சினிமாத்துறையும் கண்ணீர்கறையும்

ரு அடக்கமுடியா கோபம், சகிக்கமுடியா விரக்தி, தாங்கமுடியா சங்கடம் என்று நினைக்கும் மனிதன் இரண்டு முளம் கொண்ட கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் பலரை நமது சூழலில் நாம் பார்க்கிறோம்,
ஆனால் தவணைமுறை தற்கொலை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிகரெட் புகைக்கும் ஒருவர் அல்லது மது அருந்தும் ஒருவர் செய்யும் தற்கொலை முறைதான் இது.

இந்த தற்கொலைமுறைக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

எந்த ஒரு நல்ல மனிதனும் ஒரே இரவில் கெட்டவனாகுவதில்லை, எந்த ஒரு கெட்ட மனிதனும் ஒரே இரவில் நல்லவனாகுவதுமில்லை.
அது போல் தான் எந்த நல்ல மனிதர்களும் தவணைமுறையில் கெட்டுப் போகிறார்கள், சிலர் ஒரு மாதம் சிலர் ஒரு வருடம் மற்றும் சிலர் பல வருடங்கள் என்று அவர்களின் செயலுக்கேற்ப மாறுகிறார்கள்.
தவணைமுறையில் தற்கொலை பண்ணிக் கொல்வதற்கு புகைத்தல் உதவுவது போல் தவணைமுறையில் கெட்டுப் போவதற்கு சினிமா உதவுகிறது.

மதுவை மட்டும் நாங்கள் போதையாக பார்க்கிறோம், அது மிகப் பெரும் தவறு. மனிதன் எதை ஆரம்பித்து அதைவிட்டு பின் விலகமுடியாமல் தவிக்கிறானோ அது அனைத்தும் போதைதான்.

மதுவும் போதை, மாதுவும் போதை, மதமும் போதை, , காதலும் போதை, காமமும் போதை. சினிமாவும் போதை, இசையும் போதை என்று போதைக்கே பெரிய பட்டியல் உண்டு.

ஆனால் சினிமா என்ற போதையில் மாட்டுண்டு தவிக்கின்ற பலரை இந்த சூழல் சுமந்து நிற்கின்றது.

சினிமாத்துறையை ஒரு பொழுதுபோக்காக பார்த்தவன் கண்ணீர் கறையில் மிதக்கின்றான்.

சினிமாத்துறையை சந்தோஷப் பகிர்வாய் எடுத்துக் கொண்டவனும் கண்ணீர் கறை படிந்து தவிக்கிறான்.

வகுப்பில் உட்கார முடிவில்லை, தூக்கம் கண்ணைத் தீண்டுகிறது, காரணம் இரவு விடிய விடிய சினிமாவில் சிக்கித் துவண்டது.
பரீட்சை மண்டபத்தில் கேள்விக்கும் விடை எழுதமுடியாமல் தவிப்பு, காரணம் இரவு முழுதும் சினிமாவில் நேரத்தைக் கடத்தியது
முழு பாடவேளைக்கும் வகுப்புக்குள் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, காரணம் புத்தக பைக்குள் படச் சீடியால் வாத்தியாரிடம் மாட்டி வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இப்போது படிக்கும் வயது தாண்டி உழைக்கும் வயதாகிவிட்டது. தூக்கமில்லை, பசியில்லை, கையில் காசு இல்லை நல்ல தொழில் தேட நல்ல புள்ளி கிடைக்கவில்லை பாடசாலை வாழ்க்கையில்.
கண்ணீர் சிந்துகிறார்கள் எமது இளைஞர்கள்.

தாடி வளராத வயதிலும் தாடி வளர்ந்தால் அழகாக இருப்பேன் என கற்பனை பண்ணுகிறான் இளைஞன், என்ன வென்றால் அந்த நடிகர் தாடி அழகாக இருக்கிறது என்பது தான்.

பரம்பரையே புகைக்காத தந்தைக்கு பிள்ளை இவன், இப்போது பெரும் புகையாளி, என்ன வென்றால் அந்த சினிமாவில் அந்த கதாநாயகன் புகைத்தது எனக்கு பிடித்திருக்கிறது, நானும் புகைக்கிறேன் என்கிறான்.
தன் படிப்பரையில் பாட அட்டவணை தொங்கவிடப் படவில்லை, ஆனால் சினிமா நாயகிகளின் அரை நிர்வாண புகைப் படங்கள்.

இன்றைய இளசுகளின் கையடக்கத் தொலை பேசிகளில் தன் தந்தைyiயின் இலக்கம் இல்லை, ஆனால் புதிதாக வெளியான படப் பாடல்கள்(அரை நிர்வாப் படங்களும் பாடல்களும்) மெமோரியை நிரைத்துவிட்டது.
முன்னால் ஜனாதிபதி பெயர் கேட்டால் தெரியாது, ஆனால் தமிழ் சினிமாவின் முதல் நடிகன் யார் என்றால் பிறந்த திகதியுடன் அவன் பெயர் தெரியும் எமது தமிழ் சிறுவர்களுக்கு.

கலாச்சாரத்தை சீரழித்து நாகரிகத்தை குட்டையில் தள்ளி கண்ணீர் கறையில் காகிதமாய் மிதக்கிறது எமது சமூகம்.

இத்தனையும் நடந்த பின்னும் ஒன்றும் தெரியாது என்பதாய் ஓய்வெடுக்கிறோம் நாங்கள் வாசல் படிக்கட்டில் நிலைகுழைந்து.
சிந்திக்க ஒரு கணம் ஒதுக்குவோம்,
சாக்கடையிலிருந்து மீள கவனம் செலுத்துவோம்,
சாதிக்க ஒரு காலம் ஒதுக்குவோம்....
என்ற மூன்றே வரி போதுமாகட்டும் எம் மாற்றங்களுக்கு.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Issadeen Rilwan said...

அன்பின் வாசகர்களே, சினிமா தொடர்பான எமது "சினிமாவும் சாமனியன் அனுபவமும்" என்ற 4 தலைப்பில் எமது அக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் நாம் இதுவரை வெளியிட்டுள்ள 3 தலைப்புக்களிலும் உள்ளடக்கப்படாத விடயங்களை தெரிவிக்கும்படி தயவாக வேண்டிக்கொள்கிறோம். அன்புடன் இஸ்ஸதீன் றிழ்வான்

Anonymous said...

//இன்றைய இளசுகளின் கையடக்கத் தொலை பேசிகளில் தன் தந்தைyiயின் இலக்கம் இல்லை, ஆனால் புதிதாக வெளியான படப் பாடல்கள்(அரை நிர்வாணப் படங்களும் பாடல்களும்) மெமோரியை நிரைத்துவிட்டது.
முன்னால் ஜனாதிபதி பெயர் கேட்டால் தெரியாது, ஆனால் தமிழ் சினிமாவின் முதல் நடிகன் யார் என்றால் பிறந்த திகதியுடன் அவன் பெயர் தெரியும் எமது தமிழ் சிறுவர்களுக்கு// நல்ல வார்த்தைகள் மதுரை ராஜா