிய அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைதான் தப்ஸீருல் குர்ஆன் மற்றும் 
உலூமுல் குர்ஆன் என்கிற இரு வேறு முக்கிய பாட்த்திட்டங்களாகும்.
என்று சென்ற தொடரில் முடித்திருந்தோம்.

அல் குர்ஆனைப்படித்து அதனை போதுமான, தெளிவான விதத்தில் விளங்கிக்கொள்வதற்கு ‘தப்ஸீருல் குர் ஆன் துணைபுரிகின்றது.

‘தப்ஸீர்’ என்ற  அரபு வார்த்தைக்கு விளக்கம்,  விளக்குதல்,  ஒரு விடயத்தை தெளிவுபடுத்தல், வியாக்கியானம்  )explanation,  explication( என்று பல அர்த்தங்களைக் கொடுக்கலாம்.  

தப்ஸீருல் குர் ஆனும்என்ற சொல்லுவது அல்குர் ஆனுக்குரிய வியாக்கியானங்களையேயாகும்.

எல்லாக் காலங்களிலும் அல்குர் ஆனுக்குரிய விளங்கங்கள் தொடராக எழுதப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களது திறமைக்கும் ஆளுமைக்குமேற்ப வித்த்தில் விளக்கங்களை அமைத்துக்கொல்கின்றனர்.


இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்குர் ஆனின் உயர் இலக்கியங்கள், அதன் சொற் பாவணைகள், அனுகுமுறைகளை முக்கியமாக வைத்து எழுதியுள்ளனர்.
வரலாற்றில் அதிக கவனம் செலுத்தக்கூடிய அறிஞர்கள், அல்குர் ஆனில் அல்லாஹ் எமக்கு ஞாபகமூட்டுகின்ற வரலாற்றுச் சான்றுகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுவதிம் பாரிய பங்காற்றியுள்ளனர்.

அல்குர் ஆன், அதன் ஒவ்வொரு வசனங்களும், அத்தியாயங்களும் இறக்கியருளப்படுவதற்கான காரணங்களை தனித்தனியே ஆய்வுசெய்து எமக்கு தருவதில் சில தப்ஸீர் அற்ஞர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

நடைமுறைப் பிரச்சினைகள், நவீன கண்டுபிடிப்புகள், விஞ்ஞான அறிவியல் யதார்த்தங்கள் என்பவற்றில் குர்ஆனின் தாக்கம் அதன் பங்களிப்பு என்பவற்றை கருத்தில்கொண்டும் நவீன கால அறிஞர்களின் குர் ஆன் விளக்கவுரைகள்
தப்ஸீர்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

சில தப்ஸீர் அறிஞர்கள், முடியுமானளவு தேவையன பல விடயங்களை உள்ளடக்கியதாக தங்களது தப்ஸீரை வடிவமைத்திருப்பது உலக மக்களுக்கு 
செய்த பாரிய சேய்வையாகும்.

அதாவது, தேவையான போது சொல் விளக்கம், தேவையான இடத்தில் இலக்கியத்தின் முக்கியத்துவம், தேவையான சந்தர்ப்பத்தில் அந்த குறித்த வசனம் இறங்குவதற்கான காரணம், தேவையான நேரத்தில் குறித்த அல்குர் ஆனிய வசனம் ஞாபகமூட்டும் விஞ்ஞான கருத்துக்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


அதிகமான தப்ஸீர்கள் அரபு மொழியில் எழுதப்பட்டுவந்தாலும் முக்கிய, அதிகமானோரால் ஏற்றுக் கொள்ளப்படும் சில தப்ஸீர்கள் இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.                                                                        

உதாரணமாகதப்ஸீர் இப்னுக் கதீர்பல உலக மொழிகள் இன்று கிடைக்கப்பெறுகின்றன.

உலகில் இன்று எமக்கு கிடைக்கப்பெருகின்ற நூல்களில், அதிக விளக்கங்கள் எழுதப்பட்ட, அதிக ஆய்வுகள் செய்யப்பட்ட ஒரே ஒரு நூலாக அல் குர்ஆன் திகழ்கிறது. அதற்காக பல அறிஞர்கள் விளக்க நூல்களை தொகுத்திருக்கிறார்கள் என்பது மேலே ஞாபகமூட்டப்பட்ட செய்தியாகும்.

அல் குர்ஆன் தொடர்பான ஏனைய தகவல்களைப்பற்றி ஆய்வுக்குள் நுழைவதற்குள் முன் அல் குர்ஆனுக்கு எழுதப்பட்ட ஒரு சில தப்ஸீர்களை சொல்விட்டு போகிறேன்;

* அறிஞர் அபுல் பதா இஸ்மாயில் (أبو الفداء إسماعيل بن عمر بن كثير القرشي الدمشقي  அவர்களால் எழுதப்பட்ட இப்னு கதீர் என்று சொல்லப்படுகின்ற تفسير القرآن العظيم

* அறிஞர் முஹம்மத் பின் அலி அல்ஸவ்கானி محمد بن علي الشوكانيـ அவர்களால் எழுதப்பட்ட பத்ஹுல் கதீர் ( فتح القدير الجامع بين فني الرواية والدراية من علم التفسير.

* அறிஞர் முஹியித்தீன் இப்னு அஹ்மத் முஸ்தபா محيي الدين بن أحمد  مصطفى درويشஅவர்களால் எழுதப்பட்ட ஆயாத் அல் அஹ்காம் آيات الأحكام

* அறிஞர் முஹம்மத் அத் தாஹிர் ( محمد الطاهر بن محمد بن محمد الطاهر بن عاشور التونسي அவர்களால் எழுதப்பட்ட அத் தஹ்ரீர் வத் தன்வீர் (التحرير والتنوير من التفسير )

ஹதீஸ் கலையை ஆய்வுசெய்வதற்கு வழிகாட்டியாக உஸூலுல் ஹதீஸ் என்றஹதீஸுக்கான அடிப்படை வழிகாட்டிஇருப்பது போல் இஸ்லாமிய சட்டக்கலையை (பிக்ஹுல் இஸ்லாம்) ஆய்வு செய்வதற்கு உஸூலுல் பிக்ஹ் இருப்பது போல் அல் குர்ஆனை ஆய்வுசெய்வதற்கும் அதன் அடிப்படை சட்டநெறிகளை கற்பதற்கும் உலூமுல் குர்ஆன் என்றஅல் குர்ஆனின் அடிப்படை ஆய்வுக்கான வழிகாட்டி நூல்களும்மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டியவைகளாகும்.

அல் குர்ஆன் தொடர்பான நெறிமுறைகள், அல் குர்ஆனை ஆய்வுசெய்ய்ம் போது அந்த ஆய்வாளர் அறிந்திருக்க வேண்டிய அத்தியவசிய விடயங்களை கற்றுத்தரக்கூடிய ஒரு கலைதான் இது.
அல் குர்ஆனுக்கு விளக்கம் (தப்ஸீர்) எழுதுவதில் பல அறிஞர்கள் ஈடுபட்டதுபோல்  அதற்கான அடிப்படை கல்விமுறையை (உலூமுல் 
குர்ஆன்) வகுத்துக்கொடுப்பதில் கண்டுபிடுப்பதில் பல பாடுபட்டுள்ளனர்.

உலூமுல் குர்ஆனின் பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன;
குர்ஆன் தொகுப்பிற்கான வரலாறு,                                         
குர்ஆனை ஓதும் ஒழுங்கு,                                                                    குர்ஆனை அனுகும் முறை,                                                          
குர்ஆனை பின்பற்றும் ஒழுங்கு,                                                    
குர்ஆனில் வசனங்கள் இறக்கியருளப்பட்டதன் நோக்கங்கள், பின்னணிகள்,                                                                        இலக்கிய நயங்கள், சொற்பாவணைமுறைகள்,                                    
குர்ஆன் கூறும் உதாரணங்கள்,                                    
முன்னறிவிப்புக்கள்,                                                        
அத்தாட்சிகள்,                                                                 

ஏற்கெனவே கூறப்பட்ட சட்டங்கள் மாற்றப்படல் அல்லது கூட்டல் குறைத்தல், திருத்தல் ஒழுங்குமுறைகள்,                                        
குர்ஆன் கூறும் வரலாறுகள் என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

உலூமுல் குர்ஆன் கலையில் எழுதப்பட்ட நூல்களில் சில:

* அறிஞர் அப்துல்லாஹ் இப்னுல் ஹுஸைன்  أبو البقاء عبد الله بن الحسين بن عبد الله العكبري அவர்களால் எழுதப்பட்ட அத்திப்யான் التبيان في إعراب القرآن

* அறிஞர் இப்னு கதீர்  أبو الفداء إسماعيل بن عمر بن كثير القرشي البصري ثم الدمشقي அவர்களால் எழுபட்ட பலாயிலுல் குர் ஆன் فضائل القرآن

* அறிஞர் ஆதில் عادل نصار அவர்களால் எழுதப்பட்ட அஹ்காமுத் திலாவத் أحكام التلاوة

* அறிஞர் அல்வாஹிதி الواحدي அவர்களால் எழுதப்பட்ட அஸ்பாபுந் நுஸீல் أسباب النزول

* அறிஞர் அப்துர் ரஹ்மான் عبد الرحمن بن أبي بكر، جلال الدين السيوطي அவர்களால் எழுதப்பட்ட அலித்கான் பி உலூமுல் குர் ஆன் الإتقان في علوم القرآن


தொடரும்.........


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

VANJOOR said...

கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.

சுட்டி:-

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

..........

Issadeen Rilwan said...

thanks a lot

Faris said...

Jazakumullahu kair