”பழங்கஞ்சி குடித்தாலும் குடிப்பேனே தவிர படம் பார்க்காமல் இருக்கமாட்டேன்” என்ற கொள்கையைத் தான் எமது புதிய தலைமுறை நடைமுறைப்படுத்தி வருகிறது.
வாழ்க்கைச் சக்கரத்தை பாடசாலையில் நான் வேறு கோணத்தில் படித்தேன், ஆனால் இன்று அந்த சக்கரம் புதியமாதிரி சுழலுகிறது; ஒரு சாதாரண மனிதனில் வாழ்க்கை, தூக்கம் – சாப்பாடு – உழைப்பு/படிப்பு – குடும்பம் – தூக்கம் என்றுதான் ஆரம்பித்து முடிகிறது, ஆனால் இப்போது உழைப்பு/படிப்புக்கு பதில் சினிமா என்றாகிவிட்டது..
“போய்ஸ்” திரைப்படம் வந்து மனித மனத்திரைகளையும் நகர திரைகளையும் கலங்கப்படுத்திய நேரம் அது, அப்போது நான் நாட்டின் தலைநகரில் ஒரு சர்வதேச பாடசாலையில் மொழித்துறை போதகராக பணியாற்றிக் கொண்டிருந்தேன், பாடசாலை முடிவடைந்து மாணவ மாணவிகள் விடைபெற்றுச் செல்லும் நேரத்தில் வாகனத்தில் ஏறிய மாணவிகள் நாங்கள் தான் போய்ஸ் (We are the Boys) என்ற கோxxஷமிட்டவர்களாக இடம் நகர்ந்தனர். என்னை ஒரு கணம் சிந்திக்கச் செய்தது. ஏன் இந்த பெண்பிள்ளைகள், நாங்கள் ஆண்கள் என்று கத்திக்கொண்டு செல்கிறார்கள் என்ற ஏக்கத்தில் அடுத்த நாளைக்கான வகுப்பிற்காக காத்திருந்தேன்.
அடுத்த நாள், குறித்த அந்த மாணவிகளை சந்தித்து என்ன நடந்தது? ஏன் அந்த வார்த்தைகள் உங்கள் வாய்களைத் தொட்டன? என்ற மாதிரியான சில கேள்விகளை அவர்களிடம் தொடுத்த போது, வெட்கப்பட்டு கொஞ்சம் பயந்து பின்வாங்கிய போது, ஆனாலும் நான் அதைதெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் விடைக்குக் காத்திருந்தேன். அவர்கள் சொன்ன வார்த்தைகள் ஒரு வகையில் என்னைச் சிந்திக்கச் செய்ததுடன் ஒருகணம் என்னை ஆர்வப்படுத்தியது.
சேர் ஒரு படம், ”போய்ஸ்” அது சூப்பர், அவர்கள் 5 பேரும் அசத்தியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே போனார்கள். அவர்களின் வர்ணனைகள் அந்த படத்தை என்னைப் பார்க்கத்தூண்டியது.
பாடசாலைப் பிள்ளைகளும் தாய் தந்தையரும் சேர்ந்து பார்க்கும் ஒரு படமா? அல்லது நாம் அவ்வாறு ஒரு படத்தைப் பார்க்கத்தான் வேண்டுமா? என்ற கேள்விகள் பல எனக்குள் எழுந்து நின்றன.
அந்த படத்திற்கு பின் ஏதோ ஒரு வகையில் சினிமாவுக்குக் கவரப்பட்டு அந்த அசுத்த காற்றில் சில மாதங்கள் அடித்துச் செல்லப்பட்டேன், நண்பர்கள் கூடும் அவைகளில் சினிமாக்கள், அதில் இசைக்கும் பாடல்கள் குறித்து பட்டிமன்றங்கள், வாக்குவாதங்கள் என்று கால நேரங்கள் வீண் விரயம் செய்யப்பட்டன.
சினிமாப் பாடல்களை அதன் ஓசை, அதன் இசை, பின்னிசை, ஒளி, ஒழி, குரல், பாடல் வரிகள் என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து அதற்கு மார்க்ஸ் போடும் பெரும் பண்டிதர் போல் நடைபோட்டேன்.
