மீண்டும் ஒரு முறை.......!


மாற்றங்கள் தேவை (1) என்ற தொனியில் தனியாகவும் வேகமாகவும் பயணிக்கும் எமது முயற்சியின் நோக்கம் என்ன? என்பதை இடையிடையே எமது சமூகத்திற்கு ஞாபகமூட்டிவிடுவது காலத்தின் தேவையாகவும் மார்க்கத்தின் கடமையாகவும்(2) இருந்துவருகிறது.

ஒரு சமூகத்தின் அத்தியவசிய துறைகளாக கருதப்படும்   நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, கல்வி, அரசியல், மற்றும் பொருளாதாரம் போன்றன நாளுக்கு நாள் மாற்றங்களுக்கு உள்வாங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற, செய்ய முயற்சிக்கின்ற சிறிய சிறிய மாற்றங்கள் பாரிய சமூக புரட்சிக்கு வித்திடுகிறது, இது வரலாற்றில் ஆங்காங்கே காண்கின்ற அத்தாட்சியாகும்.

அந்த உண்மையை இந்த படம் தெளிவாக வரைந்து காட்டுகிறது.
படம் ஒன்று
(படத்தை பெறிதாக்கிப் பார்ப்பதற்கு படத்திற்கு மேலே கிளிக் செய்யவும்)
உதாரணமாக கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற ஒரு விடயத்தை தனியாக எடுத்துக்கொண்டால், அது ஒரு தனிமனித வாழ்வில் எவ்வாறு மாறுதலையும் செல்வாக்கையும் சுமக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒவ்வொரு தனிமனித மாற்றங்களும் தேசிய, சர்வதேச மாற்றங்களாக இலாபங்களாக பரிணமிக்கின்றன.

அதனை இரண்டாம் படம் மிக சுலபமாக நிறம் தீட்டுகிறது.

இந்த முன்னேற்றகரமான எழுச்சி நமது வாழ்வில் ஏற்படுவதற்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக முயற்சிப்போம்.


அடிக்குறிப்பு
(1) "தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்". (அல் குர்ஆன் 13 :11)

(2) "அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும். " (அல் குர்ஆன் 51 :55)


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: