என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 09

தொடர் - ஒன்பது


நேரத்திற்கு தொழுகை, நேரத்திற்கு தூக்கம், நேரத்திற்கு உணவு, நேரத்திற்கு, நேரத்திற்கு என்று ஒவ்வொன்றும் அமைகின்றன.

ஆனால் எமது சிந்தனையில் தாக்கம் ஏற்படுவதற்கும் சிந்தனை சிதறல் ஏற்பட்டு நாம் காற்றடிக்கும் திசைகளை நோக்கிப் பறக்கும் சருகுகளாக மாறுவதற்கும் நேர முகாமைத்துவம் பிழைத்துப் போவதும் ஒரு காரணமாகும்.

உதாரணமாக, தொழும் நேரத்தில் டீவிக்கு முன்னால் உட்கார்ந்து டீவி நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருப்பது,

தூக்குங்கிற நேரத்தில் நண்பர்களுடன் பாதை அளத்தல் போன்ற செயல்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியும் அதன் விளைவுகள் வெகு ஆழத்தில் எம் கண்முன்னும் சிந்தனை ஓட்டத்திலும் எட்டுவதில்லை.

நெடுஞ்சாலையில் ஒரு பஸ் விபத்து, அந்த பஸ்ஸில் பயணித்த 50 பேரில் 45 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர், மூன்று பேர், சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவாகளின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது. என்று ஒர் செய்தியை நாம் தினசரிப் பத்திரிகையில் படிக்கின்றோம். ஆனால் எப்படி இந்த விபத்து நடந்தது என்று தேடிப்பார்த்தால் அதற்கான காரணம், கேற்கவும் சகித்துக்கொள்ளவும் ஆச்சரியமானதாக இருக்கும்.

சாரதி வாகனத்தை ஓட்டும் போது முன்னால் வந்த ஈயை துரத்த முயற்சிக்கும் போது வாகனம் தன் கை ஆளுமையை விட்டு விளகி பாதை தவறி விபத்து ஏற்பட்டது.

அல்லது,
நீண்ட தூரம் பயணித்ததால் சாரதி திடீரென தன்னை அறியாமல் கண்னையர்ந்து விட்டார்,

இந்த சிறிய தவறு பாரிய விபத்தை ஏற்படுத்தி பல உயிகளை சூரையாடியது.

இது ஒரு நஷ்டம், இதை விடவும் இன்னுமொரு கஷ்டம் என்னவென்று நினைக்கிறாய்?

இந்த பஸ் உடமைக்காரருக்கு ஏற்பட்ட நஷ்டம் அது, பல வருட உழைப்பில் தன் வியர்வை சிந்தலில் மீதியாக கிடைத்த வெகுமதி ஒரு நிமிடத்தில் கை விட்டு போனது, இது போன்று இன்னுமொரு பஸ் வாங்குவதென்றால் மீண்டும் பல வருடங்கள் தியாகம் செய்ய வேண்டும்.

இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் சிறியவர்களாகிய நமது வாழ்க்கையில் ஆங்காங்கே நடந்தேரும் போது தான் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது, சிந்தனை ஓட்டம் துரிதமிழக்கிறது...... என்று சொல்லிக்கொண்டே போன தந்தையை வழி மறித்து எப்படி நமது வாழ்க்கையில் இது போன்ற விபத்துக்கள் என்று கேட்டேன்.

உண்மையில் அதைத் தான் சொல்லப்போகிறேன், என்று விடயத்திற்கு வந்தார் தந்தை.

தொழும் நேரத்தில், டீவி நிகழ்ச்சியை ரசித்த வண்ணம் சிறுவன் ஓருவன் இருக்கின்றான் என ஒரு கற்பனையை நமது நடைமுறையுடன் இணைத்து யோசித்துப் பாருங்கள்.