ஒரு சினிமாப்படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு 3 மணித்தியாலங்கள் கடத்தினேன், இந்த நடத்தைகள் எனது கல்வி வளர்ச்சிக்கும் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் பாரிய வீழ்ச்சியை காணச் செய்தது.
அந்த தாக்கங்களையும் நஷ்டங்களையும் இணங்கண்டு கொண்டது முதல் சினிமாவுக்கு சீல் வைத்து இப்போது பல வருடங்கள் கடந்திருக்கின்றன,
சினிமாவை விட்டு விடுவதில் எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு பல விடயங்களில் எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது.
ஒரு மனிதனுடைய மனம் ஏன் குரங்குக்கு ஒப்பாக்கப் படுகிறது என்பதற்கான விடையை இந்த அனுபவம் எனக்குக் கற்றுத் தந்தது.
மனிதன் நல்லவனாக வாழ்வதற்கும் கெட்டவனாக மாறுவதற்கும் மனம் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை அந்த அனுபவம் எனக்குக் காட்டித் தந்தது.
நேரங்கள் நல்லதிலும் கெட்டதிலும் பாவிக்கப்படுவதற்குக் கூட நமது சொந்த தீர்மானங்கள் துணை நிற்கின்றன என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
கெட்ட நண்பர்களை வளர்க்கும் சூழலுக்கு சினிமா தண்ணீர் பாய்ச்சுகிறது என்பதையும் கற்க முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ், எனது முயற்சியும் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்துகிற விதமும் சினிமாவிலிருந்தும் இசையிலிருந்தும் என்னை முழுமையாக தூரமாகி இருக்க உதவியிருக்கிறது.
அன்றாட உழைப்பு, நாளாந்த கடமைகள் முடிந்தாலும் ஓய்வு நேரங்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அந்த நேரங்கள் நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கும் பல அறிஞர்களின் போதனைகளை செவிதால்த்துவதற்கும் பயன்படுத்தமுடிகிறது. அத்துடன் அன்றாட சமூகப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதற்கும் அது தொடர்பாக எழுதுவதுடன் அவைகளை பிறருக்கு எடுத்துச் சொல்லுவதற்கும் வசதிவாய்ப்புக்கிடைக்கிறது.
இந்த நிலைமை சினிமாவில் சிக்கித் தவிக்கும் எல்லோருக்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சீனி (Sugar) நோய் வந்த ஒருவருக்கு பாகற்காய் சாப்பிடும் படி வைத்தியர் ஆலோசனை வழங்குகிறார்.
இருமல் அதிகமானால் புகைத்தலை கைவிடும்படி வைத்தியர் வேண்டுகிறார்.
இவைகள் உடல் ரீதியான சிகிச்சைகளுக்கு உதவுகின்றன.
ஆனால் மனம் பாதிக்கப்பட்டு கெட்டவைகளையே தனது அன்றாட நடத்தைகளாக எடுத்து நடக்கும் மனிதனுக்கு அவன் ஏன் இந்த நிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறான் என்பதை ஆராய்ந்து, இதற்கு துணைநின்ற சினிமாவை கைவிடும்படி ஆலோசனை வழங்க எந்த வைத்தியரும் முன்வந்ததாகத் தெரியவில்லை. காரணம் அவர்களுக்கு இப்படிப்பட்ட போதனைகள் தனது கல்லூரிகளில் போதிக்கப்படவில்லை அல்லது இந்த வைத்தியர்களும் இதே சினிமாவினால் பாதிக்கப்பட்டு நzXஷ்டவாளிகளாக சிக்குண்டிருக்கின்றார்கள் என்பதே அர்த்தம்.
சினிமா என்ற சாக்கடையில் சிக்கித்தவிக்கும் எமது அன்பு நண்பர்கள், இதுவரை சினிமா தொடர்பாக நாம் வெளியிட்ட ஆக்கங்கள் மூலம் பல மாற்றங்களை பெற்றிருப்பீர்கள் என நம்பிக்கை கொள்வதுடன், ”மனிதனை வழிகாட்டும் மார்க்கம் சினிமாவுக்கு சீல் வைக்கிறதா?” என்ற தலைப்பினூடாக இஸ்லாத்தில் சினிமா தொடர்பாக சில செய்திகளைச் சொல்லி ஏனைய தலைப்புகளுக்குள் நகர ஆர்வம்கொண்டிருக்கிறோம்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
4 comments:
”பழங்கஞ்சி குடித்தாலும் குடிப்பேனே தவிர படம் பார்க்காமல் இருக்கமாட்டேன்” என்ற கொள்கையைத் தான் எமது புதிய தலைமுறை நடைமுறைப்படுத்தி வருகிறது.// இந்த கருத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நன்றி மதுரை ராஜா
இன்றைய மனிதருக்கு தேவையான கட்டுரை.
