சினிமாவுக்கு எனது மகுடி.....

நிறைய செய்திகளை கொண்டு வந்திருக்கிறேன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொஞம் கொஞ்சமாக வாசித்து பயனடைவதுடன் உங்களுக்கு தெரிந்த, விரும்புகின்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துக்கள்.
வாசித்துவிட்டு இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் மறந்துவிடாமல் இங்கு சொல்லுங்கள்.

சினிமா என்ற சாக்கடையில் சிக்கித்தவிக்கும் பலர் அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவிப்பதை தாராளமாக பார்க்கமுடிகிறது. எவ்வாறு வெளிவருவது? அதற்கு என்ன வழி? என்று தேடித் தேடி காலம் கடந்து செல்லுகிறது.

முன்னைய கட்டுரையில் தெளிவுபடுத்தியது போல் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளும் ஒருவர் அது மட்டும் போது மென முடிவெடுத்தவராக சினிமாவைவிட்டு தூரமாகிவிடுவார்.

இன்னும் சிலர் முன்னைய கட்டுரையை ஏற்றுக்கொண்டு அதனை தனக்கு ஒரு திருப்புமுனையாக பாவிக்க முன்வந்தாலும் பலக்கதோசமாகிப் போன, உடல் இரத்தத்துடன் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து சங்கமித்த சினிமாவை ஒரே இரவில் இடைநிருத்துவது என்பது சாத்தியமற்றதாகும்.
உண்மையில் சினிமாவுக்கு எப்படி சாவுமணியடிப்பது என்பதற்கு அறிவியல் மற்றும் நடைமுறை ரீதியாக சில அனுகுமுறைகளை, வழிமுறைகளை பகிர்ந்துகொள்ளலாம்.

இங்கு 4 வகையான வழிமுறைகளை ஞாபகப்படுத்துகிறேன், ஆனால் எந்த ஒரு வழிமுறையை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும், முதலில் எமது உள்ளத்தில், இந்த சினிமா எம்முடன் உயிர்வாழும் ஷாத்தான் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் அதனை நிலையாகத் துரத்துவதற்கே முயற்சிக்கிறேன்என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த மனநிலையுடன் இங்குள்ள ஏதாவது ஒரு வழிமுறையை நடைமுறைப்படுத்தலாம் வாருங்கள்.

1.    3டி முறையை பயன்படுத்தலாம்
2.    அன்றாட செயற்பாடுகளை நேரத்திற்கு நேரம் பரிசோதித்தல்.
3.    ஓய்வு நேரத்தைப் போக்க வேறு வழிமுறையை அறிமுகப்படுத்தல்.
4.    எமக்குள் தூங்கும் சிறம்பம்சத்தை கண்டுபிடித்தல்

1.    3D முறையை பயன்படுத்தலாம்
3D முறை பற்றி நமது சகோதரர் அன்வர் அவர்கள் முன்னைய கட்டுரைக்கு பின்னூட்டல் கொடுக்கும் போது ஞாபகமூட்டியிருந்தார். இந்த ஒரு வழிமுறையை அனைவரும் விளங்கும்படி சிறிதாக சின்ன விளக்கத்துடன் தொட்டுவிடுகிறேன்.

3D
Determinationவிட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தல்
Divine help கடவுள் உதவி
Dust bin- குப்பைத் தொட்டில்

நான் இரண்டு வார காலப் பகுதிக்குள் சினிமாவிலிருந்து முழுமையாகத் தூரமாகிவிடுவேன் என்ற முடிவை எடுத்துக்கொண்டு, முதல் நாளிலிருந்து சிறிது சிறிதாக வேளையை ஆரம்பிக்க வேண்டும்.

முதல் நாள், நாம் பாவிக்கின்ற மொபைல் போனிலிலுள்ள பாடல், சினிமாக் காட்சிகளை முழுமையாக அகற்றுதல்
இரண்டாவது நாள், நாம் பாவிக்கின்ற கணனியில் பாதுகாத்து வைத்துள்ளவற்றை அகற்றுதல்.

அடுத்த அடுத்த நாற்களில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்காருவதை தவிர்த்தல், தேவையான; செய்தி நேரம் அல்லது பொது அறிவு தொடர்பான நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்த்தல், போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நேரத்தை பாவித்தல்.

இந்த அடிப்படையில், உள்ளத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை நடைமுறையில் செயற்படுத்திக்காட்டுதல்.

இந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளத்தையும் உடலையும் ஓர்மைப்படுத்துவதற்காக அல்லாஹ்விடத்தில் நேரத்திற்கு நேரம் பிரார்த்தித்தல்.