அந்த நிகழ்ச்சி ஒரு சினிமாவாக இருக்கிறது, அதில் ஒரு சம்பவம்; வில்லன் கதாநாயகனை கொலை செய்வதற்கு திட்டமிடுகிறான். அதில் எப்படி கொலை செய்யப்போகிறான், அதற்கு என்ன வகையான  முயற்சிகளை முன்னெடுக்கிறான்? என்பதையும் அதற்காக எப்படி செயற்படுகிறான்? எவ்வாறு காய் நகர்த்துகிறான்? என்று ஒரு கொலைக்குத் தேவையான அனைத்து செயற்பாடுகளையும் காட்சியாக, நமக்குத் தெரிந்த பாசையில் காண்பிக்கிறார்கள், இதை ரசிப்பவருடைய நாடி நரம்புகளிலும் உணரச்சிகளிலும் சிந்தனைகளிலும் தெளிவாக பதிகின்றது, இப்போது இந்த சிறுவனின் நிலை என்ன?

அல்லது,
வேறு ஒரு சினிமா காட்சி, அதில் ஒரு வாலிபன் தனக்குப் பிடித்த, அதே நேரம் தனது குடும்பத்திற்கு பிடிக்காத நிலையில் காதலியை கடத்தி திருமணம் செய்து கொள்ளும் அல்லது செய்ய முனையும் ஒரு காட்சி,

அல்லது
ஒரு சினிமாவில், பாடசாலை மாணவன் சில கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் போதை அருந்துவது அல்லது அருந்த முயற்சிப்பது.



அல்லது
அதே ஒரு சினிமாக் காட்சியில் ஏதோ ஒரு தேவைக்காக பணம் தேவை என்பதற்காக கலவு முயற்சியில் இறங்குதல்.


இந்த காட்சிகளை பார்க்கின்ற சிறுவர்கள், எப்படி கொலை செய்வது? எப்படி காதலித்த பெண்னை கடத்தி திருமணம் செய்வது? எப்படி போதைப் பொருள் பாவிப்பது? எப்படி  திருடுவது? என்ற அனைத்து தடுக்கப்பட்ட, சமூகத்தை சீரழிக்கும் செயற்பாடுகளை செயன்முறையுடன் சேர்த்து படித்துக் கொள்கிறார்கள்.

இந்த காட்சி முறைகள் பிஞ்சு உள்ளங்களிலும் உணர்ச்சிகளிலும் தெளிவாக பதிந்து விடுகிறது.

பாடசாலையில் நேரம் கிடைக்கும் போது இந்த காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்,


தூக்கத்தில் கனவுகளாக இந்த காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
இப்படி மறக்கமுடியா, மறைக்கமுடியா நினைவுகளாய் காலம் கடந்து செல்லுகின்றது.

இந்த மன நிலையையும் உணர்வுகளையும் கொண்ட ஒரு சிறுவனால் எப்படி ஒரு விஞ்ஞானியை போல் சிந்திக்க முடியும்?
என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பினார் என் தந்தை. என்றும் இல்லாதது போல் எனக்குள் குருதிச் செயற்பாட்டு வேகம் வீரியமானது, கையிலும் கால்களிலும் உள்ள செந்நிற மயிர்கள் உணர்ச்சி உற்று எழுந்து நின்றன.

வாழ்க்கையில் இப்படியா மனிதன் மாறுகிறான், வரலாறுகளில் மனித மாற்றங்களுக்கு இது தான் காரணமா? என்று எனக்குள் சிந்திக்கத் தோன்றியது.