உங்களின் முயற்சிக்கு வாழ்ந்துகள்.
--
With best regards,
Mubarak MK
பண்ருட்டி எக்ஸ்பிரஸ் .
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரிழ்வான்
சினிமாவின் தீமைகள் பற்றிய உங்கள் தொடர் கட்டுரை அருமை. எங்கெல்லாம் சினிமாவின் தீமைகள் பற்றிய உரை நிகழ்த்தப்படுகிறதோ, அங்கெல்லாம் உங்களின் ஆக்கங்களை சகோதரர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம். (அனுமது கொடுத்துவிட்டீர்கள்)
அல்ஹம்துலில்லாஹ், எனது முயற்சியும் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்துகிற விதமும் சினிமாவிலிருந்தும் இசையிலிருந்தும் என்னை முழுமையாக தூரமாகி இருக்க உதவியிருக்கிறது.
உங்களைப்போல, சினிமா என்ற நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிற அனைவரும் அந்த சாக்கடை அசுத்தத்தில் இருந்து தூரமாகி சுத்தமாக ஆவதற்கு இறைவன் உதவி புரிவானாக.
சகோ
அன்வர்.
எப்படி இதிலிருந்து மீள்வது மனது வைத்து, ஒரு முடிவு கட்டிவிட்டால் இவை எல்லாம் ஜூஜூபிதான் சகோதரா. ஒரு 3D (Determination, Divene help, Dust bin) formula வை முயற்சி செய்து பார்க்கலாமே
ஒரு தவறில் இருந்து மீள்வதற்கு, அதை தவறு என்று முதலில் உணரவேண்டும். சினிமாவைப்பொறுத்தவரை, தவறு என்றெ பலர் உணரவில்லை. ஆகையால் தான் உணரப்படாத தீமையில் இந்த சினிமா முதல் மூன்று இடங்களில் உள்ளது. சினிமா என்பது இம்மைக்கோ, மறுமைக்கோ சிறிதும் பயன்படாத ஒரு விஷயம் ஆகையால், இன்றிலிருந்து இதை விட்டொழிக்க வேண்டும் என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டை (determination) முதன் முதலாக எடுக்க வேண்டும்.
இரண்டாவது முக்கியமாக, இறைவனின் உதவியை (divine help) நாடுவது. இந்த தவறான பாதையிலிந்து மீள்வதற்கு, உன்புறத்திலிருந்து உதவியை தந்தருள்வாயாக என்று அடிமனதில்/உள்ளத்தில் இருந்து (from the bottom of the heart, not form the tip of the lips) கேட்டால்,
இறைவன் வெறும் கையோடு அனுப்புவதற்கு வெட்கப்படுவான் சகோதரா.
மூன்றாவது கடைசியாக. தவறிலிருந்து மீள்வதற்கு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தாகி விட்டது. அதிலிருந்தும் மீள்வதற்கு இறைவனின் உதவியும் இன்ஷாஅல்லாஹ், கேட்கப்பட்டுவிட்டது. பிறகு என்ன சினிமா பார்க்க வேண்டும்/கன்றாவி இசையை ரசிக்க வேண்டும் என்ற நம்முடைய ஆசை தானாகவே குப்பைக்கூடைக்கு (Dust bin) சென்றுவிடும். நாம் திருந்திவிட்டோமே அப்புறம் என்ன நம்முடைய குடும்பம், சமுதாயம் etc.
சகோ ரிழ்வான் அவர்களின் அடுத்த தொடர், சகோதரர்களை சினிமாவின் பிடியிலிருந்து மீள்வதற்குண்டான அனைத்து தீர்வுக்குமான களமாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
சகோ
அன்வர்
Post a Comment