ஷாத்தான் இந்த சினிமாவைப்பற்றி எமது உள்ளத்தில் நல்ல வடிவில் காட்சிப்படுத்தி, வடிவமைத்து, சினிமா இல்லாவிட்டால் உலகமே இல்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பான். இந்த எண்ணத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் எப்போதும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

உணவில்லாமல் எப்படி மனிதனால் வாழ முடியாதோ அது போன்ற சித்திரத்தை ஷாத்தான் தோற்றுவிப்பான்.

நாம் கூடியிருக்கும் அவைகளில் எமது நண்பர்களின் வாயிகளில் இந்த சீ சீலை வடியச் செய்வான் இந்த ஷாத்தான், இந்த நிலையில் நாம் எடுத்துள்ள எமது சபதத்தை ஞாபகமூட்டியவர்களாக ஷாத்தானுடைய சிந்தனைகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எரிய வேண்டும்.

எமது வீடுகளில் சேர்த்து வைத்துள்ள சினிமா தொடர்பான புத்தகங்கள், சினிமா சீடிக்களை அனைத்தையும் தீயிலிடவேண்டும்.
இந்த நிலை சினிமாவுக்கு சீல் வைப்பதாக அமையும்.

2.    அன்றாட செயற்பாடுகளை நேரத்திற்கு நேரம் பரிசோதித்தல்.
3D முறை பயனில்லை என்று சொல்லுபவர்கள் அல்லது தனக்கு பொறுந்திவரவில்லை என்பவர்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளை துரித பரிசோதனைக்கு உட்படுத்தி அதிலுள்ள தீமைகளை அகற்றுவதன் மூலம் சினிமாவை தூரப்படுத்தலாம்.

ஒரு மாணவனாக இருந்தால்:
காலையில்: பாடசாலை

பகலில்: சின்ன தூக்கம் அல்லது மாலை வகுப்புக்கான பயிற்சிகளை செய்தல், பாடமீட்டல். செய்தித் தால்களை வாசித்தல்.

மாலையில்: பிரத்தியோக வகுப்புக்கள், உடற்பயிற்சி அல்லது உடலுக்கும் மூளைக்கும் பயன்தரும் விளையாட்டுக்கள்.

இரவில்: வீட்டு வேளைகளை முடித்தல், பாடமீட்டல், கலந்துரையாடல்கள். பாடசாலைப் புத்தகமல்லாத நூலக புத்தகங்களில் கவனம் செலுத்தல், வாசிப்புத் திறனை அதிகரித்தல்
அதிகமான மாணவர்கள் பரிட்சையின் போது மட்டுமே பாடமீட்டலை கவனத்தில் எடுத்துக்கொள்ளுவர். இது மிகப்பெரிய தவராகும். அன்றாடம் பாடசாலையில் படித்த, கலந்துரையாடிய பாடங்களை தனது மூளையில் தேங்கிவிட்டதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.

தூக்கம்.

இந்த விடயங்களை சரியாகச் செய்தாலே ஒரு நாள் முழுமையாக முடிந்துவிடும்.

ஒரு தொழிலாளியாக இருந்தால், காரியாளயங்களில் பணிபுரியும் வாளிபர்கள் வயதுடையோராக இருந்தால்.

காலையில்: காரியாளயம், தொழில் நிலையத்தில் பணி அல்லது வியாபாரம்.

மாலையில்: உடற்பயிற்சி, ஓய்வாக இருத்தல், நண்பர்களூடன் நல்லவற்றை பேசுவதற்கான நேரமாக பயன்படுத்தல்.

இரவில்: வீட்டில் தம்பி தங்கைகளுக்கு கல்வியூட்டலாம். தொழில் தொடர்பாக மேலதிக அறிவைப் பெருவதற்கு அதற்குரிய புத்தகங்களை வாசிக்கலாம். பிரத்தியோக வகுப்புக்களுக்குச் செல்லலாம்.
தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அன்றாட பாடசாலைப் படிப்பை மீட்டுவதற்கும் அவர்களின் வீட்டு வேளைகளைச் செய்வதற்கும் துணை போகலாம்.

மனைவி பிள்ளைகளுடன் சில மணித்தியாளயங்களை பயனாக கடத்தலாம்.