அப்போது தான் இந்த குர்ஆனிய வசனங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

உங்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. "எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்ததுஎன்பதைச் சிந்தியுங்கள்!  (அல் குர்ஆன் 3: 137)”

 நண்பா!
தூக்கங்களைக் கெடுக்கும் கனவுகள்,
ஆக்கங்களைக் கெடுக்கும் நண்பர்கள்,
ஏக்கங்களைக் கெடுக்கும் ஊக்கங்கள் எல்லாமே ஒன்றுதான்.
காயம் வரும் போது மட்டும் அதை மட்டும் பார்க்கிறார்,
அது மாறிப் போனால் அதை மட்டும் மறக்கிறாய்

நினைவில் வை!
தோழ்வியடையும் போது மட்டும் ஏன் என்கிறாய்,
வெற்றி வரும் போது மட்டும் ஏன் என்பதில்லை? என்று என் நண்பர்களையும் என்னை கேள்வி கேற்கத் தோன்றுகிறது.

நேரம் கடந்து சென்றது, ஆனால் தந்தையின் வார்த்தைகளுக்கு விடைகொடுக்க மனமில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
அவர் தனது உறுக்கமான வார்த்தைகளை நிதானமாய் தொடர்ந்தார்,

“ஒரு தண்னீர் நிறைந்த போத்தலில் மீண்டும் தண்ணீர் நிறப்ப வேண்டுமென்றால் முதலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
அதே போல் அதே போத்தலில் பாதி சுடு நீர் இருந்தால் மீதி பகுதிக்கு சாதாரண நீர் நிறப்பினால் ஏற்கெனவே உள்ள சுடு நீர் சாதாரண நீருடன் சேரும் போது கடும் சூடு மெல்லிய சூடாக மாறுகிறது,

ஆனால் வேறுபட்ட தன்மை கொண்ட நீரை ஒன்றாய் களக்கும் போது ஒரு போதும் சூடு சூடாகவும், சாதாரண நீர் அதே நிலையிலும் இருப்பதில்லை”.

இந்த இரு வேறுபட்ட உதாரணங்களும் எமது இந்த மூளை தொடர்பான கலந்துரையாடலுக்கு மிக முக்கிய பாடத்தை கற்றுத் தருகிறது


ஒரு சிறுவனின் மூளை ஏற்கனவே சினிமாக் காட்சிகளை ரசித்து ரசித்து அதில் வருகிற கொலை, கொள்ளை, கற்பளிப்பு, காதல், காமம் என்று தேவையற்ற சித்திரங்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கிறது.
அதனால் புதிதாக, வித்தியாசமாக எதையும் அந்த மூளை உள்வாங்குவதில்லை, அதற்கு உள்ளே இடமில்லை.

அல்லது அதே சிறுவனின் அதே சினிமாக் காட்சிகளையும் கெட்ட நண்பர்களின் மோசமான நற்பையும் கொண்ட பாதி நிறம்பிய மூளையாக இருக்கிறது, அத்துடன் மீதி மூளைக்கு பாடசாலைக் கற்கைகளையும் பெற்றார் வழிகாட்டல்களையும் கொண்டு நிரப்ப முனைந்தால் நல்லதும் கெட்டதும் கலந்து பாதிக்கு பாதி கெட்டவனாக, தெளிவற்ற சிந்தனைத் திறன் கொண்டவனாக பரிணமிக்கின்றான்.

பெருமூச்சு விட்டபடி இப்போது புறிந்திருக்கும் என நினைக்கிறேன் என்றார் தந்தை.

அதிகமான உளவியலாளர்கள், சிந்தனையாலர்கள் சினிமாவில் தங்கள் சிந்தனையை சிக்கவிடமாட்டார்கள், இன்றைய செய்தித் தால்களைக் கூட வாசிப்பதற்கு பின் வாங்குவார்கள். இவைகள் தூய்மையாக-தெளிவாக இருக்கும் சிந்தனைகளை தேவையற்ற துக்கம், கவளை, எல்லையற்ற உணர்ச்சி காமம், காதல் என்று மனித மூளையை சிதறடிக்க செய்கிறது என்பதனால் தான்.எந்த செயலையும் ஒரு சிறுவன் தன் கண் கொண்டு காட்சியாக பார்க்கும் போது அந்தக் காட்சி தன் அடி மனதில் பதிந்து விடுகிறது, அந்த நிமிடத்திலிருந்து அடிக்கடி அந்தக் காட்சி நினைவில் வந்த வண்ணம் இருக்கும், அதுவே அடிக்கடி காணும் காட்சியாக இருந்தால் இன்னும் கஷ்டமாக இருக்கும்.

அதனால் புதிதாக எதையும் சிந்திக்கக் கிடைப்பதில்லை, காரணம் மூளை சிதருண்டு அல்லது தேவையற்றவைகளினால் கலங்கமாகி இருக்கிறது..
இதுதான் அன்றாட நடத்தையில் சிறுவர்களாகிய உங்கள் மூளை, சிந்தனை ஒரு விஞ்ஞானியை போல் சிந்திக்காமல் போவதற்கு முக்கியமான உளவியல் காரணமாகும்.

பகல் உணவுக்கு நேரமாகின்றது, இன்ஷா அல்லாஹ், மீதி இரண்டு காரணங்களையும் பிறகு சொல்லித்தருகிறேன் என்று சொல்லிக்கொண்டே........

சில நாட்களாக நான் என்னுள் கனவு காண ஆரம்பித்தேன், நேற்றைய சிறுவர்கள் தான் இன்றைய கதாநாயகர்களா? லீடர்கள் பிறப்பதில்லை, உறுவாவது, உறுவாக்குவது என்பதை மெது மெதுவாக உணர ஆரம்பித்தேன். என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று, உட்சாகம் கொண்டேன்.

தினந்தினம் நிமிடத்திற்கு நிமிடம் தந்தையின் ஆலோசனைகளை கேட்க ஆசைப்பட்டேன்.

ஆனால் எனது தந்தையோ, வித்தியாசமானவராக, விவரமானவராக, விசித்திரமானவராக நடந்து கொண்டார்.

எனது சில கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டும் என்பதற்காக அவரும் சிலதை தேடிப் படித்தார். எனது தாயுடன் சிலதை கலந்தாலோசித்துக் கொண்டார்.

அவரை நான் ரசிக்க ஆரம்பித்தேன், அவரது செயன்முறைகளையும் ஓய்வு நேர நடவடிக்கைகளையும் பொழுது போக்கு கலை அம்சங்களையும் தேடி பார்க்க ஆரம்பித்தேன்.

அவரின் ஓய்வு நேரங்களை ஆய்வு நேரங்களாக மாற்றிக்கொள்ளும் ஒரு தரமான தனித்தன்மை வாய்ந்தவராக காணப் பட்டார்.


பொழுது போக்குகளுக்குள்ளும் பொக்கிஷ போதகராக இருப்பது தெரியவந்தது,

அன்பானஈ, ஆதரவான தந்தை என்பதைக் கூட அண்மையில் தெரிந்து கொண்டேன்.

கலை உணர்வுள்ள துறை மனமுள்ள அந்த தனிமனிதனின் தனி மகனாகிய நானும் அவரைப் போல் வர வேண்டுமென கனவுகாண ஆரம்பித்தேன்.

நான் எதிர்பார்க்காத ஒரு தண்டனை எனக்குக் கொடுத்தார், அது தண்டனை அல்ல, தன் உணர்வுக்கு அவர் கொடுத்த தரமான வழிகாட்டல் அது.

அவர் சொன்னார், இந்த மூளை வளர்ச்சி தொடர்பாகவும் சிந்தனை மாற்றம் தொடர்பாகவும் நிறைய விடயங்கள் சொல்ல வேண்டி இன்னும் மீதி இருக்கிறது, அவை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்......

என்ன சொல்லப்போகிறார் என்று ஆழ்ந்த எதிர்பார்ப்போடு கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்,

தொடரும்..........

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

6 comments:

Anonymous said...

good one !

Issadeen Rilwan said...