கனவன் வேளை முடிந்து மாலையாகும் போது வீடு திரும்பி வந்தால் டீவிக்கு முன்னால் உட்கார்ந்தால் தூக்கம் வரும் போது மட்டும் தான் எழுந்திருப்பார். அதற்கிடையில் தனது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் அல்லது மனைவி என்ன செய்கிறால் என்பதை சரியாக பார்ப்பதில்லை. அவர்களுடன் சேர்ந்து சிரித்து பலகுவதற்கு நேரமொதுக்குவதில்லை. இது இன்று நடைமுறையில் பல வீடுகளில் தேங்கிக்கிடக்கும் ஒரு பிரச்சினையாகும் இந்த பிரச்சினை மனைவிமாரை அன்பிழக்கச் செய்கிறது. பிள்ளைகள் தந்தைமார் மீதுள்ள அன்பை இல்லாதொலிக்கச் செய்கிறது.
இதனால் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏட்படுகிறது.

மாணவர்கள், தொழிலாளிகள் வீட்டுப் பெண்கள் என்று ஒவ்வொருவரும் அவரவது அன்றாட செயற்பாடுகளை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். உரிய் வேளையை உரிய நேரத்திற்கு செய்தால் சினிமாவுக்கு நேரம் கிடைக்காது போகும். எம்மை அறியாமலே நாம் சினிமாவிலிருந்து தூரமாக இது துணைபுரியும்.

3.    ஓய்வு நேரத்தைப் போக்க வேறு வழிமுறையை அறிமுகப்படுத்தல்
எங்களது ஓய்வு நேரத்தைக் கடத்துவதற்குதான் சினிமாவை பயன்படுத்துவதாக பலர் சொல்லுகின்றனர்.

சிலர் மனநிம்மைதிக்காக்க்தான் பாடல்களில் நேரத்தை கடத்துவதாகச் சொல்லுகின்றனர்.

இதனை இரண்டு வகையில் சொல்ல வேண்டும்.
ஒன்று:
தனது வாழ்வில் தனக்குத் தேவையான விடயங்களை தான் செய்யாமல் இருப்பதுதான் அதிக நேரங்கள் ஓய்வு நேரங்களாக கிடைக்கின்றன.

இரண்டு:
சினிமாவில் அதிகமாக நேரத்தைக் கடத்துபவர்கள், சினிமாவுக்கென்றே ஓய்வு நேரங்களை உறுவாக்குகின்றனர்.
இந்த இரண்டு நிலைப்பாடும் மாற்றப்படவேண்டும்.
ஒரு நாளைக்கு எனக்கு கடமையான ஜந்து நேரத்தொழுகைகளையும் நான் சரிவரத் தொழுகிறேனா?
அல் குர்ஆனை கற்றுக்கொள்வதற்கு நான் நேரம் ஒதுக்குகின்றேனா?
பிள்ளைகளின் சந்தோஷத்தை ஈடுசெய்யமுடிகிறதா? அதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறதா?
மனைவிக்கு நேரம் ஒதுக்கப் படுகிறதா?
சமூக முன்னேற்றத்திற்கும் ஊர் அபிவிருத்திக்கும் எனது பங்களிக்குக் கிடைக்கிறதா?
ஒரு மாணவனாக இருந்து வகுப்பில் பின் தங்கிய நிலையில் புள்ளிகளை வாங்குகிற போது, இந்த நிலையிலிருந்து விடுபட்டு முன்னுக்கு வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறேனா?
ஒரு கம்பனியில் சாதாரண தொழிலாளீயாக பணிபுரியும் நான் எனது பதவி உயர்வுக்குத் தேவையான மேல்படிப்பு அல்லது பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குகின்றேனா?
ஒரு வீட்டுப் பெண்ணாக இருக்கக்கூடிய நான், பிள்ளைகளை கனவனை கவனிப்பதில் எந்த குறைபாடும் வராமல் செயற்படுகிறேனா?

என்ற இந்த சில கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே போதும். சினிமா பார்ப்பதற்கு எமக்கு நேரமிருக்காது போய்விடும்.

4.    எமக்குள் தூங்கும் சிறம்பம்சத்தை கண்டுபிடித்தல்.
பூமியில் பிறந்த எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் ஆற்றல் தூங்கிக்கொண்டிருக்கின்றது (Everyevery child is a specializedspelised), ஆனால் எல்லோரும் சராசரியாக அதை அடையாளம் கண்டு அதன் மூலம் சாதிப்பதில்லை.

தனக்குள் தூங்கும் சிங்கம் என்ன என்பதை இணங்கண்டுகொள்கிற ஒவ்வொருவரும் வெற்றியாளர்களாகவே இந்த உலகில் வாழ்ந்து மரணிக்கிறார்கள்.

ஒருவர் சேரியில் பிறந்திருப்பார், ஆனால் நல்ல சிந்தனையாளராக இருப்பார்,

ஏலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பார், நல்ல கண்டுபிடிப்பாளராக இருப்பார்.

இப்படி, நல்ல பேச்சாளராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, அரசியல்வாதியாக, ஆண்மீகவாதியாக, தொழிலாளியாக சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆற்றலுடையவர்கள் தான் அனைவரும்.

இந்த திறைமையை கண்டுபிடித்துவிட்டால் அதனை அபிவிருத்தி செய்வதிலும் அதற்காக முயற்சிப்பதிலும் கவனம் செலுத்துகிற ஒருவனுக்கு சினிமாவுக்கு முன்னால் இருந்து நேரத்தை போக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது.

சினிமாவில் உச்சகட்ட ஆபாசங்களையும் இசைகளையும் தொழில் நுபங்களையும் அறிமுகப்படுத்திய அதிக மேற்கத்தைய நாட்டு மக்கள் சினிமாவிலேயே நேரத்தைக் கடத்துவதில்லை. அவர்கள் அடுத்ததாக எதை கண்டுபிடிக்கலாம், உலகிற்கு புதிதாக எதை அறிமுகப்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

இன்று உலக சந்தைக்கு வருகிற நவீன கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மேற்கத்தியர்களால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணமே இதுதான்.
அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள், நாங்கள் அதை செயல் படுத்துகிற செயல் வீரர்களாக இருப்போம்.

அது நல்லதாக இருக்கட்டும் கெட்டதாக இருக்கட்டும் எல்லாமே ஒன்றுதான்.

இந்த நிலைப்பாட்டை உணர்ந்தவர்களாக அடுத்த எட்டுக்கு நாம் தயாராகுவோம்.

மேலே சொன்ன நான்கு வழிமுறைகளில் முடியுமான ஏதாவதொன்றை நடைமுறப்படுத்தலாம் வாருங்கள், அது பயனளிக்கும்

இந்த திகதியிலிருந்து சினிமாவுக்கு சாவுமணிதான் என்ற சபதத்துடன் செயற்படுவோம் வாருங்கள்.
இன்க்ஷா அல்லாஹ்.

தொடர்வது “கிறிஸ்துவ மதம் சினிமாவைப் போதிக்கிறதா?




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

6 comments:

Anonymous said...

//இன்று உலக சந்தைக்கு வருகிற நவீன கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மேற்கத்தியர்களால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணமே இதுதான்.
அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள், நாங்கள் அதை செயல் படுத்துகிற செயல் வீரர்களாக இருப்போம்இன்று உலக சந்தைக்கு வருகிற நவீன கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மேற்கத்தியர்களால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணமே இதுதான்.
அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள், நாங்கள் அதை செயல் படுத்துகிற செயல் வீரர்களாக இருப்போம்இன்று உலக சந்தைக்கு வருகிற நவீன கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மேற்கத்தியர்களால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணமே இதுதான்.
அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள், நாங்கள் அதை செயல் படுத்துகிற செயல் வீரர்களாக இருப்போம்// சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகள்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ ரிழ்வான் அவர்களின் சினிமாவுக்கு எனது மகுடி என்ற ஆக்கம் அருமை. முந்தய பதிவுகள் எப்படி சினிமாவின் தீமைகளை விளக்கியதோ, அதைவிட சிறப்பாக அந்த தீமைகளிலிருந்தும் எவ்வாறு தம்மை விடுவித்துக்கொள்வது என்று சிறப்பாக விளக்கியுள்ளார்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவரும் சினிமா என்ற சமூக தீமையிலிருந்து முற்றாக விடுபட இறைவன் உதவி செய்வானாக.

Anonymous said...

“கிறிஸ்துவ மதம் சினிமாவைப் போதிக்கிறதா?”

ithil ennatha solluviha?

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

என்னைக்கவர்ந்த வரிகள்

>>>

தனது வாழ்வில் தனக்குத் தேவையான விடயங்களை தான் செய்யாமல் இருப்பதுதான் அதிக நேரங்கள் ஓய்வு நேரங்களாக கிடைக்கின்றன.

இரண்டு:
சினிமாவில் அதிகமாக நேரத்தைக் கடத்துபவர்கள், சினிமாவுக்கென்றே ஓய்வு நேரங்களை உறுவாக்குகின்றனர்.
இந்த இரண்டு நிலைப்பாடும் மாற்றப்படவேண்டும்.>>>>

அருமை

Issadeen Rilwan said...

“சகோ. அன்வர் , செந்தில் குமார் மற்றும் பெயர் சொல்லாது சென்ற நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மட்டற்ற நன்றிகள்.

தொடரட்டும் ……”