அன்பின் நண்பர்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் எப்போதும் எங்கள் நன்றிகள், ஆனால் தவறாமல் உங்கள் பெயர்களையும் சேர்த்துப் ப்தியுங்கள். நன்றி.

Anonymous said...

“ஒரு தண்னீர் நிறைந்த போத்தலில் மீண்டும் தண்ணீர் நிறப்ப வேண்டுமென்றால் முதலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.”....

படிப்பினைக்குறிய உதாரணங்கள். மெய்யாகவே பெறியவர்களை விட சிறியவர்களுக்கே அதிகம் ஞாபக சக்தி இருப்பதை சமகால ஆய்வுகள் நிரூபித்த வண்ணம் உள்ளது. சகோ.றிழா நீங்கள் இதற்கு முந்தய தொடரில் வலது மற்றும் இடது மூளையின் செயற்பாட்டு திறன்களைப் பற்றி மிக அருமையாக விளக்கியிருந்தீர்கள். அதன் தவறான செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை தரமான (போத்தல்)உதாரணம் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பாகவுள்ளது.
இதில் இன்னுமொறு விஷயம் என்னவென்றால், மூளை அதிகம் நல்லது-கெட்டது இவைகளால் பாதிக்கப் படுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள சூழலும் ஒரு முக்கிய காரணம் என்பது திண்ணம். ஏனெனில் 100 கொலைகள் செய்த ஒரு மனிதனைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது ஒரு புத்தி ஜீவி அம்மனிதன் நிலை கண்டு அவனின் மூளை அவன் வாழ்ந்த சூழலில் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதையுணர்ந்து அது நல்லதொரு மாற்றத்தைக் காண வேண்டுமெனில், அவனுக்கு உபதேசங்கள் உரைக்காது என்பதானால் இது தானாக மாறுவதற்கான ஒரு வழியைக் காட்டுகிறார். அதுதான் “இடம் விட்டு இடம் நகர்தல்“ இது மனித கலாச்சார, பண்பாடு ஒழுக்க விழுமியங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியா உண்மையும் கூட. சமீபத்திய கட்டுரையொன்றில் ட.ர் ஸாகிர் நாயக், கால்நடைகள்-மிருகங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், “மிருகங்களின் குணங்கள் கூட மனிதனை மாற்றுகின்றன“.என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மூளையில் நல்ல விஷயஙகளை ஏற்றுவதற்கு முன்,ஏற்கனவே நிரம்பியிருக்கும் கழிவுகளை அகற்ற, சூழலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாசூக்காக போத்தலை உதாரணம் காட்டி அழகாக விளக்கியுள்ளீர்கள். ஜஸாக்கல்லாஹு ஹைரா.
நன்றி
அன்ஸார்-தோஹா

வலையுகம் said...

Issadeen Rilwan
///அவரின் ஓய்வு நேரங்களை ஆய்வு நேரங்களாக மாற்றிக்கொள்ளும் ஒரு தரமான தனித்தன்மை வாய்ந்தவராக காணப் பட்டார்.///
ஆய்வு நேரங்களை ஒய்வு நேரங்களாக மற்றிக் கொள்ளுவோம் (இத தான் டிரண்ஸ் லிட்ரைட்ன்னு சொல்லுவாங்க)

shifa said...

good articale.
நல்ல நண்பெர்களை தேர்ந்தெடுத்தல் மிக முக்கிய அம்சமாகும்.ஒருவர் வழிகேட்டில் சென்றால் .அவரை நேர்வழிப் படுத்த ஒரு நண்பரால் இலஹுவில் முடியும்.நல்ல சிந்தனை வளரவும் எது உதவு கின்றது.சின்ன சிறார்களிடம் நல்ல சிந்தனையை தோற்று விப்பது பெற்றோரின் கடமை.

Anonymous said...

Ahmed Kabeer said...

எல்லோருக்கும் தேவையான தொடர். தொடரட்டும்.